Friday, May 20, 2016

தமிழ்க்கடவுள் தோன்றிய நாள்.

தமிழ்க்கடவுள் தோன்றிய நாள்.

இன்று வைகாசி விசாகம் . தமிழ்க்கடவுள் முருகப் பெருமான் தோன்றிய நாள்.

பௌர்ணமியும் கூடிவரும் அன்றைய தினம் எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், காவடி என்று கோலாகலமாகக் கொண்டாடப்படும்.  

"அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய்
ப்ரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம் பதுவோர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும் கரமது பன்னிரண்டும் கொண்டே 
ஒருதிரு முருகன் அங்கு உதித்தனன் உலகம் உய்ய.'

கச்சியப்ப சிவாச்சாரியார்

வியாசர் தனது ஸ்காந்த புராணத்தின் ஆரம்பத்திலேயே சம்பவ காண்டத்தில் முருகப்பெருமானின் 16 பெயர்களைக் கூறுகிறார்.

ஞானசக்த்யாத்மா- ஞானவேலை உடையவன்; ஞானஸ்வரூபன்.

ஸ்கந்தன்- ஒன்று சேர்ந்தவன்; ஆதாரமானவன்; எதிரிகளை அழிப்பவன்.

அக்னிபூர்- நெருப்புப் பிழம்பு.

பாஹுலேயன்- வீரம் மிகுந்த கைகளை உடையவன்.

காங்கேயன்- கங்கையின் புதல்வன்.

சரவணோத்பவன்- சரவணப் பொய்கையில் உதித்தவன்.

கார்த்திகேயன்- கார்த்திகைப் பெண்களால் பாலூட்டப்பட்டவன்.

குமாரன்- குழந்தையாயிருப்பவன்.

ஷண்முகன்- ஆறு முகங்களை உடையவன்.

குக்குடத்வஜன்- சேவல் கொடியோன்.

சக்திதரன்- சக்திவேலை ஏந்தியவன்.

குஹன்- சித்தக் குகையில் இருப்பவன்.

பிரம்மச்சாரி- பிரம்மத்தில் லயிப்பவன்; சுப்பிரமணியன்.

ஷாண்மாதூரன்- ஆறு மாதர்களைத் தாயாகப் பெற்றவன்.

க்ரௌஞ்சபித்- கிரௌஞ்ச மலையை அழித்தவன்.

சிகிவாகனன்- மயில்வாகனன்.

மேற்கண்ட நாமங்களைத் துதிப்பவர்க்கு தாமதமின்றித் திருமணம் நடைபெறும்; செல்லும் வழியில் தடையிருக்காது; எக்காலத்திலும் வெற்றி கிட்டும்; கவி புனைதல், சாஸ்திர ஞானம், நுணுக்க விஞ்ஞான அறிவு பெருகும்; பிள்ளைப் பேறும் செல்வச் சேர்க்கையும் சிறப்பாக விளங்கும் என்று கூறுகிறார் வியாசர்.

இதே சம்பவ காண்டம் 25-ஆவது அத்தி யாயத்தில் சிவ- பார்வதி உரையாடலாகவும் முருகன் பெருமை பேசப்படுகிறது.

"சரவணபவ' என்னும் சடாட்சரத்தில் "வ' இருமுறை வருவதால் "சரஹணபவ' என்று உச்சரிக்கவேண்டும் என்பர்.

ச- லட்சுமி கடாட்சம்.

ர- சரஸ்வதி கடாட்சம்.

வ (ஹ)- போகம், மோட்சம்.

ண- சத்ரு ஜெயம்.

ப- மிருத்யு ஜெயம்.

வ- நோயற்ற வாழ்வு.

எனவே நாம் வைகாசி விசாகப் புனித நாளில், முருகனது சிறந்த நாமங்களை நினைத்து, சச்சிதானந்தப் பெருங்கடலில் ஆழ்ந்து மகிழ்வோம்;

Urs
JC. Star Anand ram 
Money attraction coach 

No comments:

Post a Comment