Wednesday, December 30, 2015

2015 review திரும்பிப் பார்க்கிறேன்..2015யை..

2015 review 
திரும்பிப் பார்க்கிறேன்..2015யை..
-----------------------------------

இழப்பு:
------------
1. அப்துல் கலாம்
2. ஜெயகாந்தன்
3. நாகூர் ஹனிபா
4. பிரசன்ன குமார் (விவேக் மகன்)
5. மாரியம்மாள் (வைகோ தாயார்)
6. வைபவ் - திவ்யா (ஹரியானாவில் உயிரோடு எரிக்கப்பட்ட இரு தலீத் குழந்தைகள்)
7. விஷ்ணு பிரியா DSP
8. சசி பெருமாள்
9. ஆச்சி மனோரமா..
10.MSV

இயற்கைப் பேரிடர்கள்:
--------------------------------------
1. நேபாளப் பூகம்பம்
2. சென்னை-கடலூர் வெள்ளம்

செயற்கைப் பேரிடர்கள்:
----------------------------------------
1. மியான்மர் கலவரம்
2. மவுலிவாக்கம் கட்டிடம்
3. ரஷ்ய விமானம்..
4. செம்மரக் கடத்தல் படுகொலைகள்

சல்யூட்:
-------------

1.உதவும் உள்ளம் நிறைந்த தன்னார்வ இளைஞர்கள் இளைஞிகள்..
1a.திருநங்கை யாசினி..
2. பாரத ரத்னா அடல்ஜி..
3. டிராபிக் ராமசாமி..
4. சகாயம்..
5. தோழர்.நல்லகண்ணு..
6. இஸ்லாமியத் தோழர்கள்..
7. Tamilnadu weatherman John
8. மழை ரமணன்..
9.Shaju Chakko

கோபம்:
-------------
1. மூடப்படாத டாஸ்மாக்
2. கண் தெரியாதோர் மீதான காவல்துறை தாக்குதல்.
3. அம்மா ஸ்டிக்கர்..
4. குமாரசாமி..
5. கல்யாண் ஜீவல்லர்ஸ் நயன்தாரா கூட்டம்
6. ராதிகா பேட்டி
7. மோடியின் ஃபோட்டோ மோகம்..
8. ஓ.பன்னீர் நிர்வாகம்..
9. ஜெ & கருணாநிதி & விஜயகாந்த்
10. கொலிஜியம் தீர்ப்பு
11. ரேஷன் கார்டு உள்தாள்..
12. ராமனை வணங்காதவர்கள் வேசியின் மக்கள்..
13. மத்திய அரசே ஃபோட்டா ஷாப் வேலையில் இருமுறை ஈடுபட்டது..
14. பீப் சிம்பு ..
15. வாக்காளப் பெருங்குடி மக்களே..
16. சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம்..
17. M.A.M சிதம்பரம், தன் மகனால் நடத்தப்பட்ட விதம்..

கேலிக்கூத்து:
-----------------------
2,40,000 கோடி அந்நிய முதலீடு..
10,00,000 ரூபாய் கோட்..
விஜய் டிவியில் கும்கி..

வருத்தம்:
----------------
1. நந்தினி கைது..
2. கோவன் கைது..
3. டிராபிக் ராமசாமி மீதான வழக்கு..
4. மோடியின் தொடர் சுற்றுப்பயணம்..
5. அண்ணா நூலகப் பராமரிப்பு..
6. மாட்டுக்கறி விவகாரம்..

மகிழ்ச்சி:
---------------
1. ராதாரவியின் வீழ்ச்சி..
2. அரவிந்த் கெஜ்ரிவால்..
3. பீஹார் தேர்தல்..
4. ரங்கராஜ் பாண்டே..
5. 'சோ' வின் மறுஜென்மம்..
6. Ambuja Simi-ன் 1,50,000 followers..

பிரபலங்கள்:
---------------------
1. தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ..
2. இது அட்ராக் பண்ற புலி..
3. தெறிக்க விடலாமா..
4. ஆஹான்..
5. என்னமா நீங்க,இப்டிப்பண்றீங்களேம்மா..
6. கத்துக் கொண்ட மொத்த வித்தையையும் இறக்கிவிட்ருக்கேன்..
7. மந்திரி-தந்திரி..
8. எனக்கென்று யார் இருக்கா?
9. சவுக்கு சங்கர்..

போய் வா.. 2015..!bye bye. Ta ta.   
..

விஷ்ணு சஹ்ஸரநாமம் ஏன் சொல்ல வேண்டும் ?

விஷ்ணு சஹ்ஸரநாமம் ஏன் சொல்ல வேண்டும் ?

விஷ்ணு சஹ்ஸரநாமம் மஹாபாரதத்தில் யுத்தகளத்தில் பிஷ்மர் தருமருக்கு சொல்வதாக வியாசரால் அமைக்கப்பட்டுள்ளது.

மோஷம் பெறும் வழியை அம்பு படுக்கையில் படுத்திருக்கும் பிஷமரிடம் தருமர் கேட்க அதற்கு அவர் பதிலாக பகவானின் ஆயிரம் நாமங்களை சொல்வதே இந்த ஸ்லோகங்கள் 

ஒவ்வொரு மனிதருக்குமான ஸ்லோகங்கள் இதில் அமைந்துள்ளன அவற்றில் நமக்கான ஸ்லோகத்தை எப்படி தெரிந்து கொள்வது என பார்ப்போம் 

நட்சத்திரங்கள் 27 அதன் பாதங்கள் 4 அவை முறையே 108. இதில் மொத்தம் 108 ஸ்லோகங்கள் உள்ளன உங்கள் நட்சத்திரம் அதன் பாதம் அறிந்திருந்தால் உங்களுக்கான ஸ்லோகத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம் 

1.  அஸ்வினி  1 -4
2.  பரணி 5 -8 
3.  கார்த்திகை 9 - 12 
4.  ரோகிணி  13 - 16
5.  மிருகசிருஷம்  17 -20
6.  திருவாதிரை  21 -24
7.  புனர்பூசம் 25 28
8.  பூசம் 29 -32
9.  அயில்யம் 33 -36 
10. மகம் 37 - 40 
11. பூரம் 41 - 44
12. உத்திரம்  45 -48
13. ஹஸ்தம் 49 -52
14. சித்திரை  53 - 56
15. ஸ்வாதி  57 -60 
16. விசாகம் 61 -64
17. அனுஷம் 65 - 68
18. கேட்டை 69 -72
19. மூலம் 73 - 76
20. பூராடம் 77 -79 
21. உத்திராடம் 80 - 83
22. திருவோணம்  84 - 87
23. அவிட்டம் 88 - 91
24. சதயம் 92 - 95
25.  பூரட்டாதி 96 - 99
26. உத்திரட்டாதி 100 - 103
27. ரேவதி 104 - 108 

இதனை படிப்பதால் அத்மஞானமும் பிரம்மஞானமும் பெருகும். 

நம் உடம்பில் இயங்காமல் இருக்கும் அனைத்து சஹஸ்ர சக்கரங்களும் இயங்க தொடங்கும் என்பது கண் கண்ட உண்மை 

தினமும் பராயணம் செய்வோம் 

முழுவதுமாக படிக்க முடியாவிட்டாலும் நம் நடச்த்திரம் மற்றும் பாதத்திற்கான ஸ்லோகத்தை எடுத்து சொல்லி வருவோம்..

Composed by Srivari Prakash - 

Tuesday, December 29, 2015

அறுவடைக்கும் திருமணத்திற்கும் என்ன வித்தியாசம்?


அறுவடைக்கும் திருமணத்திற்கும் என்ன வித்தியாசம்?

அறுவடைக்கும் திருமணத்திற்கும் என்ன வித்தியாசம்?

மனவளக் கட்டுரை! எண்ணிக்கை வடிவில்!

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என்
நிழலே போதும்
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்து கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது . பயத்தை உதறி எறிவோம்.
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒரு வருடன் விவாதிப்பது சிறப்பாகும்.
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்.
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
27. வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கி வைத்து கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர் தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

   ?


------------------------------------

பிஸினெஸ் தந்திரங்கள்

3 பிஸினெஸ் தந்திரங்கள்


 1⃣ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன. கூட்டம் கூடி விட்டது.வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா? " " என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?" அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.
அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்? எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார். அதோடு " தம்பி 
இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள். உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார். மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.
முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது.பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைது சென்று விட்டனர். அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ? " என்றார். 
பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். " அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி"



2⃣.பிசினஸ் தந்திரம் 

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க.
அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.

3⃣பிஸினெஸ் ரகசியம்

சித், ஹாரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாயகேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் சித். அது கப்ஸா, அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்!
கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை சித்திடம் கேட்பார். சித் கடைக்கு பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் ஹாரியிடம் ‘இந்த ட்ரெஸ் என்னப்பா விலை’ என்று கத்துவார். ஹாரி அங்கிருந்து ‘நாற்பத்தி இரண்டு டாலர்’ என்பார். சித் உடனே ‘எவ்வளோ’ என்று மீண்டும் கேட்பார். ‘நாற்பத்திரண்டு டாலர் டா செவிட்டு முண்டமே’ என்று ஹாரி பதிலுக்கு கத்துவார். சித் கஸ்டமரிடம் திரும்பி ‘இருபத்திரண்டு டாலர்’ என்பார். கஸ்டமரும் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்!
நாற்பத்தி இரண்டு என்று கேட்ட மனதிற்கு இருப்பத்திரண்டு என்பது மகா சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது. இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு. அந்த துணியின் உண்மையான மதிப்பு பதினைந்து டாலர்தான்!



🌰🌰🌰🌰🌰🌰🌰🌰
ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு
மகானிடம் சென்று கேட்டான்:

"நான் திராட்சை சாப்பிடலாமா?''

மகான் சொன்னார்: "ஓ... தாராளமா''

"அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?''

"ஓ.. பயன்படுத்தலாமே?''

"புளிப்புச் சுவைக்காக கொஞ்சம்
வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?''

"அதிலென்ன சந்தேகம்?''

"அப்படீன்னா இதுவெல்லாம்
சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது
மட்டும் தப்பு என்று
சொல்கிறார்களே?''

மகான் யோசித்தார். குறும்புக்கார
ஆசாமியிடம் கேட்டார்:

"இங்க பாருப்பா... உன் தலை மேலே
கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா
உனக்குக் காயம் ஏற்படுமா?''

"அதெப்படி ஏற்படும்?''

"தண்ணீர் ஊற்றினால்?''

"தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம்
ஏற்படும்?''

"மண்ணையும் தண்ணீரையும் கலந்து
சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில்
போட்டால்?''

"காயம் ஏற்படும்''

"நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்''
என்றார் மகான்..

படித்தது.....ரசித்தது ...👏👏

உயிராற்றலின் இயக்க அலைகள்

உயிராற்றலின் இயக்க அலைகள்

ஒருவர் ஒரு திருவிழாவுக்குப் போக வேண்டுமென்று எண்ணுகிறார். அந்த எண்ணத்தில் ஒரு ஊர், அங்கு போகும் செயல், அங்கு காண விழையும் காட்சிகள், அனைத்தும் அகக்காட்சியாகின்றன. இவ்வாறு புறமனத்தால் ஒரு எண்ணம் உருவாகும் போது அதற்கு வேண்டிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய எழுச்சிகள், உயிராற்றலின் இயக்க அலைகள் மூலம் ஏற்படுகின்றன. உயிராற்றலை மூளையின் சிற்றறைகளில் எத்தனை கோடி இணைந்து அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாக மாற்ற முடியுமோ அத்தனையும் இணைந்து இயங்கியே ஒரு எண்ணத்தில் அக்காட்சி உருவாகின்றது.இவ்வாறு மூலையில் ஏற்படும் பதிவுகளும் பிரதிபலிப்புகளும் 'நடுமனமாகும்'. மேலும் இந்தப் பதிவுகள் வித்தணுக்களில் தரப் (மரபுப்) பதிவாக (Heriditary quality) பதிவு பெறுகின்றது இதுவே 'அடிமனமாகும்'. இந்த இயக்கத்தின் தொடராக உடலின் உயிராற்றல் அதிர்வு அலை இயக்கம் வேறுபட்டு உடல் முழுவதும் உள்ள அணு அடுக்குகளில் பதிவுகள் உண்டாகின்றன. அது மட்டுமல்ல ஒருவர் ஓர் எண்ணம் எண்ணினால் அது பிரபஞ்ச சமஷ்டி உயிரோடு தொடர்பு கொண்டு எண்ணிறந்த மக்கள் மூளையிலும் பதிவாகின்றதோடு பிரபஞ்ச உயிரில் (universal soul) நிரந்தரப் பதிவாகவும் ஆகிவிடுகின்றது. இவ்வாறு ஓரு தடவை ஒருவர் எண்ணும் எண்ணத்தால் ஏற்படும் உடல், மூளை, தன்னுயிர், பிற உயிர், சமஷ்டி உயிர் பதிவுகள் திரும்பத் திரும்பப் பிரதிபலிப்பாகும் போது எண்ணம் தோன்றிய இடத்திலேயே அதிக ஆழமாகச் செயலாவது இயல்பு. சமுதாயத்தைப் பற்றியோ தனிப்பட்ட பிறரைப் பற்றியோ எண்ணும் எண்ணங்கள் உரியவரிடம் அதிக அழுத்தமாக திரும்பத் திரும்பப் பிரதிபலிக்கும்.பல தடவை திருவிழாவிற்குப் போக வேண்டுமென்ற எண்ணம் பிரதிபலிக்கும்போது எண்ணத்திற்குச் செயலாற்றவல்ல போதிய வலுவு ஏற்பட்டுவிடும். இந்த எண்ணத்தால் ஏற்பட்ட உயிராற்றல் விரைவு அதிர்வு அலைகள் உடல் கருவிகளையெல்லாம் ஊக்கி எண்ணத்தைச் செயலாற்றத் தயார் நிலையை ஏற்படுத்திவிடும். பிறகு திருவிழாவிற்குப் போய் பார்த்துக் களிக்கும் செயல் மலர்கின்றது. அதனால் இன்ப துன்ப அனுபவங்கள் பதிவாகின்றன. இவ்வாறு செயலாகப் பதித்த எண்ணமும் செயலும் தேவையாக, பழக்கமாக, சூழ்நிலைக் கவர்ச்சியாக மாறி, அடிக்கடி மனிதனைச் செயல்படுத்துகின்றன. இந்த விளக்கத்தைக் கொண்டு ஒரு எண்ணம் எவ்வாறு பதிவு, பிரதிபலிப்பு, செயலாற்றல், இன்ப துன்ப விளைவுகள் என்ற நான்காக மாற்றம் பெறுகிறது என்பதை நன்குணரலாம்.--வேதாத்திரி மகரிஷி

வீட்டுக் கடன்...

வீட்டுக் கடன்... 

சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!

லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக் கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.

இந்தியாவில் 15,  ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம்.

* கடன் தொகை ரூ. 25 லட்சம்

* திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்)

* வட்டி: 10%

* மாதத் தவணை ரூ. 21,939

இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம்.

இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்கு பதில் சில உத்திகளைப் பின்பற்றி வட்டியைக் கணிசமாக மிச்சப்படுத்தலாம். அவை பற்றி...

(1) மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை அதிகரித்துக் கட்டுதல்!

மாதத் தவணை ரூ.21,939 என்பதற்கு பதில் கூடுதலாக மாதம் ரூ.3,061 அதிகரித்து ரூ.25,000 ஆக கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக்கு பதிலாக 216-வது மாதத்திலே  முடிந்துவிடும். இங்கே வட்டிக்காக செல்லும் தொகை ரூ.29 லட்சம்தான். அதாவது, மாதம் ரூ.3,061 அதிகரித்து கட்டுவதன் மூலம் வட்டியில் ரூ.25 லட்சம் மிச்சமாகும்.

(2) ஆண்டு தோறும் தவணை அதிகரித்து கட்டுதல்!

முதல் ஆண்டு மட்டும் ஆரம்பத்தில் கட்டும் வீட்டுக் கடனுக்கு உரிய தவணையை கட்டி விட்டு, அதன்பிறகு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வரும்பட்சத்தில் வட்டி கணிசமாக மிச்சமாகும். அதாவது, முதல் ஆண்டு தவிர, அடுத்து வரும் ஆண்டுகளில் தவணையை மாதம் ரூ.5,000 வீதம் அதிகரித்து கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக்கு பதில் 103 மாதங்களிலேயே முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை சுமார் ரூ.15 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.38.5 லட்சம் மிச்சமாகும்.

(3) ஆண்டுதோறும் கூடுதல் தொகை கட்டுதல்!

வீட்டுக் கடன் தவணை தொகையை அப்படியே கட்டிவரும் நிலையில் இரண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வருவது மூலமும் வீட்டுக் கடனுக்கான வட்டியில் கணிசமாக ஒரு தொகையை மிச்சப்படுத்த முடியும். உதாரணமாக ஒருவர், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கூடுதலாக அசலைக் கட்டி வருகிறார் என்றால், அவரது கடன் 159-வது மாதத்தில் முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை ரூ.19.21 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.34.77 லட்சம் மிச்சமாகும்.

உங்களுக்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றி வீட்டுக் கடனை விரைந்து அடைக்க முயலுங்கள்!

இப்படிக்கு
Er.Gopinath M.E (Stru)

Monday, December 28, 2015

சிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்

சிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள் 
- ஹஸன் பஷரி, உளவியல் ஆலோசகர்

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்பாட்டுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து  அவர்களை தொட்டு எழுப்பாட்டுங்கள்.

2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுருசுருப்புடனும் எழும்புவதற்கு துணை புரியும்.

3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன் உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா? நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள் அவர்களை அன்பாக அணைத்து முத்தமிடுங்கள்.

4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன் டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள். ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.

5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடாவி விடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்குமிடையில் ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும். சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செமிபாடடைவதற்கும் காரணமாய் அமைந்து விடும்.

6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள். அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை மனக் கவலைகளை நீக்கி உங்கள் மீது அவர்களையறியாத ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.

7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும். 

8. உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.

9. பொய், ஏமாற்று, திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.

10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள். பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.

11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள். கல்வியின் முக்கியத்துவம், ஏன் கற்க வேண்டும் என எடுத்துறைங்கள்.

12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள். பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள். அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.

13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.

14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்; அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.

15. குழந்தைகள் நவீன தொழில் நுற்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்; கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.

16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள். குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது (பயந்த சுபாவத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும், சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.

இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.

குறிப்பு:

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.
Best Wishes

ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம்

மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.

இதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

எண்நட்சத்திரங்கள்கிரகம்தெய்வம்
1.கார்த்திகை, உத்திரம், உத்திராடம் சூரியன்சிவன்
2.ரோகிணி, அத்தம், திருவோணம்சந்திரன்சக்தி
3.மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்செவ்வாய்முருகன்
4.திருவாதிரை, சுவாதி, சதையம்ராகுகாளி, துர்க்கை
5.புனர்பூசம், விசாகம், பூரட்டாதிகுருதட்சிணாமூர்த்தி
6.பூசம், அனுசம், உத்திரட்டாதிசனிசாஸ்தா
7.ஆயில்யம், கேட்டை, ரேவதிபுதன்விஷ்ணு
8.மகம், மூலம், அசுவினிகேதுவினாயகர்
9.பரணி, பூரம், பூராடம்சுக்கிரன்மகாலட்சுமி
- -


மேற்கூறிய வழிமுறை இல்வாழ்க்கைக் குறியது

“பிறவிப் பெருங்கடல் நீத்துவர்
நீத்தார் இறைவனடி சேராதவர்”

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...!

வாழ்வை வளமாக்கும்
சிந்தனைகள்...!
1. நாணயமாக இருப்பவனிடம்
எப்போதும் குழந்தைத்தனம்
காணப்படும்
2. உன் தகுதி பிறருக்குத்
தெரியவேண்டுமானால் பிறர்
தகுதியை நீ தெரிந்துகொள்.
3. திருட்டுப்
பொருளை விலைக்கு வாங்குபவன்
திருடனை விட மோசமானவன்.
4. தூக்கம் எப்போது குறைய
ஆரம்பிக்கிறதோ அப்போதுதான்
வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
5. அறிவுக்காக செய்யப்படும்
முதலீடு எப்போதுமே கொழுத்த
வட்டியையே தரும்.
6. நல்ல மனைவியை விட உயர்ந்த
வரமும் இல்லை. கெட்ட
மனைவியை விட மோசமான
சாபமும் இல்லை.
7. முதலில் மனிதன் மதுவைக்
குடிக்கிறான்.
பின்பு மது மனிதனை குடிக்கிறது.
8. ஆயிரம் பேர்
சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக்
கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட
ஒழுக்கமான ஒரு பெண்
வேண்டும்.
9. இரண்டு கால் உள்ள
எல்லோரும் நடந்து விடலாம்.
ஆனால் இரண்டு கை உள்ள
எல்லோருமே எழுதிவிட
முடியாது.
10.
உழைப்பு உடலை வலிமையாக்கும்.
துன்பங்களே மனதை வலிமையாக்கும்.
11.ஒருவன் தான் செய்த
தவறை ஒத்துக்கொள்ள
வெட்கப்படக் கூடாது.
ஒப்புக்கொள்வதன் பொருள்
என்ன? அவன் நேற்றைவிட
இன்று அதிக அறிவு
பெற்று விட்டான் என்பதே.
12. வாழ்க்கை சுவையானது.
உங்கள் அறியாமையினால்
அதை நரகமாக்கி விடாதீர்கள்.
13. பிறரைப் பாராட்டுங்கள்.
பாராட்டு கிடைக்கும்.
பிறரை மதியுங்கள். மதிப்புக்
கிடைக்கும்.
அன்பு செலுத்துங்கள்.
அன்பு தேடி வரும்.
இவை ஒற்றைவழிப் பாதைகள்
அல்ல. இரட்டை வழிப் பாதைகள்.
அன்பில்
வணிகத்திற்கு இடமில்லை.
வணிகத்தில்
அன்புக்கு இடமில்லை.
14. தனக்கென வாழ்ந்தவன்
தாழ்ந்தவன் ஆகிறான்.
பிறருக்கென வாழ்பவன்
பெருவாழ்வு வாழ்கிறான்.
அடக்கம் அணிகலன் மட்டுமல்ல.
அறத்தின் காவலன்.
15. சொற்கள் நம் சிந்தனையின்
ஆடைகள். அவற்றைக்
கந்தல்களாகவும்,
கிழிசல்களாகவும்,
அழுக்காகவும் உடுத்தக்
கூடாது.
16.
சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத்
தோன்றும். ஊக்கமுள்ளவனுக்க
ு எல்லாமே எளிதாகத் தோன்றும்.
17. எந்தவிதக் கொள்கையும்,
நோக்கமும் இல்லாத
வாழ்க்கை திசைகாட்டும்
கருவி இல்லாத கப்பல்
நடுக்கடலில்
நிற்பதற்கு ஒப்பாகும்.
18.எந்த மனிதன் தீவிரமாகவும்,
திடமாகவும்,
சிந்திக்கிறானோ அந்த
சிந்தனைகளின்
வளர்ச்சி கலையாகும்.
அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன்
ஆவான்.
19. பல அறிஞர்களுடன் பழகினால்
நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல
பணக்காரர்களுடன் பழகினாலும்
பணக்காரன் ஆக மாட்டாய்.
20. இன்பத்தின் இரகசியம் எதில்
அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ
விரும்பியதைச் செய்வதில் அல்ல.
நீ செய்வதை விரும்புவதில்தான்

இனிய காலை வணக்கம்வாழ்வை வளமாக்கும்
சிந்தனைகள்...!
1. நாணயமாக இருப்பவனிடம்
எப்போதும் குழந்தைத்தனம்
காணப்படும்
2. உன் தகுதி பிறருக்குத்
தெரியவேண்டுமானால் பிறர்
தகுதியை நீ தெரிந்துகொள்.
3. திருட்டுப்
பொருளை விலைக்கு வாங்குபவன்
திருடனை விட மோசமானவன்.
4. தூக்கம் எப்போது குறைய
ஆரம்பிக்கிறதோ அப்போதுதான்
வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
5. அறிவுக்காக செய்யப்படும்
முதலீடு எப்போதுமே கொழுத்த
வட்டியையே தரும்.
6. நல்ல மனைவியை விட உயர்ந்த
வரமும் இல்லை. கெட்ட
மனைவியை விட மோசமான
சாபமும் இல்லை.
7. முதலில் மனிதன் மதுவைக்
குடிக்கிறான்.
பின்பு மது மனிதனை குடிக்கிறது.
8. ஆயிரம் பேர்
சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக்
கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட
ஒழுக்கமான ஒரு பெண்
வேண்டும்.
9. இரண்டு கால் உள்ள
எல்லோரும் நடந்து விடலாம்.
ஆனால் இரண்டு கை உள்ள
எல்லோருமே எழுதிவிட
முடியாது.
10.
உழைப்பு உடலை வலிமையாக்கும்.
துன்பங்களே மனதை வலிமையாக்கும்.
11.ஒருவன் தான் செய்த
தவறை ஒத்துக்கொள்ள
வெட்கப்படக் கூடாது.
ஒப்புக்கொள்வதன் பொருள்
என்ன? அவன் நேற்றைவிட
இன்று அதிக அறிவு
பெற்று விட்டான் என்பதே.
12. வாழ்க்கை சுவையானது.
உங்கள் அறியாமையினால்
அதை நரகமாக்கி விடாதீர்கள்.
13. பிறரைப் பாராட்டுங்கள்.
பாராட்டு கிடைக்கும்.
பிறரை மதியுங்கள். மதிப்புக்
கிடைக்கும்.
அன்பு செலுத்துங்கள்.
அன்பு தேடி வரும்.
இவை ஒற்றைவழிப் பாதைகள்
அல்ல. இரட்டை வழிப் பாதைகள்.
அன்பில்
வணிகத்திற்கு இடமில்லை.
வணிகத்தில்
அன்புக்கு இடமில்லை.
14. தனக்கென வாழ்ந்தவன்
தாழ்ந்தவன் ஆகிறான்.
பிறருக்கென வாழ்பவன்
பெருவாழ்வு வாழ்கிறான்.
அடக்கம் அணிகலன் மட்டுமல்ல.
அறத்தின் காவலன்.
15. சொற்கள் நம் சிந்தனையின்
ஆடைகள். அவற்றைக்
கந்தல்களாகவும்,
கிழிசல்களாகவும்,
அழுக்காகவும் உடுத்தக்
கூடாது.
16.
சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத்
தோன்றும். ஊக்கமுள்ளவனுக்க
ு எல்லாமே எளிதாகத் தோன்றும்.
17. எந்தவிதக் கொள்கையும்,
நோக்கமும் இல்லாத
வாழ்க்கை திசைகாட்டும்
கருவி இல்லாத கப்பல்
நடுக்கடலில்
நிற்பதற்கு ஒப்பாகும்.
18.எந்த மனிதன் தீவிரமாகவும்,
திடமாகவும்,
சிந்திக்கிறானோ அந்த
சிந்தனைகளின்
வளர்ச்சி கலையாகும்.
அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன்
ஆவான்.
19. பல அறிஞர்களுடன் பழகினால்
நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல
பணக்காரர்களுடன் பழகினாலும்
பணக்காரன் ஆக மாட்டாய்.
20. இன்பத்தின் இரகசியம் எதில்
அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ
விரும்பியதைச் செய்வதில் அல்ல.
நீ செய்வதை விரும்புவதில்தான்

இனிய காலை வணக்கம்

பஞ்சகல்ப குளியல் முறை

“பஞ்சகல்ப குளியல் முறை”

                               இந்த கல்பம் சித்தர்களால் புகழப்பட்டது. இதை உபயோகித்தால் முடி தும்பி போலாகும்.கண்கள் ஒளி பெறும்.பகலில்கூட நட்சத்திரங்கள் காணலாமென்று புகழ்ந்துள்ளனர் இதை உபயோகித்து சரும வியாதிகளும் குணப்பட்டதுண்டு.பீனிசத்திற்கு குணம் கண்டதுண்டு. மேக வியாதிகள் பல குனமாகுமென்று சித்தர்கள் சொல்லுகின்றனர். அனுபவத்திலும் இது உண்மை. 

பஞ்சகல்பம் செய்முறை:
                                 நெல்லி வற்றல் 150 கிராம்
                                  வெள்ளைமிளகு  125 கிராம்
                                   கடுக்காய் 100 கிராம்
                                    கஸ்தூரி மஞ்சள் 75 கிராம்
                                     வேப்பன் விதை 50 கிராம்
                                               இவை அனைத்தையும் பொடித்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு கோப்பை பசுவின் பால் விட்டு காய்ச்சி எடுத்து இளஞ்சூட்டுடன் தலையில் தேய்த்துக் கொள்ளவும். சொறி சிரங்கு இருப்பவர்கள் சூரனத்தையும் பாலையுங்கூட்டி உடம்பெல்லாம் தேய்க்கலாம். இப்படிச் செய்வதினால் கண்களில் வரும் பிணிகள, மூக்கில் உண்டாகும் பீனிசங்கள், காதில் அடைப்பு முதலிய பல வியாதிகள் நீங்கி உடல் வன்மை பெறும்.
                                                    நன்றி
               

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது ஏன்?

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது ஏன்?
சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர்.
உலக இன்பங்கள் மட்டுமின்றி இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும்.
‘ராம’ என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி ‘மரா’ என்றே முதலில் உச்சரித்தார். ‘மரா’ என்றாலும் ‘ராம’ என்றாலும் ‘பாவங்களைப் போக்கடிப்பது’ என்று பொருள்.
ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ‘ரமா’ என்று அவளுக்கு பெயருண்டு. ‘ரமா’ என்றால் ‘லட்சுமி’. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம்.
ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும்.
ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். ‘ரா’ என்றால் ‘இல்லை’ ‘மன்’ என்றால் ‘தலைவன்’. ‘இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை’ என்பது இதன் பொருள்.

வெரிகோஸ் வெயின்" (varicose veins)

"வெரிகோஸ் வெயின்" (varicose veins) "
பிரச்னைக்கு தீர்வு...

நீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு "வெரிகோஸ் வெயின்" என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு. 
*
அது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
*
முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு
*
சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.
*
நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளி வரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும். அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். (அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)
*
முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,
*
முக்கிய குறிப்பு:- பரோட்டா, மஸ்கத் அல்வா, ஊறுகாய், அப்பளம், ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.
*
48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

சளி, இருமலைத் துரத்தும் மிளகு!

சளி, இருமலைத் துரத்தும் மிளகு!

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் - மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி இது!

* சளி பிரச்னையில் வதைபடும்போது, இரவு உறங்குவதற்கு முன் 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் விட்டு, 10 பூண்டு பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் 2, 3 சிட்டிகை மிளகுத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு பனைவெல்லமோ, சர்க்கரையோ சேர்த்து நன்றாகக் கடைந்து சாப்பிட்டால் சளி விலகுவதோடு இரவில் சுவாசப் பிரச்னை இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம். கூடுதல் போனஸாக மலச்சிக்கல் தீரும்.

* வறட்டு இருமலின்போது மிளகுத்தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பலன் கொடுக்கும். கோழை கட்டியிருக்கும்போது 5 மிளகும், 10 துளசி இலையையும் 200 மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தைக் குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.

* ஆஸ்துமா தொந்தரவு அதிகரிக்கும் வேளையில் வெற்றிலையுடன் 5 மிளகை சேர்த்து மென்று தின்றால் சுவாசம் எளிதாகி நிம்மதி கிடைக்கும்.

* தேள், பூரான் மற்றும் விஷ பூச்சிகள் எதாவது கடித்தாலோ, என்ன காரணம் என்றே தெரியாமல் உடம்பெல்லாம் தடித்து வீங்கி அலர்ஜி வந்தாலோ வெற்றிலையுடன் 3 அல்லது 5 மிளகு சேர்த்து மென்று தின்றால் விஷம் முறிந்துவிடும்.

* மூக்கடைப்பு ஏற்பட்டிருக்கும்போது மிளகை தீயில் சுட்டு அதன் புகையை சுவாசித்தால் அடுத்த நொடியே அடைப்பு விலகுவதோடு தடையின்றி சுவாசிக்க முடியும்.
#doctorvikatan

Awesomee ......A story in one of the schools in Chennai where admission is considered impossible!!!

Awesomee ......A story in one of the schools in Chennai where admission is considered impossible!!!

To get UKG admission 

The child could not understand why they brought her there..

When we all were standing, the school principal started to converse with the child....yes...in English only! This is one of the most memorable interview I have ever witnessed in my life..
Here goes..

"What's your name?"

"Sarithra"

"Good. Tell me something you know"

"I know many things. Tell me what you want...!"

Alas, there is no better point for not getting the admission!

Sarithra's mother was trying to make up the situation but the principal stopped her..

Turning to child, she said.. "Tell any rhyme or story which you know.."

Again,"Which one you want.. Rhyme or Story!?"

"Ok. Plz tell me a story.."

"Do uou want to hear what I studied or what I wrote..!?"

Taken to surprise, she asked "Oh! you write stories...???"

"Why should I not write..?"

Now even I was taken aback But she was impressed with the answer. She ( including us) would have not heard such a story in our life...

Ok, tell me story which you have written-?

Sarithra said "Ravanan kidnapped Sita & took her to Srilanka"

The opening scene failed to impress but still she encouraged the child to continue..

"Rama asked Hanumans help to rescue Sita. Hanuman too agreed to help Rama ..."

"Then?"

"Now, Hanuman called his friend Spider man." No one expected this twist in the story!!

"Why?"

"Because there are lot of mountains between India and Srilanka.. but if we have Spiderman we can go easily with his rope..."

"But Hanuman can fly isn't it.. ?"

"Yes. But he is having Sanjeevi Mountain on one hand so he cannot fly very fast.!"

All is quiet, after a while Sarithra asked "Should I continue or not?.".

"Ok plz continue!"

"Hanuman and Spiderman flew to Srilanka and rescued Sita. Sita said Thanks to both!"

"Why"

"When you are helped you should say Thanks!" So "Hanuman is now called Hulk..."

All were surprised.She realized our curiosity and said " Now Sita is there, so to take her safely back to Rama she called Hulk"

"What??? "Hanuman can carry Sita right?"

"Yes. But he has Sanjeevi Mountain in one hand and has to hold spider man on the other"

No one could control thier smiles. " So when they all started to India they met my friend Akshay! "

"How come Akshay there now?"

"Because its my story and I can bring any one there!"

The principal didn't get angry but waited for the next twist

Then all started to India and landed at Chennai Velechery bus stop! 

Now I asked,"Why they have landed In Velechery bus stop?

"Because they forgot the way..& Hulk got an idea and called Dora!"

I came to know about Dora only there...!

"Dora came and she took Sita to Velechery Venus Colony...that's all!" 

She finished the story with a smile.. 😀

The principal asks "Why venus Colony...?"

"Because sita is there & iam Sita!!!"

The principal was impressed and embraced the child. She has been admitted in UKG & was gifted with a Dora doll...
😂😂😂

Kids can really amaze... but we clip their wings (creativity) expecting them to do things as we see it right & not from their viewpoint..

Let's give every child freedom to do their own thing & watch their dreams come true..

நம் பிள்ளைகள் நல்ல புத்திசாலியாக வளர வேண்டும்

ஒரு நிறுவனம் ...

வேலைக்கு ஆட்கள் தேவை  என்று அறிவித்தது,

அதன்படி_
நிறைய நபர்கள் நேர்கானலுக்கு  வந்திருந்தார்கள்.

அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார  வைத்தார்கள்...

அனைவரிடமும் வினாத்தாள்களும்,
விடைத்தாளும் வழங்கப்பட்டது.

இப்பொழுது அந்த  நிறுவன மேலாளர்  பேசினார்,
இந்த வினாத்தாளில் பத்து  கேள்விகள் உள்ளது.

உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும்.
அதற்க்குள் இந்த  வினாக்களுக்கு நீங்கள்  பதிலலிக்க வேண்டும்.

தகுதியுடைய நபர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும்  என்றார்,

ஐந்து நிமிட நேரம்  ஆரம்பமானது..

நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர். 

நேரம் முடிந்த பின்...
அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர், விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும்  நேரம்  குறைவாக  கொடுத்து விட்டீர்கள், எங்களால் ஐந்து  கேள்விகளுக்கும், ஏழு   கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில்  எழுத முடியவில்லை  என்றனர்.

அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.

அதன்பின், 
அந்த நிறுவன மேலாளர் சொன்னார்.

விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள்  இருவர்  மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய   தகுதியானவர்கள்.
மற்றவர்கள் வீட்டிற்கு  செல்லலாம் என்றார்.

அனைவருக்கும் ஒரே  ஆச்சரியம்,

அனைவரும் ஒரு சேர அந்த  நிறுவனமேலாளரிடம்  கேட்டனர்.

வினாக்களுக்கு சரியான  பதிலளித்த எங்களுக்கு  வேலை இல்லை  என்கிறீர்கள்.
எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த  இருவருக்கு மட்டும் எப்படி  வேலை கொடுத்தீர்கள் என்றனர்.

(இந்த இடத்தில் நமக்குள் தோன்றும் கேள்வியும் இதுதான். பதில் அளித்தவர்கள் இருக்க, பதில்  அளிக்காதவர்களுக்கு வேலையா? )

அதற்கு அந்த மேலாளர்  சொன்னார்,

எல்லோரும்  அந்த  பத்தாவது கேள்வியை படித்துப் பாருங்கள்,
படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்கு  சென்றனர், 

அந்த பத்தாவது கேள்வி இது தான்..

10)  மேற்கண்ட எந்த  வினாக்களுக்கும் நீங்கள்  பதில் அளிக்க வேண்டாம்  என்பதாகும்.

இது சிரிக்க வேண்டிய  விஷயம் அல்ல.
நாம் அனைவரும் சிந்திக்க  வேண்டிய விஷயம்,

இரண்டு நிமிடம் நேரம்  ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும்  படித்திருந்தால் வேலை  நிச்சயம் கிடைத்திருக்கும் அல்லவா? 

சிந்தனைக்கு : 
இந்த நவீன யுகத்தில்   பிள்ளைகளை படி படி என்று படிக்கச் சொல்லி  நிறைய மதிப்பெண்கள்  வாங்க வேண்டும் என்று  நினைக்கிறோமே தவிர,

நம் பிள்ளைகள் நல்ல  புத்திசாலியாக வளர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை...

சாப்பாடு சரியில்லை என்றால் “சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான் நான்..

சாப்பாடு சரியில்லை என்றால் “சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான் நான்...!

இன்று காலையில் கூட சப்பாத்தி மென்மையாக இல்லை என்பதை , கொஞ்சம் மென்மை இல்லாத வார்த்தைகளை உபயோகித்தே என் மனைவியிடம் என்னால் சொல்ல முடிந்தது...!

ஆனால்...
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக “தினகரன்” நாளிதழில் படிக்க நேரிட்டது.... 
இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் , 
அவரது இளமைக்கால வாழ்க்கை :

"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...

என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...

சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....

‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ..

என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...
ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....

சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :
" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"

சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....
" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..
களைத்துப் போய் இருப்பார் ... 
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... 
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ....
நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”

# அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்தபோது அவரது அப்பா மீது , அளவில்லாத மரியாதை எழுந்தது...
அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது...

ஆம்..
“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... 
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”

# இந்த தத்துவத்தை எண்ணியபடியே இன்று இரவு சாப்பிட அமர்ந்தபோது ...
எனக்கு பரிமாறப்பட்ட உணவு கொஞ்சம் ஆறித்தான் போய் இருந்தது...
ஆனால் என் உணர்வுகள் ரொம்பவுமே மாறிப் போய் இருந்தது...

மனைவியின் உணவை இனி ஒருபோதும் குறை சொல்லக் கூடாது என்ற திருந்திய மன உணர்வோடு , இருந்ததை இனிதே உண்டு முடித்தேன்...

# எதிர்காலத்தில் நம் குழந்தைகள் கலாமின் கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..
இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே...!!!

# நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... 
ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...!!!

ஞாபக சக்தியை அதிகரிக்க நான்கு பயிற்சிகள்!..

ஞாபக சக்தியை அதிகரிக்க நான்கு பயிற்சிகள்!..
நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள்
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள நான்கு
முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க
வேண்டும். கவனமான பார்வை,ஆர்வம்,
அக்கறை,புதிதாகச் சிந்தித்தல் இந்த
நான்கிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப்
பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும்
செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே
பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில
பயிற்சி முறைகளைப் பார்ப்போம்....
முதல் பயிற்சி
ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள்.
பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக
எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக,
100, 98 96, என்று இரண்டு இரண்டாகக்
குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு
நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7
வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள்.
இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக்
கொண்டீர்கள் என்றால், உங்களுடைய
நினைவுத் திறன் நல்ல அளவில்
வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இரண்டாம் பயிற்சி
இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை
எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில்
எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக்
கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று
பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம்
எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது
மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள்
என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை
எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று
தெரியவரும். அதை வைத்து உங்கள்
நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து
கொள்ளலாம்.
முன்றாவது பயிற்சி
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை
வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப்
பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம்
ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி
இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதை விட
நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப்
பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின்
சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு
நினைவாற்றலும் பெருகும். முயன்று
பாருங்கள்.
நான்காவது பயிற்சி
உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6
அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு
அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி
புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள்.
(உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை
சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக
எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை
இழுத்து மூடுங்கள். இதே போன்று
இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு
புரோகிராம் எழுதிப் போடுங்கள்.
அதே போன்று அடுத்தடுத்த நான்கு
அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு
படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே
ஆச்சரியமாக இருக்கும். இந்த 6
புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை
அறியாமலே உங்கள் மனதில் தோன்றும்.
இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய
புதிய முறைகளைக் கையாண்டு உங்கள்
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம்.
அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத
இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக்
கொண்டால் வாழ்க்கை நின்று விடும்.
மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது
துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று
வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும்
வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள்.
நினைவாற்றலை மேம்படுத்துங்கள்.
நினைத்ததைச் சாதியுங்கள்...!
நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளும்
நுட்பங்கள்:
1. உடற்பயிற்சி:
உடற்பயிற்சி என்பது உடல் வலிமைக்கும்,
ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல, மூளையை
சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும்,
நினைவாற்றல் பெருக்கத்திற்கும் மிக மிக
அவசியமாகும். எனவே தினமும் குறைந்தது
15 முதல் 20 நிமிடங்களை யாவது
உடற்பயிற்சிக்கு கண்டிப்பாக ஒதுக்க
வேண்டும்.
ஒன்றை நாம் தெளிவாக அறிந்து
கொள்ளாதபோது நம்மால் அதனை
நினைவுக்கு கொண்டு வருதல் இயலாது.
மிகச் சிறிய விஷயம் ஒன்றை பதிவு செய்ய
நம்முடைய மூளை குறைந்தது எட்டு
நொடிகளை எடுத்துக் கொள்கிறது. எனவே,
வலிந்து நினைவில் செய்திகளை
பதிக்கும்போது அமைதியான
இடையூறில்லாத சூழலை உருவாக்கிக்கொள்
ள வேண்டும்.
2. தையல்காரர் அணுகுமுறை:
மேலோட்டமாய் தகவலைக் கேட்டுக்
கொள்வது, போகின்ற போக்கில் பார்த்து
வைப்பது என நுனிப்புல் மேய்வது போல்
இல்லாமல் ஒரு தையல்காரர் எவ்வாறு
அளவுகளை சரியாகக் குறித்துக் கொள்கிறாரோ
அவ்வாறு தகவல்களைப் பதிவு செய்து
கொள்வது என்றைக்குமே மறந்துபோகாது.
3. பல்வேறு புலன்களை பயன்படுத்துதல்:
கண்டிப்பாக நினைவில் வைக்கவேண்டிய
விஷயங்களை வாய்விட்டு சொல்லிப்பார்த்தல்
நல்லது. படித்தறியும்போதுகூட
பார்வையிலேயே படிப்பதைக் காட்டிலும்
வாய்விட்டு (முடிந்தால் சத்தமாக)
படித்தலும், சற்று முயற்சி செய்து ரிதம் போல்
வரிசைப்படுத்திக்கொள்ளுதலும் சிறந்தது.
கேட்பதன் மூலமாக அறிந்து கொள்ளும்போது
தொடர்புடைய நிறம், சொற்கள், வாசம்,
தன்மையோடு பதிவுசெய்து கொள்வதும்
நல்ல பலனைத் தரும்.
4. முன்பே அறிந்தவற்றோடு தொடர்புபடுத்தி
வைத்தல்:
புதிய தகவல்கள் முன்பே அறிந்தவற்றோடு
தொடர்புடையது எனும்போது அவற்றை
நினைவுபடுத்திப் பார்த்து இணைத்து பதிவு
செய்யலாம்.
5. படம் வரைந்து வைத்துக்கொள்ளுதல்:
எழுதிவைக்கும் தகவல்களோடு அதற்குரிய
படங்களையும் (கோட்டுப் படம் போல்)
சின்னச் சின்னதாய் பக்கத்திலேயே
வரைந்துவைத்து எழுதிக் கொண்டால்
நினைவுபடுத்திப் பார்க்கும் போது தன்
கருத்துக்களை தன் நினைவுக்கும், பிறருக்கு
தகவலாகவும் மனிதன் பதிவு செய்துள்ளான்.
இது இன்றைக்கும் சிறந்த முறையாகும்.
ஞாபக சக்தியை அதிகரிக்க பிராமி,
சங்குபுஷ்பி, வல்லாரைக் கீரை போன்ற
ஆயுர்வேத மருந்துகள் உதவுகிறது.மிளகை
எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து
தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக
மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல்
அதிகரிக்கும்.
பீர்க்கங்காய் வேரை எடுத்து நன்கு சுத்தம்
செய்து இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி
வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு
வந்தால் மூளை பலம் பெறும், ஞாபக சக்தி
அதிகரிக்கும்.
பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில்
சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்
பாதாம் பருப்பு, வெண்டைக்காய்,
உருளைக்கிழங்கு, தக்காளி இலை
ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்துச்
சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தகாம்பை
நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி
அதிகரிக்கும். மூளைக்கு பலம் கூடும்.
தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு,
வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத்
தனித்தனியே ஊற வைத்து உலர்த்தி சூரணம்
செய்து கொடுத்து வர நினைவாற்றல்
அதிகரிக்கும்
நினைவாற்றலை அதிகரிக்க பாதம்
சாப்பிடுங்கள்!!
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு
அதிகமான புரதச்சத்து கிடைக்கும்.
அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு
சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும்
என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
அதுபோல் பாதாம் நினைவாற்றலை
அதிகரிக்கும் சக்தி கொண்டது.
குழந்தைகளுக்கு தொடர்ந்து பாதாம் சாப்பிட
கொடுத்து வந்தால் அவர்களது நினைவாற்றல்
அதிகரிக்கும். இரத்தத்திற்கு நன்மை செய்யும்
எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும்
கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும்
தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட
வேண்டும். நீண்ட நேரம் உழைக்க
வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால்
தேவை. வேலையும் கவலையும் அதிகம்
எனில், அப்போது பாதாம் பருப்புகளையே
கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால்
போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக்
கிடைக்கும்.
நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும்
குளுட்டாமிக் அமிலம் உள்ள
உணவுப்பொருட்களை தொடர்ந்து சாப்பிட
வேண்டும். உங்களுக்காக சில குறிப்புகள்:
1. ஞாபகசக்தியை அதிகரிக்கம் முதல் பழம்
ஆப்பிள். இரண்டாவதாக பேரீட்சை,திராட்சை,
மாதுளை,ஆரஞ்சு முதலியன.
2. சமையலில் சீரகம்,மிளகு ஆகியவை
கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இவை
மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக்
கொள்கின்றன.
3. பள்ளிக் குழந்தைகளும், நிர்வாகிகளும்
நினைவாற்றலை அதிகரித்து கொள்வது
மிகவும் அவசியம். அதற்கு தினமும் இரவில்
12 பாதாம் பருப்புகளை ஊறப்போட்டு
காலையில் அதை அரைத்து சாப்பிட
வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால்
நரம்புகளும் பலமாகின்றன. அரைக்கும் முன்
பாதாமின் தோலை நீக்கிவிட வேண்டும். 100
கிராம் பாதாமில் 490 கிராம் பாஸ்பரஸ்,
தாதுஉப்பு இருக்கிறது. குளுட்டாமிக்
அமிலமும் இதில் உள்ளது.
4. கோதுமை, சோளம், பார்லி, காராமணி,
பீட்ரூட், சோயாபீன்ஸ், வெங்காயம்,
வெள்ளைப்பூண்டு, புதினா ஆகியவற்றிலும்
பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இதை தவிர பால்,
தயிர் முதலியவற்றையும் உணவில் சோ்க்க
வேண்டும்.
5.பிறந்த குழந்தைகளின் உணவில்
நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால்
வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன்
திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது
உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்
கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மைய
ை ஏற்படுத்தும்.
6.அறிவை அதிகரிக்கும் வெண்டைக்காய்:
மூளை சுறுசுறுப்பாய் செயல்பட
வெண்டைக்காய் உதவி புரியும். இதில் உள்ள
உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை
அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான
பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய
ஒருவிதமான தாவர பசைப்பொருளும்,
நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது;
எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு
சக்தியாக மாறும் மாவுச்சத்தும்
வெண்டைக்காயில் உள்ளன.
வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர்,
ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன்
பூர்வீகம் எத்தியோப்பியா.
கொழுப்பை கரைக்கும்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்
பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில்
இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும்
மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.
100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும்
கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால்
வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத்
திகழ்கிறது.
கொழ கொழ காய்
வெண்டையின் விசேஷ குணமே
கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித
அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது.
நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே
வருகின்றன. சில வகையான வெண்டையில்
மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும்.
இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து
விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில்
போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில்
இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி
சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.
வாய் நாற்றம் அகலும்
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய
அனைத்துமே மருத்துவக் குணங்கள்
நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால்
கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய்
நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு
வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல்,
காய்ச்சல் போன்றவற்றால் யாராவது
அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க்
குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக்
கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன்,
சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து
அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல்
முதலியவை தணியும்.
சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக்
குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை
நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும்
அரிய மருந்தாகவும் வெண்டைக்காய்
திகழ்கிறது.
இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம்
உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த
பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு
சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி
காணப்படுகிறது. வெண்டைக்காயை
குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து
தரலாம்.
வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ்
(laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு
ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது.
வாய்வு கோளாறுகளை தடுக்கிறது.
வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த
தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல்
உதிர்தலை தடுக்கும்.
இது குழந்தைகளின் நினைவாற்றலை
அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது.
எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து
வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது
மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக்
கொள்ள வேண்டும். இதன் மூலம்
மினுமினுப்பான தோலையும் பெறலாம்.
சுறுசுறுப்பாகவும் வாழலாம்.
மூளையைக்காக்கும் மற்றும் ஷார்ப்பாக்கும்
ஆறு உணவுகள்…
1) வால் நட்ஸ்:
இயற்கை அன்னைக்கே தெரிந்ததாலோ
என்னவோ தெரியவில்லை… இந்த வால்
நட்ஸின் தோற்றமே சின்ன
மூளையைப்போலத்தான் படைக்கப்பட்டிரு
க்கிறது.
2009ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்
இந்த வால் நட்ஸ் உணவில் சேர்க்கப்படும்ப
ோது அது மூளையின் வயதாகும் தன்மையை
2% வரை சீர்படுத்துவதாகவும், மூளையின்
செயல்திறனை அதிகரிப்பதாகவும், மூளையின்
தகவல் கையாளும் திறனை அதிகரிப்பதாகவும்
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
2010ல் நடந்த ஒரு ஆய்வில் வால் நட்ஸ்
தொடர்ந்து உண்ணப்படும்போது அல்சைமர்
நோய் இருக்கும் மூளையில்கூட
செயல்பாடுகள் முன்னேற்றம் காண்பதாக
கண்டறியப்பட்டுள்ளது.
(அல்சைமர் என்பது வயதாகும்போது
மூளையில் ஏற்படும் ஒருவிதமான நோய். இது
மெல்ல மெல்ல வாய் குளறலில் ஆரம்பித்து
முற்றிய நிலையில் ஓரிரு வார்த்தைகள்
மட்டுமே பேசுமளவில் குறைந்தும்,
நினைவிழப்பு ஏற்படுதல் மற்றும் மூளையின்
கட்டளையிடும் திறன், செயல்பாடு ஆகியன
முழுவதுமாய் குறைந்தும் இறுதியாய் இறப்பு
வரை இழுத்துச்செல்லக்கூடியதுமாகும்…)
2) கேரட்:
நீண்டகாலமாகவே கேரட் என்றாலே
அனைவருக்கும் நினைவில் வருவது அது
கண்ணுக்கு நல்லது என்பதுதான்… அது
இப்போது மூளைக்கும் மிக நல்லது என்பது
கூடுதல் செய்தி.
கேரட்டில் நிறைந்திருக்கும் லுயுட்டோலின்
(Luteolin) காம்பவுன்டானது வயது
சம்பந்தப்பட்ட நினைவாற்றல் குறைபாடுகளை
நீக்குவதிலும், மூளையின் நோய் எதிர்ப்பு
சக்தியை தூண்டும் தன்மையை
அதிகரிப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
ஆலிவ் ஆயில் மற்றும் பெப்பர் ஆகியவற்றிலும்
இந்த லுயுட்டோலின் நிறைந்திருப்பது
கூடுதல் தகவல்.
3) பெர்ரீஸ்:
விட்டமின்கள் நிறைந்திருக்கும் பெர்ரீஸ்
பழங்கள் தொடர்ந்து உணவில்
சேர்த்துக்கொள்ளப்படும்போது நினைவாற்றல்
மிக அதிகமாக அதிகரிக்கும்.
2010ம் ஆண்டில் நினைவாற்றல்
குறைபாடுள்ள ஒத்த வயதினரை இரு
பிரிவாகப்பிரித்து ஒரு பிரிவுக்கு மட்டும் 12
வாரங்கள் பெர்ரி பழ ஜீஸ் கொடுத்தும் ஒரு
பிரிவுக்கு பெர்ரி சேர்க்காமலும் சோதிக்கப்பட்ட
ஆய்வின் முடிவில், பெர்ரி உட்கொண்ட
பிரிவினருக்கு நினைவாற்றல் மிக அற்புதமான
அளவில் முன்னேறியிருப்பது கண்டுபிடிக்கப்ப
ட்டுள்ளது. அது மட்டுமின்றி இது
டிப்ரஷனுக்கான அறிகுறிகளையும் வெகுவாக
குறைத்திருக்கிறது.
2009ம் ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு
ஆய்வுகளின் முடிவில் ஆண்ட்டி
ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கும் புளு பெர்ரி
மற்றும் ஸ்ட்ரா பெர்ரி பழங்கள் வயதாகும்
தோற்றத்துடன் சம்பந்தப்பட்ட செல்களில்
ஏற்படும் ஒருவித ஸ்ட்ரெஸ்சை
குறைப்பதிலும், மூளையின் சிக்னல் திறனை
அதிகரிப்பதிலும் அரும்பங்கு ஆற்றுவது
நிரூபிக்கப்பட்டுள்ளது.
4) மீன்:
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்திருக்கும்
பலவகை மீன்கள் உணவில் சேர்க்கப்படும்ப
ோது மூளையின் செயல்திறன் குறைபாடுகள்
குறைவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. (மீன்
எண்ணெய் மாத்திரை போன்ற சப்ளிமெண்ட்
ஐயிட்டங்கள் உபயோகமற்றவை என்றும்
நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
2005ம் ஆண்டு 65 வயதுக்கு
மேற்பட்டவர்களை வைத்து நடத்தப்பட்ட ஒரு
ஆய்வின் முடிவில் வாரத்துக்கு இரண்டு
முறை மீனை உணவில் சேர்க்கும்
பழக்கமுடையவர்களுக்கு மூளை செயல்திறன்
குறைபாடு 13% வரை குறைந்த்தும்,
வாரத்துக்கு ஒரு முறை மீனை உணவில்
சேர்ப்பவர்களுக்கு 10%வரை குறைந்ததும்
கண்டறியப்பட்டிருக்கிறது.
விட்டமின் B-12 நிறைந்திருக்கும் சில
மீன்களை உண்ணும்போது அது அல்சைமர்
நோய்க்கு எதிராக போராடுவதாகவும் சில
ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
5) காஃபி மற்றும் டீ:
காப்பியும் டீயும் வெறுமனே நாம் காலையில்
குடிக்கும் பானங்கள் மட்டும் இல்லை. அவை
அல்சைமர் நோய் தாக்காமல் தடுக்கவும்,
செயல்திறன் குறைபாட்டை குறைக்கவும்
பெருமளவு உதவுவதாக பலவித ஆய்வு
முடிகளும் அறிவித்திருக்கின்றன.
காப்பி குடிக்கும் பழக்கம் அல்சைமர் நோயை
வராமல் தடுக்கவும், வரும் வாய்ப்பை
குறைக்கவும் உதவுதாக சில ஆராய்ச்சிகளின்
முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.
நினைவு மற்றும் தகவல்கள் சோதனை
ஆராய்ச்சிகளில் டீ குடிப்பவர்கள் டீ குடிக்கும்
பழக்கம் இல்லாதவர்களைவிட அற்புதமாக
செயல்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
6) ஸ்பினாச் எனப்படும் பசலைக்கீரை:
சின்ன வயதிலிருந்து நமது அம்மாக்கள் கீரை
சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்று
அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளச்சொல்லி
வற்புறுத்துவார்கள். இந்தக்கீரையில்
விட்டமின் C மற்றும் E நிறைந்திருக்கிறது.
விட்டமின் Eயை உடம்பில் வழங்கி
செய்யப்பட்ட ஆராய்ச்சியில் மூளை மற்றும்
நெர்வ் திசுக்கள் 500 முதல் 900% வரை
வளர்ச்சி கண்டிருப்பதும், மூளையிலிருந்து
உடம்பு முழுக்க தகவல்களை அனுப்புவதை
கட்டுப்படுத்தும் டோபோமைன் என்ற திரவம்
சுரப்பது அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள
்ளது.
தண்ணீர்
மூளையில் 4/3 பங்கு தண்ணீர் உள்ளது.
எனவே தண்ணீர் குறைவானால் மூளையில்
செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி
ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும்.
எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால்,
மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச்
செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.
ஒமேகா-3 உணவுகள்
ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள
உணவுகளான முழு கோதுமை தயாரிப்புகள்,
பழுப்பு அரிசி, ஓட்ஸ், சோயா பீன்ஸ் மற்றும்
பருப்பு வகைகள், முட்டை, பால், தயிர், சீஸ்,
நட்ஸ், காய்கறி எண்ணெய்கள் முதலியன
ஆகும். மேலும் ஆளி விதைகள் மற்றும் மீன்
கூட ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள
உணவிற்கு நல்ல ஆதாரங்களாக இருக்கின்றன.
முதுமையிலும் நினைவாற்றல் அதிகரிக்க ..???
1) உணவுப் பழக்கங்கள்:
உணவில் நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள்
ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவைத்
தவிர்ப்பதும் நல்லது.
2) உடற்பயிற்சி:
தினமும் சில மைல்கள் நடப்பதும், மிதமான
உடற்பயிற்சி செய்வதும் மூளையின் ஆற்றல்
குறையாமலிருக்க மிகவும் உதவுகின்றன
என்பதை பல ஆராய்ச்சிகள் ஒருமித்துக்
கூறுகின்றன. மூச்சுப்பயிற்சிகளும்
பெருமளவு உதவுகின்றன என்பது
நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
3) புதிய முயற்சிகள்:
எப்போதும் வழக்கமான செயல்களையே
செய்து கொண்டிராமல் புதிய புதிய
முயற்சிகளிலும், செயல்களிலும்
ஈடுபடுபவர்கள் மூளை முதுமையிலும்
இளமையாகவும் திறனுள்ளதாகவும்
இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
4) ஓய்வு:
சுறுசுறுப்பாக இருப்பது போலவே
தேவையான அளவு ஓய்வும், உறக்கமும்
மூளையின் திறன் குறையாமல் இருக்க
மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள்
கூறுகிறார்கள்.
5) மூளைக்கு வேலை:
மூளைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள்
என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
குறுக்கெழுத்துப் போட்டிகள், விடுகதைகள்,
புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள முற்படுதல்
ஆகியவை மூளைக்கு முறையாக வேலை
தந்து அதன் திறனைத் தக்க வைத்துக்
கொள்கின்றன என்று ஆராய்ச்சிகள்
கூறுகின்றன.
6) படித்தல்:
புத்தகங்கள் படித்தல் முதுமையில் நல்ல
பொழுது போக்கு மட்டுமல்ல அது
மூளைக்கும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்க
ள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். எனவே
புத்தகங்கள் படிப்பதும் உதவும்.
7) நல்ல பழக்க வழக்கங்கள்:
புகைபிடித்தல் மற்றும் அதிகமாய்
மதுவருந்துதல் போன்ற பழக்கங்கள்
நாளடைவில் மூளைத் திறனை
மழுங்கடிக்கின்றன என்று ஆராய்ச்சி
முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே தீய
பழக்கங்களை விட்டொழித்து நல்ல பழக்க
வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்தல் மிக
முக்கியம்.
ஞாபக சக்தி அதிகரிக்க மருத்துவக் குறிப்பு :
ஆரைக்கீரை, வல்லாரை இலை மற்றும்
மணத்தக்காளி இலை ஆகியவற்றை சிறிதாக
வெட்டி அதனுடன் சின்ன வெங்காயம்,
பூண்டு, சோம்பு, சீரகம் மற்றும் மிளகு
ஆகியவற்றை இடித்து போட்டு நீர் விட்டு ரசம்
போல செய்து காலை, மாலை குடித்து
வந்தால் உடல் சோர்வு குறைந்து ஞாபக மறதி
குறையும்.
வெண்ணீரில் தேனை கலந்து தினமும்
காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி
அதிகரிக்கும்.
மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி
செய்து 1 தேக்கரண்டி அளவு தேனில் தூவி
சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து
போகுதல் குறைந்து நினைவாற்றல்
அதிகரிக்கும்.
பாதாம் பருப்பு, வெண்டைக்காய்,
உருளைக்கிழங்கு, தக்காளி இலை
ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்துச்
சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
பீர்க்கங்காய் வேரை எடுத்து நன்கு சுத்தம்
செய்து இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி
வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு
வந்தால் மூளை பலம் பெறும், ஞாபக சக்தி
அதிகரிக்கும்.
பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில்
சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்
செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தகாம்பை
நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி
அதிகரிக்கும். மூளைக்கு பலம் கூடும்.
தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு,
வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத்
தனித்தனியே ஊற வைத்து உலர்த்தி சூரணம்
செய்து கொடுத்து வர நினைவாற்றல்
அதிகரிக்கும்.
4 வெந்தயம், 15 கொண்டைக்கடலை இவற்றை
இரவு ஊற வைத்து காலையில் மசித்து
சர்க்கரை போட்டு தினமும் சாப்பிட ஞாபக
மறதி குறையும்.
முளைக்கீரை, வல்லாரை கீரை சேர்த்து
பருப்புடன் சமைத்து உண்ண நினைவாற்றல்
அதிகரிக்கும்.
சிறுகீரையோடு மிளகுத்தூள், உப்பு சேர்த்து
சமைத்து கொஞ்சம் நெய்யையும் சாதத்தில்
போட்டுஅடிக்கடிசாப்பிட நினைவாற்றல்
அதிகரிக்கும்.
ஆரைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி
சாப்பிட்டால், நினைவாற்றல் பெருகும்.
தூதுவளை பொடியை தினமும் உணவுக்கு
பின் காலை, மாலை சாப்பிட்டு வர ஞாபக சக்தி
வளறும்
பப்பாளிப் பழத்தை தினமும் சிறு அளவு
மட்டும் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி
பெருகும்.
தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிடுவதை
பழக்கமாக கொள்ளவும்
வல்லாரை இலையைக் காயவைத்து அரை
கிலோ அளவில் எடுத்துக்கொள்ளவும்.
இத்துடன் 50 கிராம் சீரகம், ஐந்து கிராம் மஞ்சள்
சேர்த்துத் தூள் செய்து சலித்து வைத்துக்
கொள்ளவும். இதில் காலை, மாலை
உணவுக்கு பின்பு இரண்டு கிராம் அளவில்
சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தி வர,
நினைவாற்றல் பெருகும்.
கரிசலாங்கண்ணி பொடி, திரிபலா பொடி,
பிரம்மி பொடி, வல்லாரை, கீழாநெல்லி
எடுத்து பொடியாக்கி, அதனுடன் தேன் கலந்து
41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி
அதிகரிக்கும்.
துளசி இலையை தினசரி காலையில்
சிறிதளவு மென்று தின்ன ஞாபக சக்தி
அதிகரிக்கும்.
பிடித்திருந்தால் share & Like செய்யுங்கள்..
மட்றவர்களுக்கு பயனுறும்...!