Monday, December 28, 2015

ஞாபக சக்தியை அதிகரிக்க நான்கு பயிற்சிகள்!..

ஞாபக சக்தியை அதிகரிக்க நான்கு பயிற்சிகள்!..
நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள்
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள நான்கு
முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க
வேண்டும். கவனமான பார்வை,ஆர்வம்,
அக்கறை,புதிதாகச் சிந்தித்தல் இந்த
நான்கிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப்
பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும்
செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே
பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில
பயிற்சி முறைகளைப் பார்ப்போம்....
முதல் பயிற்சி
ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள்.
பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக
எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக,
100, 98 96, என்று இரண்டு இரண்டாகக்
குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு
நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7
வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள்.
இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக்
கொண்டீர்கள் என்றால், உங்களுடைய
நினைவுத் திறன் நல்ல அளவில்
வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இரண்டாம் பயிற்சி
இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை
எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில்
எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக்
கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று
பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம்
எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது
மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள்
என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை
எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று
தெரியவரும். அதை வைத்து உங்கள்
நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து
கொள்ளலாம்.
முன்றாவது பயிற்சி
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை
வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப்
பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம்
ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி
இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதை விட
நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப்
பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின்
சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு
நினைவாற்றலும் பெருகும். முயன்று
பாருங்கள்.
நான்காவது பயிற்சி
உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6
அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு
அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி
புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள்.
(உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை
சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக
எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை
இழுத்து மூடுங்கள். இதே போன்று
இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு
புரோகிராம் எழுதிப் போடுங்கள்.
அதே போன்று அடுத்தடுத்த நான்கு
அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு
படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே
ஆச்சரியமாக இருக்கும். இந்த 6
புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை
அறியாமலே உங்கள் மனதில் தோன்றும்.
இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய
புதிய முறைகளைக் கையாண்டு உங்கள்
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம்.
அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத
இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக்
கொண்டால் வாழ்க்கை நின்று விடும்.
மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது
துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று
வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும்
வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள்.
நினைவாற்றலை மேம்படுத்துங்கள்.
நினைத்ததைச் சாதியுங்கள்...!
நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளும்
நுட்பங்கள்:
1. உடற்பயிற்சி:
உடற்பயிற்சி என்பது உடல் வலிமைக்கும்,
ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல, மூளையை
சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும்,
நினைவாற்றல் பெருக்கத்திற்கும் மிக மிக
அவசியமாகும். எனவே தினமும் குறைந்தது
15 முதல் 20 நிமிடங்களை யாவது
உடற்பயிற்சிக்கு கண்டிப்பாக ஒதுக்க
வேண்டும்.
ஒன்றை நாம் தெளிவாக அறிந்து
கொள்ளாதபோது நம்மால் அதனை
நினைவுக்கு கொண்டு வருதல் இயலாது.
மிகச் சிறிய விஷயம் ஒன்றை பதிவு செய்ய
நம்முடைய மூளை குறைந்தது எட்டு
நொடிகளை எடுத்துக் கொள்கிறது. எனவே,
வலிந்து நினைவில் செய்திகளை
பதிக்கும்போது அமைதியான
இடையூறில்லாத சூழலை உருவாக்கிக்கொள்
ள வேண்டும்.
2. தையல்காரர் அணுகுமுறை:
மேலோட்டமாய் தகவலைக் கேட்டுக்
கொள்வது, போகின்ற போக்கில் பார்த்து
வைப்பது என நுனிப்புல் மேய்வது போல்
இல்லாமல் ஒரு தையல்காரர் எவ்வாறு
அளவுகளை சரியாகக் குறித்துக் கொள்கிறாரோ
அவ்வாறு தகவல்களைப் பதிவு செய்து
கொள்வது என்றைக்குமே மறந்துபோகாது.
3. பல்வேறு புலன்களை பயன்படுத்துதல்:
கண்டிப்பாக நினைவில் வைக்கவேண்டிய
விஷயங்களை வாய்விட்டு சொல்லிப்பார்த்தல்
நல்லது. படித்தறியும்போதுகூட
பார்வையிலேயே படிப்பதைக் காட்டிலும்
வாய்விட்டு (முடிந்தால் சத்தமாக)
படித்தலும், சற்று முயற்சி செய்து ரிதம் போல்
வரிசைப்படுத்திக்கொள்ளுதலும் சிறந்தது.
கேட்பதன் மூலமாக அறிந்து கொள்ளும்போது
தொடர்புடைய நிறம், சொற்கள், வாசம்,
தன்மையோடு பதிவுசெய்து கொள்வதும்
நல்ல பலனைத் தரும்.
4. முன்பே அறிந்தவற்றோடு தொடர்புபடுத்தி
வைத்தல்:
புதிய தகவல்கள் முன்பே அறிந்தவற்றோடு
தொடர்புடையது எனும்போது அவற்றை
நினைவுபடுத்திப் பார்த்து இணைத்து பதிவு
செய்யலாம்.
5. படம் வரைந்து வைத்துக்கொள்ளுதல்:
எழுதிவைக்கும் தகவல்களோடு அதற்குரிய
படங்களையும் (கோட்டுப் படம் போல்)
சின்னச் சின்னதாய் பக்கத்திலேயே
வரைந்துவைத்து எழுதிக் கொண்டால்
நினைவுபடுத்திப் பார்க்கும் போது தன்
கருத்துக்களை தன் நினைவுக்கும், பிறருக்கு
தகவலாகவும் மனிதன் பதிவு செய்துள்ளான்.
இது இன்றைக்கும் சிறந்த முறையாகும்.
ஞாபக சக்தியை அதிகரிக்க பிராமி,
சங்குபுஷ்பி, வல்லாரைக் கீரை போன்ற
ஆயுர்வேத மருந்துகள் உதவுகிறது.மிளகை
எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து
தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக
மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல்
அதிகரிக்கும்.
பீர்க்கங்காய் வேரை எடுத்து நன்கு சுத்தம்
செய்து இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி
வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு
வந்தால் மூளை பலம் பெறும், ஞாபக சக்தி
அதிகரிக்கும்.
பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில்
சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்
பாதாம் பருப்பு, வெண்டைக்காய்,
உருளைக்கிழங்கு, தக்காளி இலை
ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்துச்
சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தகாம்பை
நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி
அதிகரிக்கும். மூளைக்கு பலம் கூடும்.
தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு,
வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத்
தனித்தனியே ஊற வைத்து உலர்த்தி சூரணம்
செய்து கொடுத்து வர நினைவாற்றல்
அதிகரிக்கும்
நினைவாற்றலை அதிகரிக்க பாதம்
சாப்பிடுங்கள்!!
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு
அதிகமான புரதச்சத்து கிடைக்கும்.
அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு
சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும்
என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
அதுபோல் பாதாம் நினைவாற்றலை
அதிகரிக்கும் சக்தி கொண்டது.
குழந்தைகளுக்கு தொடர்ந்து பாதாம் சாப்பிட
கொடுத்து வந்தால் அவர்களது நினைவாற்றல்
அதிகரிக்கும். இரத்தத்திற்கு நன்மை செய்யும்
எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும்
கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும்
தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட
வேண்டும். நீண்ட நேரம் உழைக்க
வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால்
தேவை. வேலையும் கவலையும் அதிகம்
எனில், அப்போது பாதாம் பருப்புகளையே
கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால்
போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக்
கிடைக்கும்.
நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும்
குளுட்டாமிக் அமிலம் உள்ள
உணவுப்பொருட்களை தொடர்ந்து சாப்பிட
வேண்டும். உங்களுக்காக சில குறிப்புகள்:
1. ஞாபகசக்தியை அதிகரிக்கம் முதல் பழம்
ஆப்பிள். இரண்டாவதாக பேரீட்சை,திராட்சை,
மாதுளை,ஆரஞ்சு முதலியன.
2. சமையலில் சீரகம்,மிளகு ஆகியவை
கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இவை
மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக்
கொள்கின்றன.
3. பள்ளிக் குழந்தைகளும், நிர்வாகிகளும்
நினைவாற்றலை அதிகரித்து கொள்வது
மிகவும் அவசியம். அதற்கு தினமும் இரவில்
12 பாதாம் பருப்புகளை ஊறப்போட்டு
காலையில் அதை அரைத்து சாப்பிட
வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால்
நரம்புகளும் பலமாகின்றன. அரைக்கும் முன்
பாதாமின் தோலை நீக்கிவிட வேண்டும். 100
கிராம் பாதாமில் 490 கிராம் பாஸ்பரஸ்,
தாதுஉப்பு இருக்கிறது. குளுட்டாமிக்
அமிலமும் இதில் உள்ளது.
4. கோதுமை, சோளம், பார்லி, காராமணி,
பீட்ரூட், சோயாபீன்ஸ், வெங்காயம்,
வெள்ளைப்பூண்டு, புதினா ஆகியவற்றிலும்
பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இதை தவிர பால்,
தயிர் முதலியவற்றையும் உணவில் சோ்க்க
வேண்டும்.
5.பிறந்த குழந்தைகளின் உணவில்
நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால்
வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன்
திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது
உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்
கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மைய
ை ஏற்படுத்தும்.
6.அறிவை அதிகரிக்கும் வெண்டைக்காய்:
மூளை சுறுசுறுப்பாய் செயல்பட
வெண்டைக்காய் உதவி புரியும். இதில் உள்ள
உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை
அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான
பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய
ஒருவிதமான தாவர பசைப்பொருளும்,
நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது;
எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு
சக்தியாக மாறும் மாவுச்சத்தும்
வெண்டைக்காயில் உள்ளன.
வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர்,
ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன்
பூர்வீகம் எத்தியோப்பியா.
கொழுப்பை கரைக்கும்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்
பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில்
இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும்
மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.
100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும்
கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால்
வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத்
திகழ்கிறது.
கொழ கொழ காய்
வெண்டையின் விசேஷ குணமே
கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித
அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது.
நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே
வருகின்றன. சில வகையான வெண்டையில்
மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும்.
இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து
விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில்
போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில்
இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி
சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.
வாய் நாற்றம் அகலும்
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய
அனைத்துமே மருத்துவக் குணங்கள்
நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால்
கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய்
நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு
வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல்,
காய்ச்சல் போன்றவற்றால் யாராவது
அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க்
குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக்
கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன்,
சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து
அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல்
முதலியவை தணியும்.
சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக்
குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை
நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும்
அரிய மருந்தாகவும் வெண்டைக்காய்
திகழ்கிறது.
இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம்
உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த
பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு
சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி
காணப்படுகிறது. வெண்டைக்காயை
குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து
தரலாம்.
வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ்
(laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு
ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது.
வாய்வு கோளாறுகளை தடுக்கிறது.
வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த
தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல்
உதிர்தலை தடுக்கும்.
இது குழந்தைகளின் நினைவாற்றலை
அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது.
எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து
வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது
மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக்
கொள்ள வேண்டும். இதன் மூலம்
மினுமினுப்பான தோலையும் பெறலாம்.
சுறுசுறுப்பாகவும் வாழலாம்.
மூளையைக்காக்கும் மற்றும் ஷார்ப்பாக்கும்
ஆறு உணவுகள்…
1) வால் நட்ஸ்:
இயற்கை அன்னைக்கே தெரிந்ததாலோ
என்னவோ தெரியவில்லை… இந்த வால்
நட்ஸின் தோற்றமே சின்ன
மூளையைப்போலத்தான் படைக்கப்பட்டிரு
க்கிறது.
2009ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்
இந்த வால் நட்ஸ் உணவில் சேர்க்கப்படும்ப
ோது அது மூளையின் வயதாகும் தன்மையை
2% வரை சீர்படுத்துவதாகவும், மூளையின்
செயல்திறனை அதிகரிப்பதாகவும், மூளையின்
தகவல் கையாளும் திறனை அதிகரிப்பதாகவும்
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
2010ல் நடந்த ஒரு ஆய்வில் வால் நட்ஸ்
தொடர்ந்து உண்ணப்படும்போது அல்சைமர்
நோய் இருக்கும் மூளையில்கூட
செயல்பாடுகள் முன்னேற்றம் காண்பதாக
கண்டறியப்பட்டுள்ளது.
(அல்சைமர் என்பது வயதாகும்போது
மூளையில் ஏற்படும் ஒருவிதமான நோய். இது
மெல்ல மெல்ல வாய் குளறலில் ஆரம்பித்து
முற்றிய நிலையில் ஓரிரு வார்த்தைகள்
மட்டுமே பேசுமளவில் குறைந்தும்,
நினைவிழப்பு ஏற்படுதல் மற்றும் மூளையின்
கட்டளையிடும் திறன், செயல்பாடு ஆகியன
முழுவதுமாய் குறைந்தும் இறுதியாய் இறப்பு
வரை இழுத்துச்செல்லக்கூடியதுமாகும்…)
2) கேரட்:
நீண்டகாலமாகவே கேரட் என்றாலே
அனைவருக்கும் நினைவில் வருவது அது
கண்ணுக்கு நல்லது என்பதுதான்… அது
இப்போது மூளைக்கும் மிக நல்லது என்பது
கூடுதல் செய்தி.
கேரட்டில் நிறைந்திருக்கும் லுயுட்டோலின்
(Luteolin) காம்பவுன்டானது வயது
சம்பந்தப்பட்ட நினைவாற்றல் குறைபாடுகளை
நீக்குவதிலும், மூளையின் நோய் எதிர்ப்பு
சக்தியை தூண்டும் தன்மையை
அதிகரிப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
ஆலிவ் ஆயில் மற்றும் பெப்பர் ஆகியவற்றிலும்
இந்த லுயுட்டோலின் நிறைந்திருப்பது
கூடுதல் தகவல்.
3) பெர்ரீஸ்:
விட்டமின்கள் நிறைந்திருக்கும் பெர்ரீஸ்
பழங்கள் தொடர்ந்து உணவில்
சேர்த்துக்கொள்ளப்படும்போது நினைவாற்றல்
மிக அதிகமாக அதிகரிக்கும்.
2010ம் ஆண்டில் நினைவாற்றல்
குறைபாடுள்ள ஒத்த வயதினரை இரு
பிரிவாகப்பிரித்து ஒரு பிரிவுக்கு மட்டும் 12
வாரங்கள் பெர்ரி பழ ஜீஸ் கொடுத்தும் ஒரு
பிரிவுக்கு பெர்ரி சேர்க்காமலும் சோதிக்கப்பட்ட
ஆய்வின் முடிவில், பெர்ரி உட்கொண்ட
பிரிவினருக்கு நினைவாற்றல் மிக அற்புதமான
அளவில் முன்னேறியிருப்பது கண்டுபிடிக்கப்ப
ட்டுள்ளது. அது மட்டுமின்றி இது
டிப்ரஷனுக்கான அறிகுறிகளையும் வெகுவாக
குறைத்திருக்கிறது.
2009ம் ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு
ஆய்வுகளின் முடிவில் ஆண்ட்டி
ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கும் புளு பெர்ரி
மற்றும் ஸ்ட்ரா பெர்ரி பழங்கள் வயதாகும்
தோற்றத்துடன் சம்பந்தப்பட்ட செல்களில்
ஏற்படும் ஒருவித ஸ்ட்ரெஸ்சை
குறைப்பதிலும், மூளையின் சிக்னல் திறனை
அதிகரிப்பதிலும் அரும்பங்கு ஆற்றுவது
நிரூபிக்கப்பட்டுள்ளது.
4) மீன்:
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்திருக்கும்
பலவகை மீன்கள் உணவில் சேர்க்கப்படும்ப
ோது மூளையின் செயல்திறன் குறைபாடுகள்
குறைவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. (மீன்
எண்ணெய் மாத்திரை போன்ற சப்ளிமெண்ட்
ஐயிட்டங்கள் உபயோகமற்றவை என்றும்
நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
2005ம் ஆண்டு 65 வயதுக்கு
மேற்பட்டவர்களை வைத்து நடத்தப்பட்ட ஒரு
ஆய்வின் முடிவில் வாரத்துக்கு இரண்டு
முறை மீனை உணவில் சேர்க்கும்
பழக்கமுடையவர்களுக்கு மூளை செயல்திறன்
குறைபாடு 13% வரை குறைந்த்தும்,
வாரத்துக்கு ஒரு முறை மீனை உணவில்
சேர்ப்பவர்களுக்கு 10%வரை குறைந்ததும்
கண்டறியப்பட்டிருக்கிறது.
விட்டமின் B-12 நிறைந்திருக்கும் சில
மீன்களை உண்ணும்போது அது அல்சைமர்
நோய்க்கு எதிராக போராடுவதாகவும் சில
ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
5) காஃபி மற்றும் டீ:
காப்பியும் டீயும் வெறுமனே நாம் காலையில்
குடிக்கும் பானங்கள் மட்டும் இல்லை. அவை
அல்சைமர் நோய் தாக்காமல் தடுக்கவும்,
செயல்திறன் குறைபாட்டை குறைக்கவும்
பெருமளவு உதவுவதாக பலவித ஆய்வு
முடிகளும் அறிவித்திருக்கின்றன.
காப்பி குடிக்கும் பழக்கம் அல்சைமர் நோயை
வராமல் தடுக்கவும், வரும் வாய்ப்பை
குறைக்கவும் உதவுதாக சில ஆராய்ச்சிகளின்
முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.
நினைவு மற்றும் தகவல்கள் சோதனை
ஆராய்ச்சிகளில் டீ குடிப்பவர்கள் டீ குடிக்கும்
பழக்கம் இல்லாதவர்களைவிட அற்புதமாக
செயல்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
6) ஸ்பினாச் எனப்படும் பசலைக்கீரை:
சின்ன வயதிலிருந்து நமது அம்மாக்கள் கீரை
சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்று
அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளச்சொல்லி
வற்புறுத்துவார்கள். இந்தக்கீரையில்
விட்டமின் C மற்றும் E நிறைந்திருக்கிறது.
விட்டமின் Eயை உடம்பில் வழங்கி
செய்யப்பட்ட ஆராய்ச்சியில் மூளை மற்றும்
நெர்வ் திசுக்கள் 500 முதல் 900% வரை
வளர்ச்சி கண்டிருப்பதும், மூளையிலிருந்து
உடம்பு முழுக்க தகவல்களை அனுப்புவதை
கட்டுப்படுத்தும் டோபோமைன் என்ற திரவம்
சுரப்பது அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள
்ளது.
தண்ணீர்
மூளையில் 4/3 பங்கு தண்ணீர் உள்ளது.
எனவே தண்ணீர் குறைவானால் மூளையில்
செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி
ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும்.
எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால்,
மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச்
செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.
ஒமேகா-3 உணவுகள்
ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள
உணவுகளான முழு கோதுமை தயாரிப்புகள்,
பழுப்பு அரிசி, ஓட்ஸ், சோயா பீன்ஸ் மற்றும்
பருப்பு வகைகள், முட்டை, பால், தயிர், சீஸ்,
நட்ஸ், காய்கறி எண்ணெய்கள் முதலியன
ஆகும். மேலும் ஆளி விதைகள் மற்றும் மீன்
கூட ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள
உணவிற்கு நல்ல ஆதாரங்களாக இருக்கின்றன.
முதுமையிலும் நினைவாற்றல் அதிகரிக்க ..???
1) உணவுப் பழக்கங்கள்:
உணவில் நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள்
ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவைத்
தவிர்ப்பதும் நல்லது.
2) உடற்பயிற்சி:
தினமும் சில மைல்கள் நடப்பதும், மிதமான
உடற்பயிற்சி செய்வதும் மூளையின் ஆற்றல்
குறையாமலிருக்க மிகவும் உதவுகின்றன
என்பதை பல ஆராய்ச்சிகள் ஒருமித்துக்
கூறுகின்றன. மூச்சுப்பயிற்சிகளும்
பெருமளவு உதவுகின்றன என்பது
நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
3) புதிய முயற்சிகள்:
எப்போதும் வழக்கமான செயல்களையே
செய்து கொண்டிராமல் புதிய புதிய
முயற்சிகளிலும், செயல்களிலும்
ஈடுபடுபவர்கள் மூளை முதுமையிலும்
இளமையாகவும் திறனுள்ளதாகவும்
இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
4) ஓய்வு:
சுறுசுறுப்பாக இருப்பது போலவே
தேவையான அளவு ஓய்வும், உறக்கமும்
மூளையின் திறன் குறையாமல் இருக்க
மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள்
கூறுகிறார்கள்.
5) மூளைக்கு வேலை:
மூளைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள்
என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
குறுக்கெழுத்துப் போட்டிகள், விடுகதைகள்,
புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள முற்படுதல்
ஆகியவை மூளைக்கு முறையாக வேலை
தந்து அதன் திறனைத் தக்க வைத்துக்
கொள்கின்றன என்று ஆராய்ச்சிகள்
கூறுகின்றன.
6) படித்தல்:
புத்தகங்கள் படித்தல் முதுமையில் நல்ல
பொழுது போக்கு மட்டுமல்ல அது
மூளைக்கும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்க
ள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். எனவே
புத்தகங்கள் படிப்பதும் உதவும்.
7) நல்ல பழக்க வழக்கங்கள்:
புகைபிடித்தல் மற்றும் அதிகமாய்
மதுவருந்துதல் போன்ற பழக்கங்கள்
நாளடைவில் மூளைத் திறனை
மழுங்கடிக்கின்றன என்று ஆராய்ச்சி
முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே தீய
பழக்கங்களை விட்டொழித்து நல்ல பழக்க
வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்தல் மிக
முக்கியம்.
ஞாபக சக்தி அதிகரிக்க மருத்துவக் குறிப்பு :
ஆரைக்கீரை, வல்லாரை இலை மற்றும்
மணத்தக்காளி இலை ஆகியவற்றை சிறிதாக
வெட்டி அதனுடன் சின்ன வெங்காயம்,
பூண்டு, சோம்பு, சீரகம் மற்றும் மிளகு
ஆகியவற்றை இடித்து போட்டு நீர் விட்டு ரசம்
போல செய்து காலை, மாலை குடித்து
வந்தால் உடல் சோர்வு குறைந்து ஞாபக மறதி
குறையும்.
வெண்ணீரில் தேனை கலந்து தினமும்
காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி
அதிகரிக்கும்.
மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி
செய்து 1 தேக்கரண்டி அளவு தேனில் தூவி
சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து
போகுதல் குறைந்து நினைவாற்றல்
அதிகரிக்கும்.
பாதாம் பருப்பு, வெண்டைக்காய்,
உருளைக்கிழங்கு, தக்காளி இலை
ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்துச்
சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
பீர்க்கங்காய் வேரை எடுத்து நன்கு சுத்தம்
செய்து இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி
வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு
வந்தால் மூளை பலம் பெறும், ஞாபக சக்தி
அதிகரிக்கும்.
பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில்
சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்
செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தகாம்பை
நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி
அதிகரிக்கும். மூளைக்கு பலம் கூடும்.
தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு,
வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத்
தனித்தனியே ஊற வைத்து உலர்த்தி சூரணம்
செய்து கொடுத்து வர நினைவாற்றல்
அதிகரிக்கும்.
4 வெந்தயம், 15 கொண்டைக்கடலை இவற்றை
இரவு ஊற வைத்து காலையில் மசித்து
சர்க்கரை போட்டு தினமும் சாப்பிட ஞாபக
மறதி குறையும்.
முளைக்கீரை, வல்லாரை கீரை சேர்த்து
பருப்புடன் சமைத்து உண்ண நினைவாற்றல்
அதிகரிக்கும்.
சிறுகீரையோடு மிளகுத்தூள், உப்பு சேர்த்து
சமைத்து கொஞ்சம் நெய்யையும் சாதத்தில்
போட்டுஅடிக்கடிசாப்பிட நினைவாற்றல்
அதிகரிக்கும்.
ஆரைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி
சாப்பிட்டால், நினைவாற்றல் பெருகும்.
தூதுவளை பொடியை தினமும் உணவுக்கு
பின் காலை, மாலை சாப்பிட்டு வர ஞாபக சக்தி
வளறும்
பப்பாளிப் பழத்தை தினமும் சிறு அளவு
மட்டும் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி
பெருகும்.
தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிடுவதை
பழக்கமாக கொள்ளவும்
வல்லாரை இலையைக் காயவைத்து அரை
கிலோ அளவில் எடுத்துக்கொள்ளவும்.
இத்துடன் 50 கிராம் சீரகம், ஐந்து கிராம் மஞ்சள்
சேர்த்துத் தூள் செய்து சலித்து வைத்துக்
கொள்ளவும். இதில் காலை, மாலை
உணவுக்கு பின்பு இரண்டு கிராம் அளவில்
சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தி வர,
நினைவாற்றல் பெருகும்.
கரிசலாங்கண்ணி பொடி, திரிபலா பொடி,
பிரம்மி பொடி, வல்லாரை, கீழாநெல்லி
எடுத்து பொடியாக்கி, அதனுடன் தேன் கலந்து
41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி
அதிகரிக்கும்.
துளசி இலையை தினசரி காலையில்
சிறிதளவு மென்று தின்ன ஞாபக சக்தி
அதிகரிக்கும்.
பிடித்திருந்தால் share & Like செய்யுங்கள்..
மட்றவர்களுக்கு பயனுறும்...!

No comments:

Post a Comment