Thursday, October 30, 2014

மனத்தை வெற்றிடமாக்கினால் வெற்றி உன் வசமாகும்.

மனத்தை வெற்றிடமாக்கினால் வெற்றி உன் வசமாகும்.

நாம் வாழ்வில் சாதிக்க வேண்டுமென்றால் அதற்க்கு ஆற்றல் வேண்டும். ஆற்றல் வேண்டும் என்றால் மன அமைதி வேண்டும். இவ்வாறு நாம் வேண்டுவன அனைத்தையும் தருவது தியானம். மனத்தை மந்திர சாவி என்பார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. பல ரகசியங்களை, நன்மை, தீமை என பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பெரிய கருவூலமே நமது மனம். அந்த மனம் என்னும் கருவூலத்தை திறக்க உதவும் மந்திர சாவி தான் தியானம். தியானம் என்றால் என்ன? மனத்தை ஒருமுக படுத்துவது. கண்களை மூடி அமர்வது மட்டுமல்ல தியானம். ஓவியம், கால் பந்து, கூடை பந்து, இசை, ஸிநிமா என்று நமது மனத்தை பலமணி நேரம். இல்லை ஒரு சில நிமிடங்கள் ஏதேனும் குறிப்பிட்ட ஒன்றில் நிலை நிறுத்தி கவனம் சிதறாமல் ஒருமுகப்படுத்தினால் அதன் பெயர் தியானம். தியானம் செய்வதால் கிடைக்கும் அதே பலன் கால் பந்து ஆடுவதாலும் கிடைக்கும் என்று புரட்சிகரமாக பேசியவர் ஸ்வாமி விவேகானந்தர்.
கவனங்களை சிதற விடாமல் குறிப்பிட்ட ஒரு நபர், பொருள் மீது மனதை ஒருமுகப்படுத்துதல் ஒரு வித தியானம் என்றால், மனத்தில் எதையுமே நினைக்காமல் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருப்பது இன்னொரு வகை தியானம். சாந்தி, ஆஞ்யா, துரியம், துரியாதீதம் என்று தியானத்தில் பல முறைகள், பல வகைகள் இருந்தாலும் மனத்தில் எதையுமே நினைக்காமல் சும்மா எவ்ளவு நிமிடங்கள், நேரங்கள் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருக்கும் தியானமுறை மிகவும் கடினமானது. அதே சமயம் மிகுந்த பலனை தரக்கூடியதும் கூட. மனத்தை அங்கும், இங்கும் அலைபாய விடும் யாராலும் சாதிக்க முடியாது. உணவு கட்டுப்பாடை விட மனக்கட்டுபாடு மிக அவசியம். மனக்கட்டுபாடு நமது மனம் மட்டும் அல்லாது உடலையும் காக்கும். பல வியாதிகளின் மூல கூர் மன அழுத்தமே.
நாம் மனத்தை பீட்டா என்னும் நிலையிலிருந்து ஆல்ஃபா நிலைக்கு கொண்டு வந்தாலே வெற்றிக்கான பல சூத்திரங்கள் நமக்கு தெரிய ஆரம்பிக்கும்.
மனத்தை வெற்றிடமாக்கினால் வெற்றி உன் வசமாகும்.

urs

No comments:

Post a Comment