Monday, November 2, 2015

தேர்ச்சியையும், வளர்ச்சியையும் தரும் சகல கலா வல்லி மாலை

தேர்ச்சியையும், வளர்ச்சியையும் தரும் சகல கலா வல்லி மாலை 

உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் முன்டாசு கவி பாரதி. உழவுக்கு வந்தனை செய்யும் நாள் தை திருநாள். தொழிலுக்கு வந்தனை செய்யும் திருநாளே ஆயுத பூஜை. 

சொற்ப்போர், மற்போர், விற் போர், ஒப்பனை அலங்காரம் முதலான அணைத்து கலைகளுக்கும் அதிபதி அன்னை கலைவாணியே. 

அகஸ்திய முனி அருளிய சரஸ்வதி த்வாதச நாம ஸ்தோத்ரத்தில். 

அணுரூபே மஹாரூபே விச்வரூபே நமோ நம:
அணிமாத்யஷ்டஸித்தாயை அனந்தாயை நமோ நம:

என்கிறார். அக்காலத்திலேயே அணுத்துகள் இருந்து இருக்கிறது. அனுவிற்கு அணுவாகி என்கிறார் மாணிக்க வாசக பெருமான். ஔவையார், கம்பர் என அக்கால கவிங்கர்கள் பலர். உடல் அணு, அணுத்துகள் பற்றி குறிப்பிட்டு உள்ளார்கள். 

ஜ்ஞானவிஜ்ஞானரூபாயை ஜ்ஞானமூர்த்யை நமோ நம:
நானா சாஸ்த்ர ஸ்வரூபாயை நானாரூபே நமோ நம:

அக்காலத்திலேயே விஞ்ஞானம் இருந்து இருக்கிறது. விஞ்ஞானம் என்கிற சொல்லும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. நமது சித்தர்களையும், ரிஷிகளையும் விட பெரிய விஞ்ஞானிகள் உண்டோ?

எந்த ஒரு கலையில் தேர்ச்சி பெறவும், எந்த ஒரு தொழிலில் வளர்ச்சி பெறவும். அன்னை கலைவாணியின் அருள் அவசியம். அந்த கலைவானியையே கண்ணால் கண்ட ஞானிகளின் வாக்கில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமே. நமது கர்ம வினைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஆகும்.

குமர குருபரர். 17 ம் நுற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய ஞானி. முருகன், தேவி சரஸ்வதி இருவரையும் கண்ணால் கண்டவர். பல அதிசயங்களும், அற்ப்புதங்களும் செய்தவர். அவர் இயற்றிய சகல கலா வல்லி மாலையை சொன்னால். உங்களுக்கு சகலமும் நடக்கும், சர்வமும் கிடைக்கும் என்றெல்லாம் அடியேன் ஓவரா பில்ட் அப் செய்ய விரும்பவில்லை. 

ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒன்றில் தனி தன்மை, திறமை இருக்கும். அதை சிலர் உணர்வதில்லை. சிலர் உணர்ந்தும் அதை வெளிபடுத்த. அதன் மூலம் பணம், புகழ் பெறும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. 

இந்த சகல கலா வல்லி மாலையை நீங்கள் சொல்ல, சொல்ல. உங்களுக்கு இயற்க்கையாக எதில் திறமை உள்ளதோ. அந்த திறமையை நீங்கள் உணர்வீர்கள். உங்களின் திறமைக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும் உங்களுக்குள் உள்ள கலை திறமை நீங்கள் சகல கலா வல்லி மாலையை சொல்ல, சொல்ல அது மேலும் வளரும். உங்களின் உள்ளொளி பெருகி. உங்கள் முகத்தினிலே ஒரு வித தேஜஸ் வரும். உங்களின் விதி கூட. இதனால் சற்று மாறும். மாபெரும் சபைகளில் நீங்கள் நடந்தால் உங்களுக்கு மாலைகள் விழும். கலைவாணியின் அருளோடு. கடுமையான பயிற்ச்சியின் மூலம். உங்களுக்கு வராத சில கலைகளை கூட கற்று அதில் திறமையை வளர்த்து கொள்ளலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சகல கலா வல்லி மாலையை ஓதி. நீங்கள் விஜயம் பெற அதை இங்கே தருகிறேன். 

விஜய தசமி அன்று தான் இதை நீங்கள் பாராயணம் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இன்றிலிருந்தே கூட ஆரம்பிக்கலாம். 

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? ஜகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! 1 

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால் 
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2 

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3 

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4

பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5 

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6 

பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7 

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே. 8 

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9 

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!
urs




No comments:

Post a Comment