கலீல் கிப்ரானும், குழந்தை வளர்ப்பும்!
உங்கள் குழந்தைகள் - உங்கள் குழந்தைகள் அல்ல
அவர்கள் உங்கள் வாழ்க்கைக்கான
ஏக்கத்தின் புதல்வர்களும் புதல்விகளும்
அவர்கள் உங்கள் மூலம் இந்த உலகிற்கு
வந்துள்ளார்களே தவிர
உங்களில் இருந்து அல்ல
அவர்கள் உங்களுடனேயே இருந்தாலும்
அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல.
அவர்களுக்கு உங்கள் அன்பை வழங்கலாமே தவிர
உங்கள் சிந்தனையை வழங்கவே முடியாது.
ஏனெனில் அவர்கள் அவர்களுக்கான
சிந்தனையை வழங்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களின் தேகங்களுக்கு ஒரு இல்லத்தை
நீங்கள் வழங்கி இருக்கலாம் ;
ஆன்மாக்களுக்கு அல்ல.
ஏனெனில் அவர்களின் ஆன்மா கற்பனையிலும்
உங்களால் பிரவேசிக்க முடியாத
நாளை எனும் வீட்டினில் ஜொலிக்கிறது.
நீங்கள் அவர்களை போன்றிருக்க முயற்சிக்கலாம்;
ஆனால் உங்களை போன்று
அவர்களை ஆக்கிட முயற்சிக்காதீர்கள்.
ஏனெனில் வாழ்க்கை என்பது
பின்னோக்கி செல்வதுமல்ல;
நேற்றைய தினத்தோடு தேங்கிநின்று விடுவதுமல்ல
(குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறு.
நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல் இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை என்கிறார் கலீல் ஜிப்ரான்.
குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக் கூடாது என்ற உண்மையை பெற்றோர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் )
- கலீல் கிப்ரான்
No comments:
Post a Comment