“எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட ,
அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்..”
இந்த தத்துவம் .. கண்ணதாசன் அன்று சொன்னது....அதில் அர்த்தம் உள்ளது..!
# அர்த்தம் உள்ள தத்துவங்கள் பலவற்றைச் சொன்ன கண்ணதாசன் , காமராஜர் மேல் அளவில்லா மரியாதை வைத்திருந்தவர்...கழக ஆட்சிகளின் காலம் முடிந்து ...மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும் என அவரின் ஆழ்மனத்தின் அடித்தளத்தில் ,அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது...
அந்த ஏக்கத்தை , சிவாஜி நடித்த திரைப்படப் பாடல்களில் இலை மறை காயாக எழுதிக் காட்டினார்...
1972 - ல் வெளிவந்த “பட்டிக்காடா பட்டணமா” படத்தின் “அம்பிகையே…. ஈஸ்வரியே..” பாடலில் வெளிப்படையாகவே தன் விருப்பத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார் கண்ணதாசன் ...
“சிவகாமி உமையவளே முத்துமாரி – உன்
செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்துக்கூறி இந்த
மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி..”
# கண்ணதாசன் இப்படிக் கனவு கண்டு கொண்டிருக்க ...
1972 –ல் எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க வைத் தொடங்கி.. ... அசுர வேகத்தில்..
தமிழ் நாட்டின் ஆட்சியையும் கைப் பற்றினார் ..
கண்ணதாசனின் காமராஜர் ஆட்சிக் கனவு கலைந்து , காற்றோடு காற்றாக காணாமல் போனது..
விரக்தியின் உச்சத்துக்குப் போன கண்ணதாசன் , 1974 –ல் வெளியான சிவாஜி நடித்த “என்மகன்” படத்தில் .. “நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்...” என ஆரம்பமாகும் பாடலில் , எம்.ஜி.ஆர். மீதுள்ள வெறுப்பை நெருப்பாக வெளிப்படுத்தினார் இப்படி...
“அழகாகத் தோன்றும் ஒரு
கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும
மரியாதை கண்டேன்
சதிகாரக் கூட்டம் ஒன்று
சபையேறக் கண்டேன்..”
# “வள்ளல்” என்றாலே எம்.ஜி.ஆரைக் குறிப்பிடுவது என சின்னப் பிள்ளைக்குக் கூடத் தெரியும் சினிமா உலகத்தில்...கண்ணதாசன் தைரியமாக எழுதினார் இப்படி...
“கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே
வாழ்கின்றான்..
நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது
சொல்கின்றேன்..”
# கண்ணதாசன் இப்படி எம்.ஜி.ஆரைத் தாக்கிக் கொண்டிருந்த காலத்தில் , முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். கண்ணதாசனுக்கு போன் செய்தார்...
கண்ணதாசனிடம் , எம்.ஜி.ஆர். சொன்னது இவ்வளவுதான்..: "நான் இப்போது சொல்லப் போகும் செய்திக்கு , உங்களிடமிருந்து ஒரு வார்த்தையை மட்டுமே பதிலாக எதிர்பார்க்கிறேன்.."
“என்ன..?” என்று கேட்டார் கண்ணதாசன்...
“ சம்மதம் என்ற வார்த்தை மட்டுமே உங்கள் பதிலாக இருக்க வேண்டும்..” என்ற எம்.ஜி.ஆர். தொடர்ந்து சொன்னார் இப்படி....
“தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞராக கவிஞர் கண்ணதாசனாகிய உங்களை நான் நியமிக்கப்போகிறேன்... சம்மதம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் நீங்கள் சொல்லக் கூடாது..” என்று எம்.ஜி.ஆர். சொல்ல , நடப்பதை நம்ப முடியாமல் திக்கு முக்காடிப் போனார் கண்ணதாசன்....
எம்.ஜி.ஆர். , கண்ணதாசனை, 28-3-1978-ல் 'அரசவைக் கவிஞர்' ஆக நியமித்தார்.
# “எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்..”
# இது கண்ணதாசன் தத்துவம்...
ஆனால் எம்.ஜி.ஆரின் தத்துவம் , எவரும் எதிர்பாராதது.....!
“ எதிரியை அன்பென்னும் பிடிக்குள் அடங்கச் செய்து விட்டால் , ஆயுதத்தை ஏன் அவசியமில்லாமல் பிடுங்க வேண்டும் ..?”
இது எம்.ஜி.ஆர். தத்துவம்...!
# “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே !
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே..”
No comments:
Post a Comment