Wednesday, July 27, 2016

வீரபத்திரர் வரலாறு

வீரபத்திரர் வரலாறு

சிவபெருமானின் மூத்த மகன் வீரபத்திரர்,

உலகில் மிக உயர்ந்த செல்வம் வீரமேயாகும் . வீரத்தால் அடைய முடியாத பொருளில்லை . அதனாலேயே நமது தெய்வங்கள் வீர தெய்வங்களாக சித்தரிக்கப்படுகின்றன . காளி , துர்க்கை , சப்தமாதர்கள் , முதலான தெய்வங்கள் போர் தெய்வங்களாக போற்றப்படுகின்றனர்...
மிகச் சாந்தமாக விளங்கும் மகாலட்சுமி கூட, ''கோலாசுரன்'' என்கிற அசுரனை உக்ரமான போரில் அழித்து '' கோலாசுர பயங்கரி '' என்று பெயர் கொண்டுள்ளாள் !

திருமால் தசாவதாரங்கள் எடுத்து அநேக அசுரர்களை அழித்தார் . சாந்த சொரூபியான  பிரம்மதேவன் கூட போர் கோலம் பூண்டு அசுரர்களை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன .
எல்லையற்ற வீரத்தின் இருப்பிடமாகத் திகழும் சிவபெருமானும்  , உலக நலம் பொருட்டு அனேக அசுரர்களை வென்றடக்கி அருள் புரிந்துள்ளார் . அவை , அவருடைய அளவற்ற ஆற்றலுக்கும் , வீரத்துக்கும் அடையாளமாக உள்ளன . அவை அனைத்தையும் நம்மால் நினைவில் நிறுத்த முடியாது என்பதால் ஆன்றோர்கள் அவற்றில் எட்டை வரிசைப் படுத்தி '' அஷ்ட வீரட்டம்'' என்று போற்றி நாம் வணங்க வகை செய்துள்ளனர் .

அவை :

பிரம்மனின் சிரம் கொய்தது ,(கண்டியூர் எனும் தலத்தில்)

எமனை காலால் உதைத்து அழித்தது. (திருக்கடவூர் எனும் திருத்தலத்தில்)

முப்புரம் எரித்தது ( திருவதிகை எனும் தலத்தில்)

யானையை உரித்து அதன் தோலை போர்வையாகப் போர்த்திக் கொண்டது (வழுவூர் எனும் தலத்தில்)

தட்சனின் யாகத்தை அழித்தது (திருப்பறியலூர் எனும் தலத்தில்)
அதன் தோலை போர்வையாகப் போர்த்திக் கொண்டது (வழுவூர்எனும் தலத்தில் )

தட்சனின் யாகத்தை அழித்தது ( திருப்பறியலூர் எனும் தலத்தில் )

அந்தகனை வதைத்தது ( திருக்கோவலூர் எனும் தலத்தில் )

காமனை அழித்தது ( கொருக்கை எனும் தலத்தில் )

ஜலந்தரனை அழித்தது ( திருவிற்குடி எனும் தலத்தில் )

இப்படி வரிசைப் படுத்தியுள்ளனர் .
இவற்றுள் , இரண்டில் மட்டும் பெருமான் தான் நேரடியாகச் செல்லாமல் தன அருட்பார்வையில் உண்டான உக்கிரகுமாரர்களாகிய வீரபத்திரர் , பைரவர் ஆகியோரை அனுப்பி , முறையே பிரம்மன் , தட்சன் ஆகியோர் தலைகளைக் கொய்து தண்டித்து அருள் புரிந்ததாக புராணம் கூறும் . அதிலும் வீரபத்திரரை அனுப்பி பெற்ற வெற்றி உன்னத வெற்றியாகவும் தனி வரலாறாகவும் போற்றப்படுகிறது . மேற்சொன்ன எட்டு வீரட்டங்களுள் , ஏழில் தேவர்களுக்கு உதவவே பெருமான் போர் புரிந்தார் . ஆனால் , தட்ச ச

No comments:

Post a Comment