Tuesday, August 2, 2016

மதங்களை பற்றி மாணிக்கவாசகர்

மதங்களை பற்றி மாணிக்கவாசகர்

திருவாசகம் பாடல் விளக்கம்விரத மேபர மாகவே தியருஞ்
சரத மாகவே சாத்திரங் காட்டினர்
கரும நியதிகளே பெரு நலனைத் தரும என்று அவ்வழி செல்லுகின்ற வேதியர் தக்க சாஸ்திரப் பிராமணங்கள் காட்டி , ஆத்ம சாதனை ஈசுவர உபாசனையினின்று மாற்ற முயன்றனர்

சமய வாதிக டத்த மதங்களே
வமைவ தாக வரற்றி மலைந்தனர்
பல்வேறு சமயங்களை அனுஷ்டித்து வருபவர்கள் தங்கள் மதங்களை பின்பற்றினாலே இறைவன் அருளை பெறமுடியும் என்று வீண் பெருமை காட்டினர்.

மிண்டிய மாயா வாத மென்னுஞ்
சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து
இவ்வுலகம் வெறும் பொய்த் தோற்றம் என்று மாயா வாதம் செய்பவர்களுடைய விவாதம்பெருங்காற்றுப்போன்று குழப்பத்தை உண்டுபண்ணக்கூடியது. இறைவழிபாட்டில் செல்லுபவன் அதினின்று தப்பிப்பது அவசியம்

No comments:

Post a Comment