Tuesday, November 11, 2014

சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குதல்

சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குதல்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.

நீங்கள் எதிர்கொள்ளும் போட்டிகளைவிடவும், வாடிக்கையாளர் சேவையை ஒரு நல்ல கருவியாகப் பயன்படுத்தி உங்களை நன்கு அமைத்துக்கொள்ளலாம். சிறு வியாபாரத்திற்கு உண்டான சக்திகளில் இதுவும் ஒன்று, வாடிக்கையாளர் சேவையை செயல்படுத்துவதன் மூலம், தயாரிப்பில் வித்தியாசத்தைக் காட்டக்கூடிய, குறைந்த விலையில் சேவையை வழங்கும், மற்றும் பிற சிறப்பு வசதிகளை வழங்கக்கூடிய நிறுவனங்களைப் போன்று உங்களால் வழங்கமுடியாவிட்டாலும் அந்நிறுவனங்களுடன் நீங்கள் போட்டியிடலாம். ஆனால் பெரும்பாலான சிறு வியாபாரிகள் வாடிக்கையாளர் சேவையை சரியாகப் பயன்படுத்தாமல் சிக்கலை சந்தித்துள்ளனர். ஏன்? அறியாமையும் இதற்கு ஒரு காரணம். வாடிக்கையாளர் சேவைக்கான உங்கள் நிறுவனத்திற்கு காட்டக்கூடிய முன்மாதிரி நிறுவனங்கள் ஏதும் இல்லை.

உங்களுக்கு இருக்கும் போட்டியின் விளைவுகள் என்ன என்பதைக் காண உங்கள் வியாபாரத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை வலிமையாக்குங்கள். வாடிக்கையாளர் சேவை வழங்கும் கம்பனிகளைப் பற்றிய ஆய்வுகள் செய்த, நெய்மன் மார்கஸ் போன்றவர்களின் நூல்கள் மற்றும் ஒலி நாடாக்களைப் பெற்று அதிலிருந்து, நீங்கள் என்ன கற்றுள்ளீர்கள் எனப் பாருங்கள். வெற்றிகரமான தொழில்முனைவோர் எவரும், தங்களது வியாபாரத்தை பல வகையில் வளர்ச்சியடைய செய்வதற்கான வழிகளையே சிந்தித்துக்கொண்டிருப்பர்.
அதேநேரத்தில், சிறந்த வாடிக்கையாளர் சேவையை உங்கள் நிறுவனம் வழங்கிடுவதற்கான சிறுகுறிப்புகள்.

மன்னிப்பு கோருங்கள், வாக்குவாதம் செய்யாதீர்கள்

வாடிக்கையாளர் ஏதேனும் சிக்கலை சந்தித்தால், அதற்கு மன்னிப்பு கேட்டு சிக்கலைத் தீர்க்க வழிபாருங்கள். அந்த சிக்கலை நீங்கள் தீர்த்திருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மனக்குறைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பு வழங்குங்கள். அவர்களுக்கு பணத்தை திரும்பி தருதல், புதிய பொருளை வழங்குதல் அல்லது அந்த சிக்கலை தீர்க்கக்கூடிய எதையும் செய்ய தயாராய் இருங்கள். வாதிடுவது அல்லது பணத்தை திரும்ப தரமுடியாது என்று கூறுவதெல்லாம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடும். பிரச்சினைகளை உடனே சரிசெய்துவிடுங்கள். உங்கள் நிறுவனத்தின் மீது அவநம்பிக்கை ஏற்படும்படி ஏதேனும் சம்பவம் நிகழ்ந்தால் அது நிறுவனத்தின் எதிர்காலத்தை மாற்றி நம்பகத்தன்மையுள்ள வாடிக்கையாளரை உருவாக்க முடியாமல்போய்விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்கமுடியாமல் கூட சில சந்தர்ப்பங்கள் அமையும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் நடுநிலையான, மாற்றுவழியை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுங்கள்.

2) பின்னூட்டல் உங்களை ஒருமுகப்படுத்தியவாறு வைத்திருக்கும்

வழக்கமான செயல்முறைகளின் அடிப்படையில் உங்கள் நிறுவனத்தை மதிப்பிடும்படி வாடிக்கையாளர்களிடம் கூறுங்கள். விற்பனை செய்யப்படும் அல்லது அஞ்சலில் அனுப்பப்படும் எந்தவொரு தயாரிப்புடனும் ஒரு குறுகிய வினாத்தாளையும் சேர்த்து அனுப்புவதன் மூலம் இதைச் செய்யலாம். வினாத்தாள் சிறியதாக இருந்தால் தான் வாடிக்கையாளர்கள் எளிதாக அதை நிரப்பமுடியும், அவர்கள் பங்கேற்பதிலிருந்து விலகிக்கொள்ளலாம் என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அந்த கணக்கெடுப்பின் நோக்கமே அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காகத்தான் என்பதையும் அவர்கள் தெரிந்திருக்கவேண்டும். எந்த குறையும் இல்லை என அவர்கள் தெரிவித்தால், அடுத்த என்ன நல்ல சேவைகள் நீங்கள் வழங்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவேண்டிய நேரம் அது. சிக்கல்கள் இருந்தால், அவை தீர்க்கப்படவேண்டும்.

3) நெகிழ்ந்து கொடுக்கக் கூடியவர்களாக இருங்கள்

வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர்களிடம் நீங்கள் நெகிழ்ந்து கொடுப்பவராக இருக்கவேண்டும். அதாவது ஒரு வாடிக்கையாளருக்கு ஏதோ ஒரு வேலையை நீங்கள் செய்வதாக இருக்கும் பட்சத்தில், காலை வேளையில் சந்திப்பு கூட்டம் இருக்கும்போது அதற்காக உங்கள் தூக்கத்தை தியாகம் செய்யவேண்டும்.

இவை அனைத்துக்கும் அது உங்கள் துறையாக இல்லாத பட்சத்திலும் உங்கள் வாடிக்கையாளரிடமிருந்து தகவலை பெறுவதே நெகிழ்ந்து கொடுப்பது என்பதன் கருத்தாகும். உதாரணமாக, ஒரு திருமண விருந்தில் விருந்து பரிமாறிக்கொண்டிருக்கிறீர்கள் அப்போது உங்கள் வாடிக்கையாளருக்கு ஐரிஷ் திருமணம் தொடர்பான தகவல் தேவைப்படுகிறது. "அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது." என்று கூறுவதற்கு பதில், உள்ளூர் நூலகம் அல்லது தொலைநகல் சேவையைப் பயன்படுத்தி அவருக்குத் தேவையான தகவலை அனுப்பிவிடலாம். இதுபோன்ற கூடுதல் சிறப்பு முயற்சிகள் சிறந்த பலனைத் தரும்.

4) எப்போதும் "சரி" என்று கூறிவிடுங்கள்

உங்கள் தனிப்பட்ட விருப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதல்ல இது, மாறாக வாடிக்கையாளர்களுக்கு எந்த வகையில் உதவிசெய்யலாம் என்பதற்கே. பரிசுபொருள் சம்மந்தமான ஒரு வியாபாரத்தை நீங்கள் நடாத்துகிறீர்கள் என்றால் வழக்கமாக பரிசு பொருள் வழங்கும் பழக்கம் உங்களுக்கு இல்லாதபோதிலும் முக்கியமான உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் பரிசு வழங்கவேண்டும். ஏதோ ஒரு காரணத்தினால் உங்கள் வாடிக்கையாளர் புறப்பட்டுச் சென்றுவிட்டாலும், நீங்கள் காத்திருந்து அந்த குறிப்பிட்ட வேலையை முடிக்கவேண்டும் அல்லது உங்களுக்கு பொருத்தமற்ற சூழ்நிலை இருந்தாலும் உங்கள் வாடிக்கையாளரைச் சந்திக்க நீங்கள் செல்ல வேண்டியிருக்கும். எப்போதும் சரி எனச் சொல்வது, "அதைச் செய்வது சிரமமல்ல"என்ற அர்த்தம் ஆனால் உங்கள் வியாபாரத்தில் இந்த வார்த்தை மறைந்திருக்க வேண்டும். நீங்கள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். நீங்கள் அதைப் பயன்படுத்துவது சிரமமாகவும் செலவுமிக்கதாகவும் இருக்கலாம், ஆனால் இதை சொல்வதால் நல்ல வாடிக்கையாளர்களை நீங்கள் இழந்துவிடாமல் இருக்கலாம்.

5) போதிய நேரத்தைக் கேட்டு, அதற்கு முன்னதாக டிலிவரி செய்யுங்கள்

வாடிக்கையாளர்களின் நலன்களுக்காக நீங்கள் கூடுதலாக எதைவேண்டுமானாலும் செய்வீர்கள் என்பதை அவர்களுக்கு புரியவையுங்கள். வேலையை முடித்துகொடுக்கவேண்டிய நேரத்தைக் சற்று நீட்டித்துக் கொண்டு, முடிந்த அளவு சீக்கிரமாக முடித்துக் கொடுங்கள். நீங்கள் நினைப்பதை விட செலவு அதிகமாகலாம் எனத் திட்டமிடுங்கள் ஆனால், அதை விடக் குறைந்த செலவில் முடியுங்கள்.

திட்டமிடாமல் செய்வதாலேயே பல சிறு வியாபாரங்கள் இந்த விடயத்தில் தோல்வியை சந்திக்கின்றன. தோல்விக்கும் இதுவே முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது. நீங்கள் வியாபாரத்தை பெறலாம், சேவையில் உங்களுக்கும் இருக்கும் இந்த அனுபவம், போட்டிபோடுவதில் சிரமத்தை உண்டாக்கிவிடும். உங்கள் நிறுவனத்தில் 24 மணிநேரத்தில் ஒரு பணியை முடித்து கொடுப்பது சிறந்தது என்றாலும், 12 மணிநேரத்தில் முடித்துதரமுடியும் என்று வாடிக்கையாளர்களிடம் உத்தரவாதம் கொடுக்கவேண்டாம்.

No comments:

Post a Comment