செல்வம் என்றால் என்ன? யாரை கேட்ட கிடைக்கும்?
பணம், பொருள், சொத்துக்கள் தான் செல்வம் என்று பலர் எண்ணுகின்றார்கள். மேற் கூறப்பட்டவை செல்வங்களாயினும் நிம்மதி, தேகசுகம், நற்பண்பு, நல்லார் உறவு, நல்லறிவு, குடும்ப உறவு, சமுதாய நல்லுறவு, புத்திரப்பேறு, பாதுகாப்பு, பசி, பட்டினி இன்மை, நாட்டுவளம், இவையெல்லாம் ஒருவருக்கிருக்க வேண்டிய செல்வங்களாகும்.
இவற்றையெல்லாம் வழங்கும் சக்தியாக விளங்குபவள் காக்கும் கடவுளாக நாம்போற்றும் திருமாலின் தேவியான மகாலட்சுமி அன்னையே.
ஒருவர் தவறான வழியிலும் பொருள் ஈட்டலாம். செல்வந்தரென்று காட்டிக்கொள்ளலாம். அந்தச் செல்வம் மட்டும் நிலையானது, பெருமை தருவது என்று கூறமுடியாது. மாபெரும் செல்வந்தர்கள் அதாவது பொருட்செல்வம் நிரம்பப் பெற்றவர்களாயிருந்தாலும் மேலேகாட்டப்பட்ட ஏனைய செல்வங்கள் இல்லாவிட்டால் வாழ்வில் முழுமை காண முடியாது.
இயற்கையின் இயக்கமாக இயற்கையின் சொரூபமாக மகாலட்சுமி திகழ்கின்றாள்.
பூமியைத் தாங்கி நிற்கும் போது பூமாதேவியாகவும்,
புத்திரப் பேறு வழங்கும் போது சந்தானலட்சுமியாகவும்,
மனவுறுதி தரும் போது வீர லட்சுமியாகவும்,
வெற்றியைத் தரும்போது வஜயலட்சுமியாகவும்,
தைரியம் தரும்போது தைரியலட்சுமியாகவும்,
பயிர்கள் செழித்து விளைவைப் பெருக்கும்போது தானிய லட்சுமியாகவும்
பொருட் செல்வங்களை வழங்கும் போது தனலட்சுமியாகவும் போற்றப்படுகின்றாள்.
எழுச்சியை வழங்கும் கஜலட்சுமியாகவும் நிம்மதியைத் தரும்போது
ஆதிலட்சுமியாகவும் செல்வாக்கைத் தரும் போது ஐஸ்வரியலட்சுமியாகவும் அன்னை விளங்குகின்றாள்.
பஞ்சமா பாதகங்கள் உட்பட சகல தீய வினைகளும், நிலைகளும் அகன்று நிம்மதி, அமைதி நிலைக்க வேண்டும். இந்த செல்வநிலை ஓங்க வேண்டும் என்பதே மகாலட்சுமி வழிபாட்டின் நம்பிக்கையாகும்.
From - HAPPY MONEY MAGNETx+ Book
Urs Happily
Dr.Star Anand Ram
www.v4all.org
cell-9790044225
No comments:
Post a Comment