Showing posts with label பணவளக்கலை. Show all posts
Showing posts with label பணவளக்கலை. Show all posts

Monday, October 3, 2016

செல்வம் பெருக சில குறிப்புகள்

செல்வம் பெருக சில குறிப்புகள்

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
வெள்ளளிக்கிழமை  சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது  குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.
தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை  உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர்  ஆகலாம்.பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.
குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.
வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை  வழிபடசெல்வம் பெருகும்.
தொடர்ந்து  11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.
மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திடபணம் குவியும்.
ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
வௌளிக்கிழமை  மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.
சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.
பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.
வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி  படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.
குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
திருமலை வெங்கடாஜலபதிக்கு  வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.
துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும்.
செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.
ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.
ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.
வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க  தனலாபம் கிட்டும்.
ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.
தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம்நிரந்தரமாகும்.
ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம் பெறலாம்.
கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.
வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை  நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மகாலட்சுமிக்கு  பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.
கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும்வசமாகும்.
செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால்பணம் கிடைக்கும்.
தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.
இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.
வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.
வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.
கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.
திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.
தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.
ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.
வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.

Friday, September 30, 2016

மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது. (கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்)

மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது. (கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்)


நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி
வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும்
பன்மடங்கு வளர்ந்து வரும்.
பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில்,
எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு
அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.
மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும்
பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி
கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.
ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால்
வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே
வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து
பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.
நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன்
எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.
இருள் இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக
இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக்
காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும்
மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று
பெருந்துயரத்தைச் செய்யும்.
தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல்
நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி
விடுவான்.
எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர்
போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது
மூடத்தனம்.
எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக்
கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட
வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள்
போன்றவை.

Saturday, September 24, 2016

திருப்பதியில் உள்ள வேங்கடவனின் குலதெய்வம் யாரு?



திருப்பதியில் உள்ள வேங்கடவனின் குலதெய்வம் யாரு?
பல பேருக்கு திருப்பதியில் உள்ள வேங்கடவன் குலதெய்வம். ஆனா, அந்த வேங்கடவனுக்கே குலதெய்வம் யாரு. அவர்தான்
★ஸ்ரீ நரசிம்மர்★
★ ஸ்ரீனிவாச கல்யாணத்திற்கான திருமண பத்திரிக்கை
யில் குலதெய்வம் என்ற காலத்தில் ‘ஸ்ரீ நரசிம்மரை’ போடுமாறு ஸ்ரீனிவாசர் கூறுகிறார்.
★ அன்று தயாரிக்கப்பட்ட விருந்து, ஸ்ரீ நரசிம்மருக்கு நைவேத்தியம் செய்தபிறகே அனைவரும் உண்கின்றனர். திருமணம் முடிந்த ஸ்ரீனிவாசரும், லக்‌ஷ்மி தேவியும், அஹோபிலம் சென்று ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வழிப்பட்டனர்.
இவ்விவரங்கள் ‘வேங்கடேச மஹாத்மியம்’ என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.
★ சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்
வ்யாப்தம்ச பூதேஷு அகிலேஷு சாத்மன:
அத்ருஷ்யதாத் அதியத்புத ரூபமுத்வஹன்
ஸ்தம்பே சபாயாம் ந ம்ருகம் ந மானுஷம்.
★ ஸ்ரீமத் பாகவத்தில் நரசிம்ம அவதாரத்தில் சொல்லப்பட்ட மிகமிக முக்கியமான ஸ்லோகம்.
★ நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று மிக நம்பிக்கையுடன் சொன்ன தன் பக்தனான பிரகலாதனின் வாக்கை காப்பாற்ற வேண்டி, மிருகமும் அல்லாத மனிதனும் அல்லாத ஒரு உருவத்தில் - நரசிம்மனாக - கம்பத்தில் இருந்து தோன்றினான்.
★ மேற்கண்ட ஸ்லோகத்திற்கு இது ஒரு எளிமையான விளக்கம். ஆனா, இந்த ஒரே ஒரு ஸ்லோகத்தை வைத்தே ஒரு நாள் முழுக்க விளக்கங்களால் பரவசப்படுத்தும் உபன்யாசகர்கள் உண்டு.
"கோவிந்தா கோவிந்தா கோவிந்தா"

Tuesday, September 20, 2016

பயமும் அதை சமாளிக்கும் முறைகளும்

மனம், சுபாவத்தில் எதிர்மறையானவற்றை கெட்டியாக  பிடித்துக்கொள்ளும் என்று பார்த்தோம் அல்லவா, வாழ்வில் பூரணமடையும் முறைகளைப் பற்றியும் படித்தோம். அதில் முதலில் கூறியது நம்பிக்கையைப் பற்றி.

இதன் எதிரிகள், பயமும், சந்தேகமும். முதலில் பயத்தை அறிந்து அதை  களைந்தெரிந்து விடுவோம். பயமும் அதை சமாளிக்கும் முறைகளும் பயம் என்பது அன்பு தலைகீழாக நிற்பது போன்றது என்பதால் அன்பால் விளங்கக்கூடிய அனைத்தையும் பயமும் விளங்கச் செய்யும். 

தாயினிடமே ஒட்டிக்கொண்டிருக்கும் குழந்தையின் ஒட்டுதலை அன்பாகவும் புரிந்து கொள்ளலாம். அல்லது பயத்தினால் ஏற்பட்டது என்றும் சொல்லலாம். பயத்தின் பிரதான உள்ளுணர்ச்சியை தெய்வீக அன்பை அறிந்து கொள்வதன் மூலம் முழுதாக மாற்றிவிடலாம்.முழுதாக குழப்பம் நிறைந்த சூழலிலும் அல்லது முற்றிலும் ஒழுங்கு நிறைந்த சூழலிலுமே பயத்தை முற்றிலும் துறப்பது சாத்தியம். ஞானிகளுக்கும், முட்டாள்களுக்கும் பயம் என்பதே தெரியாது. இடைப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு தான் பயம் ஆழ்ந்து இருக்கும். உலகில் ஒழுங்கை காப்பாற்ற பயம் முக்கியம். அதுவே பிரதான உள்ளுணர்ச்சி.

*இறப்பின் மேல் உள்ள பயம் வாழ்க்கையை போற்ற உதவும். 
*தவறைப் பற்றிய பயம் சரியான நிலையை காக்கும். 
*நோயைப் பற்றிய பயம் சுகாதாரத்தை ஊக்குவிக்கும். 
*துக்கத்தைப் பற்றிய பயம் தங்களை நியாய மானவர்களாகச் செய்யும்.

குழந்தைக்கும் ஒரு சிறிய பயம் இருப்பதால் அது கவனமாக நடக்கிறது. ஒரு சிறிய பயம் எல்லாம் சரியாக நடக்கச் செய்ய தேவையாக இருக்கிறது. முற்றிலும் பயத்தைப் போக்க முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் என்று யாரும் இல்லை (அ) நீங்கள் முக்கிய மானவருக்கும் உரியவர் என்பதை அறிந்து தியானம் செய்யுங்கள்.
எப்படி களைந்தெறிவது?

பயம் என்றால் என்ன? அதற்கான அறிகுறிகள் என்ன? நம் உலகில் நடுக்கத்துடன் கூடிய தீவிரமான அதிர்வு, நிற்கும் தரை லேசாக இருப்பதை போன்றவைதான் இதற்கான அறிகுறி, ஒடுங்கிப் போவதை போன்ற உணர்ச்சி, எதையாவது பற்றிக் கொள்ள வேண்டும் என்ற போக்கு காணப்படும். எதுவும் நமக்கு உரித்தது அல்ல என்ற உணர்வு இருக்கும். ஒரே சூன்யமாய் தோன்றும். இந்த எல்லா உணர்வுகளுடன், தொப்புள் கொடிக்கும் நெஞ்சு அல்லது தொண்டைக்கும் நடுவே இவை ஒரு தீவிரமான அதிர்வை ஏற்படுத்தும், அதுவே பயம். 

இது எப்பொழுது உருவாகிறது? சிறு குழந்தைகளுக்கு பயம் என்பதே கிடையாது, வளரும் பொழுது அது உருப்பெறுகிறது. பயமும், ‘தான்’ என்ற எண்ணமும் நெருங்கிய தொடர்புடையவை. அகம்பாவம் வளரும் பொழுது பயமும் வரும். அகம்பாவம் என்றால் என்ன? 

அது ஒரு எல்லைக்கோடு; நம்மை பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிலிருந்தும் வேறுபடுத்திக் கொள்ளுவது. இந்தப் பரந்த எல்லைகளற்ற பிரபஞ்சத்தில் கற்பனை அறைகள் உண்டாக்கி அதில், நாம் வாழ்வதை போன்று உணருவதே, ‘நான்’ என்ற உணர்வு. விழித்திருக்கும் பொழுதும், கனவிலுமே பயம் வரும், தூக்கத்தில் பயம் இருக்காது. பயம் தீவிரமாகும் பொழுது உங்களால் தூங்கக் கூட முடியாது.  தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

இந்த தீவிர உணர்வை, ஒரு குறிப்பிட்ட நிகழ்வுடனோ, பொருளுடனோ இணைக்க முடியும். இங்கே தான் நாம் அதை நிரந்தரமாக்குகிறோம். நம் பயம் உயரத்தைக் கண்டு, என்று எண்ணும் பொழுது அந்த உணர்வை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையுடன் நிலை நாட்டி விடுகிறோம். அந்த சூழ்நிலையை களைய முயன்றாலும், பயத்தை போக்க முடிவதில்லை. அதைப் பற்றிய தெளிந்த அறிவைக் கொண்டே அதை போக்க முடியும். 

அதை அறிந்த நிலையில் அல்லது அதை ஏற்றுக் கொண்டு, முழுதாக அனுபவிக்க தயாராகும் பொழுது, அந்த பயம் மாறி அன்பாக மாறுவதை காண்பீர்கள்! அன்பு, பயம், வெறுப்பு இவை வெவ்வேறு சக்திகள் கிடையாது, ஒரே சக்தியின் வெவ்வேறு வடிவங்கள். இதனால்தான் தீவிரமான பயம், காதல், அன்பு இவை எல்லாவற்றையும் உணரும் பொழுது; தொப்புள் கொடிக்கும் நெஞ்சுக்கும் இடையே அதிர்வுகள் ஏற்படுவதை உணரலாம்.

பயம் என்பது அன்பு தலைகீழாக தொங்குவது என்பதால், அன்பு இருக்கும் பொழுது பயம் இருக்காது, பயம் இருக்கும் பொழுது அன்பு இருக்காது, இரண்டும் ஒருசேர இருக்க முடியாது. இவை இரண்டும் மாறி மாறி வரக்கூடும்.

 ஆழ்ந்த அன்பு ஏற்படும் பொழுது, பயமோ வெறுப்போ அறவே இருக்காது. வெறுப்பு மிகுந்து காணப்படுபவர்கள் எதற்குமே அஞ்ச மாட்டார்கள்,  தீவிரவாதிகள் இருப்பதை போல. தீவிரவாதிகளிடம் இருப்பது தீவிரமான அன்பு  அதாவது உருமாறிய அன்பான வெறுப்பே மிகுந்து காணப்படும். ஆகவே, பயம் இருக்காது. குழந்தைகளிடம் பூரணமான அன்பு காணப்படுவதால் அவர்களுக்கும் பயம் கிடையாது.

உணவில் உப்பு இருக்கும் அளவில் பயமும் தேவையே. இயற்கையான பரிணாம வளர்ச்சியில் தானாகவே அது வரும். ஒருவர் தன்னை காத்துக் கொள்ளவும், கவனமாக நடக்கவும் இது உதவும். குழந்தைகளிடம் பயம் இல்லாததால்தான் அவர்கள் கவனமாக இருப்பதில்லை, நெடுஞ்சாலையில் ஓடக்கூட கவலைப்பட மாட்டார்கள். 

எது வேண்டுமென்றாலும் அவர்கள் செய்வார்கள். பயமறியாததால் பள்ளத்தாக்கில்கூட குதிப்பார்கள். அக்குழந்தைகளுக்காக தாய்மார்களே பயம் கொள்வார்கள். வயது வந்தவர்களில் உள்ள பயமே தன் உடலை காக்க உதவுகிறது. விடலை பருவத்தில் குறைவான பயமே இருக்கும். ஏனென்றால் அவர்கள் அனுபவம் குறைந்தவர்கள். ஆகவே  போதுமான அளவே இருக்கும்.

பயம் ஒரு திருப்பம் கொண்டு, நிபந்தனையற்ற அன்பாக மாற வேண்டும், அது சாத்தியமே! பயத்தின் மீது கவனம் செலுத்தாமல் அதை ஒழித்தோ அல்லது விழிப்புணர்வுடன் உரு
மாற்றியோ செய்ய முடியும். இதைச் செய்யாவிட்டால் இது புரைபோல நம் இயக்கத்தில் பரவி, நம் மலர்ச்சியைத் தடுக்கும்.நீங்கள் ஆனந்தமாக இருக்கும் பொழுது 
உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை கவனித்து இருக்கிறீர்களா? எதோ ஒன்று விரிவடைகிறது. நீங்கள் சோகமாக இருக்கும் நேரம் அதுவே சுருக்கமடையும், ஆனால், சுருங்கி விரியும் அந்த பிரக்ஞை மீது நாம் கவனம் செலுத்துவதே இல்லை. 

நம்மை சுதந்திரமாக உணர வைக்கும் ரகசியம் அதில்தான் புதைந்துள்ளது. சுருங்கி விரியும் மனது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை; எப்பொழுது அது சுதந்திரமாக உள்ளது; எப்பொழுது பயம் கொண்டுள்ளது; எப்பொழுது அன்பை உணருகிறது; எப்பொழுது வெறுப்பு ஏற்படுகிறது என்பது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை.நம்மில் நடக்கும் இதை கவனிப்பதே தியானமாகும். மெல்ல நீங்கள் அதை கட்டுப்படுத்த முடியும். எப்படி உணர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வாறே உணருவீர்கள்! 

நீங்கள் உங்கள் உணர்ச்சிகளின் அடிமை என்று பல சமயங்களில் நினைத்து இருக்கிறீர்கள். நீங்கள் மோசமாக உணரும் பொழுது, ஏன் அப்படி உணருகிறீர்கள்? உங்களுக்கு அவ்வாறு உணராமல் இருக்கும் சக்தி உள்ளது என்றால், அதிலிருந்து வெளியே வர முடியும். அதற்கான மார்க்கமும் உங்களுக்கு தெரியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம் உணர்ச்சிகளை விட, நம் இருப்பின் கரு வலுவானது. அது நம் ஆதாரத்துடனும், நாம் இருக்கும் புலத்துடனும் மற்றும் எல்லையில்லா சக்தியுடன் தொடர்புடையது. நம்மை கருவில் வளர்த்து, குழந்தைப் பருவம் முதல் வளரச் செய்த நம் பிரக்ஞைக்கு அதை ஆற்றி குணப்படுத்தும் சக்தி உண்டு. 

நம் உடலை சரி செய்யத் தேவையான எல்லாமே அதனிடம் உள்ளது. ஆனாலும் நாம் தேவைப்படும் நேரங்களில் மூலிகைகள், வைட்டமின்கள், மருந்து மற்றும் உணவு அருந்த வேண்டும், அதுவும் உதவும். நமக்கு சக்தி தரக்கூடிய ஆதாரங்கள் நான்கு அவை, உணவு, உறக்கம், மூச்சு மற்றும் தியானம் இவைகளின் உதவியையும் நீங்கள் பெற்றுக் கொள்ள லாம். அதே சமயம் உங்கள் பிரக்ஞையே உங்களை குணப்படுத்தி ஆரோக்யமாக வைத்துள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நொடி கண்களை மூடிக்கொள்ளுங்கள். என்ன நடக்கிறது என்று யார் பார்க்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்? நீங்கள் கண்ணால் பார்க்கிறீர்கள், காதால் கேட்கிறீர்கள். கண்களுக்கும், காதுகளுக்குப் பின்னே இருக்கும் அந்த மனம் என்ன? அந்த ‘நான்’, அந்த ‘நீ’ என்ன? புலன்களுக்குப் பின் இருக்கும் அந்த மனதை எண்ணிப் பாருங்கள்.

நீங்கள் நாற்காலியில் அமர்ந்து இருக்கலாம். அதை அறிய உங்களுக்கு உதவி தேவையா? இல்லை. நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எப்படி? நீங்கள் தானாக உணருகிறீர்கள். இது போல உணர வைக்கும் அந்த மனதை உணருங்கள். இப்பொழுது கண்களை திறங்கள், மனம் கண்கள் மூலமாக பார்க்கிறது. 

அதே மனம் காதுகளின் மூலமாக கேட்கிறது. இப்பொழுது உங்கள் கவனத்தை ஆதாரத்திற்கு, அந்த ‘ஒரு உயிர்’ அந்த ‘ஒரு பொருள்’ நாம் எல்லா விவரங்களை அறிய உதவும் அந்த மனம், அந்த ‘நான்’, விவரங்களை பதியச் செய்து, ஒப்பிட்டுப் பார்த்து, தீர்ப்பை அளிக்கும் நினைவு இவற்றின் மேல் கொண்டு செல்லுங்கள். இது ஆரோக்கியத்தை அளிக்கும். ஸமஸ்கிருதத்தில் ஆரோக்கியத்தை ‘ஸ்வஸ்தா’ என்று கூறுவர் அதன் பொருள் ஆன்மாவுடன் ஒன்றி இருப்பவர் என்பதே.

நவ துவார வழிபாடுகள்

நவ துவார வழிபாடுகள்
  1. மனித உடல் ஒன்பது சரீரங்களின் தொகுதியாகும். கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்கள் மனித உடலின் தூல ரூபமாகும். எனவே, ஒன்பது கலசங்களுக்குக் குறையாமல் உள்ள கோயில் கோபுரங்களை தினந்தோறும் குறைந்தது மூன்று நிமிடங்கள் கண்ணார தரிசித்து வழிபடுதலால் மனித சூட்சும சரீரங்கள் தூய்மை பெறுவதுடன் உடலில் உள்ள நவதுவாரங்களும் சீர் பெறும். அதனால் திருஷ்டி துன்பங்களின் தீய விளைவுகள் தவிர்க்கப்படும்.

  2. திருவானைக் கோவில் போன்ற திருத்தலங்களில் மூல மூர்த்தியை நவசாளரங்கள் வழியாக தரிசனம் செய்து வழிபடுவதால் கண் திருஷ்டிகள் நம்மை எளிதில் தாக்காத வகையில் கவச சக்திகளைப் பெருக்கிக் கொள்ள முடியும். ஒன்பது சாளரங்களுக்கு மேல் உள்ள சிறுகமணி சிவத்தலம் போன்ற திருக்கோயில்களிலும் இத்தகைய வழிபாடுகளை மேற்கொண்டு பயனடையலாம்.

  3. மனித உடலின் நவதுவாரங்களுக்கு அதிபதியாக விளங்கும் தெய்வங்களே விநாயகப் பெருமானும், ஆஞ்சநேய மூர்த்தியும் ஆவார்கள். உலகிலேயே மிகப் பெரிய சுயம்பு பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையார் அருளும் மலைக் கோட்டையை ஒன்பது முறைக்குக் குறையாமல் கிரிவலம் வந்து வணங்குவதால் கண் திருஷ்டி துன்பங்கள் விலகும்.

  4. ராமபிரான் கயிலை ஈசனை வழிபடுவதற்காக திருக்கயிலையிலிருந்து சிவலிங்க மூர்த்தியைப் பெற்று வருமாறு ஆஞ்சநேயரை அனுப்பினார் அல்லவா? அப்போது ஆஞ்சநேய மூர்த்தி கயிலையில் எம்பெருமானை லிங்க வடிவில் பூஜித்து அதன் பின்னரே ராமேஸ்வரத்திற்கு சிவலிங்கத்தைக் கொண்டு வந்தார். அவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தி கயிலை ஈசனை வழிபடும் சித்திரத்தை அல்லது உருவப் படத்தை அல்லது ராமேஸ்வரத்தில் உள்ள விஸ்வநாத லிங்க மூர்த்தியை தொடர்ந்து வழிபடுவதால் கண் திருஷ்டிக் கோளாறுகள் நம்மை அண்டாது.

  5. பொதுவாக, ஜாதக ரீதியாக செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சமாக விளங்குபவர்கள் கண் திருஷ்டி துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. முருக பக்தர்களும், கௌமார உபாசகர்களையும் திருஷ்டித் துன்பங்கள் அண்டாது. எனவே குமரன் அருளும் மலைத் தலங்கள் யாவும் கண் திருஷ்டியை நீக்கும் தலங்களே. அதிலும் சிறப்பாக திருச்செங்கோடு, செங்கோட்டை அருகே திருமலை, கோயம்புத்தூர் அருகே அனுவாவி மலை போன்ற குமரத் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்த கண் திருஷ்டிக் காப்புத் தலங்களாக சித்தர்களால் போற்றப்படுகின்றன.   

  6. திருமண வைபவங்களில் நவ தானியங்களை மண் சட்டிகளில் வளர்த்து முளைப் பாலிகைகளை வழிபடும் நிகழ்ச்சி ஒன்று உண்டு. புது மணத் தம்பதிகள் மேல் விரவும் கண் திருஷ்டி தோஷங்களைக் களைவதற்காகவும், தம்பதிகள் நற்சந்ததிகளைப் பெற்று வாழவும் இந்த முளைப் பாலிகை வழிபாடு ஒரு முக்கிய திருமண வைபவமாக நிறைவேற்றப்படுகிறது.

  7. இயற்கையாகவே, முளைப் பாலிகை வழிபாடு திருஷ்டி தோஷங்களை நீக்கும் ஆதலால் மண் சட்டிகளில் முளைப் பாலிகைகளை வளர்த்து திருச்சி சமயபுரம் அருகே ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்திலும், கண்ணாயிரம், செந்தாமரைக் கண்ணன், கண்ணாத்தாள் போன்று கண் பெயருடைய இறைவன், இறைவிகள் அருளும் தலங்களில் சமர்ப்பித்து வழிபாடுகள் நிறைவேற்றுவதால் கண் திருஷ்டி தோஷங்கள் அண்டாது பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த முளைப் பாலிகைகளை கன்றுடன் கூடிய பசுக்களுக்கு வழங்குவதும் ஓர் அற்புத வழிபாடாகும்.

Monday, September 5, 2016





8. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்

சுந்தரானந்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அகமுடையார் குலத்தில் பிறந்தார் என போகர் தெரிவிக்கிறார். யோகத்தில் நீண்ட காலம் அமர்ந்திருந்து சித்துக்கள் பல புரியும் ஆற்றல் பெற்றுள்ளார். அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார். இவரின் குரு சட்டை முனி என்று சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.
அபிஷேக பாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில் சச்சிதானந்த வடிவாகிய சுந்தரானந்த சித்தர் மதுரையம்பதி கடை வீதி, சித்திரக்கூடம், நாற்சந்தி வீதி, உப்பரிகை போன்ற இடங்களில் திரிந்து பல சித்துக்களை விளையாடினார். இந்திரஜாலமாக மறைந்தும், பெண்ணை ஆணாக்கியும், ஆணை பெண்ணாக்கியும், ஊனமுற்றவர்களை சுகப்படுத்தியும், இரும்பு, செம்புகளை தங்கமாக்கியும் பற்பல ஜாலங்கள் புரிந்திருக்கிறார். இதைக் கண்டு அதிசயித்த மக்கள் மன்னனுக்கு செய்தியை தெரிவித்தனர். மன்னன் சித்திரை அரண்மனைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினார். ஆனால் சித்தரோ அரசனை தன்னை வந்து பார்க்கும் படியாகச் சொல்லியனுப்பினார்.
சித்தரை சந்திக்க அரசர் ஆவலோடு வந்தார். சித்தரிடம் ஊர், பேர் முதலியவைகளைக் கேட்க தாம் பல சித்து விளையாட்டுகளை செய்து காட்டும் சித்தரெனக் கூறினார். அப்போது கையில் கரும்புடன் ஒருவன் வந்தான் அதைக்கண்ட அரசர் அக்கரும்பை வாங்கி சித்தரிடம் கொடுத்து “இக்கரும்பை இங்கு கற்சிலையாக நிற்கும் கல்யானையை உண்ணும்படிச் செய்தால் நீங்கள் சித்தர் என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என்றார்.
சித்தரும் சம்மதித்து கரும்பை கையில் வாங்கி கல் யானையிடம் நீட்டி கண்ணசைத்தார். அனைவரும், அரசரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கல்யானை துதிக்கையை நீட்டி கரும்பை வாங்கி உண்டு ஏப்பம் விட்டு பிளிரியது. அரசனும் அனைவரும் அதிசயித்து அன்பும், பக்தியும் பெருக்கெடுக்க சித்தர் திருவடிகளில் வணங்கினர்.
நிமிர்ந்த போது யானை மறுபடியும் கல்யானையாக காட்சியளித்தது. சித்தரும் கோவிலுக்குள் சென்று மறைந்தார். இவர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் சித்த்தராக சமாதியில் வீற்றிருக்கின்றார்.


சுந்தரானந்தர் இயற்றிய நூல்கள்:

1. சுந்தரானந்தர் காவியம்
2. சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
3. சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
4. சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
5. சுந்தரானந்தர் கேசரி
6. சுந்தரானந்தர் சித்த ஆனம்
7. சுந்தரானந்தர் தீட்சா விதி
8. சுந்தரானந்தர் பூசா விதி
9. சுந்தரானந்தர் அதிசய காரணம்
10. சுந்தரானந்தர் சிவயோக ஞானம்
11. சுந்தரானந்தர் மூப்பு
12. சுந்தரானந்தர் தண்டகம்
ஆகிய நூல்களை எழுதினார். மேலும் பயிர் தொழில் சம்பந்தப்பட்ட சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் கூறியுள்ளார்.


தியானச்செய்யுள்

சித்து விளையாட்டில் சிறந்தவரே
சிவனுடன் கலந்தவரே
ஆயசித்தி அனைத்தும் அறிந்தவரே
அபயம் அளிக்கும் அருளாளரே
மதுரையம்பதி வாழ் மகத்துவமே
உன் பாதம் சரணம்.


சுந்தரானந்தர் பூசை முறைகள்

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் ஐந்து முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.


பதினாறு போற்றிகள்

1. ஒளி பொருந்தியவரே போற்றி!
2. ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி!
3. லோக ஷேம சித்தரே போற்றி!
4. யோக மூர்த்தியே போற்றி!
5. அவதார புருஷரே போற்றி!
6. அபயமளிப்பவரே போற்றி!
7. சிவ யோகியே போற்றி!
8. இந்திரனுக்கு அருளியவரே போற்றி!
9. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
10. சகல சித்திகளையும் உடையவரே போற்றி!
11. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி!
12. சுகங்களைத் தருபவரே போற்றி!
13. தாய் போல் காப்பவரே போற்றி!
14. தண்டனைகளை நீக்குபவரே போற்றி!
15. தைரியத்தை கொடுப்பவரே போற்றி!
16. சித்த மருத்துவத் தெய்வமே ஸ்ரீ சுந்தரானந்த சித்தரே போற்றி! போற்றி!
எனக் கூறி நிவேதனமாகக் கடலை, வெண்பொங்கல் படைத்து இவற்றுடம் மஞ்சள் வஸ்திரம் அல்லது காவி வஸ்திரம் படைத்து வியாழன் அன்று வழிபட வேண்டும். நிறைவாக “ஓம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சுவாமியே போற்றி! போற்றி!” என 108 முறை கூறி வழிபட வேண்டும்.


சுந்தரானந்த சித்தரின் பூசை பலன்கள்:

1. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
2. கொடுக்கல், வாங்கல் பிரச்சனை ஏற்படாது.
3. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
4. புத்திர பாக்கியம் உண்டாகும்.
5. குரு பிரீதி அடைவர்.
6. புகை பிடித்தல், குடிப்பழக்கம் அகலும்.
7. சித்த பிரமை அகலும்.
8. ஞாபக சக்தி அதிகரிக்கும்.
9. வறுமை அகன்று வளமான வாழ்வு அமையும்.
சுந்தரானந்த சித்தர் வரலாறு முற்றிற்று.





கோவில் கருவறையின் தேவ ரகசியம்

கோவில் கருவறையின் தேவ ரகசியம்


மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது.இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது.இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள்.நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் டங்கியுள்ளன.வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள்,பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர்.பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும்.பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க விரவிபரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது.

இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர்.எல்லா ஆலயங்களிலும் கருவறையானது, வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும். கருவறை அமைப்பை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை

1. அதிஷ்டானம்,
2. பாதம்,
3. மஞ்சம்,
4. கண்டம்,
5. பண்டிகை,
6. ஸ்தூபி

எனப்படும். இதில் மூலவர் சிலை நிறுவப்படும்
பகுதியை அதிஷ்டானம் என்பார்கள். பீடம் என்றும் சொல்வதுண்டு.
கருவறையின் வெளிப்புறச்சுவரை கோஷ்டம் என்பார்கள். அவற்றில் பல்வேறு கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருக்கும்.ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

அது மட்டுமின்றி அந்த கருவறை எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் இறை அருளை அள்ளித்தரும் பொக்கிஷமாக இருக்கவும் வழி வகுத்திருந்தார்கள்.
இந்த நடைமுறை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஆகம வழிபாட்டு முறைகளுக்கும் முன்பே தோன்றி விட்டது.

அந்த காலக் கட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள், தங்களது அரண்மனையை விட அருள் அலை தரும் கோவில்கள் எப்போதும் உறுதியாக நின்று நிலைப் பெற்று திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள். அவர்கள்பெருங்கோவில், மாடக்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடிக் கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று 8 வகைக் கோவில்களைக் கட்டினார்கள்.ஆனால் கருவறை பகுதி சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன.

 இதில் சதுர அமைப்பு தேவ உலகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் மண்ணுலகத்துடனும் தொடர்புடையதாக கருதப்படுகின்றன.
மிழ்நாட்டில் முக்கோண அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை. வட்ட வடிவ கருவறைகளை புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களிலும் மட்டுமே காணமுடியும்.என்றாலும் மதுரை அழகர்கோவிலில் உள்ள ஆலயக் கருவறை வட்ட வடிவில் இருப்பது ஆச்சரியமானது.மற்றபடி தமிழக ஆலயங்களில் கருவறை சமசதுர வடிவில்தான் இருக்கும். கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும்.தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி ‘‘கஜப்ருஷ்டம்’’ வடிவில் இருக்கும்.கஜம் என்றால் யானை,ப்ருஷ்டம் என்றால் பின்பகுதி என்று பொருள். ஆக கருவறை வெளிப்புற சுவர் யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம்.இத்தகைய அமைப்பை ‘‘தூங்கானை மாடக்கோவில்’’ என்பார்கள். 

அதாவது ஒரு யானை முன்னங்கால்களை முன்புறம் நீட்டியும்,பின்னங்கால்களை பின்புறம் மடித்தும் படுத்திருப்பதைப் போன்று காணப்படும்.இத்தகைய கருவறையை நம் முன்னோர்கள் சாதாரணமாக அமைத்து விடவில்லை.கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் தானியங்களை விதைப்பார்கள். அந்த தானியங்கள் மூன்று நாட்களில் முளைத்து விட்டால் உத்தமமான இடம். 5 நாட்களில் முளைத்தால் மத்திமம். 5 நாட்களுக்கு பிறகு அதமம்.மத்திமம், அதமமான இடங்களில் கருவறை கட்ட மாட்டார்கள். உத்தமமான இடத்தில் மட்டுமே கருவறையை அமைப்பார்கள்.

இது பிரபஞ்ச சக்திகளை ஒன்று திரட்டி தரும் தலமாக மாறும் என்று நம் மூதாதையர்கள் கணித்துதான் கோவில்களையும் கருவறைகளையும் கட்டினார்கள்.கருவறைக்குள் வைரம், வைடூரியம், தகடுகள், கருங்கற்கள், சுட்ட கற்கள், ஆற்று மணல் போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும் இருந்தது.சுண்ணாம்பு, கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து அரைத்து பூசி கருவறையை உருவாக்குவதை
கர்ப்பக கிரக லட்சணம் என்றனர்.கர்ப்பக்கிரக சதுர அளவு 1 தண்டம் எனப்படும். 


இதன் அடிப்படையில்தான் ஆலயத்தின் மற்ற பகுதி அமைப்புகள் இருக்கும்.உள்பிரகாரம் ஒரு தண்ட அளவு விஸ்தாரத்துடனும், இரண்டாம் பிரகாரம் இரண்டு தண்ட விஸ்தாரத்துடனும், மூன்றாம் பிரகாரம் 4 தண்ட விஸ்தார அளவுடனும், நான்காம் பிரகாரம் 7 தண்ட விஸ்தார அளவுடனும் இருத்தல் வேண்டும்.இப்படி நம் முன்னோர்கள் கருவறையை பார்த்து, பார்த்து பரிசோதித்து கட்டினார்கள். சங்க காலத்தில் கருவறையை நம் முன்னோர்கள் திருவுண்ணாழிகை என்றழைத்தனர்.


கருவறை வலுவாக இருக்க வேண்டும் என்பதிலும் நம் முன்னோர்கள் மிகவும் கவனம் செலுத்தினார்கள். தேப்பெருமா நல்லூரில் உள்ள சிவாலய கருவறை தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது.பெரும்பாலான கருவறைகள் இப்படித் தான் கட்டப்பட்டுள்ளன.அது போல கருவறை வடிவமைப்பிலும் மிகுந்த நுட்பம் கடைபிடிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் ஆலய கருவறை இதயம் போன்றது.வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் ஆலய கருவறை ஓங்கார வடிவத்துடன் இருக்கிறது.


கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய கருவறை அமைப்பு ஆச்சரியப்படத்தக்கது. சந்திரகாந்த கல்லால் உருவான இந்த கருவறை வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும்.இப்படி பல சூட்சமங்கள் கொண்ட கருவறையை நமது முன்னோர்கள் சற்று இருட்டாக வைத்தனர்.அதிலும் ஒரு அறிவியல் பின்னணி உள்ளது.கருவறை விமான கலசம் மூலம் சூரிய கதிர்களின் அலை, மூலவர் சிலைக்கு கடத்தப்படும். அதே சமயம் சிலைக்கு அடியில் உள்ள
யந்திரம் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களை மூலவர் சிலைக்கு கடத்தும்.இதனால் கருவறையில் இறை ஆற்றல்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிரம்பியிருக்கும்.கருவறை சற்று இருட்டாக இருந்தால்தான் அந்த இறை ஆற்றல்கள் ஆலயத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவும்.இந்த விஞ்ஞான உண்மையை நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால்தான் அவர்கள் ஆலய கருவறையை சற்று இருளாக இருக்கும்படி செய்தனர். 


அது மட்டுமின்றி அந்த இறை ஆற்றல்களைப் பெற தினமும் ஆலயங்களுக்கு செல்ல வற்புறுத்தினார்கள்.ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் கருவறையின் ஆற்றலையும் அருமையையும் புரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். நாம் வீட்டில் வழிபட்டால் 10 சதவீத ஆற்றலே கிடைக்கும். கோவில் பிரகாரத்தில் வழிபட்டால் 100 சதவீத ஆற்றல் பெறலாம்.குளத்தில் வழிபட்டால் 1000 மடங்கு பலனும், ஆற்றில் வழிபட்டால் லட்சம் பங்கு பலனும், அருவிக்கரை பகுதிகளில் வழிபட்டால் 1 கோடி பங்கு பலனும், கடற்கரையில் வழிபட்டால் 2 கோடி பங்கு பலனும், ஜீவசமாதிகளில் வழிபட்டால் 10 கோடி பங்கு பலனும் கிடைக்குமாம்.ஆனால் ஆலய கருவறை முன்பு நாம் வழிபாடு செய்தால் பலநூறு கோடி அளவுக்கு ஆற்றல்களை பெற முடியுமாம்.இதில் இருந்தே நாம் கருவறை முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.எல்லா இடங்களிலும் காந்த அலைகள் இருந்தாலும் கருவறையில்தான் அவை நமக்கு ஆற்றல் தரும் சக்தியாக மாறுகிறது என்பதையாராலும் மறுக்க முடியாது.

இதை கருத்தில் கொண்டே கருவறை எல்லா பக்கமும் மூடப்பட்டுள்ளது.கருவறையில் ஒரே ஒரு விளக்கு தொங்க விட்டிருப்பார்கள். அல்லது விக்கிரகத்துக்கு பின்னால் ஒரு செயற்கை ஒளி வட்டத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். இவை தான் கருவறையில் உள்ள இறை ஆற்றல்களை வெளிப்பக்கத்துக்கு எகிற செய்கிறது.தினம், தினம் இந்த இறை ஆற்றல்கள் திரண்டு வெளி வருகிறது. அதனால்தான் கருவறையில் பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம்,குங்குமம், விபூதி, எண்ணை என எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தாலும் அவை நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.
அதற்கு பதில் கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக மாறுகிறது.



கருவறை நைவேத்தியங்கள் மகத்துவம் பொருந்தியமருந்தாக மாறுவதற்கு இறை ஆற்றல்களே காரணமாகும்.கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் போதும், நைவேத்தியம் படைக்கும்போதும் திரை போட்டு மூடி விடுவார்கள்.தீபாராதனை காட்டும்போது திரையை விலக்குவார்கள். இதிலும் விஞ்ஞான தத்துவமே பின்புலமாக உள்ளது.கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். 

திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்தஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும்.இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.இதை கருத்தில் கொண்டுதான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.


கோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவைமிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில்பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர்.

ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும்.எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம்.


இந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன்‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல இணைக்கின்றன.

எனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’ பெற கருவறை வழிபாடு மிக, மிக முக்கியமானது.வெளியே வெயில் உள்ளே குளிர்ச்சி கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. 

இதன் கர்ப்பகிரகம் சந்திரகாந்தகல்லால் ஆனது.இது தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கர்ப்பகிரகத்தை மாற்றும். 

அதாவது வெளியே வெப்பமாக இருக்கும் போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாக இருக்கும். வெளியே கடும் குளிராக இருந்தால் கர்ப்பகிரகத்தின் உள்பகுதி வெப்பமாக மாறிவிடும்