Saturday, August 9, 2014

உங்கள் பெயர் நிலைக்கட்டும் - மனிதன் பிறக்கிறான், இறக்கிறான். ஆனால், உலகத்துக்காக என்ன நல்லதைச் செய்து விட்டுப் போனான்!

உங்கள் பெயர் நிலைக்கட்டும்



மனிதன் பிறக்கிறான்இறக்கிறான். ஆனால்உலகத்துக்காக என்ன நல்லதைச் செய்து விட்டுப் போனான்! என்பது தான் முக்கியம். 
ராஜராஜசோழன் சோழநாட்டை என்றோ ஆண்டான். ஆயிரக்கணக்கில் ஆண்டுகள் கழிந்த பிறகும்அவன் பேர் சொல்ல தஞ்சை பெரியகோயில் இருக்கிறது. அவனது மகன் ராஜேந்திரசோழன்கங்கைகொண்ட சோழபுரத்திலே ஒரு கோயிலைக் கட்டினான். அதுவும் நிலைத்து நிற்கிறது. பணம் படைத்தவர்கள் மட்டுமல்ல,ஏழையாய் இருந்தால் கூடஅவரவர் தகுதிக்கு ஏதோ ஒரு நல்லதைச் செய்யலாம்.
""காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது

என்கிறார் வள்ளுவர். ஒரு குடும்பத்துக்கு சரியான நேரத்தில் நீங்கள் செய்யும் சிறியஉதவி கூட காலம் காலமாக அவர்களால் பேசப்படும். அப்படி ஒரு நற்செயலைச்செய்தால்உங்கள் பெயர் அவர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அதுவேமனிதபிறவி எடுத்ததன் பயனாக இருக்கும்.

No comments:

Post a Comment