Wednesday, August 31, 2016

பைரவர் வழிபாடு - கட்டுக்கதைகளும் உண்மைகளும் :

பைரவர் வழிபாடு - கட்டுக்கதைகளும் உண்மைகளும்   :

வழிபாடு என்பது மிகப் பழமையானதும், மிகவும் ரகசியமாகவும் வைக்கப்பட்டதுமான ஒரு அரிய முறை ஆகும். ஆனால் அன்னியர்களின் படையெடுப்பினால் இந்த அரிய முறைகள் பின்பற்றப்படாமல் மறைக்கப்பட்டன. தற்போது பைரவர் வழிபாடு மீண்டும் தழைக்கத் தொடங்கியுள்ளது. இந்த நவீன காலத்தில் இணையத்தில் பைரவ வழிபாட்டிற்கு ஆதரவாகவும், பைரவர் வழிபாட்டிற்கு எதிராகவும் வலைப்பூக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உண்மையை சொல்லப்போனால் பைரவ வழிபாட்டிற்கு எதிராக ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது.

பைரவ வழிபாடு பற்றிய கட்டுக்கதைகளையும், உண்மைகளையும் இப்பதிவில் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள் இவற்றை காண்போம்.

கட்டுக்கதை – 1:

பைரவரை வணங்கினால் வீட்டின் தலைமகனை காவு வாங்கி விடுவார்.

உண்மை:

பைரவர் அசூரர்களை அழிக்க அவதாரம் செய்த சிவனின் வடிவம். அவர் தம்மை வணங்குபவர்களையும் அவரது பரம்பரையையும் காத்து நிற்கும் உன்னதமான சிவ வடிவம். மனிதர்களை அழிக்க அவதாரம் செய்யவில்லை. மனிதர்களை காக்கும் கடவுளே பைரவர் ஆவார்.

கட்டுக்கதை – 2:

பைரவரை வீட்டில் வழிபாடு செய்யக்கூடாது.

உண்மை:

பொதுவாக பைரவ வடிவங்களில் வீட்டில் வைத்து வழிபட தக்கவர் தன் மடியில் சொர்ணதாதேவியை அணைத்தவாறு உள்ள சொர்ணபைரவர் ஆவார். மற்ற பைரவர்களை வழிபாடு செய்யும் இடங்களும், காலங்களும் வெவ்வேறானவை. மற்ற பைரவர்களை ஆலயங்களில் வழிபாடு செய்வதே சிறப்பானது.

கட்டுக்கதை – 3:

பைரவரை சந்நியாசிகள் தான் வழிபாடு செய்ய வேண்டும்.

உண்மை:

எல்லா பைரவர்களையும் எல்லோரும் வழிபாடு செய்யலாம். எல்லா பைரவர்களுக்கும் சக்தியர் உள்ளனர். அவர்கள் யோகினிகள் எனப்படுவர். பைரவர்கள் சிவசக்தி வடிவமாக உள்ளனர். சிவசக்தி வடிவங்களை யார் வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம். பைரவர்களின் வழிபாட்டு முறைகளை குருமுகமாக தெரிந்து கொண்டு வழிபாடு செய்வதே சிறந்தது.

கட்டுக்கதை – 4:

பைரவருக்கு அசைவம் படைக்கலாம்.

உண்மை:

அசைவம் படைப்பது என்பது பெரும் பாவம் ஆகும். ஜீவகாருண்யமே சிவ வடிவங்களின் உண்மையான குணம் ஆகும். மாமிசம் என்பது பேரீச்சம்பழமே ஆகும். பேரீச்சம்பழத்தினை பைரவருக்கு படையலாக வைக்கலாம்.

கட்டுக்கதை – 5:

பைரவருக்கு மது படைக்கலாம்.

உண்மை:

மதுவினை படைத்தலும் பெரும் பாவமே ஆகும். உண்மையில் மது என்பது தேன் ஆகும். தேனை பைரவருக்கு படையலாக வைக்கலாம்.

No comments:

Post a Comment