#ஒருமுறை #சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.
உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.
மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.
சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்
"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.
இல்லை என பதில் சொன்னார்.
" அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.
இல்லை என பதில் சொன்னார்.
" அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா?" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.
இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.
"யாருக்கும் பயனில்லாத , நல்ல விஷயமுமில்லாத, நேரடியாக நீங்கள் பார்க்காத என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.
அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுதல் என்பது தம் நேரத்தையும், பிறர் நேரத்தையும் அபகரிக்கும் அற்புதமான செயலல்ல. அற்பமான செயல் என்கிறார்கள் சான்றோர்கள்.
No comments:
Post a Comment