Monday, July 25, 2016

கொங்கணகிரி கந்தன் திருக்கோயில்'

'''உனைப்பாடும் தொழில் இன்றி வேறில்லை,எனை காக்க உனையின்றி யாரும் இல்லை'''....''சஷ்டி'':25-7-16....''கொங்கணகிரி கந்தன் திருக்கோயில்''....அருணகிரிநாதர் திருப்புகழ் திருத்தலம்.அழகிய மலைக்கோயில்.திருப்பூரிலிருந்து 6 கி.மீ..கொங்கண சித்தர் பூஜித்த பவித்திரமான திருத்தலம்.இங்கு வழிபட குழந்தைகளின் அறிவு விருத்தியாகும்;சிவனருள் சித்திக்கும்..வீடு கட்டும், வீடு வாங்கும் யோகம் உண்டாகுமாம்..இங்கு மூலவர் கந்தப்பன் வள்ளி,தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார்..இங்கு செல்வகணபதி,அருணகிரிநாதர்,வெங்கடாசலபதி,நவகிரக சன்னதிகளும் உள்ளன..இங்கு மூலவர் கந்தப்பன் முன்பு பசும் பால் பொங்கி வரும் அதிசயம் இன்றும் நிகழ்கிறதாம்.இதனால் கொங்கணகிரியை பொங்குதிருக்கோயில் என்றும் பொங்கு கொங்கணகிரி என்றும் கூறுகிறார்கள். ..கொங்கணகிரி திருத்தல ''ஐங்கரனை யொத்தமன''என்னும் திருப்புகழை தினமும் பாராயணம் செய்து வர நம் குழந்தைகளின் மந்த புத்தி அகன்று நல்ல அறிவு கிட்டும்..கல்வியில் சிறந்து விளங்கலாம்.தீய வழியில் செல்லும் குழந்தைகளுக்கு நற் புத்தி கிட்டும்..
''ஐங்கரனை யொத்தமன மைம்புல மகற்றிவள
ரந்திபக லற்றிநினை       வருள்வாயே
அம்புவி தனக்குள்வளர் செந்தமிழ் வழுத்தியுனை
அன்பொடு துக்கமன       மருள்வாயே
தங்கிய தவத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திர வெளிக்கு வழி        யருள்வாயே
தண்டிகை கனப்பவுசு எண்டிசை மதிக்கவளர்
சம்ப்ரம விதத்துடனெ       யருள்வாயே
மங்கயைர்சுகத்தை வெகு இங்கித மெனுற்றமன
முன்றனை நினைத்தமைய       அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி
வந்தணைய புத்தியினை       யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையிலப்பரருள்
கொண்டு உடலுற்றபொரு      ளருள்வாயே
குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கண கிரிக்குள்வளர்       பெருமாளே''.[அருணகிரிநாதர்]....."நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம'
எனப்பெற்றேன்?"."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்"...

No comments:

Post a Comment