ஸ்மார்ட்போன் வாங்க... ஸ்மார்ட்டான 10 விஷயங்கள்!
|
ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை. 5,000 ரூபாயில் தொடங்கி ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால்
பலரும் அதை எளிதில் வாங்கிப் பயன்படுத்தி
வருகின்றனர்.
ஆனால், ஸ்மார்ட்போனை
நமக்கு உதவுகிற மாதிரி பல வழிகளில் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். தினப்படி வேலைகள் முதல் அலுவலகம் தொடர்பான சில வேலைகளைக்கூட இருந்த இடத்தில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் மூலம் செய்துவிட முடியும்.
நவீன வாழ்க்கையின்
இன்றியமையாத கருவியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனை
வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா எடுத்துச் சொல்கிறார்.
அவை இனி...
விலை!
ஸ்மார்ட்போன் வாங்கச் செல்லும்முன், முதலில் போனுக்காகச்
செலவிடும் தொகையை பட்ஜெட் போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் பட்ஜெட் குறைவுதான்
எனில், அதற்குத் தகுந்தமாதிரியான ஸ்மார்ட்போனைத்
தேர்வுசெய்யலாம். பட்ஜெட் போடாமல் மொபைல் ஸ்டோர்களுக்குச்
செல்லும்போது நம் செலவு அதிகமாகவே நிறைய வாய்ப்பிருக்கிறது. வெறும் விலையோடு நின்றுவிடாமல் அதுகுறித்த
டெக்னிக்கல் விஷயங்கள் பற்றியும் ஆராய்வது முக்கியம். இதற்கு மொபைல் ரெவியூகளைப்
படிப்பது அவசியம்.
|
பேட்டரி (Battery)!
பேட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பதுதான் ஒரு போனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியா 1100 போல பத்து நாள் சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வாங்கும் பேட்டரி லித்தியம் அயனாக
(Li-Ion) இருக்க வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் 1500 mAh கொண்ட போனை தேர்வு செய்தால்தான் ஒருநாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும். எனவே, உங்கள் பயன்பாடுகளைப் பொறுத்து பேட்டரியைத் தேர்வு செய்யுங்கள்.
இணையம் - இணைப்புத்தன்மை!
நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன் 3ஜி ஏற்றுக்கொள்ளும் தன்மை உள்ளதுதானா என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம். அதேபோல,
Bluetooth, Wi-Fi, GPS, USB வசதி போன்றவை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். புளூடூத் வெர்ஷன் குறைந்தபட்சம் 2.1 இடிஆர்-ஆக இருப்பது நல்லது. இணைய பிரவுஸரானது ஹெச்டிஎம்எல் (HTML) வசதியுடன் வரும்.
அளவு!
ஸ்மார்ட்போனின் அளவு என்பது அவரவர்களின் விருப்பம்தான். இருப்பினும் பெரிதாக வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் அதைக் கையில் பிடிப்பது, பாக்கெட்களில் வைப்பதில் சிரமம் வரும்.
கேமரா!
எந்தவகையான ஸ்மார்ட்போனை வாங்குவதாக இருந்தாலும், அது எத்தனை மெகா ஃபிக்ஸல் கேமரா என்று முடிவு செய்துகொண்டு வாங்கவேண்டும். அதோடு உங்களுக்கு ஃப்ளாஷ் முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால், இரவில் படம் எடுக்கும்போது உங்களுக்கு சிரமம் ஏற்படும். இதில் வீடியோ ரெக்கார்டு செய்வதையும் கவனித்து வாங்கவும். 5 எம்பி கொண்ட கேமரா என்றால் அதன் மூலம் 700 ஃபிக்ஸல் அளவுக்கு வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ளலாம். வீடியோ கால் செய்யவேண்டும் என்கிறவர்கள் ஃப்ரென்ட் கேமரா வசதியுடன் உள்ள ஸ்மார்ட்போன்களை வாங்குவது நல்லது.
எடை மற்றும் அளவு!
ஒரு போன் வாங்கும்போது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை முக்கியம். இதில் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது, எடைதான். எடை குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
டிஸ்ப்ளே (Display)!
டிஸ்பிளேவை பொறுத்தமட்டில், Capacitive டச் ஸ்க்ரீன் உள்ள போன் வாங்கவேண்டும். உங்கள் தேவையைப் பொறுத்து ஸ்க்ரீன் சைஸை தேர்வுசெய்துகொள்ளலாம். அதோடு நீங்கள் வாங்கும் போன் மல்டி டச் சப்போர்ட் செய்கிறதா என்று கேட்டுக்கொள்ளுங்கள்.
இயங்குதளம் (Operating System)!
எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஓர் இயங்குதளத்தில்தான் (OS) இயங்கும். ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் போன் என மூன்று பிரபலமான இயங்குதளங்கள் உள்ளன. உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டை பொறுத்து இதில் ஏதேனும் ஒன்று உள்ள போனை வாங்கலாம்.
urs Happily
Dr.star anand Ram
www.v4all.org
urs Happily
Dr.star anand Ram
www.v4all.org
No comments:
Post a Comment