உடம்பின்றி உயிரில்லை உயிரின்றி உடம்பில்லை
உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின்றாரே. — திருமந்திரம் 2148
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின்றாரே. — திருமந்திரம் 2148
உடம்பின்றி உயிர் இயங்காது. உயிர் இன்றி உடம்பு இயங்காது. உடம்புக்கு உயிர் இன்றியமையாதது. உயிருக்கு உடம்பு இன்றியமையாதது. உடம்பும் உயிரும் ஒன்றியிருந்தால்தான் சிறப்பு.
கூட்டைவிட்டு பறவை பறந்துவிடுவது போல உடம்பைவிட்டு உயிர் பிரிந்துவிடகூடாது. உடலை உயிர் மறக்ககூடாது. உயிரை உடல் மறக்ககூடாது. உயிருறும். உடல் உடலுறும் உயிர் ஆகிய இரண்டுமே ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது காக்கப்பட வேண்டும்.
அருட்பிரகாச வள்ளல் பெருமான் இப்படி இறைவனிடம் வேன்டுகிறார்.
உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும்
அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி.
அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி.
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றி சிவத்திற்கு சேர்வதே சித்தி இதையே திருமூலர்.
உடலும உயிரும் ஒழிவற ஒன்றிற்
படரும் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவிட்டு இந்த உயிர் எங்குமாகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.
படரும் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவிட்டு இந்த உயிர் எங்குமாகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றுவதே உண்மை நட்பு. இந்த நட்பை உணர்ந்து உரிய சாதனங்களால் சுத்த.பிரணவ, ஞான தேகங்களை பெற்று முத்தி.சித்திகளை பெறவேண்டும்.. இஃது உணராது உடம்பு பிணமாக விழ உயிர் முத்தியடையும் என்போர் மூடர். அத்தகைய மூடரை நோக்கியே தாயுமானவர்.
உலக நெறிபோல் சடலம் ஒயஉயிர் முத்தி
இலகுமெனில் பந்த இயல்போ பராபரமே.
இலகுமெனில் பந்த இயல்போ பராபரமே.
உரிய பக்குவமுடையார்க்கு இறைவன் உயிரில் மட்டுமன்றி உடலிலும் புகுந்து கலந்து அருள் புரிகின்றான்.
சுத்த வடிவம் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்தோங்க – சித்தெனும்ஓர்
ஞான வடிவம் இங்கே நான் பெற்றேன் எங்கெங்கும்
தான விளையாட்டியற்றத் தான்.
நித்த வடிவும் நிறைந்தோங்க – சித்தெனும்ஓர்
ஞான வடிவம் இங்கே நான் பெற்றேன் எங்கெங்கும்
தான விளையாட்டியற்றத் தான்.
நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
நானே அருட்சித்தி நாட்டைந்தேன் – நானே
அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு – திருஅருட்பா
நானே அருட்சித்தி நாட்டைந்தேன் – நானே
அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு – திருஅருட்பா
சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும் என்பது பழமொழி அதுபோல் உடம்பை வைத்துத்தான் நாம் முத்தி சித்திகளை பெற முடியும்.
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உருபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே. – திருமூலர்
உடம்பினுக் குள்ளே உருபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே. – திருமூலர்
இந்த பாடலில் உடம்பின் அருமையை அழகாக திருமூலர் கூறுகிறார். முத்தியடைவதற்கு இந்த இம்மானிட தேகமே ஏற்றதேகம் வேறு தேக்கத்தால் அதை அடை முடியாது ஆதலால், எவ்விதத்தால் ஆயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும் என வள்ளல் பெருமான் உபதேசித்துள்ளார்.
No comments:
Post a Comment