Thursday, August 18, 2016

தினம் தூக்கத்தில் இந்த உலகம் இல்லை.

தினம்  தூக்கத்தில்  இந்த  உலகம்  இல்லை.  ஏனெனில்  தூக்கத்தில்  மனமோ , உடலோ ,  உலகமோ  இல்லை.   எழுந்தவுடன்  மனம்  விரிகிறது, அதனால் உலகம்    தெரிகிறது. மனமோ , சரீரமோ  இல்லாமல்  உலகத்தை  யாரும்  பார்க்க   முடியாது.

" விஸ்வம்  தர்ப்பண   திருஷ்யமான   நகரி   துல்யம்  நிஜ  அந்தர்கதம்  "   

உள்ளே  இருப்பதே   வெளியே  புலன்கள்  மூலம்   தெரிகிறது ! கனவும்  அதுபோல  தானே !  சுகமான  கனவானால்  யாரேனும்  எழுப்பி  விட்டாலும்  பிடிப்பதில்லை.  

விழிப்பில்  பெரும்  தனவானன  பணக்காரன்  கனவில்  பிச்சை  எடுக்கலாம். ஏழ்மையால்   அலையலாம்.  அவனுக்கு  கனவிலிருந்து  யாரேனும்  எழுப்பி விட்டால்  " அப்பாடா ! "  என்று  சந்தோஷத்தில்  நன்றி  கூறுவான். அதே நேரம்  பரம  தரித்திரன்   தனது  கனவில்  ஓர்  சக்ரவர்த்தியாக  கனவு  காண்கிறான்  எனக் கொள்வோம்.  அவனை  எழுப்பிவிட்டால் ........கோபத்துடன்  அடிக்க  துரத்துவான் ,   ஏனெனில்  எழுந்ததும்   ஒன்றுமற்ற  நிலைமை .......கனவில்  அனுபவித்ததை  எல்லாம்  இழந்த  துயரம். இவனுக்கு  சாம்ராஜ்ஜியம்  நஷ்டமடைவதால்   அவன்  எழுந்திருக்க  விருப்பபட  மாட்டான் !

கனவு  சுகமானால்  எழும்ப  விருப்பமில்லை -  கனவு  துக்கமானால்   ஒரு  ஆஸுவாசம் ....அப்பாடா  என்ற   விழிப்பு  இருக்கும் .

நமக்கு  துக்கம்   நேருவதும்  இதுவே !  அருள்  நம்மை  கருணையுடன்  இந்த  பிரபஞ்சம்  என்ற   கனவில் இருந்து  விழிக்கவே  .............துக்கம்  நேர்வது ......அதன்மூலம்   விசாரம்  பிறக்கவே ! பகவானது  கருணையே  துக்கம்  நேர்வது .......!

அத்வ யம்   ஆத்மானதேவ   குருதேவு  .. பிரபோத  சமையே 

இரண்டு  இல்லாத  ஆத்மா  தான்   இருக்கு  - ஆத்மா ,  முக்தி ,  சாந்தி   எல்லாம்  இதுதான்  - என்பது   தெரியும்.
' இருக்கின்றேன் '  - என்ற  பேருணர்வு  தான்   இருக்கு .  அதிலேதான்  மனம்  இருக்கு ,   அது  பாதி  விரிந்தால்   கனவு , முழுதும்  விரிந்தால்   நனவு ,  மனம்  லயம்  ஆனால்   தூக்கம். இந்த  மூன்று  அவஸ்தைகளும்   அகந்தைக்கு  தான் .

விழிப்பு நிலையில் ,  எனக்கு  தானே  உலகம்  தெரிகிறது . உலகம்  வந்து  என்னிடம்  சொல்லவில்லையே .......' நான்  இருக்கிறேன் '  என்று ........எனவே 
இந்த  ' நான் '     விசாரத்திற்கு   உரியது.

உலகம்  நான்  பார்க்கும்  உலகமாக  இல்லை ..........பின்பு , விசாரம்  செய்  , என்றார்கள் .............தவறான   தோற்றத்திலிருந்து   விலகி  நின்று  பார்  என்றனர்  நம்  ரிஷிகள் ! 

இதுதான்  முதலில்  மாயை , அகங்காரம்,  கனவு  போன்றதே  .........என்று  சொல்வது !  விசாரித்து , உண்மையான   உணர்வுக்கு   போய்விட்டால் .........ஆன்மாவுக்கு  போய்விட்டால் ..........நித்ய , முக்த , சுத்த , புத்த  வஸ்துவுக்கு   போய்விட்டால் ,,,,,பகவத்  சாட்ஷாத் சொரூபத்துக்கு   போய்விட்டால் .....அங்கு  சலனம்   கிடையாது.   அந்த  நிச்சல  நிலையே   சிவம் !

 இந்த   நிச்சல  நிலையிலிருந்து   திரும்பவும்  எழுந்தால் .........எண்ணங்கள்  ஏற்படும்,  சித்த  விருத்திகள்  ஏற்படும்.  மனம்  கிளம்பும்.  திரும்பவும்   உலகம்   தெரியும் !

அந்த  நிச்சல  நிலையிலிருந்தே,,,,,,  ஒரு  ஆற்றல் , சக்தி ,  தோன்றும். .உலகத்தை ........பார்ப்பதும்   அதன்  வழியே!  இந்த  சக்தியே  என்னுள்  மனசாகவும் ,  வெளியே  புலன்களின்  வழியே   பிரபஞ்சமாகவும்   தெரிகிறது.

பிரபஞ்சமாக  தெரிகின்ற  வஸ்துவே .........உள்ளே  மனசாகவும் ,  மனசு  அடங்கும்  போது , உள்ளே   நிச்சல  ,  பிரகாசமான   வஸ்துவாகவும்   பிரகாசிக்கிறது .  இந்த   நிச்சலமான  வஸ்துவை   ஆத்மா ,  புருஷன் .......சிவன்   என்கின்றனர் .  இதில்  சலனம்  ஏற்பட்டு  வெளியில்   தெரிவதை   சக்தி ,  பிரகிருதி ...........லோகம் , உலகம்   என்கின்றனர் . இந்த   இரண்டையும்  ஒன்றாக்கி  பரமேஸ்வரன் ...........நாராயணன் ........என்ன   பேர்  வேண்டுமானாலும்   சொல்லலாம். ரெண்டும்   ஒரே   வஸ்து  தான் !

சமுத்ரத்தில்   அலை  மோதும்  பொழுது  எப்படி   அலையும் , குமிழியும், நுரையும்    ஒரே  பொருளில்  இருந்து  வந்ததோ   அதே  போல ..........

இந்த   நிச்சலமான   ஆத்மாவில்  இருந்து   வந்த  மனசும் , பிரபஞ்சமும்  ஒன்றின்   மூலத்திலிருந்து   வெளிவந்ததே.

No comments:

Post a Comment