எண்ணத்தின் சக்தி
எண்ணத்தின் சக்தியால் மனிதன் எண்ணிய படியேயாகிறான்; அடைகிறான்; நடக்கிறான்; நடத்துகிறான் என்றால் முதலாவது எண்ணம் என்பது என்ன என்பதையும் சக்தியென்பது என்ன என்பதையும் எண்ணியபடியே ஆகிறேன் ; அடைகிறேன்; பிறர்மாட்டு நடத்துகிறான் நடத்திகாட்டுகிறான் என்பது எப்படியென்பதையும் ஆராய்ந்து அறிந்து தெளிவோமானால் அப்போது நாம் எண்ணியபடியே பகீர்முகமாக நாமே நடத்தவும் ஆகும். அந்த எண்ணங்கள் மின்சார சக்தியைப்போல் நம்மிடம் பிரதிபலிக்குமானால், அப்போது அந்தசக்தியின் தத்துவலாபத்தை நாமடைவதுடன் பிறருக்கும் நன்மை பயக்கும்படி செய்யமுடியும் ஆனபடியால் எப்போதும் நமது இருதயத்தில் கெட்ட எண்ணங்களை அப்புறப்படுத்தி சுத்த இருதயமாகவும் செய்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
நமக்கு வேண்டிய சித்தும் சித்தியும் எண்ணத்துள்ளேயே அடங்கியிருக்கிறது அதன் இரகசியம் இன்னது என்று நாம் தெரிந்து கொள்வதில்லை அப்படி தெரிந்துகொள்வோமானால் அப்போது அந்த சித்தத்தை இருப்பிடமாக கொண்டேயெழும் எண்ணமானால் கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அரும்பெரும் கருவியாகும் அதன் முலமாகதான் நாம் நன்மையடையவும் பிறருக்கு நன்மை செய்யவும் முடியும் எண்ணம் கெட்டுவிட்டால் அதற்கு தக்கவாறு சொல்லும் காரியமும் கெட்டுவிடும் முதலாவது எண்ணும் எண்ணங்களையே அதிஜாக்கிறதா வென்று அறியவேண்டும்.
கர்த்தாவானவன் தனக்கு வேண்டியதை முதலாவது சிந்திக்கிறான். இரண்டாவது எண்ணமாக்கி யெண்ணுகிறான். மூன்றாவது அதை வெளியே பிரயோகப்படுத்துகிறான் கெட்டஎண்ணம் இருக்கிறவனுக்கு ஒருபோதும் இஷ்டசக்தி அடைய முடியாது.
நல்ல எண்ணம் உண்டாவதற்கு முதலாவது மனம் நல்ல மனமாகவேண்டும் மனம் நல்லமனமாவதற்கு மனம் சாந்த நிலையை அடைய வேண்டும் சாந்த நிலையை அடைந்த மனமே சர்வ காரியத்திற்கும் காரிய சக்தியாயிருக்கிறது. சாந்த நிலையை அடைந்த மனம் எதுவோ அதுவே தெய்வ நிலையை அடைந்த மனம் ஆகிறது. தெய்வ நிலையை அடைந்த மனம் எல்லாம் செய்யவல்ல சித்தாகிறது.
மனம் எப்போதும் சுழன்றுக் கொண்டிருக்கும் தன்மையது அது சில வேலையில் சுறைக் காற்று போலவும் இயங்குகின்றது இங்ஙனம் காற்றைப்போலச் சுழன்று கொண்டிருக்கும் மனம் நினைவுகளின் வடிவாக அமைந்துள்ளது. மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கினுள்ளும் மனத்தை முதற்கண் நிருவியிறுப்பது கூர்ந்துவுணரத்தக்கது ஏனைய முன்றும் மனத்தின் வெவ்வெறு நிலைகளாகவே நினைக்கப்படுகின்றன. மனத்தின் தொழில் நினைத்தல் என்க அதனாலே அது நினைவின் வடிவமானது என்று கூறுகிறோம். உபநிஷதங்களும் மனம் சிந்தித்தலையே உருவகமாக உடையது என்கிறது. சிந்தித்தலையுடைய மனதிற்குச் சிந்தை என்பது ஒரு பெயர். மனம் நினைவே வடிவமாக இருப்பினும் நினைவுகள் தாம் ஒவ்வொருவருக்கும் பலப்பல உளவே அது போலப் பல அல்ல ; எல்லா நினைவுகளும் எழுதற்கறிய நிலையானது ஒரு வல்லமை சக்தியாகும். அவ்வல்லமை நினைவுகளாலேயே உரம்பெறத்தக்கது.
நினைவுகள் முற்றும் அடங்கிவிடுங் காலத்து மனமும் அடங்கியதாகும் அதுவே மனம் இறந்த நிலை அமைதிநிலை சாந்தி நிலை என சித்தர்கள் கூறுகின்றனர். இதுவரையிலும் மனமென்ப தின்னதென்பதையும் மனதின் சக்தி இத்தகைய தென்பதையும் எண்ணம் என்பது இன்னதென்பதையும் எண்ணத்தின் சக்தி இத்தகைய தென்பதையும் அறிந்து கொண்ட நாம் அந்த மனதை அடக்கியாளும் மார்கத்தையும் சக்தி பூர்வமாக்கும் மார்கத்தையும் பிரயோகப்படுத்தும் மார்கத்தையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
No comments:
Post a Comment