Sunday, July 31, 2016

தீ’ என்றால் மலம். `ஷை’ என்றால் ஒழித்தல்.

`தீ’ என்றால் மலம். `ஷை’
என்றால் ஒழித்தல்.
மலமாகிய அழுக்கை
ஒழித்தலே தீட்சை.
மனிதன் இறைநிலையை
அடைவதற்கு மந்திரக்கலை,
தந்திரக்கலை, உபதேசக்கலை
ஆகிய மூன்று
படிநிலைகள் உள்ளன.
மந்திரக்கலை, தந்திரக்கலை
இரண்டும் சரியை, கிரியை,
யோக நெறிமுறைகளில்
உள்ள குருமார்கள்
போதிப்பதாகும்.
நான்கு எழுத்து, ஐந்து
எழுத்து, ஆறு எழுத்து,
எட்டு எழுத்து உள்ளிட்ட பல
மந்திரங்களை உச்சரித்து
செய்யும் பயிற்சிகள்
மந்திரக்கலை ஆகும். இதை
போதிப்பவர்கள்
மாந்திரீகர்கள் ஆவர்.
முத்திரைகளையும்,
யந்திரங்களையும் செய்யும்
பயிற்சிகள் தந்திரக்கலை
ஆகும். இதைப்
போதிப்பவர்கள்
தாந்திரீகர்கள் ஆவர்.
இந்த இரண்டு கலைகளைக்
காட்டிலும் உன்னதமான,
ஒப்புயர்வற்ற
ஞானநிலைக்கான கலையே
உபதேசக்கலையாகும்.
இதை போதிக்கும்
குருமார்கள் ஞானகுரு
ஆவார்கள். இந்த
ஞானகுருக்களே தன்
சீடர்களுக்கு உண்மையான
தீட்சைகளை
வழங்குகிறார்கள்.
தீட்சைகள் ஆறு வகைப்படும்.
அவையாவன :
பரிச தீட்சை, நயன தீட்சை,
பாவனா தீட்சை, வாக்கு
தீட்சை, யோக தீட்சை, நூல்
தீட்சை
பரிச தீட்சை : ஒரு பறவை
முட்டையிட்டு, அதன் மேல்
உட்கார்ந்து, அதன் உடல்
வெப்பத்தினால்
முட்டைபொரிந்து குஞ்சு
வெளியாவதைப் போன்றது,
பரிச தீட்சையாகும்.
ஞானகுரு தனது
திருக்கரத்தினால்
சீடருடைய நெற்றியில்
தொட்டு, மூலதாரத்தில்
சுருண்டு உறங்கிக்
கொண்டிருக்கும்
குண்டலினி ஆற்றலை மேல்
நிலையில்– புருவ
மத்தியிலும், தலை
உச்சியிலும் – நிலை
நிறுத்துவதே பரிச
தீட்சையாகும்.
நயன தீட்சை : ஒரு மீன்
முட்டையிட்டு அதனைத் தன்
கண்களால் பார்த்து
பார்வையின்
வெப்பத்தினால் முட்டை
பொரிந்து, மீன் குஞ்சு
வெளியாவதைப் போன்றது
நயன தீட்சை. ஞானகுரு
தமது திருக்கண்ணால்
சீடரின் கண்களைப் பார்த்து
புறத்தில் செல்லக்கூடிய
சீடரின் மனத்தை, அகத்தில்
பார்க்க அருளுவதே நயன
தீட்சையாகும்.
பாவானா தீட்சை : ஒரு
ஆமை கடற்கரையில்
முட்டைகள் இட்டு, பின்பு
கடலுக்குள் சென்று
முட்டைகள் பொரிந்து
குஞ்சுகளாக
மாறவேண்டும் என்று
இடையறாது நினைத்துக்
கொண்டிப்பதைப் போன்றது
பாவனா தீட்சை ஆகும்.
ஞானகுரு தன்னைப்
போன்றே தன் சீடர்களையும்
உடல் உணர்வு நிலையை
விட்டு, உயிர் உணர்வில்
நிலைக்கச் செய்து,
சகஜத்திலேயே வெளிக்குள்
வெளி கடந்து சும்மா
இருக்கும் சுகமான,
எண்ணமற்ற மோனநிலையாம்
ஆனந்தப் பெருவெளியில்
நிலைக்க வைப்பதே
பாவனா தீட்சை.
யோக தீட்சை : ஞானகுரு
தன் அருளால் அகார, உகார,
மகார, சிகார, வகார
நிலைகளை உணர்த்துவதே
யோக தீட்சையாகும். தலை
உச்சியாகிய
சிகாரத்திலிருந்து 12
அங்குல உயரத்திலுள்ள
அண்டத்திலுள்ள பிண்டமான
பெருவெளியில்
நிலைத்து வெளிக்குள்
வெளிகடந்து, சும்மா
இருப்பதுவே வகார
திருநிலை. இதனை
ஞானகுரு, அக
அனுபவமாக உணர்த்துவதே
யோக தீட்சை ஆகும்.
வாக்கு தீட்சை :
ஞானகுரு, ஞானிகள்
அருளிய திருமறைக்
கருத்துகளையும், தான்
தனக்குள் மெய்ஞான
அனுபவமாக
உணர்ந்ததையும்,
இறைத்தன்மையில்
நிலைத்து நின்று,
உள்ளன்போடு கேட்கும்
சீடர்களுக்குச் சொல்லி,
அவர்தம் உணர்வில், உயிரில்,
ஆன்மாவில் கலந்து, ஞான
அதிர்வுகளை உருவாக்கி,
என்றென்றைக்கும்
வழிநடத்துவது வாக்கு
தீட்சையாகும்.
நூல் தீட்சை : சரியை,
கிரியை, யோக மார்க்க
நூல்களை நீக்கி,
ஞானத்திற்காக மட்டும் மெய்
உணர்ந்த அருள் ஞானிகள்
அருளிய
திருமறைகளையும்,
அவர்கள் அனுபவித்த
பேரானந்த
அனுபவங்களையும், அதன்
வழி நடக்கும் போது
ஏற்படும் நிறைவான
அனுபவக்
கருத்துக்களையும்
நூலாக்கி சீடர்களுக்கு
வழிகாட்டும் நூலாக
அருள்வது நூல்
தீட்சையாகும்.
உண்மையில், யோக தீட்சை
என்பது
மூச்சுப்பயிற்சியோ,
வாசியோகம் என்றால்
என்னவென்று
அறியாமலேயே மூச்சை
உள்ளுக்குள்ளே
ஊதிச்செய்யும்
பயிற்சிகளோ அல்ல.
எண்ணமற்று, சகஜத்திலேயே,
மனதில் மோனநிலையைப்
பெற்று சிவவெளியில்
லயமாகி இருப்பதே வாசி
யோகம் என்பதைப் புரிந்து
கொள்க.
எடுத்த இப்பிறப்பில் தானே
மெய்யான
ஞானகுருவினைத் தேடிக்
கண்டடைந்து, பணிந்து,
அர்ப்பணித்து,
ஞானதீட்சையைப் பெற்று,
மன அழுக்குகளையும்,
உயிர் மற்றும் ஆன்ம
அழுக்குகளையும் நீக்கப்
பெற்று, மாசற்று தன்னை
உணர்ந்து, தனக்குள் இறை
நிலையை உணர்ந்து,
இறைத்தன்மையில் இரண்டறக்
கலந்து, அதில் கரைந்து
என்றும் நித்தியராக
வாழ்தலே சிறப்புடையது.

மனதை வசப்படுத்திவிட்டால் துன்பமும் இல்லை துயரமும் இல்லை எல்லாம் இன்பமயம்

மனதை வசப்படுத்திவிட்டால் துன்பமும் இல்லை துயரமும் இல்லை எல்லாம் இன்பமயம்

மனதை வசப்படுத்திவிட்டால் துன்பமும் இல்லை துயரமும்  இல்லை எல்லாம் இன்பமயம்

மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்று மகான் ரமணர் கூறுவார்.
எங்கே எண்ணங்கள் தோன்றுகின்றனவோ, எங்கே அவை தொடங்குகின்றனவோ,
அங்கே உள்ள ஒன்றையே நாம் மனம் என்கிறோம்.
மனம் என்பது தனியே ஒன்று இருப்பதில்லை அது எண்ணங்களையே சார்ந்துதிருக்கிறது. நான் என்ற எண்ணத்தையே முதன்மையாய்க் கொண்டது. அகத்தில் ஆன்மாவையும் , புறத்தில் உலகத்தையும் அது கொண்டிருக்கிறது. அது தனித்திருப்பத்தில்லை அதற்கெண தனியாக ஒரு இடம் கிடையாது.
எண்ணங்கள் ஆற்றல் மிக்கவை தற்போது பயனற்றதாய் உள்ள எண்ணம் அதுவே பிறகு பயனுள்ளதாயிருக்கும்.
நான்,எனது,என்னுடைய,எனக்கு என்ற ஒவ்வொரு எண்ணத்திலும் ஒரு அகந்தை இருக்கிறது.மணதுக்கென வலிமையுண்டு அது எண்ணங்கள்ற்ற நிலையில் அளவற்ற வலிமையுடன் இருக்கும். நாம் மனதை பயன்படுத்தி நம்மையறிவதில்லை நம்மை சுற்றியுள்ள புறப்பொருள்களையே அறிகிறோம். ஞானம் வந்துவிட்டால் இந்த மனம் தனக்குள் இந்த பிரபஞ்சத்தை காணும். பிரபஞ்சத்தில் தன்னைக் கண்டுக்கொள்ளும்.
மனதை வசப்படுத்திவிட்டால் துன்பமும் இல்லை துயரமும் இல்லை. ஆசையை விடவேண்டும். சொல்லற்று செயல்லற்று சும்மாயிருக்கும் நிலையை அடையவேண்டும். தியானத்தின் மூலமே மனதை வசப்படுத்த முடியும். அதனால் தான் சும்மாயிரு என்கிறது பல மகான்களின் நூல்கள். சும்மா இருப்பது என்பதே தவம் அதை வள்ளல் பெருமான்கெஞ்சுவதை பாருங்கள்
இன்று வருமோ? நாளை வருமோ?
அல்லது மற்று என்றுதான் வருமோ?
துன்று மல வெம்மாயை அற்று
வெளிக்கு உள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்.
அதையே பத்தரகிரியார் சும்மா இருப்பதை நினைத்து இப்படி ஏங்குகிறார்.
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்.
ஒரு பக்கதனுடைய மனம் அறிகிறது தனக்குள் மனமாகவும் ,பிராணனாகவும் , ஆன்மாவாகாவும் இருப்பது இறைவனே. அவனுக்குள் மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது அவனுடைய துடிப்பும், ஏக்கமும், அருள்தாகமும் அதைச் சாத்தியப்படுத்துகிறது என்று ராமகிருஷ்ணர் கூறுகிறார்.அகந்தை ஒரு திரை அந்தத் திரையை விலகினால், அதுவரை அறிந்திராதவைகளை அறிய முடியும், கணமுடியாத காட்சிகளை காணமுடியும், இறைக்காட்சி உட்பட.

Yours Happily
Jc.Dr.Star Anand ram
www.moneyattraction.in
9790044225

Wednesday, July 27, 2016

ஒரு நல்ல நாளுக்கான முத்தான பத்து விதிகள்

இனிய காலை வணக்கம் நட்புக்களே..

$$ஒரு நல்ல நாளுக்கான  முத்தான பத்து விதிகள்$$.


# இன்று நான் திரும்பி எதிர்வினை செய்ய மாட்டேன் 
யாரவது ஒருவர் முரட்டுத்தனமாகவோ ,பொறுமை இல்லாமலோ , இரக்கமற்றோ இருந்தால் அதேபோல்  நான் இருக்க மாட்டேன்..
# இன்று எனது எதிரியை  ஆசிர்வாதிக்க  கடவுளிடம்  வேண்டுவேன் 
யாராவது என்னை கடுமையாக அல்லது நல்லவிதமில்லாமல் நடத்துபவர்களை அணுக நேர்ந்தால் , நான் அமைதியாக கடவுளிடம் அவரை  ஆசிர்வாதிக்குமாறு வேண்டிக்கொள்வேன் ..ஏனென்றால் எதிரி என்று  நான் புரிந்துகொண்ட அவர் எனது  குடும்ப உறுப்பினராகவோ, பக்கத்து வீட்டுகாரராகவோ , கூடவேலை பார்ப்பவராகவோ அல்லது ஒரு புதியவாராகவோ கூட இருக்கலாம். 
# இன்று  நான் கூறும்  வார்த்தைகளில் கவனமாக இருப்பேன்.
எனது  வார்த்தைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து பாதுகாப்பாக பேசுவேன். தேவையற்ற கிசுகிசுக்களை  பேச மாட்டேன். 
# இன்று ஒரு படி மேலே போவேன்..
அடுத்த ஒரு நபரின் சுமையை குறைப்பதில் / பங்கெடுப்பதில் உதவுவதற்கான பாதையை கண்டுபிடிப்பேன். 
# இன்று  நான் மன்னிப்பேன்.
எனது வழிகளில் வரும் ஏதாவது  காயங்களையும் வடுக்களையும் அதன் காரணிகளையும்  நான் மன்னிப்பேன்.
# இன்று நான் யாராவது ஒருத்தருக்கு ஏதாவது ஒரு நல்லது பண்ணுவேன் ..ஆனால் அதை இரகசியமாக செய்வேன்.
நானாகவே சென்று  யாரவது ஒருத்தரின் வாழ்வில் ஆசிர்வாதிப்பென்.உதவி செய்வேன்.
# இன்று  நான் "மற்றவர்கள்  என்னை எப்படி நடத்தவேண்டும் என்று  நான் விரும்புகிறேனோ" அதே போல் நான் நடத்துவேன்.
“என்னை எப்படி நடத்தவேண்டும் என்று  நான் விரும்புகிறேனோ அதேபோல் அடுத்தவர்களை நான் நடத்த வேண்டும் “ என்ற தங்க விதியை  நான் பார்க்கும்  ஒவ்வொருவரிடமும் கடைபிடிப்பேன்.
# இன்று நான் யாரை பலவீனப்படுத்தினேனோ அவரை மிகவும்  ஊக்கபடுத்துவேன். 
என்னுடைய புன்னகை, வார்த்தைகள், ஆதரவான வெளிப்பாடுகள் மூலமாக வாழ்வில் போராடும் ஒருத்தரிடம் ஒரு வித்தியாசத்தை கொண்டுவரும்.
# இன்று எனது உடலை நன்றாக பேணுவேன் 
நான் குறைவாக சாப்பிடுவேன், நான் ஆரோக்கியமான உணவையே  சாப்பிடுவேன் , எனது உடலிர்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்லுவேன்.
# இன்று எனது ஆன்மீகத்தன்மையை வளர்த்துவேன்.
இன்று எனது பிரார்த்தனையில் கொஞ்சம் அதிக நேரம் செலவழிப்பேன். ஆன்மீக மற்றும் ஊக்கமளிக்கும் புத்தகங்களை படிக்க  ஆரம்பிப்பேன். நான் ஒரு அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்து கடவுளின்  வார்த்தைகளை கேட்பேன்...
இந்த எளிய வழிமுறைகளை என்றென்றும் இன்பற்றினால் எல்லாநாட்களுமே இனிய நாட்கள்தான்..
# erupu vithi 

நன்றி.நன்றி..நன்றி...

JC.Dr.Star Anand ram

வீரபத்திரர் வரலாறு

வீரபத்திரர் வரலாறு

சிவபெருமானின் மூத்த மகன் வீரபத்திரர்,

உலகில் மிக உயர்ந்த செல்வம் வீரமேயாகும் . வீரத்தால் அடைய முடியாத பொருளில்லை . அதனாலேயே நமது தெய்வங்கள் வீர தெய்வங்களாக சித்தரிக்கப்படுகின்றன . காளி , துர்க்கை , சப்தமாதர்கள் , முதலான தெய்வங்கள் போர் தெய்வங்களாக போற்றப்படுகின்றனர்...
மிகச் சாந்தமாக விளங்கும் மகாலட்சுமி கூட, ''கோலாசுரன்'' என்கிற அசுரனை உக்ரமான போரில் அழித்து '' கோலாசுர பயங்கரி '' என்று பெயர் கொண்டுள்ளாள் !

திருமால் தசாவதாரங்கள் எடுத்து அநேக அசுரர்களை அழித்தார் . சாந்த சொரூபியான  பிரம்மதேவன் கூட போர் கோலம் பூண்டு அசுரர்களை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன .
எல்லையற்ற வீரத்தின் இருப்பிடமாகத் திகழும் சிவபெருமானும்  , உலக நலம் பொருட்டு அனேக அசுரர்களை வென்றடக்கி அருள் புரிந்துள்ளார் . அவை , அவருடைய அளவற்ற ஆற்றலுக்கும் , வீரத்துக்கும் அடையாளமாக உள்ளன . அவை அனைத்தையும் நம்மால் நினைவில் நிறுத்த முடியாது என்பதால் ஆன்றோர்கள் அவற்றில் எட்டை வரிசைப் படுத்தி '' அஷ்ட வீரட்டம்'' என்று போற்றி நாம் வணங்க வகை செய்துள்ளனர் .

அவை :

பிரம்மனின் சிரம் கொய்தது ,(கண்டியூர் எனும் தலத்தில்)

எமனை காலால் உதைத்து அழித்தது. (திருக்கடவூர் எனும் திருத்தலத்தில்)

முப்புரம் எரித்தது ( திருவதிகை எனும் தலத்தில்)

யானையை உரித்து அதன் தோலை போர்வையாகப் போர்த்திக் கொண்டது (வழுவூர் எனும் தலத்தில்)

தட்சனின் யாகத்தை அழித்தது (திருப்பறியலூர் எனும் தலத்தில்)
அதன் தோலை போர்வையாகப் போர்த்திக் கொண்டது (வழுவூர்எனும் தலத்தில் )

தட்சனின் யாகத்தை அழித்தது ( திருப்பறியலூர் எனும் தலத்தில் )

அந்தகனை வதைத்தது ( திருக்கோவலூர் எனும் தலத்தில் )

காமனை அழித்தது ( கொருக்கை எனும் தலத்தில் )

ஜலந்தரனை அழித்தது ( திருவிற்குடி எனும் தலத்தில் )

இப்படி வரிசைப் படுத்தியுள்ளனர் .
இவற்றுள் , இரண்டில் மட்டும் பெருமான் தான் நேரடியாகச் செல்லாமல் தன அருட்பார்வையில் உண்டான உக்கிரகுமாரர்களாகிய வீரபத்திரர் , பைரவர் ஆகியோரை அனுப்பி , முறையே பிரம்மன் , தட்சன் ஆகியோர் தலைகளைக் கொய்து தண்டித்து அருள் புரிந்ததாக புராணம் கூறும் . அதிலும் வீரபத்திரரை அனுப்பி பெற்ற வெற்றி உன்னத வெற்றியாகவும் தனி வரலாறாகவும் போற்றப்படுகிறது . மேற்சொன்ன எட்டு வீரட்டங்களுள் , ஏழில் தேவர்களுக்கு உதவவே பெருமான் போர் புரிந்தார் . ஆனால் , தட்ச ச

Monday, July 25, 2016

கஷ்ட காலங்களில் தைரியத்தையும் இழக்காதீர்கள். உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள் உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும்

இனிய காலை வணக்கம்..
......................................................


இன்றைய நாள் உற்சாகமும்,உத்வேகமும் தரும்
நாளாக தங்களுக்கு அமையட்டும்..


இன்றைய சிந்தனை..
...........................................

கஷ்ட காலங்களில் கடவுள்
.................................................

ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம். 
நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள். அவனுக்கு ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை. 
சத்தமாகக் கேட்டான்.
"என்னுடன் வருவது யார்?"

"நான் கடவுள்" என்று அசரீரியாகப் பதில் வந்தது.
அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. 'கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்'.

பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் மறந்தான். சுகமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும் அதிகமாயின. 
ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல் தவித்த போது தான் அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது.

'கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா' என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் கால் தடங்களைக் கவனித்தான். அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன. 
அவன் சுற்றி பின்னோக்கிப் பார்த்தான். அவன் கஷ்டகாலம் ஆரம்பித்த கணத்திலிருந்து ஒரே ஒரு ஜோடிக் கால் தடம் மட்டுமே தெரிந்தது. அவனுக்கு அழுகையாய் வந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான்.

"கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள், துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே இது நியாயமா?"
கடவுளிடமிருந்து பதில் வந்தது. "மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை. உன் துன்ப காலத்தில் நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல. என்னுடையவை. இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக் கொண்டு நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன். அதனால் தான் நீ உன்னுடைய காலடி சுவடுகளைக் காண முடியவில்லை...."

அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய நேரம் ஆயிற்று. 

குற்றம் காண்பதில் மனிதன் சமர்த்தன். அவனுக்கு அதற்கு நிறைய நேரம் தேவைப் படுவதில்லை. கஷ்ட காலங்களில் உறவும் நட்பும் காணாமல் போவது போல கடவுளின் அருளும் காணாமல் போவதாக அவன் என்ணுவதில் வியப்பில்லை.

சுமைகள் கூடும் போது, இறக்கி வைக்க வழி தெரியாத போது இருக்கவே இருக்கிறார் கடவுள், அவனிடம் வசவுகள் வாங்கிக் கொள்ள வந்த கஷ்டங்கள் நமக்குத் தெரியும். எத்தனையோ கஷ்டங்கள் வரவிருந்து, அவை இறையருளால் வராமல் தவிர்க்கப் பட்டிருக்கலாம். அவை நம் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகிறது. கடவுள் கணக்கு சொல்வதில்லை. எனவே எத்தனையோ உண்மைகள் நமக்குத் தெரியாமலேயே போய் விடுகின்றன.
துன்பங்களும், சோதனைக் காலங்களும் வரும் போது நாம் ஒரு பெரிய உண்மையை மறந்து விடக் கூடாது. எதுவுமே காரணம் இல்லாமல் நம்மிடம் வருவதில்லை. அவற்றில் சில நாம் சம்பாதித்தவை. நம் முந்தைய செயல்களின் விளைவுகள். நாமே வர வழைத்தவற்றை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது. 

மறுப்பதும் எதிர்ப்பதும் நியாயமல்ல. மற்றவை நாம் வளர, பக்குவப்படத் தேவையான அனுபவங்கள். 

நாம் கற்க வேண்டிய பாடங்கள். அவற்றைக் கற்றறிந்த பின்னரே, அந்த சோதனைத் தீயில் பட்ட பின்னரே நாம் புடம் போட்ட தங்கமாய் மிளிரப் போகிறோம். அவை நம் வாழ்வில் வரா விட்டால் நாம் சோபிப்பதுமில்லை. 

கையால் மென்மையாக தடவிக் கொடுத்தே கல்லை சிலையாக முடியாது. இன்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் நாம் பக்குவம் அடைவதும் சாத்தியமல்ல. 

உளிக்கு கல்லின் மீது பகையில்லை. உளியடிகளைத் தாங்காத கல் அழகிய சிலையாவதில்லை. கடவுள் என்ற சிற்பி நம்மைச் செதுக்கும் போது அழகிய சிலையாகப் போகிறோம் என்ற உணர்வுடன் தாங்கிக் கொண்டால், இது அர்த்தமில்லாததல்ல என்று புரிந்து கொண்டால் அந்த அடிகளும் நமக்கு ஆனந்தமே. 

இன்னொரு விதமாகவும் சொல்லலாம். மருந்து கசக்கிறது என்று குழந்தை கதறியழுதால் தாய் விட்டு விட மாட்டாள். குழந்தை குணமாக வேண்டும் என்று அக்கறை அவளுக்கு அதிகமுண்டு. பலவந்தமாக மருந்தை குழந்தை வாயில் திணிக்கையில் குழந்தை தாயை ஒரு கொடுமைக்காரியாகக் கூட நினைக்கலாம். குழந்தை என்ன நினைக்கிறது என்பது தாயிற்கு முக்கியமல்ல. குழந்தை குணமாக வேண்டும் என்பதே தாயிற்கு முக்கியம். குழந்தைக்கு எது நல்லது என்பதை குழந்தையை விடத் தாய் நன்றாக அறிவாள். 

கடவுளும் அந்தத் தாயைப் போல் தான்.
இனி கஷ்ட காலங்கள் வரும் போது கடவுளை திட்டாதீர்கள். அவற்றைத் தாங்கும் சக்தியையும் அவற்றிலிருந்து கற்கும் புத்தியையும் மட்டுமே கடவுளிடம் வேண்டுங்கள். 

கஷ்ட காலங்களில் தைரியத்தையும் இழக்காதீர்கள். உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள் உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும். முடிவு கண்டிப்பாக இனிமையாகும்.

உண்மை அன்பின் அடையாளமான

ராமபிரான் சீதா கல்யாணம் முடிந்து அயோத்தி வந்தார். அவரை வாழ்த்தி மக்கள் எல்லாம் பரிசுகளை வழங்கி வாழ்த்தினர். 
அக்கூட்டத்தில் மித்ரபந்து எனும் செருப்பு தைக்கும் தொழிலாளி தனது கைகளில் ஸ்ரீராமபிரானுக்கு பாதுகைகளை பரிசாக தர காத்திருந்தேன்.  
மற்றவர் எல்லாம் விலையுர்ந்த பொருட்களை தருகிறார்கள் தன்னால் அப்படி தர முடியவில்லையே என வருத்துத்துடன் நின்று இருந்தான்

அவனை கண்ட ராமர் அருகே அழைத்து “உண்மையான உழைப்பில் உருவான இந்த பரிசுதான் அனைத்தையும் விட உயர்ந்தது எனக்கு பிரியமானதுகூட “ என சொல்லி வாங்கி அணிந்து கொண்டார்

வனவாசம் செல்ல ராமர் புறப்பட்டார் தனது தாயிடம்,”வனவாசம் செல்லும்போது எதையும் எடுத்துச் செல்ல கூடாதுதான், இருப்பினும் இந்த பாதுகைகளை மட்டும் அணிந்து செல்ல அனுமதியுங்கள்” என்றாராம். 

கூட்டத்தில்  கண்ணீரோடு நின்றுருந்த மித்ரபந்துவை நோக்கி “விலையுர்ந்த எந்த பரிசும் எனக்கு பயன்படவில்லை. நீ அளித்த காலணிகள் தான் என் கால்களை காக்க போகின்றன” என்றார்

உண்மை அன்பின் அடையாளமான அந்த பாதுகைகளே பின்னர் அயோத்தியின் அரியணையில் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தன.

கொங்கணகிரி கந்தன் திருக்கோயில்'

'''உனைப்பாடும் தொழில் இன்றி வேறில்லை,எனை காக்க உனையின்றி யாரும் இல்லை'''....''சஷ்டி'':25-7-16....''கொங்கணகிரி கந்தன் திருக்கோயில்''....அருணகிரிநாதர் திருப்புகழ் திருத்தலம்.அழகிய மலைக்கோயில்.திருப்பூரிலிருந்து 6 கி.மீ..கொங்கண சித்தர் பூஜித்த பவித்திரமான திருத்தலம்.இங்கு வழிபட குழந்தைகளின் அறிவு விருத்தியாகும்;சிவனருள் சித்திக்கும்..வீடு கட்டும், வீடு வாங்கும் யோகம் உண்டாகுமாம்..இங்கு மூலவர் கந்தப்பன் வள்ளி,தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார்..இங்கு செல்வகணபதி,அருணகிரிநாதர்,வெங்கடாசலபதி,நவகிரக சன்னதிகளும் உள்ளன..இங்கு மூலவர் கந்தப்பன் முன்பு பசும் பால் பொங்கி வரும் அதிசயம் இன்றும் நிகழ்கிறதாம்.இதனால் கொங்கணகிரியை பொங்குதிருக்கோயில் என்றும் பொங்கு கொங்கணகிரி என்றும் கூறுகிறார்கள். ..கொங்கணகிரி திருத்தல ''ஐங்கரனை யொத்தமன''என்னும் திருப்புகழை தினமும் பாராயணம் செய்து வர நம் குழந்தைகளின் மந்த புத்தி அகன்று நல்ல அறிவு கிட்டும்..கல்வியில் சிறந்து விளங்கலாம்.தீய வழியில் செல்லும் குழந்தைகளுக்கு நற் புத்தி கிட்டும்..
''ஐங்கரனை யொத்தமன மைம்புல மகற்றிவள
ரந்திபக லற்றிநினை       வருள்வாயே
அம்புவி தனக்குள்வளர் செந்தமிழ் வழுத்தியுனை
அன்பொடு துக்கமன       மருள்வாயே
தங்கிய தவத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திர வெளிக்கு வழி        யருள்வாயே
தண்டிகை கனப்பவுசு எண்டிசை மதிக்கவளர்
சம்ப்ரம விதத்துடனெ       யருள்வாயே
மங்கயைர்சுகத்தை வெகு இங்கித மெனுற்றமன
முன்றனை நினைத்தமைய       அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி
வந்தணைய புத்தியினை       யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையிலப்பரருள்
கொண்டு உடலுற்றபொரு      ளருள்வாயே
குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கண கிரிக்குள்வளர்       பெருமாளே''.[அருணகிரிநாதர்]....."நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம'
எனப்பெற்றேன்?"."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்"...

பில் கேட்ஸ் - வாழ்க்கை வரலாறு தெரிந்து கொள்வோம்

பில் கேட்ஸ் - வாழ்க்கை வரலாறு தெரிந்து கொள்வோம்



பில் கேட்ஸ் (William Henry Bill Gates III) என்றால் இன்றைய உலகில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. கடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எவரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலமைக் கணனி மென்பொருளாரும்அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆன பில் கேட்ஸ்” தொடர்ந்து பல வருடங்களாக உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்திலேயே இருந்து வருகிறார். 1999 களிலேயே இவரது சொத்தின் மதிப்பு 100 பில்லியன்கள் ஆகும். இன்று இவரது மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் உலகெங்குமாக 78,000 பேர்கள், 105 நாடுகளில் சேவை புரிகின்றனர்.
படிமம்:Bill Gates in WEF ,2007.jpg
வாழ்க்கை வரலாறு
பில் கேட்ஸ் 1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் நாள் அமெரிக்காசியேட்ல்,வொசிங்டன் (America, Seattle, Washington) எனும் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் 'வில்லியம் கெச் கேட்ஸ்அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர் ஆவார். தாயாரின் பெயர் 'மேரி மேக்ஸ்வெல்வொசிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியை ஆவார். இவர்களின் மகனான பில் கேட்ஸ் சிறு வயதிலேயே கணிதம்,அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கியுள்ளார். பில் கேட்ஸ் தனது பதி்மூன்றாவது வயதில் சியாடில் பகுதியில் சிறந்தப் பாடசாலையான லேக்சைட் பாடசாலைக்கு மாற்றம் பெற்றார். அங்கு கல்வி கற்கும் காலங்களில் இவரது கணனி ஆர்வமும் திறைமையும் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டது. சிறு வயது முதலே மென்பொருள் எழுதுவதில் ஆர்வமுள்ளவரானார்.

13 
வயதான அக்காலத்திலேயே மென்பொருள் எழுதவும் தொடங்கிவிட்டார்.

1973 
ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகம் (Harvard Universityசென்றார். அங்கே இஸ்டீவ் பாள்மர் என்பவர் இவரது நண்பரானார். இஸ்டீவ் பாள்மரின் வீட்டில் இருந்தே படித்தார். இருப்பினும் இவரது ஆர்வம் கணனி மென்பொருள் எழுதுவதிலேயே இருந்தது.

1975 
ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகக் கல்வி முற்று பெற்றப் பின் தனது சிறு வயது நண்பரான பவுல் எலன் (Paul Allen) என்பவருடன் இணைந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். கணனித்துறை பிற்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனும் தீர்க்கத்தரிசனம் இவருக்குள் இருந்ததோ என்னவோஇவரும் இவரது நண்பரும் இணைந்து மென்பொருள்களை மும்முரமாக எழுதினர். இவருடைய இத்தொலை நோக்குச் சிந்தனைத்தான் பிற்காலத்தின் இவருடைய அபார வெற்றிகளுக்கு வழிவகுத்தது எனலாம்.
இன்றை உலகில் சாதாரணக் கணனி பாவனையாளர் முதல் அலுவலகங்கள்,நிறுவனங்கள் வரை மைக்ரோசொப்ட்டின் மென்பொருள் இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. கணனி இயங்குத் தளங்களை (ஒப்பரேடிங் சிஸ்டம்) பொருத்தவரையிலும் 85% சதவீதமானவை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்கு தளங்களாகவே உள்ளன. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் "விண்டோஸ் XP" ஒரு புரட்சியையே ஏற்படுத்திய இயங்கு தளமாகும். மைக்ரோசொப்ட்டின் கடைசியான இயங்குதளமானவிண்டோஸ் விஸ்டா” 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இதனைக் கிட்டத்தட்ட ஆண்டுகள், 600 கோடி டொலர்கள் செலவில், 5000கணனி மென்பொருள் வல்லுநர்கள் உழைப்பில் உருவாகியுள்ளது. இதில் 300இந்திய கணனி மென்பொருள் வல்லுநர்களும் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இன்றையக் கணனி உலக நுட்ப வளர்ச்சிக்கும்அறிவியல் மாற்றத்திற்கும் பில் கேட்ஸ் அவர்களின் தனிமனிதத் திறமையும்மைக்ரோசொப்ட் நிறுவனத்தினதும் பங்கும் அளப்பரியது. பொருளாதாரத் துறையை எடுத்துக்கொண்டாலும் இன்றைய உலகின் "பொருளாதாரத் தந்தை" என்று பில் கேட் அவர்களையே குறிப்பிடலாம் என கூறுவோரும் உளர்.
பில் கேட்ஸ் எழுதிய நூல்கள்
பில் கேட்ஸ் "கொலின்ஸ் எமிங்வே" (Collins Hemingway) என்பவரும் சேர்ந்து எழுதிய “Business @ the speed of Thought” எனும் நூல் 25 மொழிகளில் வெளியாகி பெரும் பறப்பறப்பை ஏற்படுத்தியது. இந்நூல் பல பத்திரிக்கைகளினதும் சஞ்சிகைகளினதும் பாராட்டுக்களை பெற்றது. பில் கேட்ஸின் “The Road Ahead'எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு அதுவும் பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில்தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு தொழிலதிபராக மட்டுமன்றி,எழுத்துலகிலும் தடம் பதித்தவர் பில் கேட்ஸ்.
இந்நூல்கள் மூலம் இவர் பெற்ற இலாபத்தை தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும்இலாப நோக்கற்று இயங்கும் நிறுவனங்களிற்கும் நன்கொடையாகக் கொடுத்தார்.
இவற்றைத் தவிர உலகம் முழுவதும் வாழும் மக்களின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்திக்கான நிறுவனம் ஒன்றைத் திறந்து அதற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு பணியாற்றியும் வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிறுவனத்திற்கு "பில் எண்ட் மெலிண்டா கேட் பவுண்டேசன்எனப் பெயரிட்டுள்ளார். "மெலிண்டா" என்பது இவரது துணைவியாரின் பெயராகும்.

Sunday, July 24, 2016

8 க்குள் ஒரு யோகா !!!

8 க்குள் ஒரு யோகா !!!
************************

 "எட்டு" போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.

மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்
அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு
வருகிறது "நோய்".

நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல்,
அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை
தேடிக் கொள்ளவே விரும்பும்.

சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை தருகிறது.

சித்தர்கள் :
"எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!"
என்கிறார்கள்.

நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம்.
எத்தனைதான்
மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்)
மறுபடியும் இவை தாக்கும்.

இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும்
நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர்
சித்தர்கள்.

இதிலிருந்து விடுபட்டு, நாம்
மனிதர்கள், நலமாக வாழ வேண்டும்
என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர்.

காலை நேரத்திலோ, அல்லது நேரம்
கிடைக்கும் பொழுதோ, ஒரு
அறையிலோ அல்லது
வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி
நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும்.
முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக
நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள்
வடக்கிலிருந்து தெற்காக நடக்க
வேண்டும். இதை ஒரு நாளைக்கு
இருமுறை செய்ய வேண்டும்.

காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்.

இதை செய்வதால் என்ன நடக்கும்!
***********************************
1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.
2. இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.
3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).
4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.
5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை
கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.
7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள்
சரியாக செயல்படும்.
8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில்
வரும்.
10. பாத வலி, மூட்டுவலி மறையும்.
11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உருப்புக்கள் பலம் பெரும்.

சரி! இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.
"8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள்,
அந்த வடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது
ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது.

இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த
சித்தர்கள், இதையே "வாசி
யோகத்தில்" (மூச்சு பயிற்சியில்)
உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி
எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?
விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து
பலனடையுங்கள்! 

மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும் !!
 உள்ளங்கால் முதல் உச்சி வரை இந்த எண்ணிக்கை ஏற்றத்தில் இருக்கும் ,உடல் நோயும் ஆரம்ப நிலை கீழிருந்து மேல் முகமாகவே அதிகப்படியாகும் , நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம் , உங்கள் வீட்டிற்குள் உள்ளோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் கோடு இட்டு அந்த செவ்வக இடத்திற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள் !! இது தெற்கு வடக்காக நீலப் பகுதி இருக்கணும் .

காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள் , ஆண்கள் வலது கை பக்கம்-- பெண்கள் இடது கை பக்கம் ஆரம்பிக்கணும் , ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்கணும் , பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 21 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும் , மொத்தம் 42 நிமிடம் !!

1வது 21 நாளில் ---- சர்க்கரைநோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல் , குதிவாதம் , வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும் !!!

2 வது 21 நாளில் ---- மூட்டு வலி , ஒட்டுக்கால் , பிரச்னை குறையும் ,!!!!

3 வது 21 நாளில் ---- தொடை பகுதி பலம் பெரும் ,!!!!

4 வது 21 நாளில் ---- ஆண்மை குறைபாடு , விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு , விந்து நாத அணு குறை பாடு , கல்லீரல் மண்ணீரல் குறைபாடு , கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை , மாதநாள் குறைபாடு ,ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் .!!!

5 வது 21 நாளில் ---- வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும் !!!!,

6 வது 21 நாளில் --- இரத்த அழுத்தம் , இதய நோய் , ஆஷ்துமா , காசம் ,நீர் உடம்பு , உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும் !!!!

7 வது 21 நாளில் --- தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு , முதுகில் வாய் பிடிப்பு வராது ,

8 வது 21 நாளில் --- அன்னாக்கு பகுதி விழிப்படையும் , வாய் கண் காது மூக்கு கருவிகள் நோய் தன்மை தாக்காது , 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும் , மூளைப் பகுதி விழிப்படையும் , மூளைப் பகுதி நோய் தீரும் , தியானங்கள் கை கூடும் , இதை செய்ய வயது வரம்பு இல்லை , இப்பயிற்சி நீங்கள் வாசி யோகத்திற்கு இணையானது ,அதை செய்த செய்த தவப்பயனை பெறுவீர்கள் !!

இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர் , மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான் .உங்கள் உடலில் 8 குடில்களில் குடியிருக்கும் ஈசன் அருள் உங்களுக்கு பிரகாசம் ஆகும் , மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது !!!! ஓம் நமசிவாய!!!

Saturday, July 23, 2016

கலீல் கிப்ரானும், குழந்தை வளர்ப்பும்!

கலீல் கிப்ரானும், குழந்தை வளர்ப்பும்!
உங்கள் குழந்தைகள் - உங்கள் குழந்தைகள் அல்ல
அவர்கள் உங்கள் வாழ்க்கைக்கான
ஏக்கத்தின் புதல்வர்களும் புதல்விகளும்
அவர்கள் உங்கள் மூலம் இந்த உலகிற்கு
வந்துள்ளார்களே தவிர
உங்களில் இருந்து அல்ல

அவர்கள் உங்களுடனேயே இருந்தாலும்
அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல. 
அவர்களுக்கு உங்கள் அன்பை வழங்கலாமே தவிர
உங்கள் சிந்தனையை வழங்கவே முடியாது.
ஏனெனில் அவர்கள் அவர்களுக்கான
சிந்தனையை வழங்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களின் தேகங்களுக்கு ஒரு இல்லத்தை
நீங்கள் வழங்கி இருக்கலாம் ;
ஆன்மாக்களுக்கு அல்ல.
ஏனெனில் அவர்களின் ஆன்மா கற்பனையிலும்
உங்களால் பிரவேசிக்க முடியாத
நாளை எனும் வீட்டினில் ஜொலிக்கிறது.

நீங்கள் அவர்களை போன்றிருக்க முயற்சிக்கலாம்;
ஆனால் உங்களை போன்று
அவர்களை ஆக்கிட முயற்சிக்காதீர்கள்.
ஏனெனில் வாழ்க்கை என்பது
பின்னோக்கி செல்வதுமல்ல;
நேற்றைய தினத்தோடு தேங்கிநின்று விடுவதுமல்ல 
(குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறு.

நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல் இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை என்கிறார் கலீல் ஜிப்ரான்.

குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக் கூடாது என்ற உண்மையை பெற்றோர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் )
- கலீல் கிப்ரான்

when it too has come to go...

*Superb Msg*... Do read!!!

When somebody told me that he has failed in his exams, my question is, 

*"Is it a law that you will pass every time?"*

When someone told me that my boyfriend broke up with me, my question is, 

*"Is it a rule that you will have successful relationships everywhere?"*

When somebody asked me why am I in depression, my question is, 

*"Is it compulsory to have confidence all the time?"*

When someone cried to me about his huge business loss due to his wrong decision, my question is, 

*"Is it possible that you take all right decisions?"*

The fact is our expectation that life has to be perfect/permanent is the biggest reason of our unhappiness.

One has to understand the law of impermanence of nature. 

After each sunny day, there has to be a dark night, after each birth there have to be certain deaths, for the full moon to come again it has to pass through no moon. In this imperfection of nature, there is perfection. 

So *stop taking about your failures and bad part of your life soooo personally or intensely,* even God does not like to give you pain but its the cycle through which you have to pass by. Prepare yourself for one more fight after each fall, because even failures cannot be permanent...!

Enjoy life.... 

*Your breath comes to go.*
*Your thoughts come to go.*
*Your words come to go.*
*Your actions come to go.*
*Your feelings come to go.*
*Your illnesses come to go.*
*Your phases come to go.*
*Your seasons come to go.*
*You have come to go.*

Then why do you hold on to your guilt, anger, unforgiveness, hatred, differences, partialities, etc, etc
so so so tightly, 
when it too has come to go...

So, Let it go ...................,.........have a great day.

எண் ஏழு (Number 7) பெருமை

எண் ஏழின் சிறப்புக்கள்:
எண் ஏழு (Number 7) பெருமை
இன்று இணையத்தில் உலாவும் போது கண்ணில் பட்ட தகவல் இது.
உங்களிடம் பகிர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி:
ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.
ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.
ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.
காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.
ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.
எண் ஏழின் சிறப்புக்கள்:
1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007
2. எழு குன்றுகளின் நகரம் ரோம்
3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
4. மொத்தம் ஏழு பிறவி
5. ஏழு சொர்க்கம்(குரான்)
6. ஏழு கடல்கள்
'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.
7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
8. ஏழு வானங்கள். (Qur'an)
9. ஏழு முனிவர்கள் (Rishi)
10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)
11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)
12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின் 
எண்ணிக்கை ஏழு
13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.
14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)
15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.
16. மேலுலகம் ஏழு
17. கீழுலகம் ஏழு
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்
18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
19. மொத்தம் ஏழு தாதுக்கள்
20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா
21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
22. ஏழு புண்ணிய நதிகள்
23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு
24. அகப்பொருள் திணைகள் ஏழு
25. புறப்பொருள் திணைகள் ஏழு
26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு
27. கடை ஏழு வள்ளல்கள்
28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)
29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்
30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்
31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா
32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு
33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.
34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,
பேரிளம் பெண்) - WWW.TRVHRSOLUTIONS.COM

எண் ஏழு (Number 7) பெருமை

எண் ஏழின் சிறப்புக்கள்:
எண் ஏழு (Number 7) பெருமை
இன்று இணையத்தில் உலாவும் போது கண்ணில் பட்ட தகவல் இது.
உங்களிடம் பகிர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி:
ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.
ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.
ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.
காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.
ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.
எண் ஏழின் சிறப்புக்கள்:
1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007
2. எழு குன்றுகளின் நகரம் ரோம்
3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
4. மொத்தம் ஏழு பிறவி
5. ஏழு சொர்க்கம்(குரான்)
6. ஏழு கடல்கள்
'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.
7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
8. ஏழு வானங்கள். (Qur'an)
9. ஏழு முனிவர்கள் (Rishi)
10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)
11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)
12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின் 
எண்ணிக்கை ஏழு
13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.
14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)
15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.
16. மேலுலகம் ஏழு
17. கீழுலகம் ஏழு
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்
18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
19. மொத்தம் ஏழு தாதுக்கள்
20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா
21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
22. ஏழு புண்ணிய நதிகள்
23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு
24. அகப்பொருள் திணைகள் ஏழு
25. புறப்பொருள் திணைகள் ஏழு
26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு
27. கடை ஏழு வள்ளல்கள்
28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)
29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்
30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்
31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா
32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு
33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.
34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,
பேரிளம் பெண்) - WWW.TRVHRSOLUTIONS.COM