Monday, May 30, 2016

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?

பணம் இல்லாத போது, அவன் வீட்டில் உண்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உயர்தர உணவகத்தில் உண்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் வேலைக்கு மிதிவண்டியில் செல்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உடற்பயிற்சிக்காக மிதிவண்டி ஒட்டுகின்றான்.

பணம் இல்லாத போது, அவன் காலாற நடந்து சென்று உண்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உண்டது செரிக்க நடக்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் தருமம் செய்கின்றன்;
பணம் இருக்கும் போது, அவன் நன்கொடை கேட்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் பணக்காரனாக நடந்து கொள்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் ஏழையாக காட்டிக் கொள்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் பங்கு வணிகம் ஒரு மோசடி என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் அது நாட்டின் பொருளாதாரம் என்கின்றான்.

பணம் இல்லாத போது, பணத்தாசை ஒரு பேய் என்கின்றான்;
பணம் இருக்கும் போது, மேலும் பணத்திற்காக பேயாய் அலைகின்றான்.

பணம் இல்லாத போது, உயர் பதவிகள் தனிமையை தருபவை என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அப்பதவிகளை பெற போராடுகின்றான்.

பணம் இல்லாத போது, சூதாட்டமும் குடியும் கொடுமை என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அது உயர் சமூகத்தின் அடையாளம் என்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் நிம்மதியாக இருக்கின்றேன் என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் நிம்மதியை தேடுவதாக கூறுகின்றான்

இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும்.

இந்த யந்திரத்தினை மூன்றங்குல
(3"x3") சதுரமான தங்கத்தால்
ஆன தகட்டில் கீறிக்
கொள்ளவேண்டும்.
இவ்வாறு கீறிய தகட்டினை
தாம்பாளம் ஒன்றில் பட்டுத்
துணி விரித்து அதில் வைத்து
செவ்வாய் அல்லது
வெள்ளிக் கிழமை நாளில்,
கிழக்கு முகமாய் அமர்ந்து பின்
வரும் மந்திரத்தை 1008 தடவைகள்
செபித்திட வேண்டும்.
"ஓம் கிலி சிறி றீங்"
இவ்வாறு செபித்து முடிந்ததும்
, தேவை உள்ளவர்களுக்கு இந்த
யந்திரத்தினை கட்டிவிட வேண்டும்.
அதன் பின் அவர்களைப் பீடித்த
நோய்கள் அனைத்தும் நீங்குவதுடன்.
அவர்களின் எதிரிகள், வஞ்சகர்கள்
நீங்கிவிடுவார்கள். பில்லி, சூனியம்,
ஏவல் போன்றவை எது இருந்தாலும்
அது அவர்களை விட்டு நீங்கிவிடும்.
அத்துடன் வாலை புவனேஷ்வரி
அம்மனின் அருளும் கிட்டும்
என்கிறார் அகத்தியர்.

இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.

இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.
1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.
இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.
1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள். 
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்..

உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..?

உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..?
காரணங்கள் என்ன.....கரை சேர்வது எப்படி..?
‘ஒபிஸிட்டி’ எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள் அலறுகின்றன. 
உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட ஒபிஸிட்டிக்கான காரணங்கள், இதன் விளைவுகள், குறிப்பாக பிசிஓடி (Polycystic Ovary Disease) எனப்படும் நோய் முதல் குழந்தைப்பேறின்மை வரை பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், ஒபிஸிட்டிக்கான தீர்வுகள் என்று நிபுணர்களின் வழிகாட்டலை விரிவாகப் பார்ப்போம்!
பிழையாகிப் போன உணவுப் பழக்கம்!
இந்த விபரீத நோய் பற்றி பேசும் பெண்கள் சிறப்பு மருத்துவர் பிரேமலதா, ”ஒபிஸிட்டி இன்று இந்தளவுக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைதான் (Modified Lifestyle). 
ஒவ்வொரு வேளை, ஒவ்வொரு வகை உணவிலும் பலவித நன்மைகள் அடங்கியபடி வகுத்து வைத்த நம் முன்னோர்களின் உணவுப் பழக்கங்கள், இன்றைக்கு அடியோடு மாறிவிட்டன. 
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் துரித உணவு என்று சொல்லப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளிடம் அடிமையாகிவிட்டனர். 
இதனால் பர்கர், கோலா பானங்கள், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற ஜங்க் ஃபுட் வகைகள், உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து, பலவிதமான நோய்களை இலவசமாகக் கொடுக்கின்றன.
தாண்டவமாடும் தைராய்டு!
வளரிளம் பருவத்தினர் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம், தைராய்டு குறைபாடு. 
இது முழுக்க முழுக்க அயோடின் குறைபாட்டால் வரக்கூடியது. 
இது ஆண்களைவிட, பெண்களை 7 மடங்கு அதிகமாகத் தாக்குகிறது என்கிறது புள்ளி விவரம். 
உடல் சோர்வு, முறையற்ற மாதவிலக்கு, மலச்சிக்கல், மனஅழுத்தம் போன்றவை இதற்கான அறிகுறிகள். 
தவிர, எந்நேரமும் தூக்கம், கொஞ்சம் உணவு அருந்தினாலே உடல் எடை அதிகரிப்பது, சோர்வு, டென்ஷன், எரிச்சல், படபடப்பு போன்ற அறிகுறி இருப்பவர்கள் தைராய்டு சோதனை செய்துகொள்வது நல்லது. 
உலகம் முழுவதும் 200 மில்லியன் பேர் தைராய்டு காரணமாக தற்போது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 
அதனால், ஒருவருக்கு உடல் எடை அதிகரிக்கிறது என்று தெரிந்தவுடனே டெஸ்ட் எடுத்துப் பார்ப்பது அவசியம். 
தைராய்டு பிரச்னை இல்லை என்றால், எடை குறைப்பதற்கான மற்ற முயற்சிகள், சிகிச்சைகளை தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் மேற்கொள்ளலாம். 
தவிர, மரபியல் ரீதியிலான பிரச்னைகளும் உடல் பருமனுக்குக் காரணமாகலாம்.

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் ,

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் ,

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.

முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது. அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.
பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.

கடல் நீர்
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

வெளியேறும் வழி
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.
மொட்டை போடாவிட்டால்?

ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
நேர்த்திக்கடன்

இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.

மூன்று வயதில் ஓர் மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.
ஆன்மீக ரீதிக்கே மரியாதை

நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.

குறிப்பு
இனிமேலாவது ஒரு செயலைப் பின்பற்றும் முன் அதற்கான உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ள முயற்சித்து, அந்த காரணத்தை மற்றவர்களுக்கும் சொல்லி பின்பற்ற வையுங்கள்.

தன்னை மறவா தன்மை

“ஞாபகம் வருதே .. ஞாபகம் வருதே” 

ஏதோ ஒரு சேனலில் , சேரன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார் .

அந்த “ஆட்டோகிராப்” பாடல் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, இயக்குனர் சேரன் எப்போதோ ஒருமுறை , ஏதோ  ஒரு  பத்திரிகை  பேட்டியில் சொன்னது ஞாபகம் வந்தது ..!

# இயக்குனர் ஆனபின் முதன்முதலாக கார் வாங்குகிறார் சேரன் ...புதிய காரில் குடும்பத்தோடு வடபழனி முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்கிறார்...
டிரைவர் காரை ஓட்ட , 
அருகில் சேரன் அமர்ந்திருக்கிறார் !

சென்னை ரோடுகளில் கார் ஓட்ட , 
வித்தைகள் பல தெரிந்திருக்க வேண்டும்..! 
அப்படி கற்றுக்  கொண்ட  வித்தைகள் அத்தனையும் காட்டி , காரை  டிரைவர் வடபழனி சாலைகளில் வளைத்து நெளித்து ஓட்டிக்   கொண்டிருக்கிறார் !
கொஞ்ச நேரத்தில் ,  குறுகலான ஒரு ரோட்டில் திரும்பிய கார்  , 
நெரிசல்களுக்கிடையே புகுந்து தவழ்ந்து செல்கிறது ...!
 
திடீரென  சாலையின் ஓரமாக செல்ல வேண்டிய ஒரு சைக்கிள்காரர், திணறலோடு சைக்கிளை ஓட்டி , தடுமாறி குறுக்கே வந்து விழ  , கடுப்பான டிரைவர் கத்துகிறார் ..

“டேய் கஸ்மாலம் ..பாத்துப் போக மாட்டியா..?” 

அமைதியாக அமர்ந்திருந்த சேரன் , இப்போது டிரைவரை திரும்பிப் பார்த்து சொல்கிறார் .. “வேண்டாம் அண்ணே...சைக்கிள்ல போறவரை திட்டாதீங்க..!”

டிரைவருக்கு ஒன்றும் புரியவில்லை...! 

சைக்கிளில் போனவர் சேரனுக்கு தெரிந்தவராக இருப்பாரோ..?
ஒருவேளை சொந்தக்காரராக இருக்கலாமோ..?

கியரை மாற்றிக் கொண்டே கேட்டு விட்டார் டிரைவர் . 
“ஏன் ஸார் ...! சைக்கிள்ல போனவரை நான்  திட்டினதுக்கு நீங்க  ஏன்  இவ்வளவு  FEEL பண்ணறீங்க..?”

அமைதியாக தன் தாடையை தடவிக் கொண்டே சேரன் சொன்னது இதுதான் : “ஏன்னா கொஞ்ச காலம் முன்னால  இதே ரோட்டில , நானும் இப்படி சைக்கிளில் போய்க்கிட்டிருந்தவன்தான்..!”

# சேரனின் படங்கள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை விட , 
அவரது இந்த “தன்னை மறவா தன்மை” எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்..!

சேரன் சைக்கிளை விட்டு இறங்கி விட... வேறு சேனலை மாற்றினேன் ..!

சன்ஃலைபில் ஒரு பழைய பாடல் ஓடிக் கொண்டிருந்தது..

“தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே”

ஆம் !

# தன்னைத் தான் நேசிப்பது மனித  மனம் !
தன்னைப்  போல பிறரையும் நேசிப்பது 
 தெய்வீக  குணம் ..!.

மந்திரம் - யந்திரம் - தந்திரம் - சர்வவஷ்ய தன ஆகர்ஷன சங்கல்பம் பற்றி வேதாத்திரி மகரிஷி

பணவளக்கலை - MONEY ATTRACTION WORKSHOP

மந்திரம் - யந்திரம் - தந்திரம் - சர்வவஷ்ய தன ஆகர்ஷன சங்கல்பம் பற்றி வேதாத்திரி மகரிஷி

துரிய நிலையில் தவம் இயற்றி, பின் தன ஆகர்ஷன சங்கல்பத்தை அதிகாலையில் 9 அல்லது 108 முறை செய்யலாம்.  பொருளாதாரம் நல்ல முறையில் அமைய வேண்டும்!

உகந்த நாட்கள்: வெள்ளிகிழமை/பௌர்ணமி தினங்கள்.

தேவையான பொருட்கள்: பசு நெய்[அல்லது] விளக்கெண்ணை தீபம். வெள்ளை மலர்கள்[மல்லிகை], பச்சரிசி with மஞ்சள் போடி, 108 நாணயங்கள், பால் பாயசம்.

சர்வவஷ்ய தன ஆகர்ஷன சங்கல்பம் :-

ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் கிலியும் சவ்வும்
சந்த்ரலட்சுமியே நமஹா!
க்ரம் க்ரீம் ச்வர்ணலக்ஷ்மியே நமஹா!
வங் சங் டங் ரிங் வீரலக்ஷ்மியே நமஹா!
ஓம் ஹம் சர்வ பாக்கியலக்ஷ்மியே நமஹா!
நவ்வும் மவ்வும் நடுவேழுத்தாகிய சூர்யலக்ஷ்மியே நமஹா!

தெய்வ வஷ்ய பூத வஷ்ய லோக வஷ்ய ராஜ வஷ்ய
ஜன வஷ்ய புருஷ வஷ்ய ஸ்த்ரி வஷ்ய புத்திர சம்பத் வஷ்ய
நாக லோகத்தில் உண்டாகிய சர்வ ஜீவ பிராணிகளும்
உன் வசமானால் போல் ______(உலக சமுதாய சேவா சங்கம்)
வசமாக வஷ்ய வஷ்ய ஓம் ஸ்வாக!


Sunday, May 29, 2016

பகவானே எல்லாம் உன் சித்தம் என்று சொல்வது ஏன் தெரியுமா?

பகவானே எல்லாம் உன் சித்தம் என்று சொல்வது ஏன் தெரியுமா?
***********

மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதன் என்பவனை,சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்தான் அர்ஜுனன்.

அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன்.

துரியோதனன்,கர்ணன் போன்றோர் அவனுக்கு பாதுகாவலாக இருந்தனர்். அர்ஜுனனால் அவனை நெருங்கவும் முடியவில்லை.அவனிருக்கும் இடமும் தெரிய வில்லை.மாலை நேரமும் நெருங்கியது.

" என்ன கிருஷ்ணா...சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே.!...
ஜயத்ரதனை எப்படிக் கொல்வது,"
என்றான் அர்ஜுனன்.

சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் ,பகவான்.இருள் சூழ ஆரம்பித்தது.இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான்.

்"சூரியன் அஸ்தமித்து விட்டான்.இனி அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்"என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான்.

உடன் அர்ஜுனனைப் பார்த்து,
" அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது
ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து,தலை கீழே விழாமல் ,அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு." எனறார் கிருஷ்ணர்.

ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன்.
தனது கோரமான தவப்பயனால்,ஜயத்ரதனைப் பெற்றார். அவன் பிறக்கும் போது ஒரு அசரீரி ஒலித்தது."உன் புத்திரன் மகாவீரனாக எல்லோராலும் கொண்டாடப் படுவான். மிக்க கோபமும்,பராக்ரமும் உள்ள வீரன் ஒருவனால்,அவன் தலை அறுபட்டு மாள்வான்." என்றது.

இதைக்கேட்ட விருத்தட்சரன்,தன் தவ வலிமையால்
"யுத்தகளத்தில் எவன் தன் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ,அவன் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும்" எனறு சாபமிட்டிருந்தான்.

இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி
" உன்னால் அறுபட்டு இந்தத்தலை கீழே விழுந்தால்,உன் தலை வெடித்து விடும்.அதனால் அருகிலுள்ள அவன் தகப்பனார் விருத்தட்சரன் மடியில் அந்தத் தலையைத் தள்ளு ,"எனறார் கிருஷ்ணன்.

அர்ஜுனனும் அப்படியே செய்தான்.அந்த சமயம் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாசனம் செய்து கொண்டிருந்ததால்,மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.

பிறகு அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் ஏதோ கனமாக இருப்பதைக் கண்டு கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் மகன் தலையைக் கீழே தள்ளுபவனின் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும் என்ற சாபத்தால், விருத்தட்சரனின் தலை வெடித்துச் சிதறியது.

நாம் என்னதான் சூழ்ச்சி செய்தாலும்,சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அதைத் தீர்மானம் செய்வதும், நடத்திவைப்பதும் பகவான் தான். அதனால் எல்லாப் பொறுப்புகளையும்,பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, "பகவானே.! உன் சித்தம்.! எது நல்லதோ,அதைச் செய் என்று சொல்லி,அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை.அவன் செய்வான்....

ஒருவர் திருமணமாகி தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக திரும்புகிறார்.

ஒருவர் திருமணமாகி தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக திரும்புகிறார்.
கடலில் அலைகள் ஆர்பரிக்கின்றன, இடியும் மின்னலுமாய் இருக்கிறது. படகு ஆடுகிறது. அவரின் மனைவி நடுங்குகிறாள். அமைதியாய் புன்னகையோடு படகை செலுத்தும் கணவனை பார்த்து அவள் கேட்கிறாள்
"உங்களுக்கு பயமாக இல்லையா" என்று.
கணவன் ஒன்றுமே சொல்லாமல், தன் உறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து அவள் கழுத்தில் வைக்கிறார்.
அவளோ பயப்படாமல் சிரிக்கிறாள். கணவன் "இந்த கத்தி, பயங்கரமானது, உன்னை வெட்டிவிடும், நீயோ சிரிக்கிறாயே ?" என்று. அதற்கு அவள் சொல்கிறாள்
" கத்தி பயங்கரமானதுதான், ஆனால் அதை வைத்திருப்பவர் என் அன்புக்குரியவர் அதனால் பயமில்லை" என்று.கணவன் புன்முறுவலோடு
"இந்த அலைகளும், இடிகளும், மின்னல்களும், பயங்கரமானவை. ஆனால் அவற்றை தன் வசம் வைத்திருக்கும் இறைவன் , என் அன்புக்குரியவன்,
அதனால் எனக்கு பயமில்லை என்கிறார்.

"எவ்வளவு 'நம்பிக்கை "

நம்பிக்கை தாங்க வாழ்க்கை...👍😊

Very inspiring life success story - Must read

Very inspiring , Good morning 😃

Michael Jordan was an African-American man, born in 1963, in the slums of Brooklyn, New York. 
He had four brothers and his father's wages were not sufficient to provide for the whole family. 
He grew up in a poor neighbourhood which was full of discrimination, to the point where he could not see any hope for the future.


When he was 13 years old, his father gave him a piece of used clothing and asked: "What do you think the value of this outfit would be?"

Jordan replied, "Maybe one dollar."

His father asked, "Can you sell it for two dollars? If you can sell it, it would mean that you are a big help 
to your father and mother. "

Jordan nodded his head, "I'll try, but no guarantee that I'll be successful."

Jordan carefully washed the clothes clean. Because they didn't have an iron, to smoothen out clothes, he levelled it with a clothes brush on a flat board, then kept it in the sun to dry. The next day, he brought the clothes to a crowded underground station. After offering it for more than six hours. Jordan finally managed to sell it for $2. He took the two dollar bill and ran home.

After that, everyday he was looked for used clothing, washed and ironed it and  sold it in the crowd. 
More than ten days later, his father again gave him a piece of used clothing, "Now think of a way that you can sell these clothes for 20 bucks?"

Jordan said, "How is it possible? This outfit can only fetch two dollars at the most. "

His father replied in an effort to inspire him, "Why don't you try it first? There must be a way."

Finally, Jordan got an Idea He asked for cousin's help to paint a picture of Donald Duck and Mickey Mouse on the garment. Then he tried to sell it in the school where the children of the rich study. Soon a housekeeper, who was there to pick his master, bought clothes for his master. The master was a little boy of only 10 years but was very fond of clothes. He loved it so much and he gave a five dollar tip. 25 dollars was a huge amount 
for Jordan, the equivalent of a month's salary of his father.


When he got home, his father gave him yet another piece of used clothing. "Are you able to resell it at a price of 200 dollars?" His eyes lit up.

This time, Jordan accepted the clothes without the slightest doubt. Two months later a popular movie actress from the movie "Charlie's Angels", Farah Fawcett came to New York for her Movie promos. After the press conference, Jordan made his way through the security forces to reach the side of Farah Fawcett and requested her autograph on the piece of clothing. When Fawcett saw this innocent child asking for her autograph, 
she gladly signed it.

Jordan was shouting very excitedly, "This is a jersey signed by Miss Farah Fawcett, the selling price is 200 dollars!"He auctioned off the clothes, to a businessman for a price of 1,200 dollars!


Upon returning home, his father by broke into TEARS and said, "I am amazed that you did it My child! 
You're really great! "

That night, Jordan slept alongside his father. His father said, "Son, in your experience selling these three pieces of clothing, what did you learn about success?"

Jordan replied, "Where there's a will, there's a way."

His father nodded his head, then shook his head, "What you say is not entirely wrong! But that was not my intention. I just wanted to show you that a piece of used clothing which is worth only a dollar can also be increased in value, Then how about us - living & thinking humans? We maybe darker and poorer, but what's the difference? "

This thought enlightened young Jordan. Even a piece of used clothing could be made dignified, then why not me? There is absolutely no reason to underestimate myself.

From then on, Michael Jordan felt that his future would be beautiful and full of hope.

Our potential is so great, and should not be viewed small & low only because of our status, looks or wealth. Even a diamond is just a stone before it has been polished. 
Keep improving yourselves, trying your best and striving ahead!

30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்

30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்
அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
தவசிக்கீரை- இருமலை போக்கும்.
சாணக்கீரை- காயம் ஆற்றும்.
வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.
பயனுள்ள தகவலாக இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்…

Saturday, May 28, 2016

ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில்

ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலைக்கு வந்தார். முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம் சொல்வது அவனது வழக்கம். ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி பதில் கூறியதும் கிடையாது; காவலாளி முகத்தை ஏரெடுத்து பார்ப்பதும் கிடையாது. 

ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பத்தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் என குப்பத்தொட்டியை கிளரும் போது முதலாளி அதனைக் கண்டார். ஆனாலும் வழக்கம் போல எதையுமே கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.

அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி  உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது. காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றான். 

இவ்வாறே தினமும் அதே இடத்தில் ஒரு பையிருக்கும், அந்த பை நிறைய உணவுப்பொருட்கள் இருக்கும். அவனும் அதை தவறாமல் எடுத்து தன் மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தான். இருந்தாலும் எந்த முட்டாள் இப்படி தினமும் பொருட்களை வாங்கி இங்கே விட்டுச் செல்கிறான் என மனதுக்குள் ஒரு நகைப்புடன் கூடிய கேள்வியும் வேறு.

திடிரென ஒரு நாள் முதலாளி இறந்துவிட்டார். வீடு நிறைய முதலாளியின் உறவினர்களும், நண்பர்களும் வந்தனர். அன்று அதே இடத்தில் உணவுப் பையை தேடினான். உணவு இருக்கவில்லை. ஒரு வேளை பார்க்க வந்தவர் யாரேனும் எடுத்திருக்க முடியும் என நினைத்து விட்டுவிட்டான். இரண்டாம் நாள் பார்க்கிறான், அந்த இடத்தில் உணவுப்பை இல்லை; மூன்றாம் நாள், நான்காம் நாள் என பார்க்கிறான். உணவுப்பை இருக்கவில்லை.

இப்படியே சென்றதால் அந்தக் காவலாளிக்கு தன் குடும்பத்துக்கு உணவளிக்க பெரும் சிரமமாய் போயிற்று. உடனே தனது முதலாளியம்மாவிடம் போய் சம்பளத்தை உயர்த்தவும் இல்லையாயின் வேலையை விட்டு விடுவதாகவும் கூறினான். அதற்கு முதலாளியம்மா மறுத்துவிட்டார். 

வேறு வழியில்லாமல் வீதியோரம் எடுக்கும் உணவுப்பை கதையையும், அது இல்லாததால் தன் குடும்பம் படும் அவஸ்த்தையையும் சொன்னான். உடனே முதலாளியம்மா கேட்டார்; எப்போதிலிருந்து உணவுப் பை இல்லாமல் போனதென்று. அதற்கு அவனும் முதலாளி இறந்த நாளன்றிலிந்து என சொன்னதும் முதலாளியம்மா 'ஓ' என அழத்தொடங்கினார். இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள உயர்வு வேண்டாம், நான் இங்கேயே வேலை செய்கிறேன், அழுவதை நிறுத்துங்கள் என கேட்டான். 

அதற்கு முதலாளியம்மா, நான் அதற்கு அழவில்லை. என் கணவர் தினமும் ஏழு பேருக்கு உணவளித்து வந்தார். அதில் ஆறு பேரை ஏற்கனவே இனம் கண்டுவிட்டேன். ஏழாம் நபரைத்தான் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்தேன். ஏழாவது நபர் நீதான் என தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் அழுகிறேன் என்றாள். 

நான் தினமும் தவறாமல் வணக்கம் சொல்லியும் ஏரெடுத்தும் கூட பார்க்காத நம்ம முதலாளியா இப்படி நமக்கு உணவு தந்தார் என நம்பியும் நம்பாமலும் யோசித்தபடியே அவன் சென்றான்.

அடுத்த நாளிலிருந்து முதலாளியின் மகன் தினமும் காவலாளியின் வீடு தேடி வந்து உணவுப்பையை காவலாளியின் கையிலே கொடுத்துச் சென்றான். காவலாளி நன்றி சொல்லியும் முதலாளி மகன் அதற்கு பதில் சொல்லாமலே செல்வான், அவனது தந்தையைப் போல. 

ஒரு நாள் இப்படித்தான் முதலாளியின் மகன் வீடு தேடிவந்து கையில் உணவுப்பையை கொடுக்கும் போது வழமை போல நன்றி சொன்னான் காவலாளி. அதற்கு அங்கிருந்து எந்த பதிலும் இல்லை. பொறுமையை இழந்த காவலாளி மிகவும் உரத்த குரலில் நன்றி சொன்னான். திரும்பிப்பார்த்த அந்த சிறுவன் "எனக்கும் என் தந்தையைப் போல் காது இரண்டும் கேட்காது" என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனான்.

நாமும் இவ்வாறு தான் அடுத்தவரது நிலைமைகள் புரியாது பார்த்த மாத்திரத்திலே அவர்களை தவறாக முடிவெடுத்துவிடுகிறோம். அடுத்தவரது நடவடிகைகளுக்கு பின்னால் ஒளிந்துள்ள உண்மைத்தன்மையை அறியாமல். 

இந்தக் கதையிலிருந்து இரண்டு விடயங்களை எடுத்துக்கொள்ளலாம்;

01. எதையும், யாரையும் பார்த்த மாத்திரத்திலே நம்பி முடிவெடுக்கக் கூடாது.

02. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

#படித்ததில் பிடித்தது....!

மக்களின் அனுபவங்களே பழமொழிகள்.

மக்களின் அனுபவங்களே பழமொழிகள். 
அரிய மருத்துவச் செய்திகள் அடங்கிய பழமொழிகள் சிலவற்றைக் காண்போம்… 

1. ”இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு;
கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு” 

எள், கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும், பருமனான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால், உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.

2. ”ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்“

மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. இத்தகைய மருத்துவகுணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.

3. வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்; ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்”

வேலம்பட்டையை இடித்து ஒரு குவளை நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அரைக் குவளையாக்கித் தினமும் காலை வேளை மட்டும் குடித்துவர பித்த நோய்களான, வயிற்றுப்புண், பித்தமயக்கம், கைகால் குடைச்சல் குணமாகும். ஆலமரத்தின் பட்டையைக் குடிநீராக்கி குடித்து வர வாய்ப்புண், வாய்நாற்றம், சிரங்கு, கரப்பான்படை ஆகியன விலகும் என்கிறது பழமொழி.

4. ”மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்”

மாங்காய் என்பது மாங்காய் ஊறுகாயைக் குறிக்கும், மாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டுகிறது. எனவே உணவில் மாங்காய் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.

5. ”ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் துரோகி”

ஒரு வேளை உணவை உட்கொண்டு ஆழ்ந்த யோகப் பயிற்சி மேற்கொள்வதால், மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போதாலமஸ் என்னும் அமைப்பிற்குக் கீழே உள்ள சுரப்பியானது நரை திரை நோய்களை அணுக விடாது. இருவேளை உணவை உட்கொள்வதால் வாழ்வு நோயற்று இன்பமுடையதாக இருக்கும். மூன்றுவேளை உணவு கொள்பவர்கள் நோயாளிகளாகவே இருப்பர். அஜீரணம், மலச்சிக்கல், குடல்நோய் போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டு, எந்நேரமும் நோயுடன் போராடி வாழும் நிலையை உண்டாக்கும்.

6. ”அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்”

சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கின்றன. உள்ளங்கை, உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது என்பதனை இப்பழமொழி குறிக்கிறது.

7. ”இருப்பவன் இரும்பைத் தின்பான், போறவன் பொன்னைத் தின்பான்“

உடல் இயங்குவதற்கு இரும்புச் சத்து இன்றியமையாதது. இதன் குறைவால் இரத்தச் சோகை என்னும் நோய் ஏற்படுகிறது. எனவே இரும்புச்சத்து அதிகமுள்ள காய் கறி உள்ளிட்ட உணவுப் பொருளை உட்கொள்ளுதல் வேண்டும். போக இச்சையை விரும்புபவர்கள் பொன்னைப் பஸ்பமாக்கி உண்பார்கள். இதனால் நரம்புக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்றவை ஏற்படும்.  இதனைக் குறிக்க, போறவன் பொன்னைத் தின்பான் என்றார்கள்.

8. "ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

இதனைக் கிராமப்புற மக்கள் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றனர். ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுவே இதன் பொருளாகும். நாட்டுப்புற மருந்துகளில் மூலிகைச் செடிகளும் அவற்றின் வேர்கள் மற்றும் பட்டைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின் பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால் மட்டுமே அவன் அரை வைத்தியன் என்ற நிலையைப் பெற இயலும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.

9. ”அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டாளாம்”

அரச மரத்தைச் சுற்றிவந்தால் குழந்தைப் பாக்கியம் ஏற்படும் என்று யாரோ கூறக்கேட்ட ஒருத்தி, கணவனுடன் சேராமல், அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தாளாம். அரசமரமும், வேம்பும் இணைந்த மரத்தினைச் சுற்றிவர காற்றானது கருப்பையில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் பிள்ளையார் சிலையை இந்த மரத்தின் கீழ் வைத்தனர். குழந்தைப் பாக்கியமற்ற பெண்கள் கும்பிடுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.

10. ”ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

ஆலும் என்பது ஆலமரத்தின் விழுதினையும், வேலமரம் என்பது வேப்ப மரத்தின் குச்சியையும், நாலும் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். இது பொதுமக்கள் அனைவராலும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பழமொழியாகும். ஆலமரத்தின் விழுதினையும், கருவேல மரத்தின் மரக்குச்சிகளையும் நன்கு மென்று பல்விளக்க, பல் நன்கு பளபளப்புடனும், பல் ஈறுகள் நல்ல பலத்துடனும் காணப்படும் என்னும் செய்தி இப்பழமொழியில் விளக்கம் பெறுகிறது.

11. ”பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”

மருத்துவக் குணம் கொண்ட மிளகு நம் உணவில் பயன்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாகும். இந்த மிளகு நஞ்சு நீக்கும் தன்மையுடையது. பகைவர்களின் வீட்டில் உண்ணும் உணவில் விஷம் கலந்திருந்தாலும், பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கும் மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர்.

12. ”விருந்தும் மருந்தும் மூன்று நாள்”

சொந்தக்காரர்கள் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றால் மூன்று நாள் மட்டுமே இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் இருப்பின் பகையுண்டாகும். மருத்துவரிடம் மருந்து உட்கொள்ளும்போது, ஒரு மருந்தின் ஆற்றல் மூன்று நாட்களுக்குள்ளாக தெரிந்துவிடும். இல்லையேல் மருந்தை மாற்ற வேண்டும் என்கிறது இப்பழமொழி.

13. ”ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ”

ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர்,   கோப்பித்தூள் இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, உடல் நாற்றம், நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்த பழமொழியாகும்.

இதுபோன்று ஏராளமான பழமொழிகள் மருத்துவக் குறிப்புகளை உணர்த்தும் நோக்கில் சொல்லப்பட்டுள்ளன. உலகில் வேறெந்த இனத்தாரும் இப்படிச் சொன்னதில்லை என்பது தமிழர்களுக்கு பெருமையான விடயம்.

அழகிய நிலாக்காலம் ...😊

Wonderful analysis 👇
ஏற்றமும்... இறக்கமும்... உள்ளது வாழ்க்கை.... என உணர்த்தியது
*பரமபதம்*

எண்ணிக்கையில் கூட்டலையும்... பெருக்கலையும்... விளையாட்டாய் கத்துகொடுத்தது
*கிட்டிபுள்*

வெட்டி வெளியில் எறிந்தாலும்... மீண்டு(ம்) தொடக்கத்திலிருந்து துவங்கி இலக்கையடைய சொல்லிகொடுத்தது
*தாயம்*

அடுக்கியது சரித்து... மீண்டும் அடுக்கி அழித்தலும் ஆக்கமும் நம்முள்ளுண்டு... என உணர்த்தியது
*ஏழுகல்*

வேறு வழியில்லை என்றநிலை வரும்வரை போராடு... என பொட்டில் செதுக்கியது
*சதுரங்கம்*

ஒளிந்தவர்களைக் கண்டுபிடிக்கும் பொறுமையும்... ஒளிந்து தனிமைநேரப் பெருமையையும்.. பெற்றுதந்தது
*ஐஸ்பாய்*

சமமாக இல்லாது ஊனமாக இருந்தாலும் சாதிக்கனும் எனநெறி ஊட்டியது
*நொண்டி*

இருக்குமிடத்தில் எடுத்து... இல்லாவிடத்தில் நிரப்பும் குணம்... மனம் பதித்தது
*பல்லாங்குழி*

நண்பன் உயரம்போக முதுகும்.... தோளும்.... குனிந்து ... பணிந்து நிற்க சொல்லிக் கொடுத்தது
*பச்சைகுதிரை*

அது ஒரு அழகிய நிலாக்காலம் ...😊

JC.Dr.Star Anand ram

Positives in Negatives' or Negatives in Positives : it's our perspective

'Positives in Negatives' or Negatives in Positives : it's our perspective
===============================
A young woman was sitting at her dining table, worried about taxes to be paid, house-work to be done and to top it all, her extended family was coming over for festival lunch the next day.

She was not feeling very thankful at that time.

As she turned her gaze sideways, she noticed her young daughter scribbling furiously into her notebook.

“My teacher asked us to write a paragraph on “Negative Thanks giving” for homework today.”
said the daughter.

“She asked us to write down things that we are thankful for, things that make us feel not so good in the beginning, but turn out to be good after all.”

With curiosity, the mother peeked into the book.

This is what her daughter wrote:

“I’m thankful for Final Exams, because that means school is almost over.

I’m thankful for bad-tasting medicine, because it helps me feel better.

I’m thankful for waking up to alarm clocks, because it means I’m still alive.”

It then dawned on the mother, that she had a lot of things to be thankful for!

She thought again…

She had to pay taxes but that meant she was fortunate to be employed.

She had house-work to do but that meant she had a shelter to live in.

She had to cook for her many family members for lunch but that meant she had a family with whom she could celebrate.

We generally complain about the negative things in life but we fail to look at the positive side of it.

What is the positive in your negatives? Look at the better part of life today and make ur everyday a great day.

Be happy and blessed always.

*👍How to TALK 👍*

*👍How to TALK 👍*

Talk to *Mother* _lovingly_ ,
Talk to *Father* _respectfully ,_
Talk to *Brothers* _heartfully _,
Talk to *Sisters* _affectionately ,_
Talk to *Children* _enthusiastically ,_
Talk to *Relatives* _empathetically ,_
Talk to *Friends* _jovially ,_
Talk to *Officials* _politely ,_
Talk to *Vendors* _strictly ,_
Talk to *Customers* _honestly ,_
Talk to *Workers* _courteously ,_
Talk to *Politicians* _carefully _,
Talk to *GOD* _silently,_

Talk to * WIFE*   ~no no~  ......
*KEEP QUIET & LISTEN ONLY...!!!*

No other OPTION !! 😜😝

Friday, May 27, 2016

அர்ஜூன்னுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.

அர்ஜூன்னுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.

மனிதனின் மனதைப்பற்றி அர்ஜூன்னுக்கும் கண்ணனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.

கண்ணன் சொல்கிறான்:

“அர்ஜூனா, எவன் தன்னையே உதாரணமாக்க்கொண்டு இன்ப-துன்பங்கள் இரண்டையும் சம்மாகப்பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.”

அர்ஜூனா,! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை; காரணம், உள்ளம் சஞ்சல முடையது.

கிருஷ்ணா! மனித மனம் ச்ஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாத்து; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது”.

பகவான் கூறுகிறான்.

“தோ வலி படைத்த காண்டீபா! மனம் அடக்கமுடியாத்து; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்க முடியும்.”

இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக்கூறுகிறார்;

“கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகு சிரம்ம். அதுபோலப்பல திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால், வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்”.

மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவு என்பது பற்றி பரந்தானமன் அர்ஜூன்னுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியான யோகமாகும்.

சகல காரியங்களுக்கும்- இன்பத்திற்கும் துன்பத்திறகும் நன்மைக்கும் தீமைக்கும், இருட்டுக்கும் வெளிச்ச்த்திற்கும், பாவத்திற்கும் புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம்.

மனத்தின் அலைகளே உடம்பைச்செலுத்துகின்றன.

பகுத்தறிவையும் னம் ஆக்ரமித்துக்கொண்டு வழி நடத்துகிறது.

கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான்ந கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.

அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதிக்கிறிது; அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.

எந்த அனுபவங்களையம் கொண்டு வருவது மனம்தான்.

இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்கள் அழித்துவிடுகின்றன.

உடம்பையும் அறிவையும் மனமே ஆக்ரமித்துக்கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.

என்ன இந்த மனது?

காலையில் துடிக்கிறது; மதியத்தில் சிரிக்கிறது; மாலையில் ஏங்குகிறது; இரவில் அழுகிறது.

“இன்பமோ துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்” என்றிருக்க மனம் விடுவதில்லை.

ஓரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.

எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனதின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.

கடிவாளம் இல்லாத இந்த மனக்குதிரையை அடக்குவது எப்படி?”

அதையே சொல்கிறார் பகவான் ராமகிருஷ்ணர்.

அது என்ன வைராக்கியம்? உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது எந்த நிகழ்ச்சி களுக்கும் அசைந்து கொடுக்காமல் இருப்பது.

மெழுகுபோல் இஉரக்கும் மனதை மரக்கட்டை போல் ஆக்கிவிடுகிறது.

ஆசாபாசங்களில் இருந்து மனதை மட்டும் ஒதுக்கி வைத்துவிடுவது; பந்த பாசங்களில் இணங்கிவிடாமல்இருப்பது.

பற்றறுப்பது; சுற்றுச் சூழ்நிலைகள் வெறும் விதியின் விளையாட்டுகளே என்று முடிவு கட்டிவிடுவது.

நடக்கும் எந்த நிகழ்ச்சியும் இறைவனின் நாடகத்தில் ஒரு காட்சியே என்ற முடிவுக்கு வருவது.

ஜன்னத்துக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை, சாட்டை இல்லாப் பம்பரம்போல் ஆட்டி வைக்கப்படும் வாழ்க்கையே என்று கண்டு கொள்வது.

துன்பத்தைத் தரக்கூடிய விஷயங்களை அலட்சியப்படுத்துவது.

இன்பமான விஷயங்களைச்சந்தேகமில்லாமல் ஏற்றுக்கொள்வது.

பிறர தனக்கிழைத்த துன்பங்களை மறந்துவிடுவது, மன்னித்துவிடுவது.

முயற்சிகள் தோல்வியுறும்போது, ‘இதற்கு இறைவன் சம்மதிக்கவில்லை’ என்று ஆறுதல் கொள்வது.

‘கணநேர இன்பங்களை’ அவை கண நேர இன்பங்களே என்று முன் கூட்டியே கண்டு கொள்வது.

‘ஆத்மா என்னும் மாயப்புறா அமரும் மாடங்களெல்லாம் நம்முடைய மாடங்களே, என்ற சம நோக்கத்தோடு பார்வையைச்செலுத்துவது.

காலையில் இருந்து மாலைவரை நடந்த நிகழ்ச்சிகள் ஆண்டவனின் கட்டளையால் செலுத்தப்பட்ட வாகனங்களின் போக்குத்தான் என்று அமைதி கொள்வது.

சொல்வதற்கும் எழுதுவதற்கும் சுலபமாக இருக்கிறது. ஆனால எப்படி இது முடியும்?

பகவத் தியானத்தால் முடியும்.

அதிகாலையில் ஓர் அரைமணி நேரம், இரவிலே ஓர் அரைமணி நேரம், கோவிலிலோ வீட்டுப் பூஜை அறையிலோ தனிமையில் அமர்ந்து, வேறு எதையும் நினைக்காமல் இறைவனையே நினைப்பது.

இனைவனை நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மனம் வேறு திசையில் ஓடினால் அதை இழுத்துப் பிடிப்பது.

பாசத்திலே மூழ்கிக் கிடந்த பட்டினத்தார் ‘ஞானி’ யானது இப்படித்தான்.

தேவதாசிகளின் உறுப்புகளிலேயே கவனம் செலுத்திய அருணகிரிநாதர், ஆண்வனின் திருப்புகழைப் பாடியதும், இப்படித்தான்.

இயற்கையாகவே கல்வியாற்றல் பெற்றிருக்கும் ஒரு கவிஞன், ஒரு பொருளைப்பற்றிக் கவிதையில் சிந்திக்கும்போது, அவன் மனம் கவிதையிலேயே செல்கிறது.

அதில் லயிக்கிறது, ரசிக்கிறது, சுவைக்கிறது.

அப்போது ஓர் இடையூறு, குறுக்கீடு வந்தாலும் அவனுக்கு ஆத்திரம் வருகிறது.

கண்கள் திறந்திருக்கின்றன. மனம் கவிதையில் ஆழ்ந்து கிடக்கிறது; அப்போது திறந்த கண்ணின் எதிரில் நிற்கும் மனைவிகூட அன் கண்ணில் படுவதில்லை.

மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையைநோக்கி வில்லெடுக்கும் வேடனின் கண்களல் பறவை மட்டும்தெரியுமே தவிர, மரத்திலுள்ள இலைகள், காய்கள், கனிகள் தெரிவதில்லை.

கவிஞனுக்கும் வேடனுக்கும் சாத்தியமான மனதின் ஒருமுக நிலையை மற்றவர்களும்பெற முடியும்.

அதாவதுர ஒன்றையே, நினைத்தல்.

அந்தலயம் கிட்டிவிட்டால் புலனகளும், பொறிகளும், செயலற்றுப் போகின்றன.

வாயின், சுவை உணவு, நாசியின் மண உணர்வு, கண்களின் காட்சி உணர்வு, செவியின் ஒலி உணர்வு, பிற அங்கங்களில் ஸ்பரிச உணர்வு அனைத்தையும் அடித்துப் போட்டுவிட்டு , புலியைக்கொன்ற வேடன்போல் மனது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அதுதான் சரியான லயம்.

சங்கீத வித்வான் சரித்திர ஆராய்ச்சி செய்வதில்லை; ஸ்வரங்களையும் ராகங்களையுமே ஆராய்ச்சி செய்கிறான்.

ஒரே இடத்தில் ஒரே நிலையில் மனத்தைச் செலுத்தினால் சலனமில்லாத ஒரே உணர்ச்சி தோன்றுகிறது.

ஒரு கதை உண்டு!

ஒரு தாய் தனது ஒரு மாதக் கைக்குழந்தையோடு அரையிலே பாய் விரித்துப் படுத்திருந்தாள். அப்போது அவளுக்குக் கொஞ்ச தூரத்தில் பாம்பு வந்து நின்றது.
பாம்பைக் கண்ட உறவினர்கள் பதறினார்கள்; துடித்தார்கள்.

அந்தப் பாம்பு குழந்தையையும் தாயையும் கடித்துவிடப்போகிறதே என்று பார்த்தார்கள்.

தாயின் பெயரைச் சொல்லி சத்தமிட்டார்கள்.

தாய் எழவில்லை.

ஓங்கித் தடியால் அடித்தார்கள்; அப்போதும் அவள் எழவில்லை.
பக்கத்தில் படுத்திருந்த குழந்தையின் மீது ஒரு மல்லிகைப் பூவை எடுத்துப்போட்டார்கள். தாய் உடனே விழித்துக்கொண்டு, அந்தப் பூவை எடுத்து அப்புறம் போட்டாள்.

தன்னை உதைத்தபோதுகூடச் சொரணை யில்லாது உறங்கிய தாய், குழந்தையின் மீது பூ விழுந்ததும் விழித்துக்கொண்டது எப்படி?

அந்த உள்ளம் குழந்தையிடமே லயித்துக்கிடந்ததால்தான்ழ.

ஈஸ்வர பக்தியில் உடல் உருக, உள்ளம் உருக லயித்துக் கிடந்த அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் மனதை ஒருமுகப்படுத்தியவர்களே.ழ

இந்த மனத்தின் கோலங்களாலாலேயே நான் பலமுறை தடுமாறி இருக்கிறேன்.

ஆசைக்கும் அச்சத்துக்கும் நடுவே போராடி இருக்கிறேன்.

ஜன்னம் தகப்பனின் படைப்பு; மரணம் ஆண்டவனில் அழைப்பு; இடைப்பட்ட வாழ்க்கை அரிதாரம் பூசாத நடிப்பு என்பதை, நாளாக நாளாக உணர்ந்து வருகிறேன்.

இன்னமும் முழுப்பக்குவம் கிட்டவில்லை.

திடீர் தடீரென்று மனதில் ஒன்றிருக்க ஒன்று பாய்கிறது.

ஒன்றை எடுத்தெறிந்தால், இன்னொன்று ஓடி வருகிறது.

ஒரேயடியாக மிதித்துக் கொன்றால்தான் நிம்மதி கிடைக்கும் என்பது தெரிகிறது.

என் கால்கள் இன்னும் அந்த வலுவைப்பெறவில்லை.

பெற முயல்கிறேன்;பெறுவேன்.
பிறந்தோருக்காகசஞ்சிரிக்காமலும், இறந்தோருக்காக அழாமலும் பரந்தாமன் கூறியதுபோல சமநோக்கத்தோடு நின்று, மன அமைதி கொள்ள முயல்கிறேன்.

அதை நான் அடைந்தவிட்டால், கடவுள் கண்களிலே கண்ணீர் வைத்ததற்கான காரணமும் அஇபட்டுப்போகும்.

இவ்வளவையும் நான் சொல்லுவது லௌகிக வாழ்க்கையிலும் நம்மை அமைதிப்படுத்துவதே இந்து மதத்தின்நோக்கம் என்பதை விளக்கத்தான்.

லௌகிக வாழ்க்கையை செப்பனிடும் இந்து மதக்கருவிகளில் பகவத்கீதையும் ஒன்று என்பதுதான் என் துணிவு

Thursday, May 26, 2016

புருவமத்தி என்றால் என்ன ?? நெற்றி கண் எங்கே உள்ளது ??

புருவமத்தி என்றால் என்ன ??
நெற்றி கண் எங்கே உள்ளது  ??
கண்ணை திறந்து தியானம் செய்யலாமா அல்லது கண்களை மூடி தியானம் செய்யலாமா ???

பகுதி-1

அருட்பெருஞ்ஜோதி வணக்கம்
ஆன்மநேய சகோதர சகோதாிகள் அனைவருக்கும் வந்தனம்

கண் என்றால் என்ன என்பதை முதலில் சிந்திப்போம்.நமக்கு மொத்தம் 5புலன்கள்
ஓவ்வொரு புலன்களும் ஸ்பாிசம்,
ருசித்தல்,நுகா்தல்,பாா்த்தல் மற்றும் கேட்டல் போன்ற தொழில்களை செய்கின்றன.இவைகளில் கண் இந்த  புற உலகத்தையும் புற காரியங்களையும் நமக்கு காட்டுகின்றது.ஒன்றை நமக்கு காட்டுவதை கண் எண்கின்றோம்.இதை படித்து கொண்டிருக்கும் தாங்கள் சற்று நேரம் புற கண்களை மூடி மனதில் ஏதாவது ஒன்றை கற்பனை செய்யவும்.
இப்பொழது கண்கள் மூடி இருந்தாலும் தாங்கள் கற்பனை செய்ததை பாா்க்க முடிகிறது.இதை நாம் மனக்கண் என்போம்.இவ்வாறு நமக்கு ஊனக்கண்,
மனக்கண்,அறிவுக்கண்,ஆத்மக்கண் மற்றும் அருட்கண் என்று நமக்கு கண்கள் உள்ளது.இவற்றில் எந்த கண்களை மூடி எந்த கண்களை திறந்து தியானம் செய்வது ????? பகுதி-2  ல் தொடா்வோம்
                                                              -சாது

Money Attraction workshop in tamil

கடவுளுடன் ஒரு பேட்டி :

கடவுளுடன் ஒரு பேட்டி : 

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது எனக்கு...

“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”
“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்”

கடவுள் சிரித்தார்.

“என் நேரம் முடிவற்றது எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”

“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”

கடவுள் சொன்னார்…
“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்…
ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.
பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்!

எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்…நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!

சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”
கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.

“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?” -மீண்டும் கேட்டேன்.

கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…
“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள். வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்பள்ள … அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு.

ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது... 

எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே…
உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன் தான் பணக்காரன்!

நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்.
நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பது தான் நிஜம்…

பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு, சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது. இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்....

ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.
எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!

அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…

நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம். ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”

-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள், அவரது கதவுகள் மூடின.
தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன் விழித்தெழந்தேன் நான்!
இனிய காலை வணக்கம்.
ஷா நவாஸ்😃😃😃

Wednesday, May 25, 2016

Everything in your life will never be perfect. Do not waste too much time correcting what is wrong.

Good Message: 
                        Anonymous 

I still remember the day I was preparing fresh lime water for the first time...I ended up adding almost five times the amount of lemon than needed. It was a disaster.I had to correct it anyhow. How I wish I could remove some lemon juice from water to make it taste perfect again! But alas! Some things can never be undone. Some things can never be changed. There was no way that I know of, to remove the extra lime. So what was the solution then? The only way to correct this was to add four more glasses of water and dilute the lemon juice to make five glasses of fresh lime water.
This made me think.. Sometimes we cannot undo some things that have gone wrong in life. Some wrong decisions, wrong choices, wrong investments, wrong actions, wrong associations, wrong words or wrong doings can never be undone. So what is the solution then? When you cannot correct what is wrong, do not waste more time over it. It is like attempting to remove lemon from water. Instead, get busy in adding so many right things in your life that the wrong seems insignificant.
We all have a negative side to ourselves. We may not be able to remove or correct all our negativities. But we can definitely continue adding positive thoughts, positive reading and positive people in our lives and dilute the negativity. We all have to deal with some easy people and some difficult people in our lives. Do not waste time trying to change the difficult people. You will drain all your emotional energy in vain. Instead spend more time with the pleasant positive happy people and the difficult people will not affect you any more.
Everything in your life will never be perfect. Do not waste too much time correcting what is wrong. Get busy doing the right things!😊

Sunday, May 22, 2016

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்...

ஆப்பிள் நிறுவனத்தின்
ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்...

நான் வணிக உலகில்
வெற்றியின் உச்சத்தை
அடைந்திருக்கிறேன். 

பிறரின்
பார்வையில் என் வாழ்க்கை
வெற்றிகரமானது.

எப்படியிருந்தாலும் என்
பணிச்சுமைகள் எல்லாம்
தாண்டி நானும் வாழ்க்கையில்
சிறிது சந்தோசங்களை
அனுபவித்திருக்கிறேன்.

பணமும் வசதிகளும் மட்டுமே
வாழ்க்கையில்லை என்பதை
இறுதியில் தான் அறிந்து
கொண்டேன்.

இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து
கொண்டு என் முழு
வாழ்க்கையையும் திரும்பி
பார்க்கும் இந்த தருணத்தில்
வாழ்க்கையில் எனக்கு கிடைத்த
அங்கீகாரங்கள், பணம் , புகழ்
எல்லாம் செல்லா காசாக ,
அர்தமற்றதாக மரணத்தின் முன்
தோற்று போய் நிற்பதை
உணர்கிறேன்.

இந்த இருளில் என் உயிரை தக்க
வைக்க போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ
இயந்திரங்களின் மெல்லிய
சத்தங்கள் மட்டுமே காதுகளில்
ரீங்கரிக்கிறது. 

கடவுளின்
மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில்
உணர்கிறேன்.

வாழ்க்கையில் நாம் வாழ்வதற்கு
போதுமான பணம் சம்பாரித்த
பின், பணத்திற்கு
சம்மந்தமில்லாத
விஷயங்களையும் சம்பாரிக்க
தொடங்க வேண்டும் என்பது
இப்போது புரிகிறது. 

அது 
உறவாகவோ, இல்லை எதாவது
கலை வடிவமாகமாவோ , நம் இளமையின் கனவாகவோ
இருக்கலாம். அது தான் வாழ்வில் மிக முக்கியமானது.

அதைவிட்டு பணத்தை மட்டுமே
நோக்கமாக கொண்டு ஓடும்
மனிதனின் வாழ்க்கை
முற்றிலும் வேறு திசையில்
திரும்பிவிடுகிறது என்
வாழ்க்கையை போல.

கடவுள் நம் புலன்களின் மூலம்
அனைவரின் மனதில் இருக்கும்
அன்பை உணரசெய்யும் சக்தியை
கொடுத்திருக்கிறார், பணத்தால்
நாம் உண்டாக்கியிருக்கும் எல்லா சந்தோசங்களும் வெறும்
பிரமைகள் தான்.

நான் சம்பாரித்த பணம் எதையும்
இங்கு கொண்டுவர முடியாது.

நான் மகிழ்ந்திருந்த என்
நினைவுகள் மட்டுமே
இப்போது என்னுடன்
இருக்கிறது.

அன்பும் காதலும் பல மைல்கள்
உங்களுடன் பயணிக்கும்.

வாழ்க்கைக்கு எந்த
எல்லைகளுமில்லை. எங்கு
செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்கு செல்லுங்கள். 

தொட
நினைக்கும் உயரத்தை தொட
முயற்சியுங்கள். 

நீங்கள்
வெற்றியடைவது உங்கள்
எண்ணத்திலும் கைகளிலும்
தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து நீங்கள்
என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், 

ஆனால் அந்த
பணத்தின் மூலம் உங்கள்
வலியை, உங்கள் துயரை யாரும்
வாங்கிகொள்ளுமாறு செய்ய
முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும்
பொருட்கள்
தொலைந்துவிட்டால் மீண்டும்
வாங்கிவிடலாம். 

ஆனால் நீங்கள்
தொலைத்து அதை பணத்தால்
வாங்க முடியாது என்ற ஒன்று
உண்டென்றால் அது உங்கள்
வாழ்க்கை தான்.

வாழ்க்கையில் எந்த கட்டத்தில்
நீங்கள் இருந்தாலும்
பரவாயில்லை , இப்போது
வாழ்க்கையை வாழ
ஆரம்பியுங்கள். 

நாம் நடித்து
கொண்டிருக்கும் வாழ்க்கை
எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு,
அன்பை வாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் சந்தோசமாக
வைத்து கொள்ளுங்கள்.

அனைவரையும் மனமார
நேசியுங்கள்.
மரணப்படுக்கையில் ஸ்டீவ்..🔵🔵

கடவுள் இயல்

கடவுள் இயல்
1.உலகத்திற்கு முதலாக இருப்பவர் யார்?
இறைவன்.
2.இறைவனை எப்பெயர் கொண்டு சிறப்பாக அழைக்கின்றோம்?
சிவபெருமான்.
3.சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்?
சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவ
ருமான இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.
4.சிவபெருமான் எப்படிப் பட்டவர்?
என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; யார்க்கும் ஆட்படாதவர்.
5.சிவபெருமானை நாம் ஏன் தொழ வேண்டும்?
சிவபெருமானைத் தொழுவதால் சிவபெருமானுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அழிவில்லாதவரும் இன்ப மயமானவருமான சிவபெருமான் தம்மைத் தொழுபவர்களுக்கு அந்த அழிவில்லாத இன்பத்தை அடைய அருள் புரிவார். உலகியலில் தோன்றும் இன்பங்கள் நிலையானவைகள் அல்ல. ஆனால் சிவபெருமான் அருளும் இன்பத்தைப் பெற்றவர்கள் என்றென்றும் இன்பத்தைப் பெற்று மகிழ்ந்திருப்பர். அதனால் இந்த உடல் எடுத்ததின் பயன் சிவ வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே.
6.சிவபெருமானின் குணங்கள் யாவை?
சிவபெருமானின் குண விஷேசங்கள் எட்டுக்குணமென்று போற்றப்படும். அவை
முழுதும் தன்வயத்தனாதல் (பிறருக்கு ஆட்படாதவர்)
இயற்கை அறிவினனாதல் (உள்ளதை உள்ளவாறே அறிதல்)
முற்றறிவு உடைமை (எல்லாவற்றையும் அறியும் திறம்)
தூய உடம்பினன்
இயல்பாகவே மலமற்றவன்
வரம்பில்லாத ஆற்றல் உடையவன்
வரம்பில்லாத அருள் உடையவன்
வரம்பில்லாத இன்பம் உடையவன்
7.சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை?
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்துமாம்.
படைத்தலாவது யாது?
ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.
காத்தலாவது யாது?
தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன போகங்களை நிறுத்தல்.
அழித்தலாவது யாது?
தனு கரண புவன போகங்களை முதற்காரணத்தில் ஒடுக்குதல்.
மறைத்தலாவது யாது?
ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்தல்.
அருளலாவது யாது?
ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவதத்துவத்தை விளக்குதல்.
8.தனு கரண புவன போகம் என்றது என்ன?
தனு - உடம்பு, கரணம் - மன முதலிய கருவி, புவனம் - உடம்புக்கு ஆதாரமாகிய உலகம், போகம் - அனுபவிக்கப்படும் பொருள்.
9.சிவபெருமான் இந்த ஐந்து தொழில்களையும் எதைக்கொண்டு செய்கிறார்?
தமது சத்தியைக் கொண்டு செய்கிறார்.
>சத்தி என்னும் சொல்லுக்குப் பொருள் யாது?
வல்லமை
>சிவபெருமானின் சத்தி யாவர்?
உமாதேவியார்
>சிவபெருமான் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு உமையோடு எழுந்தருளியுள்ள முதன்மைஇடம் யாது?
திருக்கயிலை மலை.
>சிவபெருமான் உயிர்களுக்கு எவ்வெவ்விடங்களில் நின்று அருள் புரிகின்றார்?
சிவலிங்கம் முதலிய திருமேனிகளிடத்தும், சைவாசாரியாரிடத்திலும், சிவனடியாரிடத்தி
லும் நின்று அருள் செய்வார்.
>சிவபெருமானை முழுமுதற் பொருளாக வழிபடும் சமயத்திற்குப் பெயர் யாது?
சைவம்
>சைவத்தில் தலையாய நூல்கள் யாவை?
திருமறைகளும், ஆகமங்களும், திருமுறைகளும்.
>இவைகளில் விதிக்கப்பட்டன யாவை?
சிவ புண்ணியமும் சீவ (உயிர்) புண்ணியமுமாம்.
>சிவ புண்ணியம் யாது?
சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாம்.
>உயிர்ப் புண்ணியம் (சீவ நன்மை) யாது?
1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றன.
>புண்ணியங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
சிவ புண்ணியங்களைச் செய்தவர் சிவ இன்பத்தையும், சீவ ( உயிர் ) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர்.
>பாவங்கள் ஆவன யாவை?
கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல், இன்னும் பல.
>>>>>>>>>>நாட்கடன் இயல்<<<<<<<<<<<
>நாள் தோறும் முறையாக எந்த நேரத்திலே உறக்கம் நீங்கி எழ வேண்டும்?
சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே உறக்கம் நீங்கி எழ வேண்டும். ( விடியல் 4.00 மணி )
>உறங்கி எழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
திருநீறு அணிந்து சிவபெருமானை நினைந்து திருப்பள்ளி எழுச்சி முதலிய திருமுறைப் பாடல்களை ஓத வேண்டும்.
>குளித்த பிறகு யாது செய்தல் வேண்டும்?
தூய நீர் கொண்டு அனுட்டானம் செய்து திருவைந்தெழுத்தை எண்ணித் திருமறைகள், திருமுறைகள் ஓத வேண்டும்.
>>>>>>>>>>திருநீற்று இயல்<<<<<<<<<<<<<
>சைவ சமயத்தோர் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?
திருநீறு
>திருநீறாவது யாது?
பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுதலால் உண்டாகிய திருநீறு.
>எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?
வெள்ளை நிறத் திருநீறு.
>திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?
பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணிய வேண்டும்.
>திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?
வடக்கு முகமாகவே, கிழக்கு முகமாகவே இருந்து அணியலாம்.
>திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?
நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து ‘சிவசிவ / நமசிவாய / சிவாயநம' என்று சொல்லி, வலக்கையின் நடு மூன்று விரலினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.
>திருநீறு நிலத்தில் சிந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
சிந்திய திருநீற்றினை உடனே எடுத்து விட்டு, மேலும் அந்த இடத்தில் துடைத்தெடுக்க வேண்டும்.
>திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ பூசலாமா?
கூடாது.
>திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?
தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் துளக்கிய உடனும், குளித்த உடனும், உணவு உண்ணும் முன்னும், உண்ட பின்னும், சூரியன் தோன்றி மறையும் போதும் திருநீறு அணிய வேண்டும்.
>ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?
விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.
>கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?
முகத்தை திருப்பி நின்று அணிய வேண்டும்.
>திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?
இரண்டு வகைப்படும், அவை : 1. நீர் கலவாது பொடியாக (உத்தூளனம்) அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக ( திரி புண்டரம் ) அணிதல். (ஹோமம் செய்த நீற்றினை நெய்யில் குழைத்து அணிதல் ரக்ஷை எனப் பெயர் பெறும்.)
>திரிபுண்டரமாகத் தரிப்பதன் அறிகுறி யென்ன?
ஆணவம், கன்மம், மாயை யென்னும் மூன்று மலங்களையும் நீக்குமென்கிற குறிப்புத்தோன்றத் தரிப்பதாம்.
>முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?
தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.
>முக்குறியாக அணியும் போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?
இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதற்குக் கூடாமலும் குறையாமலும் அணிய வேண்டும்.
>மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?
அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.
>மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?
ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.
>முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?
ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.
>சைவ சமயத்துக்கு விபூதி ருத்திராக்ஷம் முக்கியமானதற்குக் காரணமென்ன?
பரமசிவனுடைய திருமேனியிலும் திருநேத்திரத்திலும் உண்டானமையால் முக்கியமாயின.
>அவைக ளுண்டான வகை எப்படி?
பரமசிவனுடைய அக்கினிபோன்ற திருமேனிமேல் இயல்பாகப் பூத்ததுவே அனாதியான விபூதி. பின்பு தேவர் முதலிய சராசரங்களையெல்லாம் இறுதிக்காலத்தில் நீறாக்கித் தம்முடைய திருமேனியில் தரித்தருளினாரே அது ஆதி விபூதி. நெருப்பின்மேல் நீறுபூத்திருப்பதை இப்போதும் திருஷ்டாந்தமாகக் காணலாம்.
>அதனை அணிவதனால் பயன் என்ன?
மாபாதகங்களெல்லாம் நீங்குமென்றும் அப்படிக்கொண்ட விபூதியை பசுவின் சாணத்தினால் விளைக்க வேண்டுமென்றும் அப்படி விளைப்பதில் கற்பம், அநுகற்பம், உபகற்பமென மூன்று விதியுண்டென்றும் அவற்றுள் ஒரு விதிப்படி விளைவித்துத் தரித்துகொள்ள வேண்டுமென்றும் ஆகமங்கள் சொல்லுகின்றன.
>கற்பவிதி யாவ தெப்படிக்கொத்தது?
நோயற்ற நல்லபசுக்களைப் பரிசுத்தமுள்ள தொழுவத்திற் சேர்த்து அவைகளிடுகிற சாணத்தைப் பூமியில் விழவிடாமல் தாமரையிலையில் சத்தியோசாத மந்திரத்தால் எடுத்துக் கொண்டு மேலுள்ள வழுவை நீக்கிவிட்டு, வாமதேவத்தாற் பஞ்சகவ்வியம் விட்டு, அகோரத்தால் பிசைந்து, தற்புருடத்தால் உருண்டையாக்கி சிவ மந்திர ஓமத்தால் உண்டான சிவாக்கினியில் சிவபெருமான் திருவடிகளை நினைந்து இட்டுப் பக்குவமாக வெந்த பிற்பாடு எடுத்துப் புதுப்பானையிலிட்டு வேண்டியமட்டில் விபூதிக் கோவிலில் வைத்துக் கொண்டு பூமியில் சிந்தாமல் தரித்துக்கொண்டால் செனன மரணதுக்கம் நீங்கி மோக்ஷமடையலாம். இவ்வாறு விளைவிப்பதுதான் கற்பவிதி. சாணத்தை யேந்தும்போதும் அக்கினியி விடும் போதும் வெந்தபின்பு எடுக்கும்போதும் புதுப்பானையில் வைக்கும்போதும் மந்திரஞ் சொல்லவேண்டும்.
>அனுகற்பவிதி எப்படி விளைவிப்பது?
காட்டிலுலர்ந்த பசுவின் சாணத்தை யுதிர்த்துக்கோசலம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியி லிட்டுப் பக்குவப்படுத்துவதாம்.
>உபகற்ப விபூதியாவது யாது?
இயல்பாக வெந்த காட்டுச்சாம்பல் சிவாலய மடைப்பள்ளிச் சாம்பல் இவைகளையெடுத்துக் கோசலம்விட்டுப் பிசைந்து உண்டாக்கி சிவாக்கினியிலிட்டுப் பக்குவப்படுத்தி முன்போல் எடுத்து வைத்துக்கொண்டு தரித்துக்கொள்ளுவதாம்.
>விபூதிக்கோவில் எதனாலமைக்கப்பட்டது?
வஸ்திரம், புலித்தோல், மான்தோல் இவைகளால் அமைக்கவேண்டும். இவையேயன்றி வேறுமுண்டு.
>எல்லாச் செந்துக்களிலும் பசு சிரேஷ்டமான தென்னை?
புண்ணியநதி, தீர்த்தங்கள், முனிவர்கள், மேலானதேவர்கள், வாசமாகும்படியான அங்கங்களுடன் உற்பவமானதினாலும் தெய்வலோகத்திலிருக்கின்ற காமதேனுவின் குலமானதாலும் சிரேஷ்டமானது. அன்றி, பசு மலநீக்கத்துக்குக் சூரணமான திருநீற்றினுக்க
ு முதற்காரணமான கோமயத்தை விளைவித்தலாலுமென வுணர்க.
>>>>உருத்திராக்க இயல்
>விபூதி தரித்துக்கொண்டாலே போதுமே, உருத்திராக்ஷமுந் தரித்துக்கொள்ள வேண்டிய தென்ன?
விபூதி உருத்திராக்ஷமும் சிவ சின்னமாகையால் அவ்விரண்டுமே தரிக்கவேண்டும். இதுவுமின்றி விபூதியானது சிலவேளை வியர்வை மழை முதலியவற்றால் மறைந்துபோனாலும் உருத்திராக்ஷமிருந்தால் தோஷமில்லை.
>உருத்திராக்ஷம் எவ்விடத்தில் எவ்வாறு உண்டாயது?
தேவர்கள் திரிபுரத்து அசுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை விண்ணப்பம் செய்துகொண்ட பொழுது, திருக்கயிலை உடையாரின் மூன்று திருக்கண்களினின்றும் பொழிந்த நீரில் தோன்றிய மணியாம். இந்தக் காரணத்தினால் அதற்கு உருத்திராக்ஷம் என்கிற பெயருண்டாயது. (உருத்திரன் - சிவன், அக்ஷம் - நேத்திரம். ) அதற்குச் சிவ கண்மணியென்றும் பெயர். சிவபூசை செய்கிறவர்கள் கழுத்தில் உருத்திராக்ஷ மில்லாமல் பூசித்தால் அந்தப் பூசையைப் பரமசிவன் அங்கீகரித்துக் கொள்ளமாட்டார். ஆதலால் சிவபூசை செய்கிறவர்கள் உருத்திராக்ஷ கண்டிகை அவசியம் தரித்துக்கொள்ள வேண்டும்.
>எத்தனை உருத்திராக்ஷம் தரித்துக்கொள்ள வேண்டும்?
உச்சியி லொருமணி, காதொன்றுக்கு ஆறுமணியாக இரண்டு காதுக்கும் பன்னிரண்டு மணி, சிரசில் நாற்பது, கழுத்தில் முப்பத்திரண்டு, மார்பில் நூற்றெட்டு, புயத்தில் முப்பத்திரண்டு, கைகளில் இருபத்துநாலு, இவ்வாறு தரிக்க வேண்டும். மணிகள் ஒன்றை ஒன்று தொடக்கூடாது.
>உருத்திராக்ஷங்களி னிடைகளில் ஏதாவது மணிகள் கோக்கலாமா?
இடையிடை பவளம், ஸ்படிகமணி, பொன்மணி யிவைகளைக் கோத்து அணியவேண்டும். இவைகளுமின்றி வில்வப்பழ வோட்டையுஞ் சேர்க்கலாம். இவ்வாறு சேர்க்காமல் உருத்திராக்ஷங்களை மாத்திரம் கோத்துத் தரித்துக்கொண்டால் எத்தனை மணி சேர்த்தாலும் ஒருமணி யணிந்ததா லுண்டாகும் பலனே கிடைக்கும். இந்த உருத்திராக்ஷங்களில் ஒருமுகம், பதினொருமுகம், பதினான்கு முகமுள்ள மணிகளை வைத்துப் பூசித்தாலும் சிவார்ச்சனை செய்ததா லுண்டாகும் பலன் கிடைக்கும்.
>உருத்திராக்கம் அணிவதற்கு தகுதியானவர் யார்?
மதுபானமும், மாமிச உண்டியும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய் உள்ளவர்.
>குளிக்கும் காலத்தில் உருத்திராக்ஷசத்தை அணியக் கூடாதா?
அணியலாம், குளிக்கும் பொழுது உருத்திராட்ச மணியில் பட்டு வடியும் நீர் கங்கை நீருக்குச் சமமாகும்.
>உருத்திராட்சத்தில் எத்தனை முகமணி முதல் எத்தனை முகமணி வரையும் உண்டு?
ஒருமுக மணி முதல் பதினாறு முக மணி வரையும் உண்டு.
>உருத்திராட்ச மணியை எப்படிக் கோத்துத் தரித்தல் வேண்டும்?
பொன்னிலாயினும், வெள்ளியிலாயினும், தாமிரத்தாலாயினும், முத்தாயினும், பவளமாயினும், பளிங்காயினும் இடையிடையே இட்டு முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோத்துத் தரித்தல் வேண்டும்.
>உருத்திராக்கம் தரிக்கத் தக்க இடங்கள் யாவை?
குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள், என்பவைகளாம்.
>இன்ன இன்ன இடங்களில் இத்தனை இத்தனை மணி தரித்தல் வேண்டும் என்னும் முறை உண்டோ?
ஆம். தலையிலே இருபத்தி இரண்டு மணியும், காதுகளிலே ஒவ்வொரு மணியும், கழுத்திலே முப்பத்தி இரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், கைகளிலே தனித்தனி பன்னிரண்டு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும்.
>இந்த இடங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் உருத்திராக்கம் தரித்துக் கொள்ளலாமா?
காதுகளிலும், கண்டத்திலும் எப்போதும் தரித்துக் கொள்ளலாம், மற்றை இடங்களில் எனில், தூக்கத்திலும் மலசல மோசனத்திலும் அணிந்து கொள்ளலாகாது.
>உருத்திராக்கம் அணிவது எதற்கு அறிகுறி?
சிவபெருமானுடைய திருக்கண்ணில் தோன்றும் திருவருட் பேற்றிற்கு அறிகுறி.
 >>சைவ சமயிகள் முறையாக எண்ண வேண்டிய மூல மந்திரம் யாது?
திருஐந்தெழுத்து
>> திருவைந்தெழுத்தாவது யாது?
நமசிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரம் வேதத்தின் நடுவனதாகவும், நால்வர் பெருமக்களால் துதிக்கப்பட்டதாகவும் எல்லோரும் எப்போதும் எண்ணத்தக்கதாகவும் உய்தி தருவதாகவும் உள்ள திருவைந்தெழுத்த
ு மந்திரம் ஆகும். இது தூல பஞ்சாக்கரம் எனப்படும். சூக்குமம், காரணம் என்று சிறப்புப் பஞ்சாக்கரங்கள் உண்டு. குருநாதர் மூலம் திருவைந்தெழுத்து உள்ளிருத்தப் பெற்றவர்கள் அந்த திருவைந்தெழுத்த
ு மந்திரத்தை ஓதுவது சாலச் சிறந்தது.
>> திருவைந்தெழுத்தைக் எண்ணத் தகுதி உடையவர் யாவர்?
எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோரும் மனதில் அன்புடன் திருவைந்தெழுத்தை எண்ணி இருக்க வேண்டும். குறிப்பு: கீழ் வரும் விடைகள் மந்திர ஜபம் செய்யும் முறையைச் சொல்லுகின்றன. மற்றபடி எங்கும் எப்போதும் எல்லோரும் திருவைந்தெழுத்தை எண்ணி இருத்தலே சிறப்பு. துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் - சம்பந்தர்.
>> திருவைந்தெழுத்திலே எத்தனை உரு முறையாகக் கணிக்க வேண்டும்?
நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் முறையாகக் கணிக்க வேண்டும்.
>>எப்படி இருந்து கணிக்க வேண்டும்?
முழந்தாள் இரண்டையும் மடக்கிக் காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே வலப்புறங் காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த நிமிர்ந்திருந்து கொண்டு அமைதியாகச் சீரான மூச்சுடன் கணிக்க வேண்டும்.
>>திருவைந்தெழுததைக் கணிக்கும் போது மனம் எவ்வாறு இருக்க வேண்டும்?
மனம் சிவபெருமானிடத்தில் அழுந்திக் கிடக்க வேண்டும்.
>>நிற்கும் போதும், நடக்கும் போதும், இருக்கும் போதும், கிடக்கும் போதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் போதும் மனதை எதில் பதித்தல் வேண்டும்?
உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளில் மனதைப் பதித்தல் வேண்டும்.
>>மந்திர உபதேசம் பெற்றவர் குருவுக்கு யாது செய்து கொண்டு செபித்தல் வேண்டும்?
குருவை வழிபட்டு அவருக்கு வருடந்தோறும் இயன்ற தட்சணை கொடுத்து கொண்டே செபித்தல் வேண்டும்.
>>திருவைந்தெழுத்தை முறையாக ஒரு காலத்துக்கு எத்தனை உருச் செபித்தல் வேண்டும்?
நூற்றெட்டு உருவாயினும், ஐம்பது உருவாயினும், இருபத்தைந்து உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.
>>கணித்தற்கு எதைக் கொண்டு உரு எண்ணல் வேண்டும்?
செபமாலையைக் கொண்டாயினும், வலக்கை விரலிறையைக் கொண்டாயினும் உரு எண்ணல் வேண்டும்.
( விரலிறை - கட்டைவிரல் ).
>> செபமாலையை என்ன மணி கொண்டு செய்வது உத்தமம்?
உருத்திராக்க மணி கொண்டு செய்வது உத்தமம்.
>>செபமாலைக்கு எத்தனை மணி கொள்ளத் தகும்?
இல்வாழ்வான் இருபத்தேழு மணியும், துறவி இருபத்தைந்து மணியும் கொள்ளத் தக்கதாகும். இல்வாழ்வான் நூற்றெட்டு மணி, ஐம்பத்து நான்கு மணிகளாலும் செபமாலை செய்து கொள்ளலாம்.
>>செபமாலைக்கு எல்லா முகமணியும் ஆகுமா?
இரண்டு முக மணியும், மூன்று முக மணியும், பன்னிரண்டு முக மணியும், பதின்மூன்று முக மணியும் செபமாலைக்கு ஆகாவாம். அன்றியும் எல்லா மணியும் ஒரே விதமாகிய முகங்களை உடையனவாகவே கொள்ளல் வேண்டும். பல விதமாகிய முகமணிகளையுங் கலந்து கோத்த செபமாலை ஆகாது.
>>செபமணிகளை எதினாலே கோத்தல் வேண்டும்?
வெண்பட்டிலேனும், பருத்தியிலேனும் இருபத்து ஏழிழையினால் ஆக்கிய கயிற்றினாலேனும் கோத்தல் வேண்டும்.
>>செபமாலையை எப்படி செய்தல் வேண்டும்?
முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்தக் கோத்து, ஒன்றை ஒன்று தீண்டா வண்ணம் இடையிடையே நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்றதொரு முடிச்சை இட்டு, வடநுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து, முடிந்து கொள்ளல் வேண்டும். நாயகமணிக்கு மேரு மணி என்று பெயர்.
>>செபமாவது யாது?
தியானிக்கப்படும் பொருளை எதிர்முகமாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தலாம்.
>> மந்திரம் என்பதற்கு பொருள் யாது?
நினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே மந்திரம் என்னும் பெயர் நினைப்பவனைக் காக்கும் இயல்புடைய வாச்சியமாகிய சிவத்துக்கும் சிவ சத்திக்குமே செல்லும். ஆயினும் வாக்கியத்துக்கும், வாசகத்துக்கும் செல்லும். எனவே மந்திரம், வாச்சிய மந்திரம், வாசக மந்திரம் என இரு திறப்படும் என்றபடியாயிற்று. ( மந் - நினைப்பவன்; திர - காப்பது ).
>>மானசமாவது யாது?
நா நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருந்தி மனசினாலே செபித்தலாம்.
>>உபாஞ்சுவாவது யாது?
தன் செவிக்கு மாத்திரம் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்று பெயர்.
>>வாசகமாவது யாது?
அருகிலிருக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.
>>இம்மூவகைச் செபமும் பலத்தினால் ஏற்றக்குறைவு உடையனவா?
ஆம். வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசம் கோடி மடங்கு பலமும் தரும்.
>>எந்தத் திக்கு முகமாக எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?
வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும், மரப்பலகை, துணி, இரத்தினக் கம்பளம், மான்தோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்றதொன்றிலே முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையினுள்ள
ே வலப்புறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்ந்திருந்து கொண்டு செபித்தல் வேண்டும்.
>>எப்படி இருந்து செபித்தல் ஆகாது?
சட்டையிட்டுக் கொண்டும், சிரசில் வேட்டிக் கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கௌபீனம் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரம் தரியாதும், பேசிக்கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றை பார்த்துக் கொண்டும் செபிக்கலாகாது. செபம் செய்யும்போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், நித்திரை, சோம்பல், வாதம் ஆகியவை ஆகாவாம்.
>>செபமாலை கொண்டு எப்படி செபித்தல் வேண்டும்?
பிறர் கண்ணுக்கு புலப்படா வண்ணம் பரிவட்டத்தினால் மூடப்பட்ட செபமாலையை, வாசகமாகச் செபிக்கில் சுட்டுவிரலிலும், மந்தமாகச் செபிக்கின் நடுவிரலிலும், மானசமாகச் செபிக்கின் ஆழிவிரலிலும் வைத்து, சிவபெருமானுடைய திருவடிகளை மனதிலே தியானித்துக் கொண்டு, பெருவிரலினாலே நாயகமணி அடுத்த, முகம் மேனோக்கிய மணியை முதலாகத் தொட்டு, ஒவ்வொரு மணியாகப் போகத்தின் பொருட்டுக் கீழ்நோக்கித் தள்ளியும், முத்தியின் பொருட்டு மேல் நோக்கித் தள்ளியும் செபித்து, பின்பு நாயகமணி கைபபட்டதாயின், அதனைக் கடவாது திரும்ப மறித்து வாங்கி, அதனைத் திரும்பக் கையில் ஏறிட்டுச் செபித்தல் வேண்டும். செபிக்கும்போது, செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படலாகாது.
>>திருவைந்தெழுத்து செபத்தால் பயன் என்ன?
திருவைந்தெழுத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னும் முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின் விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தல் போல் ஆன்மாவிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நீங்கும்படி எப்போதும் இன்புற்றிருக்கும் ஞானானந்தத்தைப் பிரசாதித்து அருளுவார்.
 
Coutresy: Saiva samayam