Sunday, December 20, 2015

வைகுண்டஏகாதசி

வைகுண்ட ஏகாதசி வரலாறும்,
பரம பத வாசல் பற்றிய சிறப்புச்செய்திகளும்....

ஸ்ரீமந் நாராயணன், பிரளயம் முடிந்த பிறகு,ஆலமரத்தின் இலைமேல்,பள்ளிகொண்டு, தன்னுடைய "நாபீ கமலத்தில்"
(தொப்புளில்) இருந்து,நான்முகக் கடவுளான "பிரம்மாவை" ஸ்ருஷ்டித்தார்.(படைத்தார்).பிரம்மாவையே இந்த உலகத்தை ஸ்ருஷ்டிக்க நியமித்தார்.

தான் ஸ்ருஸ்டி தொழிலைச் செய்வதால்,பிரம்மா அஹங்காரம் கொண்டார்.உடனே ஸ்ரீமந் நாராயணனின் காதுகளில் இருந்து,
இரண்டு அசுரர்கள் உண்டாகி,பிரம்மாவைக் கொல்ல முயன்றார்கள்."நீங்கள் வேண்டும்வரத்தை நான் தருகிறேன். நீங்கள் பிரம்மாவைக் கொல்ல வேண்டாம்" என்றார் ஸ்ரீமந் நாராயணன்...

அதற்கு, அசுரர்கள்"நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது
"உனக்கு நங்கள் வரமளிப்போம்.கேள் என்றனர்.
"அஹங்காரம் கொண்ட நீங்கள், என்னாலேயே வதைக்கப்படுவீர்கள்" என்று திருவாய் மலர்ந்து அருளினார்...
அசுரர்கள் ஸ்ரீமந் நாராயணனிடம்,எங்களை உடனே வதைக்காமல், ஒரு மாதகாலம் "யுத்தம்"செய்து,உம்முடைய அனுக்ரஹத்தினால்,நாங்கள் நற்கதி பெற வேண்டும் என்று பிரார்த்தித்தனர்.

அசுரர்களின் பிரர்த்தனைப்படியே,"ஒரு மாத யுத்தத்திற்கு பிறகு"ஸ்ரீமந் நாராயணனால் வதைக்கப்பட்டனர்.ஸ்ரீமந் நாராயணனுடைய,வீர்ய ஸக்த்யாதி, குணங்களை அறிந்த,அசுரர்கள் அவரோடு பரமபதத்தில்,நித்யவாஸம் வேண்டும்,என்று பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
ஸ்ரீமந் நாராயணன்,மார்கழி சுக்ல ஏகாதசியன்று, பரமபதத்தின்,"உத்தர த்வாரத்தை",(வடக்கு வாசலை) திறந்து,அந்த வழியால்,ஸத்ய லோகத்திற்கு மேல் உள்ள,பரமபதத்தில் அசுரர்களைக் கொண்டு சேர்த்தார்.

அங்கே ஆதிஷேசன் மீது அமர்ந்து,நித்ய சூரிகளால் சூழப்பட்டு இருக்கும்,ஸ்ரீமந் நாராயணனுடைய,திவ்ய மங்கள விக்ரஹத்தினை தரிசித்து,இரண்டு அசுரர்களும் பரமானந்தம் அடைந்தனர்.

பரம பதத்தில் "வடக்கு வாசலின்" மூலம்,அசுரர்களை சேர்த்துக் கொண்டதை,காட்டும்பொருட்டே,பெருமாள் கோயில்களில்,
"வடக்கு திசையில்" சொர்க்கவாசல் என்று சொல்லப்படும்
"பரமபத வாசல்" அமைக்கப்பட்டு இருக்கிறது.

அரங்கத்திலும்,அரங்கன் ஆலய மூலஸ்தானம் தெற்கு நோக்கி இருக்கும்.அதன்பின்புறம் வடக்கு பகுதியில்,வடக்குமுகமாகவே
"பரமபத வாசல்" உள்ளது...

அசுரர்களும்,பிரம்மா முதலானோர்களும்,ஸ்ரீமந் நாராயணனை,
"அர்ச்சை" வடிவில்,(விக்ரஹ ரூபத்தில்) பிரதிஷ்டிப்பித்து,
மார்கழி மாதம் சுக்ல பக்ஷம் ஏகாதசி அன்று,தாங்கள் 
எங்களுக்குப் பண்ணின, இந்த அனுக்ரஹத்தை,உற்சவமாக செய்ய அனுக்ரஹிக்க வேண்டும் என்று, ஸ்ரீமந் நாராயணனிடம் ,பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

அன்றைய தினம்,பரமபதத்தின் "வடக்கு வாயிலின்" வழியே,
எழுந்தருளும்,ஸ்ரீமந் நாராயணனை தரிசிப்பவர்களும், அவருடன் பரமபத வாசலில் உடன் செல்வோரும்,எத்துணை பாபம் செய்திருந்தாலும்,மோக்ஷத்தைப் பெற வேண்டும் ஸ்ரீமந் நாராயணனிடம் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

இந்த" வைகுண்டஏகாதசி" உற்சவம் முதலில்
 கொண்டாடப்பட்டது பரமபதத்தில்.அதன் பிறகு ஆழ்வார்களின் மூலமாக பூலோகத்தில் எங்கும் கொண்டாடப்படுகிறது.குறிப்பாக அரங்கத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது...
ரங்கா ரங்கா ரங்கா...

No comments:

Post a Comment