Friday, July 22, 2016

வாழும் வாழ்க்கையை ஆனந்தமாக வாழ சில வழிமுறைகள்

💥வாழும் வாழ்க்கையை ஆனந்தமாக வாழ
சில வழிமுறைகள்💥

🔵உறவுகளுக்கு 
உயிர் கொடுங்கள்!

தரமான அன்புக்குரிய 
தூரத்துச் சொந்தக்காரர்களின் 
தொடர்புகளைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
இவை 
ஆனந்தத்தின் உற்சாக ஊற்றுகளை
கண் திறந்துவிடும். 

🔵தினமும் யாருக்காவது ஒரு நல்லது செய்வேன்' என முடிவெடுங்கள்.
அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதிலுள்ள ஆனந்தம் அலாதியானது. 

🔵பொறாமையைத் தூக்கி கடலில் போடுங்கள்.
அடுத்தவர்களின் உயர்வில் நீங்கள் மகிழுங்கள். 
ஆனந்தம், 
உங்களுக்கு நிரந்தரமாகும்.
உச்சாணிக் கொம்புக்கு ஆனந்தம் தேடி வராது.

🔵ஆனந்தம் நதி போல. 
நடப்பவனுக்கே பயன்படும். 
பறப்பவனுக்கு அல்ல! 

🌺எனவே, 
'நானே உயர்ந்தவன்' எனும் எண்ணத்தைக் கைவிடுங்கள்

🌺கடந்த கால சிந்தனைகளிலேயே மூழ்கி விடாதீர்கள். 

🌺நிகழ்காலத்தின் நிஜங்களில் வாழுங்கள்.

🌺எதிர்காலத்தை நம்பிக்கையாக எதிர்கொள்ளுங்கள்.

🔵உங்கள் குடும்பத்தினர், 
நண்பர்கள் என
உங்கள் நலம் விரும்பிகளுடன் அதிக நேரம் செலவிடுவது ஆரோக்கியமானது.

🔵நிராகரிக்கப்பட்ட முதியவர்களைச் சந்திக்க முடிந்தால் மிகவும் நல்லது
அது உங்களுக்கு மனநிறைவையும
அவர்களுக்கு ஆனந்தத்தையும் தரும்.

🔵எனவே.
குறை கூறுவது,
பிறரை நோகடிப்பது, 
மற்றவர்களை எதிரிகளாக்குவத
என தேவையற்ற செயல்களை விட்டுத் தள்ளுங்கள்.

🔵அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்'
என்பதை விட்டுத் தள்ளுங்கள்.

🔵அடுத்தவர்களுக்காக வாழும் வாழ்க்கை
அட்ஜஸ்ட் செய்யப்பட்ட வாழ்க்கை.

🔵உங்களுக்காக நீங்கள் வாழும் வாழ்க்கைதான் ஆனந்தமான வாழ்க்கை.
அடுத்தவர்களோடு உங்களை ஒப்பீடு செய்வதை விட்டு விடுங்கள். 

🔵'நாம்தான் பெஸ்ட்' என்று தன்னம்பிக்கையுடன் இருங்கள்.
தன்னம்பிக்கை தலைக்கனம் ஆகிவிடாமலும் பார்த்துக் கொள்ளுங் கள்.

🔵அடுத்தவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்குள் தேவையின்றி நுழையாதீர்கள். 
உங்களுடைய ஆலோசனையைக் கேட்டாலொழிய..
'உதவுகிறேன் பேர்வழி' என 
அவர்களுடைய உள் விவகாரங்களைக் கிளறாதீர்கள்

🔵பிரச்னைகளையே நினைத்துக் கொண்டிருக்காமல், 
முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துங்கள்.

🔵சில பிரச்னைகள் கழுதை சுமக்கும் பொதியைப் போன்றது!
இறக்கி வைத்து விட்டுவிடுங்கள்.

ஆனந்தமாய் வாழுங்கள்

நன்றி🙏

No comments:

Post a Comment