MLM வியாபாரத்தில்
வெற்றி பெறுவது எப்படி?
இலட்சியங்களுக்காக
கடமையை கண்ணியத்துடன் செய்து வரும் இலட்சியவாதிகளே!
நாளைய கோடீஸ்வரர்களே! கொடை வள்ளலகளே!
அடிப்படை
ஆறில், இனி,
Follow Up: Follow Through
பின் தொடர்தல், நிறைவேற்றுதல்
வியாபாரத்தில்
பெயர் பட்டியல் அமைத்து, அழைத்து, தொடர்பு கொண்டு திட்டத்தைக்காட்டி,பார்த்துச் சென்றவர்களை பின் தொடர்ந்து சந்தேகங்களை
நீக்கினாலே அவர்கள் விநியோகஸ்தர்களாக மாறுவார்கள்.
எனவே, ஆறு அடிப்படைகளில் இதுவே
அவசியமானது. ஆதாரமானது.
பின் தொடரும்போது செய்ய வேண்டிய செயல்பாடுகள்
1. திட்டத்தைப்
பார்த்தபின், மீண்டும் சந்திக்க, சிந்திக்க முன் அனுமதி நேரம்
பெற வேண்டும்.
2. சந்திக்கும்,
சிந்திக்கும் நேரத்தை அடுத்த 48 மணி
நேரத்திற்குள் திட்டமிடவும்.
3. தனியாக
போகாமல் தக்க துணையுடன் (ஸ்பான்சர்)
செல்லவும்.
4. பின்
தொடர்வது வியாபாரத்திற்காக மட்டுமே என எண்ணம்
தோன்றாமல் நட்புடன் உறவை உருவாக்குங்கள்.
5. உங்கள்
மீது நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், உங்கள் வார்த்தைகளை நம்பத்
தொடங்குவார்கள்.
6. அவர்களது
கனவினைக் கண்டுபிடிக்க வேண்டும். கனவுகள் இந்த வியாபாரம்
மூலம் நனவாகும் என்ற நம்பிகையை ஏற்படுத்த
வேண்டும்.
7. பின்தொடரும்
முன்பே, அவர் வாடிக்கையாளராக வேண்டுமா?
விநியோகஸ்தராக வேண்டுமா என்று தெளிவுடன் முடிவு
செய்யுங்கள்.
8. வாடிக்கையாளராக்க
எனில், அதற்குரிய பொருட்கள், தகவல்கள், விலை மதிப்பீடு இவற்றை
எடுத்துச் செல்லுங்கள்.
9. விநியோகஸ்தராக்க
எனில், அடிப்படையான வணிகத்தைப் பற்றிய தகவல்கள், சாதனையாளரின்
வரலாறுகள், வருமானங்கள், இவற்றைக் கொண்டு செல்லுங்கள்.
பின் தொடரும் பொழுது, வினாக்களும்
விடைகளும்
1. நான்
யாரிடமும் போய் கேட்கமாட்டேனே?
2. என்னிடம்
இந்த வியாபாரத்தில் ஈடுபட பணமில்லையே?
3. எனக்கு
நேரமே இல்லை. நான் ரொம்ப
பிஸி.
4. எனக்கு
யாரையும் தெரியாதே.
5. இப்பொழுதே
ரொம்ப டென்ஷன், ஓரிரு மணி நேரமே
வீட்டில் இருக்கிறேன். எதற்கு இன்னொரு புதிய
பிஸினஸ்.
6. வீடு,
வீடாக விற்பனை செய்யனுமே.
7. எனக்கு
படிப்பு, அனுபவம் இல்லையே.
8. உங்களைப்
போல பேசத் தெரியாதே.
9. எல்லோரும்
இதில் சேர்ந்தால் முற்றிலும் நின்று விடாதா?
10. இப்பொழுது
சேருவது மிகவும் லேட், முன்னரே
சேர்ந்திருக்க வேண்டும்.
இதற்குரிய
பதில்களையும், இதுபோல கேட்கப்படும் பலவகையான
வினாவுக்குரிய பதில்களையும் ஒரே இடத்தில் நீங்கள்
அறிந்து கொள்ளலாம். அதாவது, சில ஆங்கில
சொற்களுக்கு அர்த்தம் புரியாவிடில் அகராதியினை தேடுகிறோமே, அதுபோல இவற்றிற்கு அனுபவத்தால்
விடைகளைக் கண்டறிந்து வைத்திருக்கும் உங்களது மேல்நிலை சாதனை
விநியோகஸ்தரிடம் தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்டவை
போன்ற வினாக்களை மனதார வரவேற்கவும், ஒருவர்
எந்தளவு அதிகம் கேள்வி கேட்கிறாரோ
அந்தளவிற்கு நன்றாக இந்த வியாபாரத்தில்
ஈடுபடப் போகிறார்.
எனவே, அவர்களுடன், அவர்களது கேள்விகளுடன் இணைந்து சென்று அதையே
இந்த வியாபாரத்தில் ஈடுபட வேண்டிய அவசியமாக
மாற்றுங்கள்.
மேலும்,
அனைத்திற்கும் இதைப்போலத்தான், நானும் நினைத்தேன். பிறகு
உணர்ந்தேன். இன்று முழுமையாக தெரிந்து
கொண்டேன் என்பதை உறுதியுடன் I feel, I felt, I found எனக் கூறுங்கள். வினாக்கள்
எனும் தடைக்கற்களை விடைகள் எனும் படிக்கட்டுகளாக
மாற்றி சிகரங்களை நோக்கி சீக்கிரமாக சென்று
வெற்றிக்கொடி கட்டுவோம்.
பின்தொடர்தல்
மற்றும் நிறைவேற்றுதல் எனும் கடமையைச் செய்தால்
எதிர்வரும் பலன்கள்
நீங்கள்
பின்தொடரும் மக்கள் விநியோகஸ்தராகலாம் / வாடிக்கையாளராகலாம்
/ அவர்களுக்கு தெரிந்தவர்களை அறிமுகப்படுத்தலாம்.எப்படியிருப்பினும் உங்களுக்கு நன்மைதான். எனவே, நம்பிக்கையுடன் பின்தொடரலாம்.
விநியோகஸ்தராக
முடியாது என்றவர் நிச்சயம் வாடிகையாளராகவாவது
வாய்ப்புள்ளது. அவர்களை வாடிக்கையாளராகினால், தொடர்ந்து ஒரு
தொடர்பு ஏற்படும். பிற்காலத்தில் விநியோகஸ்தராக வழி பிறக்கும்.
எனவே, புன்னகையுடன் புறப்படுங்கள்! மண்ணைக்கூட பொன்னாக்கலாம்!
பின்தொடர்தலைத்
தொடங்கும் முன், முயற்சி செய்யும்
செயலுக்குரிய பயிற்சியினை எடுத்துக்கொண்டு செயல்படுங்கள். அப்போதுதான் வெற்றி கிடைக்கும்.
பிறப்பினால்
உள்ள திறைமையும், பயிற்சியினால் வளர்த்துக் கொண்ட திறமையையும் இணைத்து
செயல்படுத்தும் பொழுது வெற்றிமீது வெற்றி
பெறலாம்.
முயற்சி
+ பயிற்சி + தொடர்ச்சி = நிருபிக்கப்பட்ட நிச்சயமான வெற்றி!
Parenting the New Born Distributors
இந்த
MLM வியாபாரத்திற்காக விசிட்டிங் கார்டு தயாரித்து, நடை,
உடை, பாவனைகளை மாற்றி, பெயர் பட்டியல்
தயாரித்து,தொடர்பு கொண்டு, அழைத்து,
வியாபாரத் திட்டத்தினை விளக்கி,பின்தொடர்ந்து, நம்பிகையை
அளித்து, நல்லநாள், நேரம் பார்த்து பிறந்த
விநியோகஸ்தர் என்ற மழலையை அரவணைத்து,
பேணிக்காத்து, கற்றுக்கொடுத்து, அவரை வெற்றியாளராக்குவது எப்படி
என்பதைப் பார்க்கலாம்.
சொர்க்கத்தின்
திறப்புவிழா
புதிதாக
வணிகத்தில் இணைந்த விநியோகஸ்தர் இல்லத்தில்
இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
புதுப்புது
பொருள்களின் அறிமுக விழா
புதியதோர்
உலகில் புகும் விழா -
என்பதைக்
கூறி இந்த வியாபாரத்திற்குரிய அடிப்படைகளை
செய்ய வேண்டியவைகளை
ஒண்ணொன்னா
கத்தக்கணும்
ஒன்னாயிருக்க
கத்துக்கணும்
கற்றுக்கொண்டதை
கடை பிடிக்கணும்
கடை பிடிப்பதை கற்றுக் கொடுக்கணும் -
என்பதைச்
சொல்லிக் கொடுக்கணும்
இப்படித்தான்
இருக்க வேண்டும் திறப்பு விழா
1. அதிக
நேரம் எடுத்து வணிகத்தின் அனைத்து
விபரங்களையும் விளக்குதல் கூடாது.
2. மிகவும்
எளிமையான வியாபாரம். குழு Team அமைப்பு முறையில் அனைவரும்
இணைந்து எளிதாக செய்யலாம் என்பதை
விளக்கிட வேண்டும்.
3. நம்பிகையுடையவனுக்கு
வானம் கூட தொட்டுவிடும் தூரம்தான்.
நம்பிக்கை இல்லாதவனுக்கு தன் இமைகள் கூட
தொலைதூரம்தான்.
4. ஒரு
நல்ல குழுவை உருவாக்க பொறுமை,
சகிப்புத்தன்மை, சிறந்த பயிற்சி, மனிதர்களை
புரிந்து கொள்ளுதல், தியாகம் போன்றவை மிகவும்
அவசியம்.
5. தலைமைத்
தன்மை, மனப்பாங்கு, சிறந்த தகவல் பரிமாற்றம்
பேச்சாற்றல், மனித உறவுகள், நல்ல
முடிவுகளை எடுப்பது எப்படி, வேறுபாடுகளை நிர்வகிப்பது
எப்படி பணிப்பகிர்வு. கால நிர்வாகம் இவற்றினை
கற்றுக்கொள்ள தலைமைப் பண்பின் தலைசிறந்த
வழிகாட்டியான சிகரங்களை நோக்கி (ஆசிரியர். செந்தில்
) நூலினை சீக்கிரமாக வாங்கிப் படியுங்கள்.
ஸ்பான்சரும்
புதிய விநியோகஸ்தரும்
மழலை ஒன்று மலர்ந்தால் மட்டுமே
மங்கையொருவள் தாயாகிறாள். இதற்கு மாதவம் செய்கின்றனர்.
மரங்களை வலம் வருகின்றனர். மருத்துவமும்
செய்து கொள்கின்றனர். எப்படியிருப்பினும், எத்தனையோ விஞ்ஞான செயல்கள் வந்தபோதிலும்,
இயற்கையின் ஆசிர்வாதம் இன்று வரை தேவைப்படுகிறதல்லவா?
இதே போல கிடைத்தவர்தான் உங்களின்
கீழ் இணைந்த புதிய விநியோகஸ்தர்
(மழலை), பாலூட்டி, சீராட்டி, அன்புகாட்டி, அரவணைத்து,அனுசரித்து, கண்ணை இமை காப்பது
போல தாய் தனது மழலையை
காப்பது நாமெல்லாம் அறிந்ததே. இதனை நாமெல்லாம் அறிந்து,
புரிந்து, உணர்ந்து, ஒவ்வொருவரும் நம்மை நம்பி இணைந்த
விநியோகஸ்தர்களுக்கு அறிவூட்டி, தைரியம் தன்னம்பிக்கை தந்து,
ஊக்கமளித்து, உற்சாகப்படுத்தி இணைந்து கடமையைச் செய்தால்
வெற்றி வெகு சீக்கிரமாக வந்து
சேரும்.
தனது மழலை கவிழ்ந்து, தவழ்ந்து,
தட்டுத்தடுமாறி எழுந்து, அன்ன நடைபயின்று, அதிவேகமாக
ஓடி, ஆர்வமுடன் ஆடிப்பாடி, கண்ணைக் கவரும் வண்ண
உடையணிந்து வளர்ந்து பள்ளி சென்று படித்து…
ஒவ்வொரு
பருவத்திலும் பக்குவமாக, கவனமுடன், கருத்துடன் கவனிக்கும் தாய் போல ஒவ்வொரு
ஸ்பான்ஸரும் தங்களின் கீழ்நிலை விநியோகஸ்தர்கள் தவறு செய்யும் போதும்,
குறும்புகள் செய்யும் போதும், குற்றமெனக்கருதி நெற்றிக்
கண்ணைத் திறக்காமல், குழந்தைகளுடன் உறவாடி குணம் நாடி
குறைகளை நிவர்த்தி செய்தால் குபேரனாக முடியும்.
ஒவ்வொரு
மனிதனும் வாழ்வில் பிறந்து, வளர்ந்து வாலிபம் அடைந்து உரிய
துணையைத் தேர்ந்தெடுத்து, இல்லற வாழ்வில் ஈடுபட்டு,
இன்புற்று, துணைவியை தாயாக்கி, பத்துமாதம் பாதுகாத்து, பிரசவித்து, பிறந்த மழலையை
“எனக்கொரு
மகன் / மகள் பிற்து விட்டாள்/ன்
அவன் என்னைப்போலவே
இருக்கின்றாள்”
என ஒவ்வொருவரும் ஆன்ந்த பரவசமடைகிறோமே அது
போல,
“எனக்கொரு
விநியோகஸ்தர் கிடைத்துவிட்டார் அவரை வெற்றியாளராக்குவேன்”
என உள்ளத்தில் உறுதி கொண்டு உதவிகள்
செய்திட வேண்டும்.
“தாயில்லாமல்
நானில்லை” என்பது எவ்வளவு உண்மையோ,
அதுபோல ஒவ்வொருவருக்கும் அவர்களது ஸ்பான்ஸரின் சேவை மிக மிக
அவசியம்.
ஒவ்வொருவரும்
தங்களது சூழ்நிலை, நேரம், ஓய்வு ஆகியவற்றை
ஆர்வமுடன் செயல்படும் கீழ்நிலை விநியோகஸ்தர்களுக்காக Sacrifice செய்து இணைந்து செயல்பட
வேண்டும்.
கணவன்
/ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
ஸ்பான்ஸர்
/ Down line அமைவதெல்லாம்
Sacrifice & Service கொடுக்கும்
வரம்.
ஓடி ஓடி உழைக்கணும், உங்கள்
Down line – க்கா உழைக்கணும்.
சோர்ந்திடாமல்,
சந்தோஷமாக, சந்தேகமின்றி, சத்தியமாக உழைக்கணும்.
உங்கள்
Down line -க்காக உழைத்திட, உழைத்திட, உங்கள் நிலை உயரும்
பாருங்கள். இதுவே உண்மையென்பதை உணருங்கள்.
பெற்ற பிள்ளை சோறு போடாவிடினும்
வைச்ச பிள்ளை (தென்னம்பிள்ளை) சோறு
போடும் – என்பது பழமொழி.
உங்களுக்கும்,
உங்களது தலைமுறைக்கும், சோறு மட்டுமல்ல,சொர்க்கத்தையே
தர இருப்பவர்கள் உங்களது பிள்ளைகள் – என்பது
MLM புதுமொழி.
எனவே, உங்களது தலைமுறை நலமாக,
வளமாக இருக்க உங்களது Down line ஐ
தலைவர்களாக உருவாக்குங்கள்.
புதிய விநியோகஸ்தர்களாக இருப்பவர்கள் முதன் முதலாக செய்ய
நினைக்கும் எந்த காரியங்களையும் செயல்களையும்
உங்களது தாயிடம் (Sponcer) கேட்காமல் செய்யாதீர்கள்.
2. உங்களைப
போலவே உள்ள விநியோகஸ்தர்களிடம் (Cross lines) நிறைகளை மட்டுமே பகிர்ந்து
கொள்ளுங்கள். குறைகளைக் கூறாதீர்கள்.
3. உங்களது
சகாக்களுடன் பணம், மனம், உறவு
– இவற்றில் சரியாக இருங்கள்.
செய்யக்
கூடாதவைகளைச் செய்யாமல் இருந்தால் பாதி வெற்றி 50%.
நீங்க நல்லாயிருக்கணும், நாங்க முன்னேற
நமது குழுவில் உள்ளவர்கள் முன்னேற,
நாங்க எல்லோரும் உங்க பின்னாலே
நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க உங்க கண்ணு
முன்னாலே.
என உங்கள் குழு வாழ்த்திப்
பாடிடும்படி உங்களது சேவை இருக்க
வேண்டும்.
ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன்
எனக்கேட்ட தாய்
என்ற குறளின் படி ஒவ்வொரு
ஸ்பான்சரும் செயல்பட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment