உரக்கப்
படிப்பதை எப்படி நிறுத்துவது?’
சூயிங்கம்,
பப்பிள் கம் பற்றி மாணவர்களுக்குத்
தெரியும். அதை வாயில் போட்டு
நன்கு மென்று வாயிலேயே வைத்துக்
கொள்ளவும், இப்போது உரக்கப் படிக்க
முயலுங்கள், முடியாது. இரண்டு அல்லது மூன்று
வாரங்கள் இப்படி தொடர்ந்து செய்தால்
உரக்கப் படிக்கும் பழக்கம் தானாக நீங்கும்.
உடனே அப்பாவிடம் ” அப்பா நான் சத்தம்போட்டு
படிக்கிறதை நிறுத்தறதுக்கு பப்பிள்கம் சாப்பிடச் சொல்லறாங்க. எனக்கு மாதா மாதம்
நூறு பாக்கெட் பப்பிள் கம் வாங்கிட்டு
வாங்க” என்று கேட்கக் கூடாது.
அல்லது ‘பப்பிள் கம் சாப்பிட்டாத்தான்
எனக்கு படிக்க வரும்’ என்று
சொல்லும் அளவுக்கு பப்பிள் கம் மேல்
ஆசை வந்திவிடக் கூடாது.
சுத்தமான,
சற்று பெரிதான கூளாங்கல்லை வாயில்
வைத்துக் கொண்டாலும் சத்தம் போட்டு படிக்க
முடியாது.
‘முயன்றால்
முடியாதது என்று ஒன்றுமில்லை’
ஒருமித்த
சிந்தனை ( Concentration )
என்றால் என்ன?
ஒன்றைக்
குறித்தே நமது மனதை நிலைநிறுத்தி
அதைப்பற்றி ஆய்வது, அதைப்பற்றிய எண்ணங்களை
வளர்ப்பது, அதிலேயே மனதைக் குவிப்பது
என்று சொல்லலாம்.
ஒரு குவி வில்லை ( Convex Lens ) எப்படி விரிந்திருக்கின்ற
ஒளிக்கற்றைகளை ஒரு இடத்தில் குவிக்கின்றதோ
அதுபோல வெவ்வேறு திசைகளில் செல்கின்ற மனதை / எண்ணங்களை / சிந்தனையை
ஒன்றைப் பற்றியே குவிப்பது.
” இந்த
இயற்பியல் கணக்கை எப்படியாகிலும் போட்டுவிட
வேண்டும். சரியான விடை கிடைக்கும்
வரை வேறு எதிலும் என்
சிந்தனை செல்லாது.
” இரண்டு
நாட்களாக நானும் பார்க்கிறேன். இந்த
ஆங்கிலக் கட்டுரை மனதில் பதியமாட்டேன்
என்கிறதே. விடமாட்டேன் இன்று. வேறு எதைப்பற்றியும்
நினைக்கப் போவதில்லை. இதை மனதில் பதிய
வைப்பது தான் எனது தலையாய
வேலை”
இவ்விதம்
முதலில் உறுதி கொள்ளுங்கள். வேலைக்காரனான
மனதை முதலில் உங்களிடம் வைத்துக்
கொள்ளுங்கள். நீங்கள் படிக்கப் போகின்ற
பாடத்தின் மேல் ஆர்வம் கொள்ளுங்கள்.
படித்தே ஆக வேண்டும் என்று
வெறி கொள்ளுங்கள்.
அதற்கு
முன்னால் மனதை ஒருநிலைப் படுத்த
சில பயற்சிகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
மூளையில்
நாம் படித்தது. நன்கு பதிய சரியான
அளவு பிராண வாயு ( Oxygen ) மூளைக்குச்
செல்லும் இரத்தத்தில் இருந்தாக வேண்டும். அதற்கும் சில பயிற்சிகளை மேற்கொள்ள
வேண்டும்.
‘ இப்போதே,
இங்கேயே எனக்கு இது கிடைத்தாக
வேண்டும்’ என்றால் முடியுமா?
எதையுமே
பழக்கத்திற்கு உட்படுத்த வேண்டும். பழக்கம் வழக்கமாக மாறவேண்டும்.
காலையில்
படுக்கையிலிருந்து எழுகின்றீர்கள்; கழிவறை செல்கின்றீர்கள்; பல்
துலக்குகின்றீர்கள்; குளிக்கின்றீர்கள்; வேறு உடை அணிந்து
கொள்கிறீர்கள்; சாப்பிடுகின்றீர்கள்; வெளியில் செல்லும்போது காலணி அணிந்து கொள்கிறீர்கள்.
இதற்கு யாரேனும் சொல்ல வேண்டியுள்ளதா? நீங்களாகவே,
சில வேளைகளில் உங்களை அறியாமலேயே செய்கின்றீர்கள்.
இது எப்படி சாத்தியமாயிற்று?
நீங்கள்
குழந்தையாக இருந்ததிலிருந்தே உங்கள் பெற்றோரால் இப்படி
பழக்கப்படுத்தப் பட்டிருக்கின்றீர்கள்.
அந்தப்
பழக்கம் இன்று வழக்கமாக மாறியுள்ளது.
என்றென்றும் இது மனதில் இருக்கும்.
அதைச் செய்யாமல் உங்களால் இருக்க முடியாது.
அப்படி
கீழே சொல்லப்படும் பயிற்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்வதை
வழக்கமாக மாறிவிடும்.
முதலில்
மூளைப் பகுதிக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு சரியானதாகவும், அதில்
சரியான அளவு பிராண வாயு
கலந்திருக்கும் படியும் செய்ய உதவும்
பயிற்சிகளைக் காண்போம்.
பிராணாயாமம்
( மூச்சுப்பயிற்சி)
தரையின்
மீது ஒரு போர்வையை நன்றாக
மடித்துப் போடவும். அதன்மீது படத்தில் கண்டபடி பத்மாசன நிலையில்
அமரவும். (வலது கால் இடது
தொடையின் மீதும், இடது கால்
வலது தொடை மீதும் இருக்கும்படி
அமர்வது பத்மாசனம். இந்நிலையில் அமர முடியாதோர் ஆண்களாயின்
வலதுகால் இடது தொடையிங் மீதும்,
பெண்களாயின் இடது கால் வலது
தொடையின் மிதும் மட்டும் வைத்து
அமர்ந்தால் சித்தாசனம்) முதுகுத் தண்டு, கழுத்து, தலை
இவைகள் ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி
நிமிர்ந்து அமரவேண்டும்.
நிமிர்ந்த
முதுகுத்தண்டே பகுத்தறிவின் வளர்ச்சி, இடது கை ஆள்காட்டி
விரலும், கட்டை விரலும், நுனியில்
தொடும்படி வைத்து மற்ற விரல்களை
படத்தில் கண்டபடி நீட்டிப் இருக்கும்படி
இடது முழங்கால் மீது வைக்கவும். கட்டை
விரல் இரண்டையும் மடக்கிக கொள்ளவும். கட்டை
விரல், 4வது விரல் ஆகிய
இரண்டு மட்டும் இப்பயிற்சியில் பயன்படும்.
கண்களை
மூடிய நிலையில் ஆழ்ந்த சுவாசத்தை மெதுவாக
நன்கு உள்ளிழுத்து விடவும். கட்டை விரலால் வலது.
மூக்குத் துவாரத்தை அழுத்திய நிலையில் இடது மூக்கால் மெதுவாக
சுவாசத்தை உள்ளே இழுக்கவும். ( 1 முதல்
5 எண்ணும் வரை சுமாராக 5 வினாடிகள்
). நான்காவது விரலால் இடது மூக்கு
துவாரத்தையும் அடைத்துக் கொள்ளவும் ( 5 வினாடிகள் ) மெதுவாக வெளியேற்றவும். இது
ஒரு சுற்று
( Cycle).
மீண்டும்
அதே வலது மூக்குத் துவாரத்தின்
வழியாக காற்றை உள்ளிழுக்கவும், நிலை
நிறுத்தியும், இடது நாசி வழியாக
வெளியேற்றவும். இதைப்போல ஆரம்ப நிலையில் 10 முறை
மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.
எந்த அளவுக்கு மெதுவாகச் செய்கின்றோமோ அந்த அளவுக்கு மனம்
அமைதி பெற்று ஒருநிலைப்படும்.
இதன் மூலம் நுரையீரல்கள் தன்
முழுக் கொள்ளளவு காற்றை உட்கிரகித்து அதிலிருந்து
பிராணவாய்வைப் பிரித்து இரத்தத்தில் கலக்க வைக்கிறது. மூளைக்குச்
செல்லும் இரத்த ஒட்டம் சீராகிறது.
தேவையான அளவு பிராணசக்கதி மூளைக்குக்
கிடைக்கிறது. கண்களுக்குப் புலனாகாத பிரபஞ்சு உயர் சக்திகளும் ( Universal Energy ) நம்முள் நன்கு ஈர்க்கப்படுகின்றன.
காலை, மாலை வேளைகளில், உணவு
உட்கொள்வதற்கு முன்னர் இப்பயிற்றசியை செய்ய
வேண்டும். படிப்படியாக 5 வினாடிகள் என்ற நேரத்தை 10 வினாடிகளுக்கு
உயர்த்தலாம். ( 10 எண்ணிக்கை ). இதன் மூலம் தலைவலி
அடியோடும் நீங்கும். மூக்கடைப்பு, சளி ( Sinus ) தொல்லைகள் நீங்கும். மூளையில் பதிய வைக்கும் ஆற்ற்
அதிகரிக்கும். நினைவாற்றல் வளரும். ஒருமித்த சிந்தனை
மிளிரும்.
ஒருமித்த
சிந்தனையை வளர்க்கும் ஒளி, ஒலி பயிற்சிகள்.
நமது மனதை ஒருநிலைப்படுத்த நம்
முன்னோர்கள் பலவித அனுபவ முறைகளைச்
சொல்லி வைத்துள்ளார்கள். அவைகளில் மிக முக்கியமானவை ஸ்ரீயந்த்ரா,
ஓம், தொலை நோக்கி ( Telescope ) நுண்நோக்கி ( Microscope ) என்பவை கடந்த
முன்னூறு ஆண்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவை. செயற்கைக் கோள்கள் ( Satellite ), வான்வெளிப் பயணம் மூலம் கிரகங்களின்
ஆய்வுகள் ( Space research
) போன்றவை கடந்த நூற்றாண்டில் தொடங்கப்பட்டவை.
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், எந்தவித அறிவியல் கண்டுபிடிப்புகளும்,
உபகரணங்களும் இல்லாத சமயங்களில், தான்
இருந்த இடத்திலிருந்தே வானவெளியில் வலம்வரும் கோள்கள், நட்சத்திரங்கள், அவைகளின் கூட்டங்கள் ( Constellation ) பற்றி நேரில் சென்று
பார்த்து போல் எழுதி வைத்துள்ளார்கள்.
அதுமட்டுமல்ல, அணுவின் அமைப்பு பற்றியும்,
அதனுள் இருக்கும் அணித்துகள்கள் ( Atomic and
Nuclear particless ) சொல்லியுள்ளார்கள்.
அகண்டு, பரந்த பிரபஞ்சத்தைப் பற்றியும்,
மீச்சிறிய அணுத்துகள் பற்றியும் அக்காலங்களில் எப்படி அவர்களால் அறிய
முடிந்தது?
அதைப் பற்றிய ஆய்வைச் சொல்ல
வேண்டுமென்றால் தனிப்புத்தமாக எழுத வேண்டிவரும். இங்கு
நமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வோம்.
1. நமக்குள்
அளப்பறிய ஆற்றல் உள்ளது. 2. மன
ஒருமைப்பாடு மூலம் பல சாதனைகளைச்
செய்ய முடியும், 3. இதை அறியவும், பெறவும்
நாம் உடல், மன இவற்றுடன்
தொடர்பு கொண்ட சில எளிய
முறை யோகப் பயிற்சிகள், தியானப்
பயிற்சி களையாவது மேற்கொள்ள வேண்டும். அவை களைப் பற்றி
பின்னர் விரிவாகப் பார்ப்போம்.
ஸ்ரீயந்த்ரா
ஒளிப்பயிற்சி
பிரபஞ்ச
உயர்சக்திகளின் அலைகளைக் கிரகித்து தேவையான இடங்களில் பரப்பவும்,
மனம் அமைதிபெற்று ஒரு நிலைப்படவும் ஸ்ரீயந்த்ரா
உதவும். இங்கு அச்சாகியுள்ள ஸ்ரீயந்த்ரா
சக்கரத்தைப் பார்க்கவும், நிமிரிந்து அமர்ந்த நிலையில், கண்களால்
நேராகப் பார்க்கும் வகையில் வைக்கவும்.
43 முக்கோணங்களைக்
கொண்டு அமைகப்பட்டுள்ள ஸ்ரீயந்த்ராவின் வெண் மையப் புள்ளயில்
கண்களைப் பதிக்கவும், கண்களைச்சிமிட்டாமல் ஒரு நிமிடம் கூர்ந்து
கவனிக்கவும். நிலைத்தோற்ற முக்கோணங்கள் நான்கும், நிலைத்தோற்ற முக்கோணங்கள் ஐந்தும் வெளிப்படும், சாய்
சதுரங்கள் நான்கு வெளிப்படும். ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு வகையில் இவைகள் சுழல்வது
போல் தெரியும். ஒரு நிலையில் வெளி
வடிவங்கள் மறைந்து மைய வெள்ளை
வட்டம் பெரிதாகி ஒளிமிக்கதாய் மாறும். சில விநாடிகள்
தான் இது தோன்றும்.
கண்களை
மூடவும். என்ன தெரிகிறது என்று
கவனிக்கவும். கண்களை மூடிய நிலையில்,
இரு புருவங்களுக்கிடையேயுள்ள, பொட்டு வைக்கும் இடமான
புருவ மத்தியில் ஒரு ஒளி, ஒரு
அழுத்தம் அல்லது குறு குறு
என்ற உணர்வு,ர எறும்பு
ஊர்வது போன்ற உணர்வு ஏற்படும்.
இந்த இடமே மனதின் அமர்விடம்
( Seat of Mind ) மனம் அமைதி பெறும் இடம்.
ஒருமித்த சிந்தனையை வளர்க்குமிடம். மனம் இங்கு அமரும்போது
மூளையின் அதிர்வெண்கள் வெகுவிரைவில் நிலைக்கு வருகின்றன.
தினசரி
காலை, மாலை வேளைகளில் 3 முத்ல
5 நிமிடங்கள் இப்பயிற்சிகளை மேற் கொண்டால் நமது
ஒருமித்த சிந்தனை வளரும், வலதுபக்க,
இடதுபக்க மூளைப்பகுதிகள் ஒருங்கிணைந்து செயல்பட இது பெரிதும்
உதவும்.
( அச்சக்கப்பட்டுள்ள
ஸ்ரீயந்தராவையோ அல்லது பிரதியையோ ( xerox ) ஒரு
அட்டையில் ஒட்டியோ அல்லது கண்ணாடி
பிரேம் / Laminate செய்தோ, உங்கள் படிக்கும்
அறையில் நிமிர்ந்து அமர்ந்தால் கண்பார்வைக்கு மைய வெள்ளை வட்டம்
நேராக இருக்கும் படி சுவற்றில் மாட்டவும்
)
குருகுலத்தில்
பஞ்ச பாண்டவர்கள். அவர்களை ஒரு மாமரத்தின்
அருகில் அழைத்துச் செல்கின்றார் குரு.
” சகாதேவா,
அதோ அந்த மாமரத்தைப் பார்.
எதைக் காண்கிறாய்?”
” பரந்து
விரிந்த செழிப்பான மாமரம் ” இது சகாதேவனின் பதில்.
” நகுலா,
நீ அந்த மரத்தைப் பார்.
உனக்கு என்ன தெரிகிறது?”
” செழிப்பான,
கிளைகள் படர்ந்த அம்மாமரத்தில் எத்தனை
பறவைகள்?”
” ஆஹா,
கொத்துக் கொத்தாய் தொங்குகின்ற, நான் பார்த்திராத அளவில்
பெரிதான எத்தனை மாங்கனிகள்”
” அர்ச்சுனா,
உனக்கு என்ன தெரிகிறது?”
” அம்மாமரத்தின்
மையப்பகுதியில் அமர்ந்துள்ள வெள்ளைப் புறாவின் இருதய் தெரிகிறது”
அனைவரு
பார்த்த காட்சி ஒன்றே, ஆனால்,
அவரவர் நிலைக்கேற்ப பார்வையின் பதிவு மாறியுள்ளது. அகண்டு,
பரந்த அம் மாமரத்தில் உள்ள,
அடிக்கடி பறந்து இடம் மாறுகின்ற
பல பறவைகளில் ஒரு தனிப்பட்ட பறவையைக்
காண்பதே அரிது. அதிலும் அரன்
இதயம் மட்டும் தெரிகிறது என்பதுதான்
ஒருமித்த சிந்தனைகள் உச்சம். அதனால்தான் அர்ச்சுனன்
வில் விஜயனானான்.
தொடர்ந்து
ஸ்ரீயந்தராவை பார்த்து வர, வர மையத்தில்
உள்ள வெள்ளை வட்டம் மட்டும்
தென்படும். அதிலிருந்து வெண்மையான ஒளி உங்கள் புருவ
மத்தியை நோக்கி வரும். புருவ
மத்தியின் உணர்வு நன்கு வெளிப்படும்.
உங்கள் ஒரு மித்த சிந்தனை
சிறக்கும். ஒவ்வொரு முறையும் படிக்க
ஆரம்பிக்கும்போது ஸ்ரீயந்த்ராவை இரண்டு நிமிடங்கள் பார்த்து
விட்டுப் படித்தால் மனம் உங்களுடனே இருக்கும்.
புரிந்து படிப்பீர்கள். எளிதில், நிரந்தா நினைவாற்றலாக அது
மாறும்.
Urs Happily
DR.Star Anand ram
www.v4all.org
Urs Happily
DR.Star Anand ram
www.v4all.org
No comments:
Post a Comment