Thursday, July 21, 2016

உறவு மேம்பாட்டிற்கான இரகசியம்.

இனிய காலை வணக்கம் நட்புக்களே..
உறவு மேம்பாட்டிற்கான இரகசியம்.
• உறவு ஒன்றைக் கவர்ந்திழுக்க நீங்கள் விரும்பினால் ,உங்களுடைய எண்ணங்கள் , வார்த்தைகள், செயல்கள் மற்றும் சூழல்கள் ஆகியவை உங்களுடைய விருப்பத்தோடு முரண்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
• உங்களுடைய முதற்கவனமும் முழுக்கவனமும் உங்கள்மீதே இருக்கட்டும். உங்களை நீங்களே நிரப்பிக் கொள்ளாவிடில் ,மற்றவர்களுக்குக் கொடுக்க உங்களிடம் எதுவும் இருக்காது.
• உங்களுக்கு நீங்களே அன்பும் மரியாதையும் செலுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் அன்பும் மரியாதையும் செலுத்தும் நபர்களை நீங்கள் கவர்ந்திழுப்பீர்கள்.
• நீங்கள் உங்களைப் பற்றி மோசமாக உணரும்போது, அன்பைத் தடுக்கிறீர்கள் , அதோடு ,உங்களைத் தொடர்ந்து அந்நிலையிலேயே வைத்திருக்கும் நபர்களையும் சூழல்களையும் கவர்ந்து இழுக்கிறீர்கள்.
• உங்களிடம் நீங்கள் நேசிக்கும் குணங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களிடம் இருக்கும்  மேலும் அதிகமான சிறப்புகளை ஈர்ப்பு விதி உங்களுக்குக் காட்டும்.
• ஓர் உறவு சரியாகச் செயல்பட வேண்டும் என்றால் ,அடுத்தவரிடம் நீங்கள் மெச்சும் விசயங்களில் கவனம் செலுத்துங்கள். அவர்களுடைய குற்றங்குறைகள் மீது அல்ல. அவர்களிடம் உள்ள வலுவான அம்சங்களில் கவனம் செலுத்தினால, அவற்றை மேலும் அதிகமாக நீங்கள் பெறுவீர்கள்.

The secret summary for Relationship...
When you want to attract a relationship, make sure your thoughts, words, actions, and surroundings don't contradict your desires. 
• Your job is you. Unless you fill yourself up first, you have nothing to give anybody. 
• Treat yourself with love and respect, and you will attract people who show you love and respect. 
• When you feel bad about yourself, you block the love and instead you attract more people and situations that will continue to make you feel bad about you. 
• Focus on the qualities you love about yourself and the law of attration will show you more great things about you. 
• To make a relationship work, focus on what you appreciate about the other person, and not your complaints. When you focus on the strengths, you will get more of them.

No comments:

Post a Comment