பிராங்க்
பெட்கரின் வெற்றி
பிராங்க்
பெட்கர் உலகின் புகழ் பெற்ற
சேல்ஸ்மேன் நம்பர் ஒன். அவர்
ஆரம்பத்தில் பேஸ்பால் விளையாடுபவராக இருந்தார். எல்லாத் திறமைகளும் இருந்தும்
கூட அவரை டீமிலிருந்து விலக்கி
விட்டனர் - அவரிடம் உற்சாகம் இல்லை
என்ற ஒரு காரணத்தால்.
அதே துறையில் வல்லுநரான ஒருவர் அவரிடம் அக்கறை
கொண்டு, "பிராங்க் உன்னிடம் உற்சாகம் வேண்டும். வெற்றிக்கு அதுவே அடிப்படைத் தேவை"
என்றார்.
"நான்
என்ன செய்வது? அது என்னிடம் இல்லையே!
கடையிலா வாங்க முடியும் அதை?
என்னிடம் இல்லை என்றால் அது
இல்லைதானே?" என்றார் பிராங்க்.
"அப்படி
இல்லை பிராங்க், உற்சாகமுள்ளவனாக உன்னை ஆக்கிக் கொள்.
உற்சாகமுடன் விளையாடு. உற்சாகமுடன்
இருப்பதுபோல்
நட, விளையாடு. உற்சாகம் தானாக உன்னை வந்து
அடையும். உறுதியான முனைப்புடன், உற்சாகத்துடன் நீ விளையாடினால் உனது
இயல்பான திறமைகள் உன்னை சிகரத்தில் ஏற்றிவிடும்"
என்றார் அவர்.
அப்படியே
நடந்தது. பேஸ்பாலில் மட்டும் வெற்றி பெறவில்லை
பிராங்க். பின்னர் சேல்ஸ்மேனாக ஆகி,
உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேனாக
உயர்ந்தார்.
உலகின்
தலைசிறந்த சேல்ஸ்மேனாகத் தான் ஆனதற்கான காரணம்
உற்சாகம்
என்கிறார்
பிராங்க் பெட்கர்.
"HOW I RAISED MYSELF FROM FAILURE TO SUCCESS IN
SELLING" என்ற அவரது புத்தகம் படிப்பதற்குரியது.
இருப்பது
போல
"இருப்பது
போல" (AS IF) என்னும் இயற்கை விதி
ஒன்று உண்டு.
உங்களிடம்
இல்லாவிட்டாலும் கூட தேவையான குணம்
இருப்பது போல நீங்கள் நடக்க
ஆரம்பித்தால் நீங்கள் விரும்பும் குணம்
தாமாக உங்களை வந்தடையும்.
ஜலதோஷம்
போல எளிதில் தொற்றிக் கொள்ளக்
கூடியது உற்சாகம். ஆனால் ஜலதோஷம் போலக்
கெடுதலைச் செய்யாமல் நல்லதைச் செய்கிறது என்கிறார் நார்மன் வின்சென்ட் பீல்.
உற்சாகம்
இருப்பது போலச் செயல்படுங்கள். தானே
உற்சாகம் வந்து சேரும்.
No comments:
Post a Comment