Thursday, May 19, 2016

ஹரித்வாரில் அருணகிரியார்.

ஹரித்வாரில் அருணகிரியார்.

சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம்
சிதறியலைந்து போவது செயலாசை
மகர நெருங்க வீழ்வது மகமாய
மருவி நினைந்திடா அருள் புரிவாயே
அகர நெருங்கின் ஆமயம் உறவாகி 
அவசமொடும் கையாறொடும் முனம் ஏகி
ககனம் இசைந்த சூரியர் புக, மாயை
கருணை பொழிந்து மேவிய பெருமாளே.

  இந்த பாடலில் உள்ள சந்தத்தை வைத்தே. இந்த பாடல் யாருக்கு சொந்தம் என்பதை நீங்கள்  கண்டு பிடித்து இருப்பீர்கள்.  ஆம் இது அருணகிரி நாதரின் திருப்புகழ். சந்தம் அருணகிரிக்கு சொந்தம்.  

என்னது? தமிழ் கடவுள் முருகனுக்கு அருணகிரி நாதர் காலத்திலேயே ஹரித்வாரில் கோவிலா என்று நீங்கள் புருவம் உயர்த்துவது புரிகிறது. முருகனுக்கு தனிக்கோவில் ஹரித்வாரில் இல்லை. ஆனால் ஹரித்வார் அமைந்துள்ள உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்திர பிரயாகை அருகேயுள்ள கணக் செளரி என்கிற சிறு கிராமத்தில் கார்த்திகேயன் என்கிற திருநாமத்தோடு கார்த்திக் சாமியாக. முருக பெருமான் அருள் பாலிக்கிறார். இந்த ஸ்தலம் ஹரித்வாரில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரம்` 

ஹரித்வாருக்கு அருணகிரி நாதர் திருப்புகழ் பாடியிருக்கிறார். அந்த பாடல் தான் இது. 

 அருணகிரி பெருமான் வட நாட்டுக்கு என்று அருளிய திருப்புகழ் மொத்தம் 6. ஸ்ரீசைலம்; திருவேங்கடம்; காசி, பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள 'வயிரவி வனம், திருக்கயிலை மலை, மற்றும் மாயாபுரி என்னும் ஹரித்வார். திருவண்ணாமலை முதல் திருக்கைலாயம் வரை. அருணகிரி நாதர் நடந்தே இவ்ளவு ஆலயங்களை தரிசனம் செய்து உள்ளார். 

வட நாட்டுத் தலங்களைப் பாடுகையில். குறிப்பிட்ட 1,2 கோவில்களை பற்றி மட்டும் பாடாது. அப்பகுதி முழுவதையுமே ஆறுமுகனின் திருக்கோயிலென அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். எவ்வாறு சிவனும், சக்தியும் வேறு இல்லையோ. அதேபோல் சிவனும், முருகனும் வேறு, வேறு அல்ல. நமசிவாய ஐந்தெழுத்து சிவம். சரவணபவ ஆறெழுத்து சிவம். 

 சரி மேலே நாம் கண்ட அந்த ஹரித்வார் திருப்புகழின் அர்த்தம் என்ன. 

நமசிவாய என்கிற 5 எழுத்தில். ம' என்பது. ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில் இருந்து  விடுவிக்கும். சி' என்பது மனவடக்கம், சிவஞானம்  இவற்றை தரும். ஆணவம், கன்மம், மாயை என்கிற 3 மலங்களில் இருந்து நாம் விடுபட்டால் தானே நமக்கு மண அடக்கம் வரும். மனம் ஒடுங்கினால்  ஞானமும் வரும்.அத்தகைய பெருநிலையை எனக்கு அருள்வாய். முன்பு சூரனால் துன்புற்ற சூரிய தேவன் உன்னிடத்தில் சரணடைய. சூரியனை காத்து இந்த மாயாபுரிதன்னில் வீற்றிருக்கும் முருக பெருமானே.  என்கிறார் அருணகிரி நாதர். 

 மேலும் என்னை பொறுத்தவரை. இறைவனை தமிழ் கடவுள், மலையாள கடவுள், தெலுங்கு கடவுள், ஹிந்தி கடவுள், அரேபிய கடவுள், ஐரோப்பிய கடவுள் என்று கடவுளை ஒரு குறிப்பிட்ட ஒரு மொழி, தேசம், கண்டம் இவற்றுக்குள் அடைப்பதில் உடன்பாடு இல்லை. அந்த சூரியன் அனைவருக்கும் பொதுவான ஒன்று என்றால். பலகோடி சூரியன்கள் அண்டத்தில் உண்டு. பலகோடி கோள்களையும், வீண் மீன்களையும் படைத்த அந்த இறைவன் அனைவருக்கும் பொதுவானவர் அல்லவா. 

 சரி. ஹரித்வாருக்கு மாயாபுரி என்கிற பெயர் எதனால்? வந்தது. தலைவலி போக்கும் மாத்திரையை நாம் தலைவலி மாத்திரை என்று தான் சொல்வோம். பூச்சியை அழிக்கும் மருந்தை நாம் பூச்சி மருந்து என்று தான் சொல்வோம். கொசுவை  கொல்லும் மருந்தை நாம் கொசு மருந்து என்று தான் சொல்வோம். அதே போல். இந்த ஸ்தலம் மாயையை அழிக்கும். பலநுறு பிறவிகளாக நம்மை தொடரும் மாய பேயை அழிக்கும் ஸ்தலம் இந்த மாயாபுரி. 

  இந்த மாயாபுரிக்கு வரும் மே 15 நமது ஹரிகேசா டிராவல்ஸ் மூலம் வர பலர் விருப்பம் தெரிவித்து உள்ளார்கள். நீங்கள் அடியேனுடன் வருவதாக இருந்தாலும். இல்லை தனியாக செல்வதாக இருந்தாலும். அட்வான்சாக புக் செய்தால் தான். வயதானவர்களுக்கு லோயர் பர்த் கிடைக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். 

For Enquiry, Booking- Mail id- krishnaprasad.hv@gmail.com.


Address- Door Number 22/32, Thillai Ganga Nagar 23rd Street, Nanganallur, Chennai- 600061. Nearest Landmark Devi Karumari Amman Temple. Near to Thillai Ganga Nagar Subway.

   தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

No comments:

Post a Comment