Monday, December 28, 2015

பஞ்சகல்ப குளியல் முறை

“பஞ்சகல்ப குளியல் முறை”

                               இந்த கல்பம் சித்தர்களால் புகழப்பட்டது. இதை உபயோகித்தால் முடி தும்பி போலாகும்.கண்கள் ஒளி பெறும்.பகலில்கூட நட்சத்திரங்கள் காணலாமென்று புகழ்ந்துள்ளனர் இதை உபயோகித்து சரும வியாதிகளும் குணப்பட்டதுண்டு.பீனிசத்திற்கு குணம் கண்டதுண்டு. மேக வியாதிகள் பல குனமாகுமென்று சித்தர்கள் சொல்லுகின்றனர். அனுபவத்திலும் இது உண்மை. 

பஞ்சகல்பம் செய்முறை:
                                 நெல்லி வற்றல் 150 கிராம்
                                  வெள்ளைமிளகு  125 கிராம்
                                   கடுக்காய் 100 கிராம்
                                    கஸ்தூரி மஞ்சள் 75 கிராம்
                                     வேப்பன் விதை 50 கிராம்
                                               இவை அனைத்தையும் பொடித்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு கோப்பை பசுவின் பால் விட்டு காய்ச்சி எடுத்து இளஞ்சூட்டுடன் தலையில் தேய்த்துக் கொள்ளவும். சொறி சிரங்கு இருப்பவர்கள் சூரனத்தையும் பாலையுங்கூட்டி உடம்பெல்லாம் தேய்க்கலாம். இப்படிச் செய்வதினால் கண்களில் வரும் பிணிகள, மூக்கில் உண்டாகும் பீனிசங்கள், காதில் அடைப்பு முதலிய பல வியாதிகள் நீங்கி உடல் வன்மை பெறும்.
                                                    நன்றி
               

No comments:

Post a Comment