Sunday, October 26, 2014

பசுமாட்டை வணங்குவது ஏன்?

பசுமாட்டை வணங்குவது ஏன்?

Temple images
வீட்டில் இடைவிடாமல் தொடரும் பிரச்னைகள், அதனால் மனத்தில் நீங்காத சஞ்சலம் என வருத்தத்தில் இருக்கிறீர்களா? அப்படியென்றால் பசு தரிசனம் உங்களுக்கு உதவி செய்யும். தினமும் பசுவைத் தரிசித்து, ஒருபிடி அகத்திக்கீரை கொடுத்து, தொட்டுக் கும்பிட்டால், வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும். நம்ம பாவங்கள் தொலைவதோடு; நம்மை பீடித்த பீடைகள் தீய தொல்லைகள் எல்லாம் விலகிப்போகும்.

அப்படி பசுமாட்டை வணங்கும்போது சர்வ விருப்பங்களையும் நிறைவேற்றித் தருபவளும், சர்வ தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியத்தைத் தருபவளும், பரிசுத்தத்தை அளிக்கக்கூடியவளும், காமதேனுவின் ச்ரேஷ்டையுமான அம்மா கோமாதாவே உனக்கு நமஸ்காரம் என்று மனத்தில் பிரார்த்தித்து வணங்கவேண்டுமாம்.

இந்தக் கருத்தைச் சொல்லும் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லியும் பசுவை வழிபடலாம்.

காம் ச த்ருஷ்ட்வா நமஸ்க்ருத்ய க்ருத்வா சைவ ப்ரதக்ஷிணம்

ப்ரதக்ஷிணீக்ருதா தேன ஸப்தத்வீபா வஸுந்த்தரா
ஸர்வகாமதுகே தேவி ஸர்வதீர்த்தாபிஷேசினீ
பாவனே ஸுரபிஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே.

No comments:

Post a Comment