ராமபிரான் சீதா கல்யாணம் முடிந்து அயோத்தி வந்தார். அவரை வாழ்த்தி மக்கள் எல்லாம் பரிசுகளை வழங்கி வாழ்த்தினர்.
அக்கூட்டத்தில் மித்ரபந்து எனும் செருப்பு தைக்கும் தொழிலாளி தனது கைகளில் ஸ்ரீராமபிரானுக்கு பாதுகைகளை பரிசாக தர காத்திருந்தேன்.
மற்றவர் எல்லாம் விலையுர்ந்த பொருட்களை தருகிறார்கள் தன்னால் அப்படி தர முடியவில்லையே என வருத்துத்துடன் நின்று இருந்தான்
அவனை கண்ட ராமர் அருகே அழைத்து “உண்மையான உழைப்பில் உருவான இந்த பரிசுதான் அனைத்தையும் விட உயர்ந்தது எனக்கு பிரியமானதுகூட “ என சொல்லி வாங்கி அணிந்து கொண்டார்
வனவாசம் செல்ல ராமர் புறப்பட்டார் தனது தாயிடம்,”வனவாசம் செல்லும்போது எதையும் எடுத்துச் செல்ல கூடாதுதான், இருப்பினும் இந்த பாதுகைகளை மட்டும் அணிந்து செல்ல அனுமதியுங்கள்” என்றாராம்.
கூட்டத்தில் கண்ணீரோடு நின்றுருந்த மித்ரபந்துவை நோக்கி “விலையுர்ந்த எந்த பரிசும் எனக்கு பயன்படவில்லை. நீ அளித்த காலணிகள் தான் என் கால்களை காக்க போகின்றன” என்றார்
உண்மை அன்பின் அடையாளமான அந்த பாதுகைகளே பின்னர் அயோத்தியின் அரியணையில் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தன.
No comments:
Post a Comment