குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இந்து மதம் கூறும் வழிமுறைகள் | |
"மனிதனின் மகத்தான சொத்து ஆன்மீகம். இறை நினைப்புடன் வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் எதிலும் வெற்றி பெறுவர். உலகப் புகழ் பெறுவர்."
1. ஒவ்வொரு பெற்றோரின் இன்றியமையாத கடமை குழந்தைகள் காலையில் எழுந்தவுடன் இறை மந்திரம் கூறி, இறை வழிபாட்டை செய்யச் செய்வது. 2. மாலையில் ஆன்மீக கருத்துக்கள், நீதிக்கதைகள் கூறி பகவானை வணங்க வேண்டும் என்ற கடமையை உணர வைப்பது. 3. ஞாயிறு தோறும் கண்டிப்பாக மந்திரம் கூறும் வகுப்புகள் நடத்துவது. இதில் ஒவ்வொரு மாணவரையும் ஐந்து நிமிடமாவது மந்திரம் கூற வைப்பது. ஒரு மாணவர் மந்திரம் கூற மற்ற மாணவர்கள் பின் தொடர்ந்து கூற வேண்டும். 4. மாணவர்களுக்கிடையே மாதம் தோறும் ஆன்மீக பேச்சுப்போட்டி, தடையில்லாது மந்திரம் கூறும் போட்டி வைத்து வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு அளிப்பது. 5. ஆன்மீக வகுப்புகள் நடத்தும் ஏற்பாட்டை அந்தந்த ஊர்களில் வாழும் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுத்த வேண்டும். 6. வீதிகள் தோறும் இடவசதி உள்ள வீடுகளில் எல்லா குழந்தைகளையும் ஒன்று சேர்த்து மந்திர வகுப்பு நடத்துவதால் குழந்தைகளின் வாழ்க்கை கண்டிப்பாக சிறப்படையும். அதை எற்று நடத்துபவர்களுக்கும், இடவசதி அளிப்பவர்களுக்கும் புண்ணியம் சேரும். 7. ஆன்மீக அறிவும், பிறருக்குப் போதிக்கும் ஆற்றலும், பிறர் உயர்வுக்குப் பாடுபடும் நல்ல எண்ணமும் கொண்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஆன்மீக வகுப்பு நடத்தும் ஆசிரியராக்க வேண்டும். இது சம்பந்தமான இலவச ஆலோசனைக்கு அனுகவும். "பிறர் உயர்வுக்கு இறை நினைப்போடு பாடுபடு உன் உயர்வுக்கு பகவான் கை கொடுப்பார்" பொதுவாக இளமையிலேயே வித்யா கல்வி என்ற பள்ளி படிப்பையும், ஞானக் கல்வி என்ற இறைமார்க்க கல்வியையும் படித்து உணர வேண்டும். இது ஒவ்வொரு இந்துக்களுக்கும் உள்ள கடமையாகும். இதை சுருக்கமாக ஒளவையார் 'இளமையில் கல்' என்று கூறியிருக்கிறார். இளமையில் கற்க வேண்டியது ஆன்மீக கல்வியும், பள்ளியில் படிக்கும் வித்யா கல்வியும் ஆகும். தற்பொழுது மாணவர்கள் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் நோக்கத்தில் இருப்பதால் நமது ஆத்மாவுக்கும், வாழ்க்கைக்கும் வளம் சேர்க்கும் ஆன்மீக கல்வியை மறந்து விடுகின்றனர். இந்த இரண்டு கல்வியையும் முறையாகக் கற்றவர்கள் வரிசையில் வீரசிவாஜி, விவேகானந்தர், பாரதியார், மகாத்மா காந்தி என்பதை நாம் அறிவோம். தாயின் ஆன்மீகப் போதனையால் வளர்ந்தவர்கள் வீரசிவாஜியும், மகாத்மா காந்தியும் ஆவார்கள். தனது குருவின் ஆன்மீகப் போதனையால் உயர்ந்தவர்கள் விவேகானந்தரும், பாரதியாரும் ஆவார்கள். இவர்கள் இன்னும் நம்முடன் வாழ்ந்து வருகின்றனர். |
"மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்: கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்; தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்!"
Saturday, August 23, 2014
குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இந்து மதம் கூறும் வழிமுறைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment