வாழ்ந்து காட்டுவோம் !நம்மால் முடியும்!
நம்பிக்கை மனிதர் ரமேஷ் பாபு :வெற்றி கதை (Barber by Profession, he Owns 225 Luxury Cars!)
(Ramesh Babu,a Native of BANGLORE, the barber who owns a Rolls Royce)
பெங்களூரைச் சேர்ந்த ரமேஷ் பாபு, சிகை அலங்காரக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, 42-வது வயதில், உலகின் விலை உயர்ந்த கார்களில் ஒன்றான ரோல்ஸ்ராய்ஸ் காரின் உரிமையாளர் ஆனவர். பெங்களூருவில் இன்னர் ஃபேசஸ் ஹேர் சலூன் மற்றும் ரமேஷ் டூர்ஸ் & டிராவல்ஸ் ஆகிய நிறுவனங்களை நடத்திவருகிறார்.
“எனக்கு ஏழு வயது இருக்கும்போது, என் அப்பா இறந்துவிட்டார். அவர் நடத்திவந்த சலூனை என் சித்தப்பா நடத்த ஆரம்பித்தார்.
அவர் நடத்திவந்த சலூனை என் சித்தப்பா நடத்த ஆரம்பித்தார். அதற்காக தினமும் எங்களுக்கு ஐந்து ரூபாய் கொடுத்துவந்தார். வீட்டில் நான், தம்பி, தங்கை, அம்மா, பாட்டி ஆகிய ஐந்து பேர். அம்மா வீட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தார். படிப்பு, சாப்பாடு என தேவைகள் கழுத்தை நெறிக்கவே, என்னுடைய 12 வயதில், பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர, நானும் சின்னச் சின்ன வேலைகள் செய்ய ஆரம்பித்தேன்.
10-ம் வகுப்புக்கு மேல் தொடர்ந்து முழு நேரமாகப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. அதனால், படிப்பை பகுதி நேரம் ஆக்கிக்கொண்டு, முழு நேரமாக சலூனை எடுத்து நடத்த ஆரம்பித்தேன்.
1994-ல் ஒரு காருடன் இந்தத் தொழிலில் நுழைந்தேன். 1996-ல் எனக்குத் திருமணம் ஆனபோது, ஆறு கார்கள் ஆகியிருந்தன. இப்போது நான் 209 கார்களின் உரிமையாளன்.
மற்ற நிறுவனங்கள்போல நாமும் காரை வாடகைக்கு விடுகிறோம்; ஏதாவது வித்தியாசமாகச் செய்யலாமே என யோசித்து, யாரும் வாடகைக்குவிடாத கார்களாக விட நினைத்தேன். 2004-ல் புதிய பென்ஸ் காரை வாங்கி வாடகைக்கு விட்டேன். அதுவரை இங்கு, புதிய பென்ஸ் காரை யாரும் வாடகைக்கு விட்டது இல்லை. நல்ல வரவேற்பு கிடைக்கவே, 2009-ல் பிஎம்டபிள்யூ, ஆடி கார்களையும் வாங்கினேன்.
ரோல்ஸ்ராய்ஸ் காரை வாடகைக்கு விடலாம் என்கிற எண்ணம்2011-ல் ஏற்பட்டது. நான் ரோல்ஸ்ராய்ஸ் வாங்கும்போது, பெங்களூருவில் ஐந்து பேரிடம் மட்டுமே அந்த கார் இருந்தது.
No comments:
Post a Comment