இனிய காலை வணக்கம் நட்புக்களே..
வாழ்க்கை மாற்றத்திற்கான சுயபிரகடனங்கள் :
இந்த உறுதிமொழிகளை அல்லது சுயபிரகடனங்களை அப்படியே நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது உங்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். இதில் முக்கியமான விஷயமே நீங்கள் பிரபஞ்சத்தோடு ஆழமான தொடர்பு கொள்ளக்கூடியதுதான். ஆகவே மிக ஆழமாகவும் வலிந்தும் உங்கள் குரலிலே இந்த சுயபிரகடனங்களை கூறுங்கள்,,உங்கள் எண்ணங்களை உண்மையாக்குங்கள்..
1. என் வாழ்க்கையை வடிவமைப்பவன் நான் தான், அதன் அடித்தளத்தை நான் கட்டுகிறேன்.அதில் இருக்கவேண்டியவற்றை நான் தேர்ந்தெடுக்கிறேன்.
2. இன்று,நான் அளவற்ற சக்தியுடனும் மகிழ்ச்சிடனும் இருக்கிறேன்.
3. என் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.என் மனம் புத்திசாலித்தனமாக இருக்கிறது..என்னுடைய ஆன்மா சாந்தமாக இருக்கிறது
4. நான் எதிர்திமறையான சிந்தனைகளுக்கும், குறைபாடான செயல்பாடுகளுக்கும் மேலானவன்.
5. என்னிடம் எல்லையற்ற திறமைகள் உள்ளன.அவற்றை இன்றிலிருந்து நான் பயன்படுத்தப்போகிறேன்.
6. கடந்த காலத்தில் என்னை புண்படுத்தியவர்களை நான் மன்னிக்கிறேன்.அவர்களிடம் இருந்து மெதுவாக விலகுகிறேன்.
7. ஒரு அருவி போன்ற இரக்ககுணம் என் கோபத்தை அடித்துச்செல்கிறது மேலும் அங்கே அன்பை நிலைநாட்டுகிறது,
8. எனக்கு எவை தெரியவேண்டும், நான் என்ன செய்யவேண்டும் என்பதை என்னுடைய ஆக்கமுள்ள மனநிலை வழிநடத்துகிறது
9. என்னுடைய திருமண வாழ்க்கை மிக ஸ்திரமானது, ஆழமானது,ஒவ்வொரு நாளும் நிலையானது.(Married People)
10. மிக உயர்ந்த வெற்றியடைவதற்கான அனைத்து தரமும் என்னிடம் உள்ளது.
11. (வியாபார முதலாளிகளுக்கு ) என்னுடைய வியாபாரம் வளர்கிறது .விரிவடைகிறது.வெற்றிநடை போடுகிறது.
12. படைப்பு சக்தி என்னுள் அலைகள் போல் வந்து கொண்டிருக்கிறது அவை என்னுள் புது புது புத்திசாலித்தனமான யோசனைகளை அளிக்கிறது.
13. மகிழ்ச்சி என்னுடைய தேர்வாகும் .என்னுடைய சாதனைகளுக்கும் என்னுடைய ஆசிர்வாதங்களுக்கும் நான் மகிழ்சசியை அடித்தளமாக கொண்டுள்ளேன்.
14. என்னுடைய சவால்களை முறியடிக்க தேவையான திறமைகள் என்னிடம் அளவற்று உள்ளன.வெற்றியடைவதற்கான ஆற்றல் வலம் எல்லையற்று உள்ளது.
15. நான் தைரியமானவன்..நானே என்னால் எழுந்து நிற்க முடியும்.
16. என்னுடைய சிந்தனைகள் அனைத்தும் நேர்மறையானவை.என் வாழ்க்கை அளவற்ற வளமிக்கது,
17. இன்று என்னுடைய பழைய சிந்தனைகளுக்கு முழுக்கு போடுகிறேன்..நேர்மறையை வரவேற்கிறேன்.
18. நிறைய மக்கள் என்னைப்பார்த்து மதிப்புள்ளவன் என்று கூறுகிறார்கள்.நான் அதை ரசிப்புடன் ஏற்கிறேன்.
19. நான் வியக்கத்தக்க குடும்பத்துடனும் ஆச்சர்யமான நட்புக்களுடனும் ஆசிர்வாதிக்கப்பட்டுள்ளேன்.
20. என்னுடைய சுய மதிப்பை நான் ஒப்புக்கொள்கிறேன் என்னுடைய நம்பிக்கை வளர்கிறது.
21. இப்பொழுது நடக்கும் அனைத்துமே என் நலத்திற்காகத்தான் நடக்கிறது.
22. நான் ஒரு ஆற்றல்தளம் .நான் அழிக்கமுடியாதவன்.
23. இப்பொழுது கொஞ்சம் கடினமான நாட்களாக இருந்தாலும் இவை வாழ்வின் கொஞ்ச நாட்களே..
24. இன்று நான் கற்பனை செய்யும் ஏற்புடைய திட்டஏற்பாடுதான் என் எதிர்காலம்.
25. என்னுடைய முயற்சிகளை அனைத்தையும் இப்பிரபஞ்சம் ஆதரிக்கிறது.என் கண் முன்னே என்னுடைய கனவுகள் அனைத்தும் உண்மையாகின்றன.
26. நான் எதிர்பார்த்த கச்சிதமான என் வாழ்க்கைத்துணை மிகவிரைவாக என்னை நோக்கி வந்து கொண்டுள்ளார்.
27. நான் அழகு ,வசீகரம் மற்றும் கனிவு ஆகியவற்றை ஒளிகதிர்போல் வீசுகிறேன் .
28. நோய்களை நான் கட்டுப்படுத்துகிறேன். ஒவ்வொரு நாளும் அவற்றை தோற்கடிக்கிறேன்.
29. நான் செல்லும் வழியில் இருந்த அனைத்து தடைக்கற்களும் விலகி செல்கின்றன. என்னுடைய பாதைகள் மேன்மையை நோக்கி செதுக்கப்பட்டுள்ளது.
30. மனதின் தெளிவோடும் ,இதயத்தின் வலிமையோடும் இன்று நான் எழுகிறேன்..
31. நாளைய தினத்தைப்பற்றிய என்னுடைய பயங்கள் சாதாரணமாக உருகி ஓடுகிறது.
32. நடந்தது ,நடப்பது , நடக்கப்போவது அனைத்திற்கும் நான் அமைதியாக இருக்கிறேன்.
33. என்னுடைய இயல்பு தெய்வீகம்.நான் ஆன்மீகமானவன்.
34. என்னுடைய வாழ்க்கை சரியாக இப்பொழுதான் துவங்குகிறது.
நன்றி Dr. Carmen Harra from Huffington posts in english
அன்புடனும் நன்றியுடனும்
இரகசியம் ஈர்ப்பு விதி.
No comments:
Post a Comment