Showing posts with label jc.dr.Star anand ram videos. Show all posts
Showing posts with label jc.dr.Star anand ram videos. Show all posts

Wednesday, September 14, 2016

பழனி மலை பற்றிய சிறப்பு தகவல்கள்

பழனி மலை பற்றிய சிறப்பு தகவல்கள்

* பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இரண்டு பெரு நகரங்களான மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் இருந்து சமதூரத்தில் உள்ளது இக்கோவில்.

*  இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.

* தமிழ்க்கடவுளான முருகனை வழிபட கேரளாவில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். அருகிலேயே பொள்ளாச்சி  அருகே கேரள எல்லை ஆரம்பிப்பதால் கேரளாவில் இருந்து விரதம் இருந்து அதிக அளவு வருகிறார்கள்.

*முதன் முதலில் நேமங்கோவில் குமரப்பன் என்பவர்தான் பழனிக்கு காவடி எடுக்கும் வழிபாட்டை அறிமுகப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் பழனி முருகன் கோவிலுக்கு விரதம் இருந்து காவடி தூக்கி செல்லும் பாதயாத்திரை முறையை ஆரம்பித்து இன்று வரை சிறப்பாக அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்திவருவது காரைக்குடி  நகரத்தார்கள்தான் என்பது மறுக்க முடியாதது.

* இவர்கள் ஆரம்பித்து வைத்த இந்த முறையால் இன்று தென் தமிழகம் முழுவதும் பழனிக்கு காவடி எடுத்து சென்று வணங்கும்  பக்தர்களை அதிகப்படுத்தியது.

* பாரம்பரியமிக்க, தெய்வீகமான இந்த பழநி பாதயாத்திரையை முருக பக்தர்கள் யாரும், சாதாரணமான விசயமாக, விளையாட்டாக எண்ணிவிடாமல் உண்மையான பக்தியோடு, உண்மையான கட்டுப்பாட்டோடு மாலையணிந்து, விரதமிருந்து கந்தனை உள்ளன்போடு நினைத்து பழநிக்கு பாதயாத்திரை வந்தால், எம்பெருமான் முருகன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுடனேயே இருந்து உங்களுக்கு நல்வழி காட்டுவான் என்பது நம்பிக்கை.

* இங்குள்ள முருகனது சிலை 18 சித்தர்களில் ஒருவரான போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில், குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

* முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

* பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திரு ஆவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது.

*  பழனித்தலத்தின் பெருமையினை அருணகிரி நாதர் திருப்புகலிலும், கந்தர் அலங்காரத்திலும் குறிப்பிட்டுள்ளார். பதினாலுலகோர் புகழ் பழனி மாமலை மீதினிலேயுறை பெருமாளே என்று பதினாலுலகும் போற்றும் தலம் பழனி என்கிறார்.

* பழனி மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்று அழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இந்த பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளைக் கொண்ட மண்டபங்களும் காணப்படுகின்றன. அதனால், இந்த மலையை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.

* பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலைச் சார்ந்த 38 - உப கோயில்கள் அமைந்துள்ளது. இக்கோயில்களில் கீழ்கண்ட கோயில்கள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

1. அருள்மிகு திரு ஆவினன் குடி கோயில்
2. அருள்மிகு பெரிய ஆவுடையார் கோயில்
3. அருள்மிகு பெரிய நாயகி அம்மன் கோயில்
4. அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில் - ஒட்டன்சத்திரம்
5. அருள்மிகு குறிஞ்சியாண்டவர் கோயில் - கொடைக்கானல்
6. அருள்மிகு இடும்பன் மலைக் கோயில் - பழனி

* 18 சித்தர்களில் ஒருவரான புலிப்பாணி சித்தரின் ஜீவசமாதி பழனி மலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* திருவண்ணாமலை போன்றே எண்ணற்ற மகான்கள் இந்த பழனியில் வாழ்ந்திருக்கின்றனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர்.

Monday, September 5, 2016

என்ன மந்திரம் ஜெபிக்கலாம் ?

என்ன மந்திரம் ஜெபிக்கலாம் ?



வேதத்தில் காணப்படும் அனைத்து வாசகங்களும் மந்திரம் என்றே அழைக்கப் படுகிறது. அதில் சக்தி வாய்ந்த சில வார்த்தைகள் இணைவு பெற்று காணப்படுவதால் வேதம் உயர்வான மந்திரம் என அழைக்கப்படுகிறது. இதை தவிர்த்து சில சமஸ்கிருத வாசகங்களுக்கு உள்ள சக்தியை கண்டறிந்த நமது முன்னோர்கள் அவற்றை மந்திரமாக உச்சாடனம் செய்து முக்தி அடைந்தார்கள். இது போன்ற சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடையாது. மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. மந்திரத்தின் சக்தியே முக்கியமானது. மந்திரம் பல வகையாக கையாளப்படுகிறது.


பீஜமந்திரம் , தேவதாமந்திரம் , பாராயணம் என இவற்றை எளிமையாக வகைபடுத்தலாம்.பீஜமந்திரம் என்பது ஓர் வார்த்தை கொண்டது. 

முன்பு சொன்னது போல பீஜ மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. "பீஜ" என்றால் விதை எனப்படும். ஓர் சிறு வித்தாக ஒலிக்கும். பீஜ மந்திரம் ஒரு மிகப்பெரிய மரம் போன்று வளர்ந்து ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும். "ரீம்" எனும் பீஜ மந்திரத்தை உச்சரித்த வண்ணம் பறந்து, தேன் சேகரிப்பதால்தான், தேனியின் எச்சில் கூட புனிதமாக கருதப்படுகிறது.

தேவதா மந்திரம் என்பது குறிப்பிட்ட கடவுளை உருவகப்படுத்தும் மந்திரம். இது சில வரி கொண்டதாக இருக்கும். காயத்ரி மந்திரம் மற்றும் மஹா மந்திரங்கள் இதில் அடங்கும்.

பாராயண மந்திரம் என்பது பல வரிகள் கொண்ட நீண்ட சொற்றொடர்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ர நாமம், அஷ்டோ த்ர நாமாவளி, ருத்ரஜெபம் என இதற்கு உதாரணம் கூறலாம். மந்திரத்தை நாமே தேர்ந்தெடுத்து ஜெபம் செய்யலாம் என பலர் கூறுகிறார்கள். ஆனால் சிறந்த குருவின் மூலம் மந்திர தீட்சை பெற்று ஜெபம் செய்வதெ நன்று. இதற்கு பல காரணம் உண்டு.


மந்திரம் உச்சரிக்கும் முறை, அதை உச்சாடனம் செய்யுமிடம், உச்சாடனம் செய்பவரின் தன்மை அறிந்து குரு, தீட்சை அளிப்பதால் மந்திர தீட்சை குருவின் மூலம் பெறுவது சிறந்தது எனக் கூறலாம்.

மந்திரத்தை தவறாக உச்சரிக்க முடியுமா? என உங்களுக்கு சந்தேகம் வரலாம்.

இதற்கு கும்பகர்ணனின் கதையை உதாரணமாக கூறலாம். தனது தவ வலிமையால் பிரம்மனிடம் இறப்பற்ற நிலையை கேட்க கடுமையான தவம் இருந்தான், கும்பகர்ணன். இராவணனின் சகோதரன் இந்த வரத்தைப் பெற்றால் அனைத்து உலகத்திலும் துன்பத்தை விளைவிப்பான் என தேவர்கள் அச்சம் கொண்டனர்

பிரம்மன் கும்பகர்ணன் முன் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ?" என கேட்டவுடன் "நித்ய தேவத்துவம் " என்று கேட்பதற்கு பதிலாக "நித்ர தேவத்துவம்" என தவறுதலாக கூறினான். இது போன்று தவறுதலாக உச்சரித்ததால் இறவா வரம் பெறுவதற்கு பதிலாக தூங்கும் வரத்தைப் பெற்றான். சில சமஸ்கிருத மந்திரங்கள் சரியாக உச்சாடனம் செய்யவில்லை என்றால் பலன் அளிக்காது. குருதீட்சை அளிக்கும் பொழுது இதை சரியாகப் பயன்படுத்த துணைபுரிவார்.


மேலும் ஒருவரின் தன்மையைப் பொறுத்தும் மந்திரம் வேறுபடும். இதற்கு அதிகாரத்துவம் என்பார்கள். குரு ஒருவனுக்கு இந்த மந்திரம் முக்தி அளிக்குமா என பார்த்து, இதற்கு சரியான அதிகாரியா என பார்த்து தீட்சை அளிப்பார்

Thursday, August 25, 2016

யோகா முத்திரைகள்:

யோகா முத்திரைகள்:

முத்திரை யோகம் கதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த ஐம்பூதங்கள் ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியனவாகும். இதில் ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. காற்று உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. தீ பித்தம். வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த ஐம்பூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.
நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன
1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.
முத்திரைகளை பயிலும் முறை
1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.
4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.
முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில
1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.
3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.
4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.
5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.
6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.
8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.
9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
எச்சரிக்கை
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.
11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.
12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.
நமது பழங்கால முனிவர்ககளும் சித்தரகளும் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.

Tuesday, August 23, 2016

உடம்பின்றி உயிரில்லை உயிரின்றி உடம்பில்லை

உடம்பின்றி உயிரில்லை உயிரின்றி உடம்பில்லை

உயிரும் உடம்பும்உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பை அறியாதவர் மடத்திற் புகுந்த நாய் போன்றவர் என்கிறார் திருமூலர்.
உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின்றாரே.  — திருமந்திரம் 2148
உடம்பின்றி உயிர் இயங்காது. உயிர் இன்றி உடம்பு இயங்காது. உடம்புக்கு உயிர் இன்றியமையாதது. உயிருக்கு உடம்பு இன்றியமையாதது. உடம்பும் உயிரும் ஒன்றியிருந்தால்தான் சிறப்பு.
கூட்டைவிட்டு பறவை பறந்துவிடுவது போல உடம்பைவிட்டு உயிர் பிரிந்துவிடகூடாது. உடலை உயிர் மறக்ககூடாது. உயிரை உடல் மறக்ககூடாது. உயிருறும். உடல் உடலுறும் உயிர் ஆகிய இரண்டுமே ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது காக்கப்பட வேண்டும்.
அருட்பிரகாச வள்ளல் பெருமான் இப்படி இறைவனிடம் வேன்டுகிறார்.
உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும்
அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி.
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றி சிவத்திற்கு சேர்வதே சித்தி இதையே திருமூலர்.
உடலும உயிரும் ஒழிவற ஒன்றிற்
படரும் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவிட்டு இந்த உயிர் எங்குமாகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றுவதே உண்மை நட்பு. இந்த நட்பை உணர்ந்து உரிய சாதனங்களால் சுத்த.பிரணவ, ஞான தேகங்களை பெற்று முத்தி.சித்திகளை பெறவேண்டும்.. இஃது உணராது உடம்பு பிணமாக விழ உயிர் முத்தியடையும் என்போர் மூடர். அத்தகைய மூடரை நோக்கியே தாயுமானவர்.
உலக நெறிபோல் சடலம் ஒயஉயிர் முத்தி
இலகுமெனில் பந்த இயல்போ பராபரமே.
உரிய பக்குவமுடையார்க்கு இறைவன் உயிரில் மட்டுமன்றி உடலிலும் புகுந்து கலந்து அருள் புரிகின்றான்.
சுத்த வடிவம் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்தோங்க – சித்தெனும்ஓர்
ஞான வடிவம் இங்கே நான் பெற்றேன் எங்கெங்கும்
தான விளையாட்டியற்றத் தான்.
நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
நானே அருட்சித்தி நாட்டைந்தேன் – நானே
அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு – திருஅருட்பா
சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும் என்பது பழமொழி அதுபோல் உடம்பை வைத்துத்தான் நாம் முத்தி சித்திகளை பெற முடியும்.
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உருபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே. – திருமூலர்
இந்த பாடலில் உடம்பின் அருமையை அழகாக திருமூலர் கூறுகிறார். முத்தியடைவதற்கு இந்த இம்மானிட தேகமே ஏற்றதேகம் வேறு தேக்கத்தால் அதை அடை முடியாது ஆதலால், எவ்விதத்தால் ஆயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும் என வள்ளல் பெருமான் உபதேசித்துள்ளார்.

Tuesday, August 2, 2016

எண்ணங்கள் பொருட்களாக பரிணாமிக்கும்

எண்ணங்கள் பொருட்களாக பரிணாமிக்கும்
ஒரு துறவியும் அவருடைய சீடரும் காட்டு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் .
அந்த நேரத்தில் வெகுதூரத்தில் ஒரு புலி உருமுவதும் அது அவர்களை நோக்கி வருவதும் தெரிந்தது.
உடனே சீடன் " குருவே புலி நம்மை நோக்கி வருவது போல் உள்ளது .
அதனால் நாம் திரும்பி வேறு பாதை வழியாக போய் விடுவோம் " என்றான்
ஆனால் குரு சீடரின் வார்த்தையை கேட்கவில்லை . "புலி நம்மை ஒன்றும் செய்யாது " என்று சீடனிடம் சொல்லிவிட்டு அந்த இடத்திலேயே அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார் .
சீடனையும் தியானம் செய்யுமாறு கூறினார் . குருவின் பேச்சை தட்ட முடியாத சீடனும் அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான்.
வேகு நேரம் ஆனது தியானம் முடிந்து சீடன் கண்களை திறந்து பார்த்தான் .
குருவின் பக்கத்தில் அந்த புலி அமைதியாக அமர்ந்திருந்தது.
சீடன் குரு விழித்ததும் அவரிடம் கேட்டான் எப்படி குருவே கோவமாக உருமிக்கொண்டு வந்த புலி அமைதியானது.
"நாம் நம்மை சுற்றி எவ்விதமான அலையை பறப்புகிறோமோ நம்மிடம் வருபவர்களும் , நம்மை சுற்றி இருப்பவர்களும் அது போலவே மாறிவிடுவார்கள்" என்று கூறினார் அந்த குரு .
எனவே நம்மை சுற்றி நல்ல எண்ணங்களையே எண்ணுவோம் , மனதை அமைதியான நிலையிலேயே வைத்துக் கொள்வோம் .
நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள் .
www.moneyattractio.in 

ஜபமும் அதன் பயன்களும்

ஜபமும் அதன் பயன்களும்

ஜபத்தின் பயன்கள்இறைவனை அனுபவத்தில் உணர்ந்து அவரோடு இனைய ஒரு எளிய வழி ஜபம் செய்வது. மனதிற்குள் ஜபம் செய்வது மானசீக ஜபம், தனக்கு மட்டும் கேட்க்கும்படி ஜபம் செய்வது உபாம்சு ஜபம். பிறருக்கும் கேடக்கும்படி ஜபம் செய்வது உச்சாடனம்.

மந்திரம் ஜபம் ஆத்மார்த்தமாக செய்யபட்டு வந்தால் ஒருவது உடல், உள்ளம், செயல் மூன்றிலும் ஆக்கப்பூர்வ விளைவை உண்டாக்கும். ஜபம் யோகத்தில் ஒரு அங்கமானதால் ஜபயோகம் என்று அழைப்பர். கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம் என்கிறார். ஜபம் இறைவனையும் பக்தனையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது. மனதோடு ஜபித்தால் மனம் தூய்மை அடையும். அது மெல்ல மெல்ல அடங்கி இறைவனிடம் லயிக்கிறது. விரைவில் வீண் எண்ணங்களிலிருந்தும் ஆசைகளிலிருந்தும் விடுபடுகிறது. மனம் சாந்தமாகி அகத்திலும் புறத்திலும் தெய்வ சாந்நித்தியத்தை உணர்கிறது.

தன்னை சுற்றியுள்ள அனைத்திலும் தெய்வீக சக்தி செய்லபடுவதை ஜபம் செயபவர்கள் உணர்கிறார்கள். ஜபத்தை ஆர்வத்துடன் செய்யும் சாதகன் தன் உலகியல் சார்ந்த கடமைகளை அதில் பற்றின்றி அமைதியாக நிறைவேற்றி பல நல்ல காரியங்களை சாதிக்கிறான்

ஜபம் ஒருவனின் பாவங்களையும் கர்ம வினைகளையும் எரித்து சாம்பலாக்கிவிடுகிறது. ஜபத்தின் மகத்துவத்தை தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் அதன் உயர் பலன்களை சாதகனுக்கு கொடுக்காமல் விடாது. பணம் இருப்பவர்கள் தான தர்மங்கள் செய்யட்டும் பணம் இல்லாதவர்கள் ஜப தவத்தின் மூலம் செவைகள் செய்யட்டும் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். தொடர்ந்து ஜபம் செய்யது வந்தால் புற சூழநிலையிலும் மாற்றம் பெரும். ஜபிக்க நேரமில்லை என்று ஜபம் செய்யாமல் புறக்கணிக்க வேண்டாம் நீங்கள் எந்த வேலை செய்தாலும் உங்களின் மூளையின் ஒரு ஒரத்தில் இறைவனின் நாமத்தை ஜபித்துக்கொண்டே இருங்கள். ஜபத்திற்காக ஒரு நேரத்தை ஒதுக்கி செய்யவேண்டும் என்று அவசியம் இல்லை. உதாரணமாக இந்த பட்டினத்தார் பாடலை குறிப்பிடலாம்

எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தே – வித்தகமாய்க்
காதி விளையாடி இரு கை வீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான்!!!

நம் உலகியல் வாழ்கையில் எந்த தொழிலை செய்தாலும் எந்த துன்பங்களை பட்டாலும் மனம் எப்போதும் இறைவனை நினைத்துக் கொண்டே இருக்கவேண்டுமாம். குளத்திலிருந்து நீர் எடுத்து வரும் பெண் அவள் தோழிகளுடன் எப்படி விளையாடிக் கொண்டிருந்தாலும் நீரை வீட்டிற்குள் சேர்க்கும் வரை அவள் நீரை தளும்பாமல் எடுத்து செல்வாள். அதுபோல் ஜபம் செய்ய நேரம் இல்லை என்று விட்டுவிடாமல் இறைவனை ஜபத்திக்கொண்டே உங்கள் உலகியில் வாழ்கை வேலைகளை தொடருங்கள்.

Monday, July 25, 2016

பில் கேட்ஸ் - வாழ்க்கை வரலாறு தெரிந்து கொள்வோம்

பில் கேட்ஸ் - வாழ்க்கை வரலாறு தெரிந்து கொள்வோம்



பில் கேட்ஸ் (William Henry Bill Gates III) என்றால் இன்றைய உலகில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. கடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எவரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலமைக் கணனி மென்பொருளாரும்அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆன பில் கேட்ஸ்” தொடர்ந்து பல வருடங்களாக உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்திலேயே இருந்து வருகிறார். 1999 களிலேயே இவரது சொத்தின் மதிப்பு 100 பில்லியன்கள் ஆகும். இன்று இவரது மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் உலகெங்குமாக 78,000 பேர்கள், 105 நாடுகளில் சேவை புரிகின்றனர்.
படிமம்:Bill Gates in WEF ,2007.jpg
வாழ்க்கை வரலாறு
பில் கேட்ஸ் 1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் நாள் அமெரிக்காசியேட்ல்,வொசிங்டன் (America, Seattle, Washington) எனும் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் 'வில்லியம் கெச் கேட்ஸ்அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர் ஆவார். தாயாரின் பெயர் 'மேரி மேக்ஸ்வெல்வொசிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியை ஆவார். இவர்களின் மகனான பில் கேட்ஸ் சிறு வயதிலேயே கணிதம்,அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கியுள்ளார். பில் கேட்ஸ் தனது பதி்மூன்றாவது வயதில் சியாடில் பகுதியில் சிறந்தப் பாடசாலையான லேக்சைட் பாடசாலைக்கு மாற்றம் பெற்றார். அங்கு கல்வி கற்கும் காலங்களில் இவரது கணனி ஆர்வமும் திறைமையும் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டது. சிறு வயது முதலே மென்பொருள் எழுதுவதில் ஆர்வமுள்ளவரானார்.

13 
வயதான அக்காலத்திலேயே மென்பொருள் எழுதவும் தொடங்கிவிட்டார்.

1973 
ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகம் (Harvard Universityசென்றார். அங்கே இஸ்டீவ் பாள்மர் என்பவர் இவரது நண்பரானார். இஸ்டீவ் பாள்மரின் வீட்டில் இருந்தே படித்தார். இருப்பினும் இவரது ஆர்வம் கணனி மென்பொருள் எழுதுவதிலேயே இருந்தது.

1975 
ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகக் கல்வி முற்று பெற்றப் பின் தனது சிறு வயது நண்பரான பவுல் எலன் (Paul Allen) என்பவருடன் இணைந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். கணனித்துறை பிற்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனும் தீர்க்கத்தரிசனம் இவருக்குள் இருந்ததோ என்னவோஇவரும் இவரது நண்பரும் இணைந்து மென்பொருள்களை மும்முரமாக எழுதினர். இவருடைய இத்தொலை நோக்குச் சிந்தனைத்தான் பிற்காலத்தின் இவருடைய அபார வெற்றிகளுக்கு வழிவகுத்தது எனலாம்.
இன்றை உலகில் சாதாரணக் கணனி பாவனையாளர் முதல் அலுவலகங்கள்,நிறுவனங்கள் வரை மைக்ரோசொப்ட்டின் மென்பொருள் இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. கணனி இயங்குத் தளங்களை (ஒப்பரேடிங் சிஸ்டம்) பொருத்தவரையிலும் 85% சதவீதமானவை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்கு தளங்களாகவே உள்ளன. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் "விண்டோஸ் XP" ஒரு புரட்சியையே ஏற்படுத்திய இயங்கு தளமாகும். மைக்ரோசொப்ட்டின் கடைசியான இயங்குதளமானவிண்டோஸ் விஸ்டா” 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இதனைக் கிட்டத்தட்ட ஆண்டுகள், 600 கோடி டொலர்கள் செலவில், 5000கணனி மென்பொருள் வல்லுநர்கள் உழைப்பில் உருவாகியுள்ளது. இதில் 300இந்திய கணனி மென்பொருள் வல்லுநர்களும் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இன்றையக் கணனி உலக நுட்ப வளர்ச்சிக்கும்அறிவியல் மாற்றத்திற்கும் பில் கேட்ஸ் அவர்களின் தனிமனிதத் திறமையும்மைக்ரோசொப்ட் நிறுவனத்தினதும் பங்கும் அளப்பரியது. பொருளாதாரத் துறையை எடுத்துக்கொண்டாலும் இன்றைய உலகின் "பொருளாதாரத் தந்தை" என்று பில் கேட் அவர்களையே குறிப்பிடலாம் என கூறுவோரும் உளர்.
பில் கேட்ஸ் எழுதிய நூல்கள்
பில் கேட்ஸ் "கொலின்ஸ் எமிங்வே" (Collins Hemingway) என்பவரும் சேர்ந்து எழுதிய “Business @ the speed of Thought” எனும் நூல் 25 மொழிகளில் வெளியாகி பெரும் பறப்பறப்பை ஏற்படுத்தியது. இந்நூல் பல பத்திரிக்கைகளினதும் சஞ்சிகைகளினதும் பாராட்டுக்களை பெற்றது. பில் கேட்ஸின் “The Road Ahead'எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு அதுவும் பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில்தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு தொழிலதிபராக மட்டுமன்றி,எழுத்துலகிலும் தடம் பதித்தவர் பில் கேட்ஸ்.
இந்நூல்கள் மூலம் இவர் பெற்ற இலாபத்தை தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும்இலாப நோக்கற்று இயங்கும் நிறுவனங்களிற்கும் நன்கொடையாகக் கொடுத்தார்.
இவற்றைத் தவிர உலகம் முழுவதும் வாழும் மக்களின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்திக்கான நிறுவனம் ஒன்றைத் திறந்து அதற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு பணியாற்றியும் வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிறுவனத்திற்கு "பில் எண்ட் மெலிண்டா கேட் பவுண்டேசன்எனப் பெயரிட்டுள்ளார். "மெலிண்டா" என்பது இவரது துணைவியாரின் பெயராகும்.

Thursday, July 21, 2016

மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு

மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு
 
arjunbabu87__madurai.jpg
மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.
imagesCAXMKOLS.jpg
மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
மீனாட்சி அம்மன் திருக்கோவில் சுமார் ௮௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
meenakshi_temple-300x225.jpg
இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயககர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக் கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக அமைக்கப்பட்டு உள்ளது.)
meenakshi-temple-06_burning_oil-299x266.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும். 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' ஆலயத்தில் மீனாட்சி , சுந்தரேஸ்வரர் விகிரக வடிவிலும் பூரிக்கப்படுகின்றன.
meenakshi-temple-1922_m.jpg

  • மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை "மரகதவல்லி" எனவும் அழைக்கின்றனர்.
  • மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீட்டர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீட்டர் நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.
  • இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது.
  • ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது.மற்றய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது.
  • மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.
  • 600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும் , மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
  • ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும் , தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
  • பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
  • வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும் கலை நுணுக்கமும் ஒன்றுசேர உள்ள இந்த ஆலயமனது உலக அதிசையங்களின் வரிசையில் போட்டி போட்டது நினைவிருக்கலாம்.
ஒரு நகரம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும், அதன் கட்டமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் வீதி அமைப்புகள் எவ்வாறு உருவாகப்பட வேண்டும் என்பதை மதுரையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கர்ம வீரர் காமராஜர் கூறி உள்ளார். அது மீனாட்சி அம்மன் கோவிலையும் அதைச்சுற்றி உள்ள வீதிகளையும் கருத்தில் கொண்டே

கரிகால் சோழனுக்கு துணையிருந்த பிள்ளையார்!

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று திரும்பி வரும்போது, ஓர் ஊரில் இறைவன் அவருக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்தத் தலம், திருப்பனையூர்.
இந்தச் சம்பவம் பெரிய புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது
"அரவச் சடை மேல் மதி மத்தம்
விரவிப் பொலிகின் றவனுராம்
நிரவிப் பல தொண்டர்கள் நாளும்
பரவிப் பொலியும் பனையூரே'
என்று இத்தலத்தைப் போற்றிப் பாடுகின்றார் திருஞானசம்பந்தர். சுந்தரரும் இத்தலத்திற்கு வந்து ஈசன் மேல் தேவாரம் பாடியுள்ளார். அப்பர் வைப்புத் தலமான வைத்துப் பாடியுள்ளார். ஆயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம்.
ஓர் ஆண் பனை மரமும், ஒரு பெண் பனைமரமும் இந்த ஆலயத்துக்குள் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. ஒரு பனைமரம் வயது முதிர்ந்து சாயும் காலத்தில் அதன் அடக்குருத்திலிருந்து புதிய பனை தோன்ற வளர்ந்து விடுகிறது. வாழையடி வாழைபோல! ஆனால் இங்குள்ள பனைமரமோ பல வருடங்களாக ஒரே உயரத்தில் இருக்கிறது என்கிறார்கள். தல விருட்சமும் அதுவே.
தொண்மையான கிராமம். கோயிலைச் சுற்றி மூன்று தெருக்களில்தான் வீடுகள். ராஜகோபுரத்திற்கு எதிரேயே பெரிய குளம். அமிர்த புஷ்கரணி. இத்தலத்திற்கு வட மொழியில் தாலவனம் எனப் பெயர். தாலம் என்றால் பனைமரம்.
பராசர முனிவர் வந்து வழிபட்ட தலம். அவரே இங்கு பெருமானை பிரதிஷ்டை செய்தார் என்பர். கோயிலின் தெற்குப் பிராகார சுவரில் பெரிய அளவில் பராசர முனிவரின் சிலா ரூபம் உள்ளது.
ஆலயத்துள் தனிச் சன்னதி கொண்டுள்ள பிள்ளையாருக்கு "கரிகால் சோழனுக்குத் துணையிருந்த பிள்ளையார்' என்று பெயர். இதென்ன வினோத பெயர் என்கிறீர்களா? விஷயம் இல்லாமலா?
கரிகாற் சோழன் கர்ப்பத்தில் இருந்த போது, அவனது தந்தை இளஞ்சேட் சென்னி இறந்தார். பகைவர்கள் அவரது குடும்பத்தையும் பூண்டோடு அழிக்க தீவிரமாயினர். இந்நிலையில் கரிகாலனும் பிறந்துவிட்டார். எதிரிகள் கண் படாமல் அவரை வளர்த்து, எதிர்காலத்தில் இழந்த அரசை மீட்டு, மீண்டும் மகுடாதிபதி ஆக்க திட்டமிட்டார், தாய் மாமன் இருப்பிடத் தலையார்.
உலகினரின் பார்வையில் படாமல் எங்கோ தனித்தீவுபோல இருந்த இந்த பனையூருக்குக் கொண்டு வந்துவிட்டார். காட்டுக்குள் ஒரு பிள்ளையார் கோயில் மறைவில் வைத்து வளர்க்கப்பட்டார் கரிகாலன். வளர்ந்தார்; தன் மக்களைப் படை திரட்டினார்; இழந்த நாட்டை மீட்டார். எல்லாம் பிள்ளையார் அருள் என்று öண்ணி நெகிழ்ந்தார். பிள்ளையாரைக் கொண்டு வந்து பெரிய கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்து, தனிச்சன்னதி அமைத்தார். பெயரும் "கரிகாற் சோழனுக்குத் துணையிருந்த பிள்ளையார்' ஆயிற்று.
ஆலத்துள் எழுந்தருளியுள்ள ஈசன் - அழகிய நாதர் (சௌந்தரேஸ்வரர்) அம்பிகை - பெரிய நாயகி (பிரஹன்நாயகி).
கிழக்குப் பார்த்த கோயில். கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைகிறோம். இரண்டு பிராகாரங்கள். முதல் பிராகாரத்தைத் தாண்டியவுடன் உள்ள வாசலில் "மாற்றுரைத்த பிள்ளையார்' அமர்ந்திருக்கிறார்.
சுந்தரர் திருப்புகலூரில் ஈசனிடம் பொன் பெற்றுக் கொண்டு இங்கு வந்தபோது, இந்தப் பிள்ளையார்தான் அந்தப் பொன்னை மாற்று குறையாத பொன் என உரசிப் பார்த்து உறுதி அளித்தாராம்.
பிள்ளையாருக்கு முதல் வணக்கம் செலுத்திவிட்டு உள்ளே நுழைகிறோம். இப்போது இரண்டாவது பிராகாரம். பலிபீடம் தாண்டி, முன் மண்டபம், அர்த்த மண்டபம், மூல ஸ்தானம்.
அழகிய நாதர் பெயருக்கேற்ப பொலிவுடன் விளங்குகிறார்.
மாட மாளிகை கோபுரத்தொடு
மண்டபம் வளரும் வளர்பொழில்
பால் வண்டறையும்
பழனத் திருப்பனையூர்.
என்று சுந்தரரால் போற்றப்பட்ட தலத்தின் நாயகனை பக்தி மேலிட வணங்கி வழிபடுகிறோம்.
இத்தலத்தைச் சுற்றிலும் பாடல் பெற்ற தலங்கள் பல. திருப்புகலூர், திருப்பயிற்றூர், திருவிற்குடி, திருவாஞ்சியம், திருக்கண்டீஸ்வரம், நன்னிலம், அம்பர் மாகாளம் ஆகிய ஏழு தலங்கள் இவ்வூரைச் சுற்றி உளள புகழ்மிக்க தேவாரத் தலங்கள்.
பிராகாரத்தைச் சுறறி தெற்கே பராசரர், தட்சிணாமூர்த்தி, மேற்கே திருமால் (வழக்கமாக லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் இங்கு திருமால் உள்ளார்) வடக்கே துர்க்கை சண்டேசுரர் என உள்ளனர்.
அம்பிகைக்கு முதல் பிராகாரத்துள் சன்னதி தெற்கு பார்த்து அருள்பாலிக்கிறார். பெரிய நாயகிக்குத்தான் என்ன குறைச்சல்? ஈசனின் அழகுக்கு ஈடான அழகம்மை.
மாணிக்கவாசகர் தமது திருவாசகத்திலும் இத்தல்தை பாடியுள்ளார் என்பது விசேஷம்.
"திருப்பனையூரில் விருப்பனாகியும்' என்று பாடுகிறார் சுந்தரர். அதாவது இங்கே விரும்பி குடி கொண்டு இருக்கிறாராம் இறைவன். கடவுளே விரும்பி வந்த அமர்ந்துள்ள இடத்தின் அழகு நம்மை மட்டும் கவராமல் இருக்குமா? ஊரின் இயற்கை அழகைப் பார்த்தால் நமக்கும் கூட இங்கேயே தங்கிவிட மாட்டோமா? என்று ஏக்கம் எழத்தான் செய்கிறது. அந்த ஆசையோடு இறைவனின் அழகான வடிவினையும் மனத்துள் பதித்துக் கொண்ட புறப்படும்போது பலகோடி புண்ணியம் செய்த பரவசம் எழுகிறது.
ஒருமுறை நீஙகளும் சென்று வாருங்கள்... உங்களுக்கே அந்த உன்னதம் புரியும்.

எங்கே இருக்கு: மயிலாடுதுரை - திருவாரூர் பஸ் மார்க்கத்தில் ஆண்டிப்பந்தல் எனும் சிற்றூரில் இறங்க வேண்டும். அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பனையூர் ஆலயத்திற்கு ஆட்டோ மூலம் சென்று திரும்பலாம்.

ஆர்.சி. சம்பத்

திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் சேர்ந்து குறைவற்ற பொருட்செல்வத்தை நீங்கள் பெற வேண்டுமா?

காசு, பணம், துட்டு, மணி, ரூபாய், டாலர், யூரோ எப்படிச் சொன்னாலும் சரி... எல்லோருக்கும் அவசியம் தேவைப்படுவது இதுதான்.
செல்வம் சேர்ந்துவிட்டால் மட்டும் போதாது. அது தேயாமல் பெருக வேண்டும். தொலையாத நிதியம் அதாவது கரையாமல் சேரும் செல்வம் வேண்டும் என்றுதான் அபிராமிபட்டரே அம்மனிடம் வேண்டுகிறார்.
உங்கள் வீட்டில் செல்வம் சேரவேண்டுமா? திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் சேர்ந்து குறைவற்ற பொருட்செல்வத்தை நீங்கள் பெற வேண்டுமா?
இதோ அதற்கான எளிய பூஜை முறை உங்களுக்காகவே தரப்பட்டிருக்கிறது.
ஸ்லோகம் சொல்வது, மந்திரங்களைப் படிப்பது, சுற்றிச் சுற்றி வலம் வருவது, ஏராளமான பூஜைப் பொருட்களை வாங்குவது இப்படி எதுவும் இந்த பூஜைக்கு வேண்டாம். ஆனால் ஒரே ஒரு விஷயம் அவசியம் வேண்டும். அது உண்மையான பக்தியும், நம்பிக்கையுடனான வழிபாடும்தான். இவற்றுக்கு நீங்கள் உத்தரவாதம் தந்தால் போதும். உங்கள் வீட்டில் செல்வமகள் நிரந்த வாசம் செய்வாள் என்பது நிச்சயம்!
பூஜையைத் தொடங்குவதற்கு சில முன்னேற்பாடுகள் அவசியம். முதலாவது, நீங்கள் பூஜை செய்யப்போகும் நாளைத் தேர்ந்தெடுப்பது.
தொடர்ந்து ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் குறிப்பிட்ட தினத்தில் செய்யவேண்டிய பூஜை இது. எனவே ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் அல்லது மாதம் ஒருநாள் பௌர்ணமி தினத்தில் செய்வது சிறப்பு. உங்களுக்கு உகந்த தினத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஆண், பெண் என எவர் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். அதே சமயம் பூஜையைத் தொடர்ந்து ஒருவரே செய்வது நல்லது. இயலாத சமயத்தில் அதே குடும்பத்தின் வேறு உறுப்பினர் செய்யலாம். குடும்பத்திலுள்ள எல்லோரும் கலந்து கொள்வது மிகச் சிறப்பானது.
இரண்டாவதாகி இந்த பூஜையை செய்திட ஒருமுறைக்கு ஒன்பது காசுகள் என, ஒன்பது தடவைக்குமாகச் சேர்த்து என்பத்தொரு நாணயங்கள் அவசியம். ஒரு ரூபாய் முதல் உங்கள் வசதிக்கு ஏற்ற தொகை வரையான காசைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம் எண்பத்தொரு காசுகளும் சம மதிப்பு உடையவையாக இருக்க வேண்டும் என்பதுதான். உதாரணமாக ஒரு ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்த முடிவு செய்தால் எண்பத்தொரு ஒரு ரூபாய் நாணயங்கள் தேவை. இதேபோல் உங்கள் வசதிக்கு ஏற்ப எண்பத்தொரு காசுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான், நீங்கள் குபேர யந்திர பூஜை செய்யத் தயாராகிவிட்டீர்கள்.
வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினம் என நீங்கள் பூஜை செய்யத் தேர்வு செய்த நாளில், அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்றுங்கள்.
அடுத்து, செய்யும் பூஜை தடைபடாமல் நடக்கவும், குறைவிலா செல்வம் குறையற்ற வழியில் சேர்ந்திடவும் மகாகணபதியை மனதாரத் துதியுங்கள்.
அந்த நாளில் நல்ல நேரத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு பலகையின் மீது முன்பக்கம் படத்தில் தரப்பட்டிருப்பது போன்று ஒரு கட்டத்தை வரைந்து, எண்களையும் எழுதுங்கள். இந்தக் கட்டத்தை குங்குமத்தால் வரைவதும், எண்களை அரிமாவால் எழுதுவதும் சிறந்தது. திருமகளைக் குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள "ஸ்ரீ' எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம். இதுவே குபேர யந்திரக் கோலம். அடுத்து, கட்டங்களில் எழுதப்பட்டுள்ளது எழுத்துக்களுக்குப் பக்கத்தில் கட்டத்திற்கு ஒன்று வீதம் ஒன்பது நாணயங்களை வையுங்கள். எழுத்தை அழித்தோ, மறைத்தோ வைக்கக்கூடாது. எனவே யந்திரத்தை வரையும் போதே அதற்கு ஏற்றபடி வரைந்து கொள்ளுங்கள்.
நாணயம் மகாலட்சுமிக்கு அடையாளம் இப்போது குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதிகம்.
இனி, லட்சுமி குபேர் யந்திரத்தை நீங்கள் பூஜிக்க கொஞ்சம் உதிரி பூக்களை யுடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
யந்திரத்தின் முன் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஒன்றினை ஏற்றிவையுங்கள்.
"தாயே மகாலட்சுமி, மனதார உன்னை வணங்கும் எங்கள் மனையில் மங்களங்கள் யாவும் பெருக வேண்டும். மங்காத செல்வம் சேரவேண்டும். என்றென்றும் உன்னரும் நீங்காது இருக்க வேண்டும்!' என்று மனதார வேண்டுங்கள்.
மகாலட்சுமியே போற்றி! மங்கள லட்சுமியே போற்றி! தீபலட்சுமியே போற்றி! திருமகள் தாயே போற்றி! அன்னலட்சுமியே போற்றி! கிருக லட்சுமியே போற்றி! நாரண லட்சுமியே போற்றி! நாயகி லட்சுமியே போற்றி! ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி!
என்று சொன்னவாறே சிறிய பூவை நீங்கள் வரைந்திருக்கும் குபேர யந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் போடுங்கள்.
வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி!
குலம் செழிக்கச் செய்திடுவாய் குபேரனே போற்றி!
செல்வங்கள் தந்திடுவாய் சிவன் தோழா போற்றி!
உளமாரத் துதிக்கின்றோம் உத்தமனே போற்றி போற்றி!
இந்தத் துதியைச் சொல்லி குபேரனைக் கும்பிடுங்கள்.
தூப, தீபம் காட்டுங்கள். சர்க்கரை கலந்த பால் அல்லது பால் பாயசம் நிவேதனம் செய்யுங்கள்.
அவ்வளவுதான். பூஜை செய்தாயிற்று. அன்று மாலை உங்களால் இயன்ற அளவுக்கு மங்களப் பொருள்களை பிறருக்கு வைத்துக் கொடுங்கள். வசதி குறைவாக இருப்பின் இதனை ஒன்பதாவது வார முடிவில் தந்தாலும் போதும்.
பூஜை செய்த அன்று மாலை ஏதாவதொரு பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை தரிசியுங்கள். மறுநாள், குபேர யந்திரத்தில் வைத்து பூஜித்த காசுகளை எடுத்து பத்திரப்படுத்தி வையுங்கள். ஒரு துணியை நனைத்து அதனால் குபேர யந்திரக் கோலத்தைத் துடைத்து விடுங்கள்.
அடுத்த வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாளில் முன்புபோலவே குபேர யந்திரம் வரைந்து வேறு காசுகளை வைத்து பூஜித்து, மாலையில் கோயிலுக்குச் செல்வதுவரை எல்லாவற்றையும் செய்யுங்கள்.
இப்படி ஒன்பது வெள்ளிக்கிழமைகள் அல்லது ஒன்பது பௌர்ணமிகள் பூஜை செய்து முடித்ததும், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று, சேர்ந்திருக்கும் எண்பத்தொரு காசுகளையும் எடுத்துக் கொண்டு சென்று ஏதாவது ஒரு சிவன் கோயில் உண்டியலிலோ அல்லது பெருமாள் கோயிலில் தாயார் சன்னதியில் உள்ள உண்டியலிலோ செலுத்துங்கள். (சிவபெருமானே குபேரனுக்கு எல்லா செல்வஙகளையும் அளித்தவர். அதோடு அவனை நண்பனாகவும் ஏற்றவர். எனவேதான் சிவாலயத்திலும் செலுத்தலாம்!)
அன்றையதினம் உங்களால் இயன்ற அளவு மங்களப் பொருட்களை பெண்களுக் வைத்துக் கொடுங்கள். அன்றைய தினம் மகாலட்சுமியே ஏதாவது ஒரு உருவில் அதனை பெற வருவாள் என்பது நம்பிக்கை. எனவே, குறைவாகக் கொடுத்தாலும் மனதாரக் கொடுங்கள்.
ஒன்பதாவது வார (மாத) பூஜை முடிந்த நாள் முதல் உங்கள் வீட்டில் நிச்சயம் செல்வவளம் சேரும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும். வருடத்துக்கு ஒருமுறை இந்த லட்சுமி குபேர யந்திர பூஜையைச் செய்யுங்கள். குறையாத செல்வதும், நிறைவான நிம்மதியான வாழ்வும் நிச்சயம் கிட்டும்.