இனியாவது திருந்துவோமா?
குறையும் தனிமனித நேர்மை..
|
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
நேர்மை அல்லது தனிமனித ஒழுக்கத் துக்குப் பெயர்போனவர்கள்
நம் இந்தியர்கள்.
அமெரிக்காவில் இருக்கும்போது
பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இதைப் பெருமைபொங்க
சொல்வதைக்கேட்டு நானே புழங்காகிதம் அடைந்திருக் கிறேன். ஆனால், இன்றைக்கு நம்மிடம் நேர்மையும் தனி மனித ஒழுக்கமும் வேகமாகக் குறைவதைப் பார்த்தால் வேதனையாகவேஇருக்கிறது.
நம்மவர்களுக்குத் தானதர்மம் என்பது புதிதல்ல. பழங்காலத் தில் சுமைதாங்கிக்கல் அமைப்பது தொடங்கி, அன்ன சத்திரங்கள்
அமைப்பது எனப் பல்வேறு வகையில் தாங்கள் சம்பாதித்த செல்வத்தின் ஒருபகுதியை
சமூகத்துக்காகத் திருப்பித்
தந்தார்கள். மீதி மட்டுமே வாரிசுகளுக்குச் சென்றது. ஆனால் இன்றோ, நாம் இந்தச் சமூகத்திலிருந்துதான் சம்பாதித் தோம், அதில் பெரும்பகுதி
இந்தச் சமுதாயத்துக்குத்தான் செல்ல வேண்டும்; அதுவும் தனது வாழ்நாளிலேயே
எனப் பலரும் விரும்புகிறார்கள். இதற்கு முன்னுதாரணமாக மைக்ரோசாஃப்ட் பில்கேட்ஸ்,
வாரன் பஃபெட், ஹெச்சிஎல் சிவ்நாடார், விப்ரோ பிரேம்ஜி போன்றோரைக் கூறலாம். இந்தச் செயலை டாடா போன்ற குழுமங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்தன. இப்போதும் செய்துவருகின்றன. டாடா குழுமத்தின் பெரும்பகுதி பங்குகளை டிரஸ்ட்கள்தான் வைத்துள்ளன. டாடா குழுமம் செயல்படுத்தும் டிரஸ்ட்கள்
அனைத்தும் உண்மையான, லாப நோக்கமற்ற சமூகத்துக்காகப்
பாடுபடும் டிரஸ்ட்கள்.
இன்று நம் தமிழ்நாட்டிலும் பெரும்பாலான
கல்வி நிறுவனங் கள் லாப நோக்கமற்ற டிரஸ்ட் முறையில்தான் ஆரம்பிக்கப்
பட்டுள்ளன. ஆனால், இந்த டிரஸ்ட் களை நடத்தும் எத்தனைபேர் உண்மையாக, லாபமற்ற நோக்கோடு, சமூகச் சிந்தனையோடு நடத்துகிறார்கள்? இந்த நிறுவனங்களை நிறுவியவர்கள் முழுக்க முழுக்க லாபநோக்கோடு தான் நடத்துகிறார்கள். எத்தனை பள்ளிகளும், தனியார் கல்லூரிகளும்,
பல்கலைக்கழகங்களும் வாங்கும் நன்கொடைக்கு ரசீது தருகின்றன? இந்த நிறுவனங்களின் நிறுவனர்கள்
எத்தனையோபேர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையிட்டு,
அபராதம் கட்டச் சொல்லியிருப்பது எல்லாருக்கும்
தெரியும். நாணயமாக நடப்பவர்கள், தனிமனித ஒழுக்கத்தோடு
இருப்ப வர்கள் இந்தச் செயல்களைச் செய்யமாட்டார்கள். உண்மைக்குப் புறம்பாக நடக்கமாட்டார்கள். டிரஸ்ட் மூலம் தனது சொந்த வாழ்வுக்குப் பணம் சம்பாதிப்பது
என்பது மிகவும் கேவலமான ஒன்று.
நமது இந்திய கார்ப்பரேட் உலகத்தில் எத்தனையோ நல்ல நிறுவனங்கள், நல்ல புரமோட்டர்கள் இருந்தாலும், ஊழல் செய்வதையே தங்கள் தொழிலாகக்கொண்ட
சில நிறுவனங்கள்
மற்றும் புரமோட்டர்கள்
இருக்கத்தான் செய்கி றார்கள். இவர்கள் பலஇடங்களில்
ஏமாற்றுகிறார்கள். வருமான வரியை முறையாகக் கட்டாமல், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு
லஞ்சம் கொடுப்பதிலிருந்து, விற்பனை வரி ஏய்ப்பு, சேவை வரி ஏய்ப்பு எனப் பல கோணங்களிலும்/ வகைகளிலும் ஏமாற்றிக்கொண்டுதான் இருக் கிறார்கள். இவ்வாறு தவறாகச் சேர்க்கப்பட்ட
பணம் யாவும் கருப்புப்பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குச்
செல்கிறது. சிலசமயங்களில்
இவை திருப்பி நம் நாட்டுக்கே சுத்தமான பணமாக எஃப்டிஐ
முதலீடாக நுழைகிறது. தனிமனிதனாகட்டும், நிறுவனங் களாகட்டும் வரி ஏய்ப்பு செய்யும் வரை நாடு முன்னேறுவது கடினம். அமெரிக்கா போன்ற பொருளாதாரத்தில், வருமான வரித்துறைதான் ஒரு பெரிய சட்ட ஒழுங்கு நிறுவனமாகச்
செயல்பட்டு வருகிறது. பல பெரிய கிரிமினல்களை
இந்தத் துறையின் மூலம்தான் சிறைக்குக் கொண்டுவந்தார்கள்.
அரசியல்வாதிகள்தான் எடுத்ததற்கெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள்
என்றால், அரசு வேலையில் அதிகாரிகள்கூட வாங்கவே செய்கிறார்கள். அரசுப் பணியிடங்களை
நிரப்பு வதிலிருந்து,
துணைவேந்தரை அமர்த்துவதுவரை
எல்லா வற்றுக்கும்
பணம்தான் பிரதானமான விஷயமாக இருக் கிறது. இதனால் நேர்மையான பலர் அரசாங்க வேலையே வேண்டாம் என நல்ல தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச்
சென்றுவிடுகின்றனர்.
அரசு வேலைகளில் கைநிறையச் சம்பளம், பென்ஷன் மற்றும் மருத்துவ வசதி, 100 நாட்களுக்கு மேலாக விடுமுறை என எத்தனையோ வசதிகள் இருந்தும் 'எக்ஸ்ட்ரா’ பணத்தை எதிர்பார்ப்பவர்கள் இருக்கத்தான்
செய்கிறார்கள்.
இந்தத் தவறுகளைச் செய்பவர்களிடம் ஏன் செய் கிறீர்கள் என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் வைத்திருப்பார்கள். தாங்கள் செய்யும் தவறுகளுக்குப் பொய்யான ஒரு காரணத்தைத் தேடிக்கொள்வார்கள். ஆனால் உண்மை என்னவென்று பார்த்தால், அவர்களிடம்
தனி மனித ஒழுக்கம் இல்லை.
பிற வளர்ந்த நாடுகளில் இதுபோல் நடக்கிறதா? ஊழல் முழுவதுமாக இல்லாத நாடுகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், வளர்ந்த நாடுகளில் இந்தியாவில்
நடக்கும் இந்த அளவுக்குத் தவறுகள்/ ஊழல் கள் நடப்பதில்லை என்று உறுதியாக அடித்துக்கூறலாம். அதற்கு முக்கியக் காரணம், சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதில் எள்ளளவும் பிசகமாட்டார்கள். உதாரணத்துக்கு,
ரஜத் குப்தாவை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து ஐ.ஐ.டி டெல்லியில் படிப்பு முடித்து, அமெரிக்கா சென்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பு முடித்து அங்கேயே வேலை பார்த்து செட்டிலாகிவிட்டார். உலகளவில் பிரசித்தமான மெக்கன்ஸி நிறுவனத்தின்
மேனேஜிங் டைரக்டராக மூன்று முறை பணியாற்றினார்.
இந்தியாவில் ஐஎஸ்பி (Indian School of
Business) என்ற எம்பிஏ படிக்கும் பள்ளியை நிறுவி உலகளவில் முதல் 15 ரேங்குக்குள்
அந்தப் பள்ளியை கொண்டுவந்தார். இந்தியாவிலும் இவருக்கு ஏகப்பட்ட மதிப்பு.
இவ்வளவு இருந்தும் சுயஒழுக்கமற்ற ஒரு சிறிய தவறி னால் (இவர் டைரக்டராக இருந்த நிறுவனத்தின்
பங்குச் சந்தை சார்ந்த செய்தியை பரிமாறிக்கொண்டார் என்பதற்காக) இவரின் தவறு நிரூபணமாகி அமெரிக்காவில்
இவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் வழங்கப்பட்டது.
இவர் எந்த அளவுக்குக் கௌரவமாக இருந்தாரோ, அவையெல்லாம் இன்று எங்கோ போய்விட்டது. ஓய்வுக்காலத்தில் இவர் டைரக்டராக இருந்த பல பெரிய நிறுவனங்களும் இவரைப் பதவியைவிட்டு விலகச்சொல்லின. பணத்துக்கு
ஆசைப்பட்டு மனிதன் தன்னைத்தானே கீழிறக்கிக் கொள்வதற்கு
இதைவிட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
அமெரிக்காவிலும் சரி, பிற ஐரோப்பிய நாடுகளிலும்
சரி, சிறை சென்ற அரசியல்வாதிகள் பலர். அமெரிக்காவில் பில்கிளிண்டன் அதிபராக இருந்தபோது தனிமனித ஒழுக்கக் குறைவினால் மோனிகா லெவின்ஸ்கியுடன்
ஏற்பட்ட உறவும், அதனால் அவருக்கு ஏற்பட்ட துன்பங்களும் உலகம் அறிந்த ஒன்று. அதேபோல் பல அமெரிக்க கவர்னர்கள் ஊழல் மற்றும் பிற சிறிய குற்றங்களுக்காக சிறை சென்றுள் ளனர்.
அமெரிக்காவில் இல்லினாய் மாகாணத்தில் மட்டும் கடந்த ஒரு நூற்றாண்டில் ஆறு கவர்னர்கள் செய்த தவறுகளுக்காகக்
குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் / சிறை சென்றுள்ளனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், தவறு செய்த அரசியல்வாதி களுக்குத் தண்டனை கிடைப்பது உறுதி. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் சட்டம் ஒழுங்கு அந்த அளவுக்கு இன்னும் முன்னேறவில்லை.
ஜார்ஜ் புஷ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது,
அவருடைய மகள்கள் பொய்யான வயதைக் கூறி பாருக்குள் (Bar) நுழைந்துவிட்டனர் என்று போலீஸ் குற்றஞ்சாட்டி வழக்கு பதிவு செய்தது. இதுபோன்ற நிகழ்ச்சியை இந்தியாவில் நினைத்துக்கூட
பார்த்திருக்க முடியாது. உலகெங்கிலும் தவறுகள் நடந்தாலும்,
இந்தியாவில் குற்றங்கள்
புரிபவர் கள் அதிலிருந்து எளிதாகத் தப்பித்தும்
சென்றுவிடு கிறார்கள்.
இந்தியாவில், தனிமனித ஒழுக்கம் குறைந்தது ஏன்? காரணம், பணத்தாசைதான். தனிமனித ஒழுக்கம் குறைந்துள்ள பலருக்கு, தான் செய்யும் தொழிலில்/ உத்தியோகத்தில் சுயகௌரவம்/ சுயமதிப்பு
இல்லை. உறவினர்களின்/
பக்கத்து வீட்டினரின்
அந்தஸ்த்தைக் கண்டு பொறாமைப்படுகின்றனர். அவர்களைப்போல்
தானும் வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எண்ணமேதான் இதற்கு முக்கியமான
காரணம்.
மனிதன் வாழ்வதற்கு
ஓரளவுக்கு பணம் தேவை. இன்னும் கொஞ்சம் வசதியாக வாழ்வதற்கு சற்றுக் கூடுதலாகப் பணம் தேவை. ஆனால், ஒழுக்கமற்ற செயல்கள் செய்து இவர்கள் சம்பாதிக்கும்
கோடானுகோடி பணம் அவர்களுக்குத் தேவையில்லாத பணம். நியாயமான முறையில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு அனுபவம்.
குழந்தைகளுக்குச் சேர்த்துவைப்பதன் மூலம் அவர்களை நாம் சோம்பேறிகளாக்குகிறோம். ஒழுக்கமில்லாமல்
வரிஏய்ப்புச் செய்து, லஞ்சம் வாங்கிச் சம்பாதிக்கும்
பணம் எங்கோ ஒளிந்து கிடக்கிறது. ஒழுக்கமான முறையில் சம்பாதித்த பணத்தை வெளிப்படையாகத் தாங்கள் நினைத்தவற்றுக்கு உபயோகிக்க முடியும்.
சுயகௌரவம் (Self Respect) நம்மிடம் இல்லாமல் போய்விட்டது.
பிறரைப் பார்த்து ஒப்பிட்டு நம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம். பணமும் வாழ்க்கைக்குத் தேவை யான ஒன்று என்பதை மறந்து, பணத்தையே வாழ்க்கையாக்கிக் கொண்டுவிட்டோம்.
சிலரது ஒழுக்கமற்ற
செயல், மொத்த சமுதாயத்தையே பாதிக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.
அரசாங்கம் பல இடையூறு களை நீக்குவதன்
மூலம் ஊழல்கள் பெருவாரியாகக் குறையும். உதாரணமாக, ஓட்டுநர் உரிமம் தருவது, நகரச் சாலைகளைப் பராமரிப்பது,
வரையறைகளுக்கு உட்பட்டு பில்டிங் அப்ரூவல் செய்வது, பத்திரப்பதிவுகள் போன்றவற்றைத்
தனியார்மய மாக்குவதன்
மூலம் தனிமனித ஒழுக்கம் உயரும்.
நமது மத்திய அரசாங்கம் பாஸ்போர்ட் வழங்கு வதை தனியார் வசம் ஒப்ப டைத்ததிலிருந்து எவ்வளவு விரைவாகவும், ஊழல் இல்லாமலும்
இன்று பாஸ் போர்ட் தரப்படுகிறது. நமது பொருளாதாரம் வளரவளர, இதுபோன்ற குற்றங்களும் குறையும். இவை யெல்லாவற்றுக்கும் மேல், ஒவ்வொரு தனிமனிதனும் சுயகட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் செயல்பட வேண்டும்.
சட்டத்துக்கும் ஒருபடி மேலே சென்று நியாயத்துடன்
செயல்பட வேண்டும். சிலர் லஞ்சம் தராமல் வேலை நடப்ப தில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு
ஒரு சிறு உதாரணம். டாடா குழுமம் ஒருகாலத்தில் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை
வைத்திருந்தது. நமது அரசாங்கம் அதைத் தேசியமயமாக்கியது. அதுதான் இன்றைய ஏர்இந்தியா.சில ஆண்டுகளுக்குமுன் நமது அரசாங்கம் தனியார் நிறுவனங் களுக்கு ஏர்லைன்ஸ் ஆரம்பிக்க லைசென்ஸ் கொடுத்தது. அந்தச் சமயத்தில் டாடா குழுமமும் லைசென்ஸுக்கு
விண்ணப்பித்தது. அந்தச் சமயத்தில் இருந்த மத்திய விமானத்துறை அமைச்சர் டாடா குழுமத்துக்கு லைசென்ஸ் வழங்குவதற்கு
ரூ.15 கோடி
கேட்க, அந்த லைசென்ஸே வேண்டாம் என்று சொல்லி விட்டார் ரத்தன் டாடா. இதே நேர்மையோடு
ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும் நடந்துகொள்ள வேண்டும்.
வரி கட்டுவதில்,
நிறுவனத்தில் வேலை செய்வதில், லஞ்சம் தருவதில், சுயகௌரவத்துடன் இருப்பதில், சட்டத்துக்கு
ஒருபடி மேலே சென்று நியாயமாக/ தர்மமாக நடப்பதி லாகட்டும் சுய ஒழுக்கத்துடன் செயல்படுவோம். இனியாவது நாம் திருந்துவோம்!
urs Happily Dr.Star Anand Ram www.v4all.org |
"மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்: கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்; தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்!"
Thursday, August 14, 2014
இனியாவது திருந்துவோமா? குறையும் தனிமனித நேர்மை..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment