Thursday, October 16, 2014

ஆறு உணர்வுகளையும் ஆறு உணர்வுகள் என்று ஏன் சொல்லக்கூடாது ?

மனிதனுக்கு ஆறு அறிவு என்று சொல்கிறோம். ஐந்து புலன்களின் அறிவு ஐந்து   என்றும் பகுத்தறிவு ஆறாம் அறிவு என்பதும்  வழக்கு. ஐந்து  அறிவு என்பது ஐந்து  புலன்களின உணர்வு. உணர்வுகளை பிரித்துப்  பார்த்து உணர்வது பகுத்தறிவு.

அப்படியானால் ஆறு உணர்வுகளையும் ஆறு உணர்வுகள்  என்று ஏன் சொல்லக்கூடாது ?
         உணர்வு என்பது தன்னால் இயற்க்கையாக  இயங்குவது. அது உள்ளுணர்வு. யாரும்   சொல்லிகொடுத்து செய்வதில்லை. பிறந்த கன்று  தாயைத தேடி ஓடுவதும் பால் குடிப்பதும இயற்க்கை. அது அறிவாகாது. உணர்வு.

      அறிவு என்பது எப்பொருள் யார் யார் வாய் கேர்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு.  மெய்ப் பொருள் காண்பது எப்போது ? உணர்வுகளின் அனுபவமும் மற்றவர்களிடம்  பார்ப்பதும்  கேட்பதுவும் மனிதனுக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறது  தனக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னேறுவதை மனிதன் விரும்புகிறான். அவற்றைப் பற்றிக்கொள்கிறான். அது அறிவு.  அதையும்  விழ்ப்புணர்வு என்றும் சொல்லலாம்.

       கற்கால மனிதன் இப்படித்தான் நாகரிக மனிதனாக மாறி இருப்பான். கற்கால மனிதன் உணர்வுகளால் உந்தப்பட்டு செயல் பட்டான். அதில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தன்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டான்.

     அப்படியானால் மனிதனின் அடிப்படையானது உணர்வுகள் தான். அறிவு இல்லை. உணர்வு கொண்டு தான் இயங்குகிறான்.

    பொதுவான அனைத்து உயிர்களின் உணர்வுகள் --  புலன் உணர்வுகள் பார்த்தல்,கேட்டல்,நுகர்தல், சுவைத்தல், போக முதலில் பசி உணர்வு. அடுத்து பாதுகாப்பு உணர்வு, இச்சை உணர்வு.     பிரசனைகள் வரும் போது பய உணர்வு, பின் எச்சரிக்கை உணர்வு இப்படி உயரினங்கள் வாழத் தொடங்குகிறது.

  மனிதன் மட்டும் விழிப்புணர்வு கொண்டு இயங்குகிறான். முதலில் பார்த்து கேட்டு தெரிந்து கொள்கிறான். கண்டதையும் பார்த்ததையும் மனதில் பதித்து வைத்துக் கொண்டு எச்சரிக்கையாக அடுத்த நடவடிக்கைள் செய்கிறான்.

URS -WWW.V4ALL.ORG 

No comments:

Post a Comment