Saturday, November 15, 2014

கீதையில் கூறும் மனிதனின் குணங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள்

கீதையில் கூறும் மனிதனின் குணங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள்

மனித குணங்கள்கீதையில் மனிதனுடைய குணங்களை மூன்று விதமாக குறிப்பிடுகின்றது அவை. சத்துவகுணம், ரஜோகுணம் மற்றும் தமோகுணம்.
சத்துவகுணம் நிறைந்தவர்கள் எதிலும் பற்று இல்லாமல் இருப்பது ,தன்னலம் இல்லாமல் இருப்பது மற்றும் பலனை எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்வது. இந்த குணங்களை கொண்ட மனிதன் மரணத்திற்கு பிறகு உயர்ந்த உலகை அடைவார்கள் என்று குறிப்பிடுகிறது அதாவது புண்ணியலோகமாகிய தேவலோத்தில் சத்துவகுணம் படைத்தவர்கள் பலகாலம் இருந்து சுகத்தை அனுபவிப்பார்களாம் பிறகு மீண்டும் நன்னடத்தையுள்ள குடும்பதில் பிற்ப்பார்களாம் அல்லது புண்ணியலோத்தில் நுழையாமல் யோகியர்கள் வீட்டில் பிறந்து பல யோக சாதனைகளில் ஈடுபட்டு இறைவனுடன் இனைந்து மரணம் இல்லா பெருவாழ்வை அடைவார்கள் என்று கூறுகிறார்.

ரஜோகுணம் என்பது, செய்யும் செயல் மற்றும் அனைத்து காரியங்களிலும் ஒரு தன்னலம் இருக்கும், பற்று மிகுந்தவர்களாகவும் பேரசை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இந்த குணங்களை கொண்ட மனிதர்கள் சில காலம் சுவர்கத்தில் இருந்து அவர்கள் செய்த புண்ணியங்கள் தீர்ந்ததும் மீண்டும் மீண்டும் மனித குலத்தில் பிற்ப்பார்களாம்.

தமோகுணம் என்பது செய்யும் செயல் பிறருக்கு தீங்க விளைவிப்பவையாக இருக்கும். இந்த குணம் படைத்தவர்கள் பிறருக்கு இம்சைகள் மற்றும் கொடுமைகளை இழைப்பர். இத்தைகைய குணங்களை கொண்டவர்கள் இறந்ததும் அசூரர்களாகவும், விலங்கு, பறவை, புழூ மற்று பூச்சிகள் போன்ற ஈனபிறவிகலாக பிறப்பார்கள் என்று இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.

பிறப்பெடுத்த மனிதன் தன் உண்மையான நிலையை உணர்ந்து சத்துவகுணத்திற்கு மாறி இறைவனை அடை முயற்ச்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது கீதை…

No comments:

Post a Comment