வாழ்க்கை எனும் பூங்காவில்
வெற்றி மலர்களைப் பறிப்பதற்கு
திட்டம் என்கிற செயல்கரங்கள் நீளட்டும்!
திட்டம் என்கிற செயல்கரங்கள் நீளட்டும்!
வெற்றி விழுவதுகளில் ஊஞ்சலாடுவதற்கு அடிப்படைத் தேவைகளில் மிகவும் முக்கிய மானது செயல்திட்டம் ( Action Plan ).
எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புவதோடு அதை எவ்வாறு சாதிப்பது என்ற திட்டமும் வேண்டும். திட்டமில்லாமல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கின்ற எவரும் வெற்றி யூரை அடைவதில்லை.
திட்டமே வெற்றிக்கு விதை. விதையில்லாமல் விருட்சம் இல்லை. அதுபோல திட்டமில்லாமல் உறுதியான வெற்றியில்லை. ஆகவே திட்டமிடும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். எந்தவொரு செயலானாலும் அதை திட்டமிட்டே முடிக்க முயலுங்கள். முயற்சித்தால் முடியாத்து இல்லை.
நேரமே வாழ்க்கை
உங்களுடைய வாழ்க்கை என்பது மனித்துளிகளின் தொகுப்பாகும். ஆகவே மணித்துளிகள் தோறும் செயல் ஏணிகளில் முன்னேறிக் கொண்டே இருங்கள். ” சும்மா ” இப்பதே சுகம் என்று இருந்து விட்டால் வறுமைதான் உங்களின் விலாசம் ஆகும்.
உழைப்புக் காற்றைச் சுவாசிக்கின்றவர்கள் எப்பொழுதும் உற்சாகமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். திட்டமிட்ட உழைப்பும் செயல் வேகத்தோடு கூடிய முயற்சியும் உங்களிடம் இருக்குமானால் உங்களால் சாதிக்க முடியாத்து எதுவுமில்லை.
சுய ஆய்வு
ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்லும் முன்னர், அன்றைய நிகழ்வுகளை ஆய்வு செய்துடன் அடுத்த நாளுக்கான நேரத்திட்டத்தையும் தயார் செய்து கொள்ளுங்கள். அத்துடன் உங்களுடைய வெற்றிப் பயணம் ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் அதிகாலை 5.00 மணிக்குத் தொடங்க பட்சம் அதிகாலை 5.00 மணிக்குத் தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.
சோம்பலுக்கு மறந்தும் இடம் கொடுக்காதீர்கள். காலையில் படுக்கையை விட்டு எழுவதில் முந்திக் கொள்கிறவர்களே வாழ்க்கையில் முந்திக் கொள்கின்றார்கள் என்பது முற்றிலும் உண்மை.
வெற்றிக்கு முதல் தேவை
வெற்றியாளர்களிடம் பொதுவாகக் காணப்படும் முக்கியமான பண்பு அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுவதுதான். அதிகாலை நேரம் ஆற்றல் மிகுந்த அரிய பொழுதாகும். அப்போழுது மனம் அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆகவே, அதிகாலையிலேயே உங்கள் உற்சாகமான செயல்பாடுகளைத் தொடங்குங்கள்.
முடங்கில் கிடந்தால் நமது வாழ்வும், முன்னேற்றமும் முடங்கிவிடும் என்பதை எப்பொழுதும் நெஞ்சில் வைத்துச் செயல்படுங்கள். அதிகாலையில் எழுவது ஒன்றும் கடினமான செயல் அல்ல. உங்களுடைய ஐம்புலன்களை அறிவின் ஆட்சிக்குள் வைத்து கொண்டீர்கள் என்றால் உங்களால் முடியாத்து எதுவுமில்லை.
இரவு உறங்கும் முன்னர் நீங்கள் தயார் செய்கின்ற அடுத்த நாளுக்கான செயல் திட்டத்தில் முதல் நிகழ்வாக ‘ அதிகாலையில் ‘ எழுதல் என்பது இடம் பிடிக்கட்டும். காலைச் செயல்களே வெற்றிக் கனிகளைப் பறிக்கும் கைகள்.
முழுநாளுக்கான செயல்திட்டத்தோடு அதிகாலையில் எழுந்திருக்கும் போது, உங்கள் எதிரில் தோன்றும் சவால்களும் பணிகளும் உங்களுக்கு எளிதானதாகத் தோன்றுகின்றது. அதாவது, நீங்கள் ஒவ்வொரு பணியைச் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே உங்கள் மனம் அவற்றைச் செய்து முடித்து விடுகின்றது. அதாவது ஆழ்மன ஈடுபாடும் ஒத்துழைப்பும் உங்களை இயக்கும் உன்னத சக்தியாக மாறி விடுகின்றது.
ஆகவே, வெற்றி பெறுவதற்கு செயல்திட்டம் தீட்டுங்கள். திட்டமிடுவதோடு நின்றுவிடாமல், திட்டமிட்டவாறே செயல்களை முடித்து வெற்றி வாகை சூடுவதற்கு இப்பொழுதே தயாராகுங்கள்.
வாய்ப்புகளை எதிர்நோக்குங்கள்
நம்பிக்கையே நமது வாழ்க்கை என்பதைப் புரிந்து கொண்டு, எதையும் ஆக்க சிந்தனையோடு அணுகத் தொடங்குகள். அது அப்படி நடந்து விடுமோ, இப்படி நடந்து விடுமோ என்ற அச்சத்தை விட்டுவிட்டு, எது எப்படி நடந்தாலும் அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளத்துக் கொள்ளுங்கள்.
அதாவது, நாம் நமது முழுஆற்றலையும் பயன்படுத்தி முயற்சி செய்த பின்னர் விளைவுகள் நமக்குச் சாதகமாக அமையவில்லை என்றால் அதற்காக மனம் கலங்கி விட்க்கூடாது. உங்களுடைய முழுசக்திக்கும் அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்வுக்காக கவலைப்படத் தொடங்கினால், வாழ்நாள் முழுவதும் நீங்கள் கவலைக் கடலில் மூழ்க வேண்டியதுதான்.
மனதால் கலக்கப்படுவதாலோ, கவலைப்படுவதாலோ எந்தவிதப் பயனும் இல்லை என்கிற நிலையில், கவலைப்பட்டு பொன்னான நிகழ்காலத்தை வீண்செய்வது விவேகமான செயல் ஆகாது.
திட்டத்தை மாற்றுங்கள்
எதிர்நோக்கோடு தீட்டப்படுகின்ற திட்டத்தை செயல்படுத்தும் போது, எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், திட்டத்தை மாற்றியமைத்து உங்களுடைய செயல்பாட்டைத் தொடர வேண்டும். அவ்வாறு இல்லாமல் தொட்டதும் தொல்வியாகிவிட்டதே என்று மனம் தளர்ந்து செயல் இழந்து முடங்கி விடக்கூடாது. எதற்கும் மாற்று உள்ளது என்ற நம்பிக்கையும் அதை உணர்ந்து அறியும் அறிவும் மிக்க முக்கியம்.
ஒரு மருத்துவரிடம் செல்கின்றீர்கள், உங்களுடைய நோயின் காரணத்தையும் தன்மையையும் பரிசோதித்த பின்னர், அவர் சில மருந்துகளையும் தொடக்கத்தில் கொடுக்கின்றார். ஒரிரு தினங்கள் கழித்து மீண்டும் உங்களை பரிசோதித்துப் பார்க்கும் போது எதிர்பார்த்தவாறு நோய் குணமாகி வரவில்லை என்றால், உடனே மருந்தையும், சிகிச்சையையும் மாற்றுகின்றார். அதாவது நோயைக் குணமாக்குவதே நோக்கமே தவிர, ஏற்கனவே போட்ட சிகிச்சைத் திட்டத்தை செயலாக்குவது அல்ல. அதுபோலத் தான் உங்கள் இலக்கை அடைவதே நோக்கமே தவிர உங்கள் செயல் திட்டத்தை அமுலாக்குவது அல்ல. ஆகவே எதையும் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் அணுகுங்கள்.
தோல்விகளே பாடங்கள்
வெற்றியிலிருந்து கற்றுக் கொள்வதைக் காட்டிலும் தோல்விகளிலிருந்துதான் நாம் அதிகமாகக் கற்றுக் கொள்கின்றோம். ஆகவே தோல்வி நேர்ந்தாலும் அதை அவ்வாறே ஏற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சிக்கின்ற மன உறுதியும் வலிமையும் வேண்டும். திட்டமிடுகின்றபோதே, திட்டத்தை எதிர்பார்த்தவாறு நிறைவேற்ற முடியவில்லை என்றால் அதற்கு மாற்றுத்திட்டமும் செயல் முறைகளையும் தயார் செய்து கொள்ளுங்கள்.
நம்பிக்கைதான் வாழ்க்கை
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு எதையும் எதிர்நோக்குங்கள். ஏனென்ன்றால் நம்பிக்கை தான் வாழ்வின் அஸ்திவாரம். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்வதோடு, நல்லன அல்லாதவை நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுவதற்கு எப்பொழுதும் உங்களைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
வெற்றியின் விதைகள்
செயல்களே வெற்றியின் விதைகள், செயல்படாமல் இருப்பவர்கள் எப்பொழுதும் வெற்றியின் வெளிச்சத்திற்கு வருவதில்லை. உறங்கிக் கொண்டிருக்கும் யானையை விட செயல்படும் எறும்பே உயர்வானது. உங்களுடைய செயல்களை சிறுசிறு பிரிவுகளாகப் பிரித்து செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வதால் வேலையில் சலிப்பு ஏற்படாது அத்துடன் தள்ளிப்போடும் எண்ணத்தையும் தவிர்த்து விடலாம்.
எண்ணங்களைச் செயல்திட்டமாக மாற்றுங்கள். செயல்திட்டத்தை உத்வேகத்தோடும் ஆழ் மன ஆற்றலுடனும் நிறைவேற்றுங்கள். தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் மாற்றுத் திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு தொடர்ந்து முயலுங்கள். வெற்றி வானில் உங்களாலும் சிறகுவிரித்து மகிழ முடியும். ஆம் முடியும் என்று நினைப்பவர்களே வென்று காட்டுகின்றார்கள்.
நெஞ்சக் கழனியில்
நம்பிக்கை மலரட்டும்
எதிர்காலக் கனவுகளெல்லாம்
எதிர்ப்பின்றிக் கனியட்டும்!! சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
urs Happily
www.v4all.org
நம்பிக்கை மலரட்டும்
எதிர்காலக் கனவுகளெல்லாம்
எதிர்ப்பின்றிக் கனியட்டும்!! சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
urs Happily
www.v4all.org
No comments:
Post a Comment