Sunday, October 26, 2014

''உழைத்தால்தான் சார் எனக்கு உற்சாகமாக இருக்கிறது..” - இந்த வீரிய வார்த்தைகளை சொன்னவர் யார்

'உழைத்தால்தான் சார் எனக்கு உற்சாகமாக இருக்கிறது..” - இந்த வீரிய வார்த்தைகளை சொன்னவர் யார்
ஒரு சாதாரண உயரம் கொண்ட சராசரி மனிதர் ..
சாதனைகள் பலவற்றை சர்வ சாதாரணமாக எட்டிப் பிடித்தார்...அரசியலிலும்...சினிமாவிலும்...!
எப்படி இது சாத்தியமாயிற்று என்று எல்லோரையும் போல எனக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது....
ஆனால் அதற்கான காரணம் ..அவர் மனதில் விதைத்துக் கொண்ட சில வீரியமான வார்த்தை விதைகள்தான்....!
அந்த வீரிய வார்த்தைகள்......:
''உழைத்தால்தான் சார் எனக்கு உற்சாகமாக இருக்கிறது..”
இந்த வார்த்தைகளை சொன்னவர் யார் என அறியும்போது நமக்கும் உற்சாகமாக இருக்கிறது...
எம்.ஜி.ஆர்...!!!
சிம்லா அருகே அன்பே வா ஷூட்டிங்கை முடித்துவிட்டு திரும்பி வரும் வழியில் ... மலைப் பிரதேசங்களில் ஆங்காங்கே 'பளிச் பளிச்’ என்று வெயில் அடித்துக்கொண்டு இருப்பதைக் கண்ட எம்.ஜி.ஆர்., ''வெயிலெல்லாம் வீணாகப்போகிறதே, இன்னும் கூட இரண்டு ஷாட் எடுக்கலாமே? கொஞ்சம் காரை நிறுத்தப்பா. மாணிக்கம்... பின்னாலே டைரக்டர் சார் வண்டி வருது. நிறுத்தி இன்னும் ஏதாவது எடுக்கப்போறாங்களானு கேளு'' என்றாராம்...
''ஒன்றும் இல்லை; நேராக சிம்லா போக வேண்டியதுதான்'' என்று டைரக்டர் பதில் கூறிவிடவே எம்.ஜி.ஆருக்குச் சப்பென்று ஆகிவிட்டதாம்...
''காலை முதல் கொஞ்சம்கூட ஓய்வு இன்றி மலைச் சரிவில் ஓடி ஆடி வேலை செய்தீர்களே... களைப்பாக இல்லையா? இன்னமும் ஷூட்டிங் இருக்கிறதா என்று கேட்கிறீர்களே?'' என கேட்டபோது எம்.ஜி.ஆர். சொன்னாராம்....

''உழைத்தால்தான் சார் எனக்கு உற்சாகமாக இருக்கிறது''
# எம்.ஜி.ஆர் அதிர்ஷ்டசாலி என்று எல்லோரும் சொல்வதுண்டு....ஆனால்..எம்.ஜி.ஆரின் வார்த்தைகளைப் படித்தபோது ..ஒரு உண்மை புரிகிறது..
“அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.
உழைக்கும் நேரம்...”
‪#‎ஒன்று‬ எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே.
yours Happily 
Dr.Star Anand Ram
Money Attraction consultant
www.v4all.org 
coimbatore  

No comments:

Post a Comment