பிறப்பால் வருவது யாது எனக் கேட்டேன்.
பிறந்து பார் என இறைவன் பணித்தான்.
இறப்பில் வருவது யாது எனக் கேட்டேன்.
இறந்து பார் என இறைவன் பணித்தான்.
வாழ்வில் வருவது யாது எனக் கேட்டேன்.
வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான்.
அனுபவித்தோன் வாழ்வது வாழ்வு எனில்
ஆண்டவனே! நீ ஏன்? -எனக் கேட்டேன்.
ஆண்டவன் சற்று அருகினில் வந்து
" அனுபவம் " என்பதே நான்தான் என்றான்.
--கண்ணதாசன்.
No comments:
Post a Comment