Sunday, December 20, 2015

குதிரைவாலி கேப்பைக் கூழ்

தினம் ஒரு சிறுதானியம் - குதிரைவாலி கேப்பைக் கூழ்

வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள், தினமும் காலையில் குடிக்கும் தேவாமிர்தம் என்ன தெரியுமா? பழைய சோறும் கேப்பைக்கூழும்தான். காலம் காலமாக நீராகாரமாக அருந்தும் இந்த உணவுகள், உடலைத் திடகாத்திரமாக வைத்திருப்பதுடன், எந்த நோயையும் நெருங்கவிடாது.

குதிரைவாலி கேப்பைக் கூழ்

செய்முறை: முந்தைய நாள் இரவே 200 கிராம் கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும்.

50 கிராம் குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளவும். அரைப் பதத்தில் வெந்ததும், ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்துக் கிளறவும்.

தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்கவேண்டும்.

பிறகு, கால் கப் தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துக் குடிக்கலாம்.

பலன்கள் :
கால்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இரும்புச்சத்து இருப்பதால் ரத்த உற்பத்திக்கு உதவும். கொழுப்பைக் குறைக்கும். குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். கேழ்வரகு உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து வலுவைச் சேர்க்கும். எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம். பெண்கள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவு.
#DoctorVikatan

No comments:

Post a Comment