Showing posts with label Corporate Training Company in coimbatore.. Show all posts
Showing posts with label Corporate Training Company in coimbatore.. Show all posts

Tuesday, July 21, 2015

ஒவ்வொரு கிழமையிலும் துர்க்கையை வழிபடும் முறை

ஒவ்வொரு கிழமையிலும் துர்க்கையை வழிபடும் முறை
(share) செய்யுங்கள்)
ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.
திங்கள் : திங்கள்கிழமைகளில் காலை 7.30-9க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.
செவ்வாய் : ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதன் : மதியம் 12 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.
வியாழன் : வியாழக்கிழமைகளில் மதியம் 1.30-3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
வெள்ளி : வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.
சனி : காலை 9-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.
Mantric   மாந்திரீகம்'s photo.

DrStar Anand


Saturday, July 18, 2015

5 விதமான தோஷங்கள் நீங்க பரிகாரம்

5 விதமான தோஷங்கள் நீங்க பரிகாரம்
(share) செய்யுங்கள்)
இவை ஆண்களுக்கு பெண்களுக்கும் ரெண்டு பேருக்கும் பொருந்தும் தோச பரிகாரங்கள்
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதிவைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது.
அந்த தோஷங்கள் 1.வஞ்சித தோஷம், 2.பந்த தோஷம், 3.கல்பித தோஷம் 4.வந்தூலக தோஷம் 5.ப்ரணகால தோஷம் எனப்படும்.
1.வஞ்சித தோஷம்:
பார்க்கக் கூடாத படங்கள், வெறிïட்டும் காட்சிகள் காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும்.
2.பந்த தோஷம்:
நம்மை நம்பி பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழிவாங்குதல் பந்த தோஷமாகும். இந்த தோஷத்துக்கு தந்தை, தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.
3. கல்பித தோஷம்:
பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.
4.வந்தூலக தோஷம்:
ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம் நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ரவிக்கைத் துணி ஆகியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலைத் தலத்திற்குச் சென்று முருகனைத் தரிசித்துப் பின் ஏழைத் தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.
5. ப்ரணகால தோஷம்:
திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் ப்ரணகால தோஷங்கள் நிவர்த்தியாகும்.


Thursday, June 11, 2015

தோல்வியின் மூலம் எப்படி வெற்றி அடைவது?

தோல்வியின் மூலம் எப்படி வெற்றி அடைவது?

இந்த உலகத்தில் பிறந்த மா மனிதர் அவர். அவர் கண்டுபிடித்த பல உபகரணங்களினால் இந்த மனித இனம் இன்று மகிழ்ச்சியுடன் அனுபவித்து கொண்டு இருக்கிறது . ஒன்றல்ல இரண்டல்ல1093 கண்டுபிடிப்புகள். அவற்றில் சில மின்சார விளக்குசினிமா படம் எடுக்கும் கேமரா. இது போன்று மீதம் உள்ள கண்டுபிடிப்புகள்.

இவைகள் எல்லாம் ஒரே சிந்தனையில் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. பல ஆயிரம் தடவைகள் தோற்று போய் துவண்டுபோகாமல் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவை.
அவர்தான் தி கிரேட் தாமஸ் ஆல்வா எடிசன். 
ஆனால் இவர் படிக்கும் காலத்தில் அசிரியர்களிடத்து இவருக்கு என்ன பெயர் தெரியுமா?
” எதையுமே கற்றுக்கொள்ள தெரியாத முட்டாள்” .
இவர் சம்பளத்துக்கு நிறுவனங்களில் வேலை செய்யும்போது இவருக்கு கிடைத்த பெயர் என்ன தெரியுமா “ஒன்றுக்குமே லாயக்கு இல்லாதவன்பிரயோஜனம் இல்லாத ஆள்” .

அப்படிப்பட்ட அந்த அறிய மனிதர் கண்டுபிடித்த மின்சார விளக்கு இன்று இல்லாத இடமே இல்லை. வீடுகள் ஆகட்டும்வர்த்தக நிறுவனங்கள் ஆகட்டும் எங்கும் ஒளி மாயம். அந்த மின்சார விளக்குகளில் உண்டாகும் ஒளியை கொண்டு எத்தனை வர்த்தக நிறுவனங்கள் ஆயிரங்களையும்லட்சங்களையும்கோடிகளையும் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் ஆல்வா எடிசன் படத்தை வியாபாரிகள்நிறுவனங்கள் பூஜை அறையில் வைத்து சாமி கும்பிடவேண்டும்.
மின்சார விளக்கு இல்லையென்றால் என்னவாகும் என்று ஒரு நிமிடம் நினைத்து பார்க்க வேண்டும். வீடுகளில்தெருவில் அவர் கண்டுபிடித்த மின்சார விளக்கு இல்லை என்றால் என்ன ஆகும்வெளிச்சம் இருக்கும்போதே பல தவறுகள் நடக்கின்றனஇல்லையென்றால் என்னவாகும்சிந்தித்து பாருங்கள்.
திரைப்பட துறை என்பது கோடி கோடியாக கொட்டி கொண்டு இருக்கும் ஒரு அருமையான தொழில். இந்த தொழில் மூலம் கோடீஸ்வரர் ஆனகோடீஸ்வரர்களாக ஆகி கொண்டு இருக்கும் நடிகர்நடிகையர்இயக்குனர்கள், cameraman போன்ற எண்ணற்ற திரைப்பட கலைஞர்கள் இந்த உலகம் முழுதும் வியாபித்து இருக்கிறார்கள். அவர்களும் தாமஸ் ஆல்வாஎடிசனை பூ போட்டு கும்பிடவேண்டும். ஆம்அவரது கண்டுபிடிப்பில் உருவான motion கேமராமட்டும் இல்லையென்றால் ஏது இத்தனை சினிமா துறை கோடீஸ்வரர்கள்.
தாமஸ் அல்வா எடிசன் தோல்வி அடைந்ததை பற்றி கவலை படாதவர்.
மின்சார் பல்பு கண்டுபிடிக்க 1000 தடவை தோற்று போகும்போது உங்கள் மன நிலை எப்படி இருந்தது” என்று ஒருவர் கேட்டபோது அவர் சொன்ன பதில் “யார் சொன்னது நான் 1000தடவை தோற்றேன் என்று, 1000 வழிமுறைகளை கடந்து நான் மின்சார பல்பை கண்டுபிடித்தேன்என்பதுதான் உண்மை ” என்று கூறினாராம் .
மின்சார பல்பை கண்டுபிடிக்க ஒவ்வொரு தடவையும் அவர் தோற்று போகும்போதுஅதை தோல்வியாக எண்ணாமல் “அடுத்த காலடி எடுத்து வைப்பதர்க்கான வாய்ப்பாகத்தான் கருதினேன் “என்று கூறுகிறார்.
தாமஸ் அல்வா எடிசியன் தோல்வியை பற்றி எப்போதுமே கவலை படுவதில்லை. அவர்அடிக்கடி சொல்வது “நான் தோற்க வில்லைஆனால் எதுவெல்லாம் சரியல்ல என்பதை உணர எனக்கு 10000 தடவை ஆகியதுஅதுதான் நிஜம்” என்பாராம்.
தோற்று போய் இனி இது நமக்கு லாயக்கு படாது என்று ஒரு செயலை விட்டு விலகும்போதுவெற்றி அவர்களுக்கு மிக அருகாமையில் இருக்கும். அதை உணராமல் தோற்றுவிட்டோம் என்று பலர் விலகி விடுகின்றனர்.
தோல்வியை பற்றி தவறான கண்ணோட்டத்துடன் நம்மிடையே இன்று நிறைய பேர் இருக்கின்றனர். எடிசனை போன்று தோல்வியை தோல்வியாக கருதாமல் அவை நாம் அடுத்து எடுத்துவைக்க போகும் அடிக்கு படிகட்டாக நினைத்தோம் என்றால் நிச்சயம் தோல்வியை கண்டு துவளமாட்டோம். உற்சாகம் தான் அடைவோம். 
ஆனால் இதுபோன்று நினைப்பதற்கு உங்கள் மனமும் இடம் கொடுக்க வேண்டும். அதுபோன்று நினைப்பதற்கு உங்கள் மனதையும் நீங்கள் பழக்க வேண்டும். மனதை பழக்குவதற்கு தியானம் என்ற அறிய கருவியின் மூலம் தான் முடியும். தியானம் மட்டும்தான் உங்கள் மனதை ஊடுருவி சென்று உங்கள் மனதை உங்கள் வசப்படுத்தி தோல்வியை கண்டு துவள செய்யாமல் செய்யும் அற்புத மருந்து.

Monday, June 8, 2015

பெண்கள் வெறுக்கும் ஆண்களின் சில செயல்கள்

மது, புகையைத் தவிர்த்து பல விஷயங்கள் ஆண்களிடம் பிடிக்காது என்று முகம் சுளிக்கின்றனர் பெண்கள். இனி ஆண்களிடம் பெண்கள் அதிகம் வெறுக்கும் செயல்கள் பார்க்கலாம். 

• ஞாயிறு அன்று அலுவலகத்திற்கு மட்டும் அல்ல, குளிப்பதற்கும் விடுமுறை என்ற நடைமுறையை பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள் ஆண்கள். ஆண்களிடம் பிடிக்காத விஷயங்களில் இது தான் முதலும் முக்கியமானதுமாக பெண்கள் கூறுகின்றனர். 

• பெண்கள் 24 மணி நேரம் சீரியல் பார்த்தால் தவறில்லை. மேலும் 24 மணிநேரம் டிவி பார்ப்பதால் போர் அடிப்பது. ஆனால், ஆண்கள் கிரிக்கெட், புட்பால், ஐ.பி. எல் பார்த்தல் தங்களுக்கு பிடிக்காது என்கின்றனர். 

• பொதுவாகவே ஆண்களிடம் அதிகமாக வியர்வை நாற்றம் வீசும். கோடை காலத்தில் கேட்கவே வேண்டாம். இது பெண்களுக்குப் சுத்தமாக பிடிக்காது என்று முகம் சுளிக்கின்றனர். 

• குறட்டை விடும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. குறட்டை விடுவது தூக்கத்தைக் கெடுப்பதாகவும், எரிச்சல் அடைய வைப்பதாகவும் கூறுகின்றனர். 

• தன்னை தவிர மற்ற பெண்களை பார்த்து ஜொல் விடும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.