Saturday, November 8, 2014

வெற்றிபெறும் வியாபாரத்தை எப்படி கண்டுபிடிப்பது?

வெற்றிபெறும் வியாபாரத்தை எப்படி கண்டுபிடிப்பது?



வியாபாரத்திற்கான சிறந்த யோசனையை பெற்றுக்கொள்வது என்பது ஒரு தொலை நோக்கு ஆற்றல் தொர்பானது, மேலும், உங்கள் பலங்களை ஆற்றல் கொள்ளசெய்து சந்தை தேவைகள் என்ன என்பதை தீர்மானம் செய்வது தொடர்பானது. இந்த மூன்றுமே உங்களை இதை நோக்கி நகர்த்துகிறது.
தொலை நோக்கொன்றினை உருவாக்குதல்
சில நிமிடங்கள் கண்களை மூடி, அடுத்த 5 ஆண்டுகளில் உங்கள் வாழ்க்கை எப்படியிருக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றிர்களோ அதனை மனக்கண்முன் கொண்டு வரவும். இதில் குறிப்பாக நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.
  • நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
  • நீங்கள் எவ்வாறு உங்கள் நாட்களை செலவிடுகிறீர்கள்?
  • என்ன வகையான வேலைளய நீங்கள் செய்கிறீர்கள்?
  • தனியாக பணியாற்றுகிறீர்களா அல்லது பிறருடன் சேர்ந்து பணியாற்றுகிறீர்களா?
  • உங்களைச் சுற்றி இருப்பவர்கள் யார் யார்?
  • நீங்கள் வேலை செய்யாத போது என்ன செய்கிறீர்கள்?
இந்தக் கேள்விகளின் வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு முக்கியம் என்று தோன்றும் விடயங்களைத் தொட்டு உங்களைப் பற்றிய தெளிவான பார்வையை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் நகரத்தை சேர்ந்தவராயினும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவராயினும், பயணம் செய்பராயினும், கணினி முன் அமருபவராயினும், மனிதர்களை சந்திக்க விருப்பம் கொண்டிருப்பவராயினும், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள விரும்புவராயினும், நீங்கள் செய்ய விரும்பும் தொழிலை பாதிக்கும் சொந்த விடயங்களே இவை. ஒரு வியாபாரத்தினை தெரிவு செய்வதற்கான அடிப்படையை உருவாக்குவதிலும், வியாபாரத்தில் தீர்மானங்களை எடுப்பதற்கும், தெளிவான இலக்குகளை தீர்மானம் செய்து கொள்ளவும், இச் செயற்பாடு உங்களுக்கு உதவுகிறது.
வேறு ஒருவருடன் இந்தப் பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது, பின்னர் உங்கள் அவதானிப்புக்களையும் பகிர்ந்து கொள்ளவும். அப்படி முடியவில்லையென்றால், உங்கள் அவதானிப்பை மேலும் துல்லிமாக்க எழுதி வைத்துக் கொள்வது சிறந்தது.
நீங்கள் எதில் சிறந்து விளங்குகிறீர்கள், நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானிக்க.
உங்கள் விருப்பு வெறுப்புகளை அறியவும், உங்கள் திறமை எதில் உள்ளது என்பதை உங்களுக்குள் நீங்கள் தேடுவது எப்போதும் பயன் தரும். ஒன்று, வெற்றியடையும் வியாபாரம் குறித்த சிந்தனையினை வந்தடைவது. மற்றொன்று, உங்கள் திறனுக்கு பொருத்தமான மற்றும் உங்களுக்கு ஆர்வமுள்ள ஒன்றை வந்தடைவது. உங்கள் தொழில் உங்களுக்கு உற்சாகமூட்டவேண்டும், அதன் மூலமே நீங்கள் நீண்ட காலம் அதில் நிலைத்திருக்க முடியும்.
இதனைச் சிறந்த வழியில் செய்வதற்கு, மூன்று தனியான பட்டியல்களை உருவாக்கிக் கொள்வதாகும்.
பட்டியல் 1 : நீங்கள் எதில் சிறந்து விளங்குகிறீர்கள்
அனைவரும் ஏதோ ஒன்றில் திறமை பெற்றவர்களே, மேலும் பல திறன்கள் என்பது ஒரு வியாபாரத்திற்கு சிறந்த அடித்தளமாக அமையும். நீங்கள் இயல்பாகவே ஒரு ஒழுங்குக்குட்பட்டவராகவோ அல்லது விடயங்களை முடிக்கும் இயலுமை உள்ளவராக இருக்கலாம். உங்கள் திறமைகளுக்கு நீங்கள் இயைபாக்கம் அடைந்தவராக இருப்பீர்கள் என்பதால் அவை உடனடியாக உங்கள் மனத்தில் எழாது போகும், எனவே உங்களை நீங்களே சில வாரங்களுக்கு ஆய்வு செய்து, உங்கள் ஆர்வங்கள் பக்கத்தில் ஒரு அவதானிப்பினை வைத்துக் கொண்டும், நீங்கள் எதில் சிறந்து விளங்குகிறீர்கள் என்பதைப் பற்றிய கருத்துக்கள் கொண்ட உங்களை நன்கு அறிந்த ஒருவரிடம் வினவி பட்டியலை தொகுத்துக் கொள்ளவும்.
பட்டியல் 2 : இவ்வளவு வருடங்களாக நீங்கள் சேகரித்துள்ள திறமைகள்
ஒரு பாரம்பரிய சூழலில் நீங்கள் பணியாற்றினீர்களோ இல்லையோ, நீங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. உங்கள் வேலைப் பொறுப்புகளை முதலில் எழுதிக் கொள்ளவும்; எப்படி பூர்த்தி செய்யவேண்டும் என்று நீங்கள் அறிந்த பல்வேறு வேலைகளைப் பற்றி சிந்தியுங்கள். இந்தப் பட்டியல் பூர்த்தியடைந்துள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் -- குறைந்தது 10 தனித்த சிறப்பம்சங்கள் இருக்கவேண்டும்.
பட்டியல் 3 : நீங்கள் செய்ய விரும்புபவை
நீங்கள் மகிழ்ச்சியுடன் செய்யும் வேலைகளை பட்டியலிடவும். ஒலிப்பது போல் இது அவ்வளவு சுலபமல்ல இந்த பட்டியல் குறைந்தது 10 சிறப்பம்சங்களை கொண்ட நீளம் கொண்டிருக்கவேண்டும். உங்கள் மனதில் உடனடியாக தோன்றும் உங்கள் பொழுது போக்குகள் மற்றும் ஆர்வங்களைத் தாண்டி யோசிக்கவும். உங்களுக்கு குழப்பமாக இருந்தால், உங்களை நீண்டகாலமாக அறிந்தவரிடத்தில் வினவவும் - குறிப்பாக உங்களை குழந்தைப் பராயம் முதல் தெரிந்தவர்களாக இருப்பது நல்லது -- அதாவது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது என்ன செய்தீர்கள் என்பதை அவர்கள் அறிந்தவர்களாக இருக்கவேண்டும்.
இந்த மூன்று பட்டியலையும், நீங்கள் இலகுவா பெற்றுக்கொள்ளக் கூடிய இடத்தில் (உதாரணமாக உங்கள் மேசை) சில வாரங்களுக்கு வைத்திருக்கவும், மேலும் மனதில் புதிய யோசனை தோன்றும் போதெல்லாம் அதனை முறையான வகையில் சேர்க்கவும். உங்களது ஞாபக சக்தியை உலுக்கி விடும் ஒரு நபரிடம் சேர்க்கவேண்டிய விடயங்கள் பற்றி வினவவும்.
சந்தையின் தேவை என்ன என்பதை கண்டுகொள்க
இது வரை உங்களுக்கு பொருத்தமான வியாபாரத்தை அறிந்துகொள்ள உங்கள் ஞாபகத்திற்ககுள் சென்றிருப்பீர்கள். இப்போது, பூர்த்தி செய்யப்படாத ஒரு தேவையை உங்கள் பொருள் அல்லது சேவை ஆகியவை சந்திக்க புறக்காரணிகளை ஆராய வேண்டிய காலம் வந்து விட்டது.
நிறைய டாப்- 10 வியாபாரங்களும், புத்தம் புதிய வியாபாரங்களின் பட்டியல்களும் உள்ளன. சில புதிய கருத்துக்களைத் தூண்டும், ஆனால் சிறந்த வியாபார யோசனை என்பது உங்களிடமிருந்தே, நீங்கள் யார் என்பதிலிருந்தே, சந்தை எதனை வேண்டி நிக்கின்றது என்பதிலிருந்தே தோன்றும். எனவே உங்கள் உள்ளார்ந்த தேடல் மற்றும் பட்டியல் தயரிப்பு ஆகியவற்றை செய்யும்போதே உங்கள் உணர்கொம்புகளை தயார்படுத்தி தொழிலுக்கான வாய்ப்புகளை கண்டறியுங்கள்.
இணைக்கப்பட்டுள்ள நீங்கள் வந்தடையவேண்டிய சிந்தனைக்கு உதவுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுமைகளை முயற்சி செய்ய பயப்படாதீர்கள், மேலும் உங்களது முதல் சில திட்டங்கள் தவறாகப்போனால் மனம் தளர வேண்டாம். அவற்றை ஒரு புறம் வைத்துவிட்டு தொடர்ந்து இதில் கடைமையாற்றுங்கள்.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.

If need Business Consulting & Business skills  Training  call us.
Yours Happily 
Dr.Star Anand Ram
www.v4all.org
9790044225


No comments:

Post a Comment