Sunday, November 2, 2014

முயற்சிகள் என்றும் தோற்பதில்லை

முயற்சிகள் என்றும் தோற்பதில்லை



1922ம் ஆண்டு ஆகஸ்டு 2ம் தேதி அமெரிக்காவில் உள்ள அனைத்து தொலைபேசிகளின் சேவைகளும் ஒரு நிமிடம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. காரணம் தெரியாமல் விழித்த அனைவருக்கும் தொலை பேசியைக் கண்டு பிடித்த கிரஹாம்பெல் மரணமடைந்த தகவல் பின்னர்தான் சொல்லப்பட்டது.

1847ல் ஸ்காட்லாந்தில் எடின்பர்க் நகரில் பிறந்தவர் கிரஹாம்பெல். இவரதுபாட்டனாரும்தந்தையாரும் பேச்சுக்கலையில் வல்லவர்கள். அதனால் அவர்கள்ஒலிபிறப்பியல் துறையில் ஆர்வம்காட்டிஒலி உண்டாவதற்குக் காரணமான குரல்வளைநாக்குதொண்டைஉதடுகள் ஆகியவற்றை ஆராய்பவராக இருந்தார்கள்.

அலெக்சாண்டரின் தாயார் எலிசா இசையில் ஆர்வம் உள்ளவர் மட்டுமில்லமிகச்சிறந்த ஓவியரும் கூட. ஆனால் தாயிடம் இசை பயிலும் வாய்ப்புஅலெக்சாண்டருக்குத் தொடர்ந்து கிடைக்கவில்லை. காரணம் அவரது தாயாருக்குஒருவித நோயின் காரணமாக கேட்கும் திறனும்பேச்சுத் திறனும் முற்றிலுமாகபாதிக்கப்பட்டது.

இது கிரஹாம்பெல்லை மனதளவில் மிகவும் பாதித்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவரது தம்பியும்அண்ணனும் தொடர்ந்துகாசநோய்க்கு பலியானார்கள். இதனால் மற்றவர்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்படும்என்று பயந்த அவரது தந்தை குடும்பத்தை கனடாவுக்கு மாற்றினார்.
கனடாவில் காது கேளாதவர்களுக்கு பயிற்சிப் பள்ளியை துவக்கினார் பெல். அங்கு பகுதி நேரமாக குரல் உறுப்புகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுஒலியியல் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஒரே கம்பியில் ஆறேழு செய்திகளை அனுப்பக்கூடிய ஒத்திசைவான தந்தி முறையைக் கண்டறிந்தார்.
இவரது கண்டுபிடிப்புகள் அனைத்தும் காது கேளாதவர்கள்வாய் பேச முடியாதவர்கள் ஆகியோர் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் சிறந்த சாதனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே பரிசோதனையில் இறங்கினார்.

அவரது தாயாரைப் போன்றே செவிக்குறையுடன் இருந்த மேபெல் என்ற பெண்ணைத்திருமணம் செய்து கொண்டார். அதனாலேயே இந்தக் குறைகள் கொண்டவர்கள் மீது அதீத அக்கறை கொண்டு அவர்கள் வாழ்வுக்கு ஒளி சேர்க்கக்கூடிய கண்டுபிடிப்புகளைசெயல்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்.

குரலியல் ஆய்வின்போது தான் மனித குரலை வேறு ஒரு இடத்துக்கு கம்பியின் மூலம் அனுப்ப முடியும் என்று அறிந்தார். அந்த ரேநத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த எலிஷா மற்றும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோரும்ஜெர்மனியின் பிலிப் என்பவரும் தொலைபேசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்தார்கள். இறுதியில்1876ல் கிரஹாம் பெல்லின் கண்டுபிடிப்பை அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டது.



ஆனால் சில பொறாமைக்காரர்கள் அந்த கம்பியின் மூலம் மின்சாரம் பாய்ந்துபேசுபவர்கள் மரணமடைந்து விடுவார்கள் என்று பயம் காட்டினார்கள். ஆனாலும்அனைத்து அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் இதனை செயல்படுத்திக்காட்டி வெற்றி கண்டார்.
தனது தாய்மனைவியின் குறைபாடுகளை நீக்குவதற்காக எடுத்துக்கொண்டகண்டுபிடிப்பு கடைசியில் தொலைபேசியாக மக்களுக்குக் கிடைத்தது. இந்தவெற்றியை தனது 30வது வயதிலேயே கிரஹாம்பெல் சாதித்தார்.
வெற்றியை நோக்கி அல்லது வெற்றிக்காக செய்யப்படும் எந்தவொரு முயற்சியும்தோல்வியடையாது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேண்டுமா என்ன?

எது கிடைக்கிறதோ அதுவே வெற்றி. எந்த வெற்றியும் கிடைக்கவில்லைஎன்றாலும் அந்த மாதிரி செய்தால் தோல்வி அடைந்துவிடுவோம் என்று பிறருக்கு எடுத்துச் செல்லும் வழியாக அமைந்துவிடும்’ என்று சொன்னவர் கிரஹாம் பெல்.

45 ஆண்டுகள் தனது அறிவியல் வாழ்க்கையை மேற்கொண்ட அவர் மேலும் பலகண்டுபிடிப்புகள் கண்டறிந்தார். காற்றிலுள்ள நீரின் ஆவியைக் கொண்டு தூய நீரைப் பெறும் வழியைக் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. இதுதான் கடல் பயணிகளின் தாகம் தீர்க்க இன்றும் சிறந்த வழியில் உதவுகிறது.
ஒவ்வொருவரிடமும் குறைகள் இருக்கவே செய்யும். அந்தக் குறைகளை நீக்கிமுழுமையடைய முடியும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர் கிரஹாம் பெல்.
முயற்சி செய்தால் தோல்வியடைந்து விடுவோம் என்று எண்ணி அமைதியாகஇருப்பதைவிட ஒவ்வொரு முயற்சியிலும் எது கிடைத்தாலும் அதனை ஒரு வெற்றியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அவரின் கொள்கை.

குறைபாடுடன் இருந்த தாய்மனைவியின் மீது அவர் கொண்ட நேசம் காரணமாகஅவர்களுக்காக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் கொண்ட துடிப்பு,அவரை உலகறியச் செய்துவிட்டது.

முழு ஈடுபாட்டுடன் முயற்சிகள் மேற்கொள்ளும் பட்சத்தில் கண்டிப்பாக அதற்கான பலன் கிடைத்தே தீரும் என்பது எழுதப்படாத விதி.

ஆம்கிரஹாம்பெல்லின் கொள்கையை ஒவ்வொருவரும் மனதில் கொண்டால் எல்லோரும் ஏதாவது ஒரு சாதனையைக் கண்டிப்பாக படைக்க முடியும்.

your  happily 

No comments:

Post a Comment