Saturday, November 1, 2014

தமிழ் வழி மந்திரங்கள்

தமிழ் வழி மந்திரங்கள்



                   
                  திருவிளக்கு ஏற்றும் போது
              
               இல்லக விளக்கது இருள் கெடுப்பது
               சொல்லக விளக்கது சோதி யுள்ளது
               பல்லக விளக்கது பலருங் காண்பது
               நல்லக விளக்கது  நமச்சி வாயவே

                      
                        நீர் அளாவுதல்
              
              மூர்த்தி  யாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
              தீர்த்த மாகி யறிந்தறியாத் திறத்தி னாலுமுயிர்க்குநல
மார்த்தி நாளு மறியாமை யகற்றி யறிவிப் பாலெவனப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரண மடைகின்றோம்.   
     
      திரு நீறு வழங்கும் போது


மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே!


எலுமிச்சம் பழம் சுற்றும்போது

 

ஏது பிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கி

தீது புரியாத தெய்வமே -நீதி

தழைக்கின்ற போருர்த் தனிமுதலே! நாயேன்

பிழைக்கின்ற வாறுநீ பேசு.

 

 

               தேங்காய்ச் சுற்றும் போது

 

கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நினையாப்பிழையும். நின் ஐந்தெழத்தை

சொல்லாப்பிழையும், துதியாப்பிழையும், தொழாப்பிழையும்,

எல்லாப்பிழையும், பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!.

 

          பூசணிக்காய் சுற்றும் போது

 

வாழ்க அந்தணர் வானவர் ஆனினும்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!

ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே

சுழ்க வையகமும் துயர் தீர்கவே! 

No comments:

Post a Comment