Friday, July 22, 2016

Counseling தொடர்பான பயிற்சி வகுப்பில்

ஒரு சாமியார கும்பிட்ட ஒருத்தர் அவர் காலடியில 10000 ரூபாய் காணிக்கை வச்சுட்டு வந்தாராம். அவர் நண்பர் "எதுக்கு இந்த காணிக்கை" என்று கேட்டாராம். 
        "  கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பிரச்சனையில என்ன முடிவு எடுக்கிறதுன்னு தெரியாம இவர்கிட்ட வந்து கேட்டேன். இதுக்கு நான் பதில் சொல்ல முடியாது போடா. அப்படின்னு சொல்லீட்டார். நானே யோசிச்சு நல்ல முடிவா எடுத்தேன். அதனால ஜெயிச்னே். இவர் எதாவது முடிவு சொல்லி இருந்தால் அத கேட்டு ஒன்னுமில்லாமல் போயிருப்பேன்." அப்படின்னாராம் அவர்
              ~தென்கச்சியார்

        Counseling தொடர்பான பயிற்சி வகுப்பில் முனைவர் முகோபாத்தியாயா அவர்கள் சொன்ன முதல் பாடமே " அடுத்தவர் பிரச்சனைகளுக்கு நீங்கள் தீர்வு காண இயலாது. " அடுத்தவர் பிரச்சனைகளை காது கொடுத்து கேளுங்கள். நம்பிக்கையூட்டுங்கள். முடிவை அவரவர் எடுக்க உதவுங்கள் .
       இந்த கருத்து உண்மை என்றே நானும் கருதுகிறேன்.

No comments:

Post a Comment