பணவளக்கலை
செல்வசெழிப்பிற்கான சுயபிரகடனம்..
செல்வசெழிப்பிற்கான சுயபிரகடனம்..
இங்கு இருக்கும் சுயபிரகடனங்கள் அனைத்தும் மனதை பற்றாக்குறை மனநிலையிலிருந்து மாற்றி செல்வமும் வசதியும் உள்ள மனநிலைக்கு கவனத்தை கொண்டு செல்லும்..இதை தினமும் 2 முறை உரக்கக்கூறுங்கள். உங்களுக்கு ஏழையாக இருப்பதற்கு உரிமையே இல்லை. நீங்கள் செல்வத்தோடு வாழபிறந்தவர்கள்.ஆகவே அந்த மனநிலைக்கு உங்களை மாற்றி சுயபிரகடனங்களை வலிந்து கூறுங்கள்..
1. நான் செல்வசெழிப்பானவன் மேலும் ஒவ்வொரு நாளும் எனக்கு செல்வம் பெருகுகிறது!
2. நான் பிரபஞ்ச அபிரிமிதத்தின் வாரிசு. இன்றைக்கு என் உரிமையை நான் கோருகிறேன்!
3. செல்வசெழிப்பு மற்றும் மகிழ்ச்சி , மகிழ்ச்சி மற்றும் செல்வசெழிப்பு : நான் அதிக மகிழ்வாக இருப்பதால் நான் செல்வசெழிப்புக்கு உரிமை கோருகிறேன் !
4. செல்வசெழிப்பு ஒரு வலிமையான ஆற்றைப்போல் என் வாழ்வில் ஓடிக்கொண்டிருக்கிறது!
5. தோல்வியை கண்டு நான் துவளாமல் இருப்பதால் செல்வசெழிப்புதான் எனது இலக்காகிறது!
6. நான் அபிரிமிதமானவன். நான் எனது மனதில் அபிரிமிதத்தை வளர்க்கிறேன். அபிரிமிதத்தை நான் நிஜ உலகில் அறுவடை செய்கிறேன்!
7. நான் அபிரிமிதத்தை அதிகமாக்குபவன். நான் வளரும்பொழுது என்னை சுற்றியுள்ளவர்களையும் வளர்த்துவேன்!
8. செல்வசெழிப்பிலிருந்து என்னை பிரிக்கும் ஒவ்வொரு மனநிலையையும் நான் இன்று வெளியேற்றுகிறேன்!
9. நான் செல்வத்தை தேர்ந்தெடுத்துள்ளேன். நான் செல்வத்திற்கு தகுதியுள்ளவன்! நான் செல்வத்தை அடைவேன்!
10. இன்று செல்வம் மற்றும் வசதி வாய்ப்புடன் நேரடியாகவே மோதி அவற்றை பெற இருக்கிறேன்!
11. என்னுடைய ஒவ்வொரு கணமும் செல்வசெழிப்புதான் .என்னுடைய நாட்கள் எல்லாம் செல்வசெழிப்புதான். என்னுடைய வாழ்கையே செல்வசெழிப்புதான்!
12. நான் இந்த பிரபஞ்ச அபிரிமிதத்தில் மிதக்கிறேன். மேலும் பிரபஞ்சம் எப்போதும் எனக்கு கொடுக்கிறது!
13. இந்த பிரபஞ்சத்தில் செல்வம் கொட்டிக்கிடக்கிறது. இன்று எனது பங்கை நான் கோருவேன்!
14. எனக்கு தேவையான எல்லாமே என்னிடம் உள்ளது. நான் விருப்பப்பட்ட எல்லாமே என்னிடம் உள்ளது. நான் பகிர்ந்தளிக்க தேவைக்கு மேலேயே அதிகமாக உள்ளது!
15. இன்று நான் எனது செல்வத்தை தழுவுகிறேன். பற்றாக்குறை மன நிலையை வெளியேற்றுகிறேன்!
16. என்னுடைய தன்னம்பிக்கை என்னுள் உருளுகிறது . எனது செல்வசெழிப்பு மிதந்து வந்து கொண்டிருக்கிறது!.
17. எனது உலகம் செல்வமயமானது. எல்லாவிதத்திலும் எனக்காக வாய்ப்புகள் உள்ளன!
18. இன்றும் என்றென்றும் என்மேல் செல்வசெழிப்பு பொழிகிறது
19. மூச்சை இழுக்கும் பொழுது “ நான் செல்வசெழிப்பை வரவேற்கிறேன்” ,மூச்சை வெளியேற்றும்போழுது “நான் செல்வசெழிப்பானவன் ஆகிறேன்!”
20. நான் செல்வசெழிப்பை என் வாழ்கையில் கவர்கிறேன். எனக்கு என்னென்ன தேவையோ எப்பொழுதும் என் வழியில் வருகிறது!
yours Happily
பணவளக்கலை - Jc.Dr.Star Anand ram
www.moneyattraction.in
No comments:
Post a Comment