இந்திய பணக்காரர்களின்
சொத்தில் பாதியை வைத்திருக்கும் 5 தொழிலதிபர்கள்
|
ஒட்டுமொத்த இந்திய பணக்காரர்களிடம் உள்ள சொத்து மதிப்பில் பாதியை ஐந்து இந்திய தொழிலதிபர்கள் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் ஐந்து பேரின் மொத்த சொத்து மதிப்பு 85.5 பில்லியன் டாலரை தாண்டுகிறது இது மொத்த பணக்காரர்களின் சொத்து மதிப்பில் 47.5 சதவிகிதமாக உள்ளது.
அந்த ஐந்து பணக்காரர்களின் பட்டியல்
#5.பலோன்ஜி மிஸ்த்ரி
நிறுவனம்: ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம்
சொத்து மதிப்பு: 12.7 பில்லியன் டாலர்
சிறப்பம்சம்: டாடா நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவர்.
#4.அசிம் பிரேம்ஜி
நிறுவனம்: விப்ரோ (இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனம்)
சொத்து மதிப்பு: 14.9 பில்லியன் டாலர்
#3 திலிப் சங்வி
நிறுவனம்: சன் பார்மா (இந்தியாவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளர்)
சொத்து மதிப்பு: 16.3 பில்லியன் டாலர்
சிறப்பம்சம்: உலகின் ஐந்தாவது மிகப்பெரிய மறுந்து விற்பனையாளர்
#2 லட்சுமி மிட்டல்
நிறுவனம்: அர்செலார் மிட்டல் ஸ்டீல் நிறுவனம்
சொத்து மதிப்பு: 17.2 பில்லியன் டாலர்
சிறப்பம்சம்: க்யின்ஸ் பார்க் ரேஞ்சர் கால்பந்தாட்ட கிளப்பின் 33 சதவிகித பங்குகளை வைத்துள்ளார்.
#1 முகேஷ் அம்பானி
நிறுவனம் : ரிலையன்ஸ் இன்டஸ்டரிஸ்
சொத்து மதிப்பு: 24.4 பில்லியன் டாலர்
சிறப்பம்சம்: ஃபார்ச்சூன் 500 நிறுவனகளில் ஒன்று, ஐபிஎல் அணிகளில் 112 மில்லியன்
மதிப்புள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்.
|
"மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்: கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்; தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்!"
Showing posts with label sales training company tripur. Show all posts
Showing posts with label sales training company tripur. Show all posts
Monday, August 18, 2014
இந்திய பணக்காரர்களின் சொத்தில் பாதியை வைத்திருக்கும் 5 தொழிலதிபர்கள்
Saturday, August 16, 2014
ஸ்மார்ட்போன் வாங்க... ஸ்மார்ட்டான 10 விஷயங்கள்!
ஸ்மார்ட்போன் வாங்க... ஸ்மார்ட்டான 10 விஷயங்கள்!
|
|
ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை. 5,000 ரூபாயில் தொடங்கி ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால்
பலரும் அதை எளிதில் வாங்கிப் பயன்படுத்தி
வருகின்றனர்.
ஆனால், ஸ்மார்ட்போனை
நமக்கு உதவுகிற மாதிரி பல வழிகளில் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். தினப்படி வேலைகள் முதல் அலுவலகம் தொடர்பான சில வேலைகளைக்கூட இருந்த இடத்தில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் மூலம் செய்துவிட முடியும்.
நவீன வாழ்க்கையின்
இன்றியமையாத கருவியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனை
வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா எடுத்துச் சொல்கிறார்.
அவை இனி...
விலை!
ஸ்மார்ட்போன் வாங்கச் செல்லும்முன், முதலில் போனுக்காகச்
செலவிடும் தொகையை பட்ஜெட் போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் பட்ஜெட் குறைவுதான்
எனில், அதற்குத் தகுந்தமாதிரியான ஸ்மார்ட்போனைத்
தேர்வுசெய்யலாம். பட்ஜெட் போடாமல் மொபைல் ஸ்டோர்களுக்குச்
செல்லும்போது நம் செலவு அதிகமாகவே நிறைய வாய்ப்பிருக்கிறது. வெறும் விலையோடு நின்றுவிடாமல் அதுகுறித்த
டெக்னிக்கல் விஷயங்கள் பற்றியும் ஆராய்வது முக்கியம். இதற்கு மொபைல் ரெவியூகளைப்
படிப்பது அவசியம்.
|
பேட்டரி (Battery)!
பேட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பதுதான் ஒரு போனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியா 1100 போல பத்து நாள் சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வாங்கும் பேட்டரி லித்தியம் அயனாக
(Li-Ion) இருக்க வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் 1500 mAh கொண்ட போனை தேர்வு செய்தால்தான் ஒருநாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும். எனவே, உங்கள் பயன்பாடுகளைப் பொறுத்து பேட்டரியைத் தேர்வு செய்யுங்கள்.
இணையம் - இணைப்புத்தன்மை!
நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன் 3ஜி ஏற்றுக்கொள்ளும் தன்மை உள்ளதுதானா என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம். அதேபோல,
Bluetooth, Wi-Fi, GPS, USB வசதி போன்றவை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். புளூடூத் வெர்ஷன் குறைந்தபட்சம் 2.1 இடிஆர்-ஆக இருப்பது நல்லது. இணைய பிரவுஸரானது ஹெச்டிஎம்எல் (HTML) வசதியுடன் வரும்.
அளவு!
ஸ்மார்ட்போனின் அளவு என்பது அவரவர்களின் விருப்பம்தான். இருப்பினும் பெரிதாக வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் அதைக் கையில் பிடிப்பது, பாக்கெட்களில் வைப்பதில் சிரமம் வரும்.
கேமரா!
எந்தவகையான ஸ்மார்ட்போனை வாங்குவதாக இருந்தாலும், அது எத்தனை மெகா ஃபிக்ஸல் கேமரா என்று முடிவு செய்துகொண்டு வாங்கவேண்டும். அதோடு உங்களுக்கு ஃப்ளாஷ் முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால், இரவில் படம் எடுக்கும்போது உங்களுக்கு சிரமம் ஏற்படும். இதில் வீடியோ ரெக்கார்டு செய்வதையும் கவனித்து வாங்கவும். 5 எம்பி கொண்ட கேமரா என்றால் அதன் மூலம் 700 ஃபிக்ஸல் அளவுக்கு வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ளலாம். வீடியோ கால் செய்யவேண்டும் என்கிறவர்கள் ஃப்ரென்ட் கேமரா வசதியுடன் உள்ள ஸ்மார்ட்போன்களை வாங்குவது நல்லது.
எடை மற்றும் அளவு!
ஒரு போன் வாங்கும்போது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை முக்கியம். இதில் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது, எடைதான். எடை குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
டிஸ்ப்ளே (Display)!
டிஸ்பிளேவை பொறுத்தமட்டில், Capacitive டச் ஸ்க்ரீன் உள்ள போன் வாங்கவேண்டும். உங்கள் தேவையைப் பொறுத்து ஸ்க்ரீன் சைஸை தேர்வுசெய்துகொள்ளலாம். அதோடு நீங்கள் வாங்கும் போன் மல்டி டச் சப்போர்ட் செய்கிறதா என்று கேட்டுக்கொள்ளுங்கள்.
இயங்குதளம் (Operating System)!
எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஓர் இயங்குதளத்தில்தான் (OS) இயங்கும். ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் போன் என மூன்று பிரபலமான இயங்குதளங்கள் உள்ளன. உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டை பொறுத்து இதில் ஏதேனும் ஒன்று உள்ள போனை வாங்கலாம்.
urs Happily
Dr.star anand Ram
www.v4all.org
urs Happily
Dr.star anand Ram
www.v4all.org
Subscribe to:
Posts (Atom)





